கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/ஊரும் பேரும்
49. ஊரும் பேரும்
எல்லோரும் வட்டமாக நின்று கொண்டிருக்க வேண்டும் வட்டத்தின் மத்தியில் ஒருவர் நிற்க வேண்டும்.
வட்டத்தில் நிற்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு ஊரின் பெயர் உண்டு. (இல்லையென்றால் அவருக்குரிய பெயரையே வைத்து விளையாடலாம்).
வட்டத்தின் நடுவில் நிற்பவர், இருவரின் பெயர்களை உரக்கச் சொல்லவேண்டும். தன் பெயரைக் கேட்டவுடனேயே அந்த இருவரும் தங்கள் இடங்களை மாற்றிக் கொள்வதற்காக ஓடவேண்டும்.
வட்டத்தைச் சுற்றியும் வரலாம். உள் புகுந்தும் வரலாம். ஆனால், இருவரும் இடம் மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே முக்கியம்.
அதற்குள் ஒருவர் போய் இடைவெளி விழுகின்ற இடத்தில் நடுவில் நிற்பவர் போய் நின்றுகொண்டால் இடம் இல்லாதவர் நடு இடத்திற்கு வந்து நிற்க வேண்டும்.
மீண்டும் முன்போலவே இருவரை அழைத்து இடம் பிடித்து ஆட்டத்தைத் தொடரவேண்டும்.