கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/பருந்தும் கோழிக் குஞ்சுகளும்

48. பருந்தும் கோழிக் குஞ்சுகளும்

அமைப்பு:

ஆட்டக்காரர்கள் அனைவரையும் இரண்டு சம எண்ணிக்கையுள்ள குழுக்களாகப் பிரிக்க வேண்டும்.

ஒரு மையக் கோட்டை இழுத்து, அக்கோட்டிற்கு இணையாக இரு பக்கமும் 10 அடி அல்லது 15 அடி தூரத்திற்கு ஒவ்வொரு கோடுகள் கிழித்துக் குறித்திருக்க வேண்டும்.

ஒரு குழு பருந்துகளாகவும், மற்றொரு குழு கோழிக் குஞ்சுகளாகவும் விளையாடும்.

ஆடும் முறை:

பருந்துக்கும் கோழிக்குஞ்சுகளுக்கும் (மத்தியில்) ஓரத்தில் நிற்கும் ஆட்டப் பொறுப்பாளர், ‘கோழிக் குஞ்சு’ எனக் கூறியதும் அந்தக் குழுவினர்கள் அனைவரும் அழகாகத் தலையை ஆட்டவேண்டும்.

பிறகு, பொறுப்பாளர் ‘பருந்து வருகிறது’ என்று சத்தம் போடுவார்! பருந்தாக இருப்பவர்கள் பாய்ந்து வந்து கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க ஓடிவருவார்கள். அதற்குள் கோழிக்குஞ்சுகள் எல்லாம் தங்களுக்குப்பின்னால் உள்ள சேருமிடத்தைக் காட்டும், எல்லைக்கோட்டை நோக்கித் தப்பி ஓடிவிட வேண்டும்.

எல்லையை அடைவதற்குள் பிடிபட்டவர்கள் பருந்தாக மாறி ஆட, மீண்டும் அவரவர் இடத்தில் நின்ற பிறகு, முன்னர் கூறியது போலவே ஆட்டம் தொடரும்.

பருந்துகள்
நிற்குமிடம்
கோழிக் குஞ்சுகள்
நிற்குமிடம்
சேரும் எல்லை