குறுந்தொகை 111 முதல் 120 முடிய


பாடல் 111 (மென்றோ)

தொகு

தோழி கூற்று:

தலைவன் திருமணம் செய்யக் காலந்தாழ்த்துகின்றான். இந்நிலையில் தலைவன் சிறைப்புறத்தானாக (வேலிப்புறத்துநிற்க) அவன் உணரும்படி தலைவிக்குக் கூறுவதுபோலத் தலைவனுக்குக் கூறுகின்றாள் தோழி: "நின் உடம்பின் வேறுபாடுகண்டு அதனைநீக்கத் தாய் வெறியாடுகி்ன்றாள்; வெறியாடும்வேலனும் இது முருகனால் வந்தது என்கின்றான். வீட்டிலுள்ளார் செய்யும் இந்தக் கூத்தைக்காணத் தலைவன் இங்குவந்தால் நலமாயிருக்கும்." என்கின்றாள்.

மென்றோ ணெகிழ்த்த செல்லல் வேலன்மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்

வென்றி நெடுவே ளென்னு மன்னையும்வென்றி நெடு வேள் என்னும் அன்னையும்

அதுவென வுணரு மாயி னாயிடைக்அது என உணரும் ஆயின் ஆயிடைக்

கூழை யிரும்பிடிக் கைகரந் தன்னகூழை இரு பிடி கை கரந்துஅன்ன

கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்கேழ் இரு துறுகல் கெழு மலை நாடன்

வல்லே வருக தோழிநம்வல்லே வருக தோழி நம்

மில்லோர் பெருநகை காணிய சிறிதே.இல்லோர் பெரு நகை காணிய சிறிதே

என்பது வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடுகண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.
பாடியவர்
தீன்மிதி நாகன்
அருஞ்சொற்பொருள்
(வென்றி- வெற்றி; நெடுவேள்- முருகன்; கூழை- குட்டையான; இரும்பிடி- கரியபெண்யானை; கை- துதிக்கை; கரந்து அன்ன- மறைத்தது போன்று; கேழ்- நிறம்; இரும்- கரிய; துறுகல்- துருத்திக்கொண்டுநிற்கும் பாறை; கெழு-பொருந்திய; மலைநாடன்-தலைவன்; வல்லே- விரைவாக; காணிய- காண்பதற்காக.)


இப்பாடலின் கருத்து:

"உன்னுடைய மென்மையான தோள்களை மெலியச் செய்த துன்பம், வெற்றிதரும் வேலையுடைய நெடுவேள் முருகனால் வந்தது என்று கூறுவான் வெறியாட்டுநிகழ்த்தும் வேலன். அன்னையும் அதுவே என்று நினைப்பாள். இந்தக் கூத்தைக் காண நம் தலைவன் விரைந்து வந்தால் நலமாயிருக்கும்". நம் தலைவன் மலைநாடன்; அங்குக்குண்டுக்கற்கள் நிறைந்திருக்கும். அந்தக்குண்டுக் கல்லானது குறுமையான கரியயானை ஒன்று, தன் கையை மறைத்துக்கொண்டு நின்றால் எப்படியிருக்குமோ அப்படித் தோற்றமளிக்கும். அத்தகு கைமறைந்த யானைபோன்ற கரிய குண்டுக் கற்கள் நிறைந்த மலைநாடன் நம்தலைவன். அவன் நம் வீட்டார் செய்யும், இந்தச் சிரிப்பைத்தரும் கூத்தைக்காண விரைந்துவருவானா?- என்கின்றாள்.

தோழிபேச்சில் பொதிந்துள்ள உள்ளுறை:

தலைவன் நாட்டில் உள்ள கருநிறம்பொருந்திய குண்டுக்கற்கள், சாதாரணமாகப் பார்ப்பார்க்குக் கை (துதிக்கை)மறைத்துக்கொண்டு இருக்கும் கரிய பெண்யானைபோல் இருக்கும். சற்று ஆழமாக நுணுகிப்பார்த்தால்தான் அதுயானை அன்று, கரியகுண்டுப்பாறை என்றுஉண்மைதெரியும். அதுபோலத் தலைவியின் உடம்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் மேலாகப்பார்ப்பவர்க்கு முருகனால் வந்ததுபோல் தெரியும். ஆனால், ஆழ்ந்து பார்த்தால்தான் அது முருகனால்வந்தது அன்று, தலைவனால் -மலைநாடனால்- வந்தது என்பது புரியும். (துறுகல்= துருத்திக் கொண்டிருக்கும் குண்டுப்பாறை) அதனைப்பெண்யானையோடு ஒப்பிட்டதற்குக் காரணம், ஆண்யானை(களிறு) என்றால், தந்தம் இருக்கும். அதன் வெண்மைநிறம், பார்ப்பவர்க்கு அது கரும்பாறைஅன்று, யானையே என்று தெளிவாகக்காட்டிவிடும். பெண்யானைக்கு (பிடி) தந்தம் இல்லை, எனவே சட்டென்று பார்த்தால் அதுயானைபோலத் தெரியும், யானைக்குக் கையிருக்குமே என்றால், அதனால்தான் கையை மறைத்துக்கொண்டு வந்த யானை(கைகரந்து அன்ன கூழை இரும் பிடி) என்கின்றாள் தோழி. அற்புதமான உவமை, உள்ளுறை பொருந்தியது. இதவே சங்கப் பாடலின் தனிச்சிறப்பு.

பாடல் 112 (கௌவை)

தொகு

தலைவி கூற்று

கௌவை யஞ்சிற் காம மெய்க்கு கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
மெள்ளற விடினே யுள்ளது நாணே எள் அற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படாஅ பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை யொசிய லற்றே நார் உடை ஒசியல் அற்றே
கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே. கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே.
என்பது வரைவு நீட்டித்தவழித் தலைமகன் தோழிக்குச் சொல்லியது. பொருள்: வதந்திகளுக்கு அஞ்சினால் ஆசை குறைந்து விடும். அச்சத்தை அறவே விட்டு விட்டாலும் கடைசியில் வெட்கம் மட்டுமே மிஞ்சும். பெரிய யானை முறித்துப் போட்ட மரக்கிளை மரத்திலும் ஒட்டாமல் நிலத்திலும் விழாமல் தொங்கும் நிலை போலன்றோ ஆயிற்று காண் தோழி, அவர் சுவைத்துச் சென்ற என் அழகு!
பாடியவர்
ஆலத்தூர்கிழார்.

பாடல் 113 (ஊர்க்குமணித்)

தொகு

தோழி கூற்று


ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச்ஊர்க்கும் அணி்த்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்து மன்றே சிறுகான் யாறேசேய்த்தும் அன்றே சிறு கான் யாறே
யிரைதேர் வெண்குரு கல்ல தியாவதுந்இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும்
துன்னலபோ கின்றாற் பொழிலே யாமெங்துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறுகூழைக்கு எருமண் கொணர்கம் சேறும்
மாண்டும் வருகுவள் பெரும்பே தையே.ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.


என்பது, பகற்குறி நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினாற் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது.


பாடியவர்: மாதிரத்தன்.

பாடல் 114 (நெய்தற்பரப்)

தொகு

தோழி கூற்று


நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பிநெய்தல் பரப்பில் பாவை கிடப்பி
நின்குறி வந்தனெ னியறேர்க் கொண்கநின் குறி வந்தனென் இயல் தேர்க் கொண்க
செல்கஞ் செலவியங் கொண்மோ வல்கலுசெல்கம் செல வியம் கொண்மோ அல்கலும்
மார லருந்த வயிற்றஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கு மென்மக ணுதலே.நாரை மிதிக்கும் என் மகள் நுதலே.


என்பது, இடத்துய்த்து நீங்குந் தோழி தலைமகற்குக் கூறியது.


பாடியவர்: பொன்னாகன்.

பாடல் 115 (பெருநன்றா)

தொகு

தோழி கூற்று

(தலைவியை உடன்போக்கிற்கு ஒப்புக்கொள்ளும்படிசெய்து மீண்டுவந்த தோழி, தலைமகனுக்குச் சொன்னது.)


பெருநன் றாற்றிற் பேணாரு முளரேபெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரே
ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டுஒரு நன்று உடையள் ஆயினும் புரிமாண்டு
புலவி தீர வளிமதி யிலைகவர்புலவி தீர அளிமதி இலை கவர்பு
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல்ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்மெல் நடை மரை ஆ துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே. நன் மலை நாட நின் அலது இலளே.


என்பது, உடன்போக்கு ஒருப்படுத்து மீளுந் தோழி தலைமகற்குக் கூறியது.
பாடியவர்
கபிலர்.


சூழல்
தம்காதல் திருமணத்திற்கு இசைவுதராத நிலையில், தலைவனுடன் 'உடன்போக்கு' (வீட்டார் அறியாதவண்ணம் தலைவனுடன் திருமணம் செய்துகொள்ள உடன்போதல்) செல்ல அவளைச் சம்மதிக்கவைத்து மீண்ட தோழி தலைவனைப்பார்த்துச் சொல்வது.
அருஞ்சொற்பொருள்
நன்று- நன்மை; உளரே- இருப்பார்களா? (இருக்கமாட்டார்கள்); ஒருநன்று- ஒருநன்மை (இங்குத் தலைவன்மேல் அன்புசெலுத்துவது என்றஒன்று); புரி- புரிந்துகொண்டு; மாண்டு- மாட்சியுடன், மாண்புடன் (மரியாதைதந்து); புலவி- அன்பினால் ஏற்படும் சிறுபிணக்கு; அளி- தலையளிசெய்வாய், அவளை அன்புசெய்வாய்; ஆடுஅமை- அசைகின்ற மூங்கில்; ஒழுகிய- வரிசையாக வளர்ந்துள்ள; தண்- குளிர்ச்சி; சாரல்- மலைச்சாரல்; துஞ்சும்- தூங்கும்.)
பாடல்கருத்து
ஒருவர் தமக்குப் பெரிய நன்மையைச் செய்தால் அவரைப் போற்றாமல் இருப்பார் யாராவது உண்டா? இல்லை. அனைவரும் போற்றுவர்; அது சிறப்பிற்குரிய ஒன்றா என்றால் இல்லை. (ஏனெனில் தனக்கு நன்மைசெய்தான், அதனால் போற்றிப்புகழ்கின்றான், அது இயல்புதானே!) அவ்வாறு இன்றி உன்மேல் அன்புசெலுத்துவது என்ற ஒருநன்மையைமட்டுமே செய்கின்ற முதுமைக்காலத்திலும் நீ இவளை மாட்சிமையோடு விரும்பி (கடனே என்று இல்லாமல் விரும்பி) அவளின் புலத்தல் நீங்கும்வண்ணம் (அன்புக்கோபம் நீங்கும்படி) உன் அன்பைச்செலுத்திப் பாதுகாப்பாயாக. இவளுக்கு நின்னைத்தவிர வேறுயாரும் இல்லை. நல்மலை நாடனே, தலைவனே! என்கின்றாள்.

அவனுடைய நன்மலை நாடு எப்படிப்பட்டது? தோழி பொடிவைத்துப் புகழ்கின்றாள். அந்நாட்டின் இயல்பைக்கூறுகின்றாள். அந்தமலைநாட்டில் மலைச்சாரல்; மலைச்சாரலோ குளிர்ச்சியும் நறுமணமும் மிக்கது. அங்கு காற்றில்ஆடும் மூங்கில்கள் வரிசையாக அச்சாரலில் வளர்ந்துள்ளன. அங்கு மரையா எனும் காட்டுப்பசுக்கள் பல்வேறுமரங்களின் இலைகளை விரும்பி உண்டு (கவலையற்று) உறங்குகின்றன. அத்தகு இயல்புடையது நின்மலைநாடு என்கின்றாள்.

உள்ளுறை:

தனக்கு (காட்டுப்பசுவிற்கு) பயன்படாது ஓங்கிவளர்ந்த மூங்கிலையுடைய குளிர்ந்த மலைச்சாரல்! என்றாலும், காட்டுப்பசு தனக்குப் பயன்படுகின்ற இலைகளைத் தேடியுண்டு (அந்தமூங்கிலின்மீது வெறுப்படையாது) அச்சாரலில் தூங்குவதுபோன்று, நினக்குப் பெரிதும் பயன்படாத மூப்புடைய காலத்திலும், உன்மேல் அன்புடையவள் என்ற ஒன்றைக்கருதி அவளைப் புரிந்துகொண்டு, இன்பமாக இவள்மேல் அன்புவைத்து நடப்பாயாக என்ற உள்ளுறை இதனுள் அமைந்துள்ளது உணர்ந்து மகிழத்தக்கது.

இன்று இவள் உனக்குப் பலவகையிலும் ஐம்புல இன்பங்களை வாரிவழங்கும் இளமைததும்ப இருக்கின்றாள். எனவே, இன்றுநீ இவளைப் போற்றி அன்போடு வைத்துக்கொள்வது ஒன்றும்பெரிதன்று. இப்பொழுது இவளிடமிருந்து பெறும் இன்பத்தைப் பெறமுடியாத முதுமைக் காலத்திலுங்கூட (வயதான காலத்திலும்) -இவளைப் புரிந்துகொண்டு- இவளின் அன்புஎன்ற ஒன்றைக் கருதி இவளைப் போற்றிப் பாதுகாப்பாயாக. (உன்னைவிட்டால் இவளுக்கு இனி யார்இருக்கின்றார்கள்?)
இதுவே நான் உனக்குக்கூறுவது, என்கின்றாள் தோழி.

பாடல் 116 (யானயந்)

தொகு
யானயந் துறைவோ டேம்பாய் கூந்தல்யான் நயந்து உறைவோள் தேம்பாய் கூந்தல்
வளங்கெழு சோழ ருறந்தைப் பெருந்துறைவளம் கெழு சோழர் உறந்தைப் பெரும் துறை
நுண்மண லறல்வார்ந் தன்னநுண் மணல் அறல் வார்ந்து அன்ன
நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே.நல் நெறி அவ்வே நறும் தண்ணியவே.
என்பது, இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாடியவர்
இளங்கீரன்.

பாடல் 117 (மாரியாம்பல்)

தொகு
மாரி யாம்ப லன்ன கொக்கின்மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வலஞ்சிய பருவர லீர்ஞெண்டுபார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர்கண்டல் வேர் அளைச் செலீஇயர் அண்டர்
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன்
வாரா தமையினு மமைகவாராது அமையினும் அமைக
சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே.சிறியவும் உள ஈண்டு விலைஞர் கை வளையே.
என்பது, வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
பாடியவர்
குன்றியனார்.

பாடல் 118 (புள்ளுமாவும்)

தொகு
புள்ளு மாவும் புலம்பொடு வதியபு்ள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென் வந்த நாரின் மாலைப்நள்என் வந்த நார் இல் மாலைப்
பலர்புகழ் வாயி லடைப்பக் கடவுநர்பலர் புகழ் வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீ ருளீரோ வெனவும்வருவீர் உளீரோ எனவும்
வாரார் தோழிநங் காத லோரே.வாரார் தோழி நம் காதலோரே.


என்பது வரைவு நீட்டித்தவழித் தலைமகள் பொழுதுகண்டு தோழிக்குச் சொல்லியது.
பாடியவர்
நன்னாகையார்.

பாடல் 119 (சிறுவெள்)

தொகு
தலைவன் கூற்று.
சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளைசிறு வெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை யணங்கி யாஅங்கான யானை அணங்கியாஅங்கு
கிளையண் முளைவா ளெயிற்றள்இளையள் முளை வாள் எயிற்றள்
வளையுடைக் கையளெம் மணங்கி யோளே.வளை உடைக் கையள் எம் அணங்கியோளே.
என்பது, இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கிற்கு உரைத்தது.
பாடியவர்
சத்தி நாதனார்.

பாடல் 120 (இல்லோனின்)

தொகு
இல்லோ னின்பங் காமுற் றாஅங்இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு
கரிதுவேட் டனையா னெஞ்சே காதலிஅரிது வேட்டனையான் நெஞ்சே காதலி
நல்ல ளாகுத லறிந்தாங்நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
கரிய ளாகுத லறியா தோயேஅரியள் ஆகுதல் அறியாதோயே.
என்பது, 1.அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
2. இஃது இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன், பிரிந்தவழிக் கலங்கியதூமாம்.

பொருள் : இல்லாதுபட்டவன் இன்பத்திற்கு ஆசைப்பட்டுவிட்டதைப் போல அரிதற்கரிய ஆசை கொண்டு விட்டாயே மனமே ! இந்தக் காதலி நல்லவள் என்பதை அறிந்திருந்தாய். ஆனால் அடைதற்கு அரியவள் என்பதை அறியாது போனாயே !

பாடியவர்
பரணர்.


பார்க்க: