குடும்பப் பழமொழிகள்/முதுமை

முதுமை

வீடு 'போ, போ' என்கிறது. 'காடு வா, வா' என்கிறது.

- தமிழ்நாடு

வயது முதிர்ந்த மனிதன் எலும்புகள் நிறைந்த மெத்தை போன்றவன். - இங்கிலாந்து

வயது ஆக ஆக அறிவும் பெருகும், மடமையும் பெருகும்.

-( , , )

ஆலோசனைக்கு முதியோர், போருக்கு இளைஞர். -( , , )

முதுமையில் யோசிக்கவேண்டும், இளமையில் செயல் புரிய வேண்டும். -( , , )

காதலைப்போல, வயதையும் மறைக்க முடியாது. -( , , )

மனிதனையும் விலங்கையும் அடக்கி விடுபவை வயதும், விவாகமும். -( , , )

வயது கூடக் கூட, கல்லறை நெருங்கி வருகிறது. -( , , )

முதுமையில் இளமையை விரும்புவோர் இளமையில் முதியவராயிருக்க வேண்டும். -( , , )

முதுமையே ஒரு நோய். -( , , )

வயோதிகம் நோய்கள் சேரும் துறைமுகம். -( , , )

மரணத்தைவிட அஞ்சத்தக்கது முதுமை. -( , , )

முதுமை உள்ளே வந்தால், புத்தி வெளியே போய்விடும்.

-ஷேக்ஸ்பியர்

ஆகக்கூடிய வயதுடையவனும் இறந்துதான் போனான்.

-அயர்லந்து

வழித்துணைக்கு முதுமை ஏற்றதன்று. - டென்மார்க்

இதயம் எவ்வளவு முதுமையோ, அவ்வளவே ஒருவனுடைய முதுமை. -ஃபிரான்ஸ்

பெண்டிர்க்கு நரகம் முதுமை. -( , , )

முதுமையால், முகத்தைக் காட்டிலும், மனத்திலே அதிகச் சுருக்கங்கள் விழும். -மான்டெயின்

வயதானவர்களுக்குத் தூரத்துப் பார்வை அதிகம்.

- ஜெர்மனி

இளையோர் அறிய மாட்டார், முதியோர் மறந்துவிடுவர்.

-( , , )

வயோதிகனைப் போல வாழ்வில் பற்றுடையவர் இல்லை.

- ஸாஃபாகிளிஸ்

கிழவர்கள் இரண்டாவது முறையாகக் குழந்தைகள்.

- கிரீஸ்

புறாவின் இளமையினும் கழுகின் முதுமை மேலானது.

-( , , )

இளமை ரோஜா மாலை, முதுமை முள் மகுடம். -யூதர்

இளமையில் தேவன், முதுமையில் சயித்தான். - எராஸ்மஸ்

முதுமையும் மகிழ்ச்சியும் சேர்ந்திருத்தல் அரிது. - ஸெனீகா

கிழவனுக்குத் தண்ணீர் இறங்கவில்லையானால், சமாதியைத் தயாரிக்கலாம். -ஸ்பெயின்

குழவிப் பருவத்தில் அழுகை அதிகம், வயது காலத்தில் பேச்சு அதிகம். -இந்தியா

வயதான பின்பு உன் குழந்தைகளுக்குப் பணிந்து நட.

-ஜப்பான்

யார் தலைமயிர்தான் நிறம் மாறாமலிருக்கும்? -சீனா

பற்கள் விழுந்த பிறகு, நாவு மட்டும் ஆடிக்கொண்டே யிருக்கும். -( , , )

ஆகாத காலத்தில் கிழவர்களுக் கெல்லாம் பற்கள் விழாமலிருக்கும். -அரேபியா

இளமையின் நினைவு வந்தால் நெட்டுயிர்ப்புத்தான். -( , , )

கரடிக்கு வயதானால், அது குட்டிகளுக்கு விளையாட்டுக் கருவியாகும். -குர்திஸ்தானம்

கிழவிகளை நீ ஏமாற்ற முடிந்தால், சயித்தானையே நீ பிடித்து விடலாம். -ஐ. நாடோடிகள்

நாற்பது வயது - இளமையின் முதுமை; ஐம்பது வயது முதுமையின் இளமை. -ஃபிரான்ஸ்

சயித்தான் தான் சாதிக்க முடியாத வேலைக்கு ஒரு கிழவியை அனுப்புவான். -போலந்து

வயது முதிர்ந்தவரைப் பார்த்து, உடம்பு எப்படி?' என்று கேட்க வேண்டாம், 'இப்போது என்ன நோய்?" என்று கேட்கவும். -( , , )

முதியோரை மதித்தல் ஆண்டவனை மதிப்பதாகும்.

-பல்கேரியா

மனிதன் இருமுறை குழந்தை. -எஸ்டோனியா

கிழவருக்கு மரணம் கண் முன்னால் நிற்கும், இளைஞருக்குப் பின்புறம் நிற்கும். -( , , )

மனிதன் முதுமையடைகிறான், ஆனால் பிணி இளமையடைகின்றது. -( , , )

தொட்டிலைத் தாங்குபவள் கிழவி, அவளே குழந்தையின் கைதி. -எஸ்டோனியா

கிழட்டுப் பசுவுக்குத் தான் கன்றாயிருந்தது நினை விராது. -( , , )

கிழவிகளையும், ஓநாய்களையும் படைத்து, இறைவன். உலகைப் பாழாக்கி விட்டான். -( , , )

வயது முதிர்ந்தவன் நெடு நாளைக்குக் குழந்தையாயிருப்பான். - ஐஸ்லந்து

தாடியில்லாதவர்களுக்குச் சுவர்க்கத்தில் இடமில்லை.

-ரஷ்யா

கிழவியும் சயித்தானும் எப்பொழுதும் கூடியே யிருப்பார்கள். -செர்பியா

வயதானவருக்கு அவர் கேட்கு முன்னால் கொடு.

-ஆப்பிரிகா

தாடியுள்ள வாய் பொய் சொல்லாது. -( , , ) முதுமைக்கு அஞ்சுங்கள், அது தனியாக வருவதில்லை.

- கிரீஸ்