கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/முன்னும் பின்னும்

75. முன்னும் பின்னும்


முன் விளையாட்டைப் போலவே, ஆட்டக்காரர் களை மூன்று மூன்று பேர்களாகப் பிரிக்க வேண்டும்.

அந்த ‘மூவர் குழு’ வுக்குள்ளே ஒட்டப் போட்டி தொடங்கும். அதற்கென அவர்கள் நின்று கொண்டிருக்கும். முறையைக் காண்க.

ஒடத் தொடங்கும் கோட்டில், நடுவிலே நிற்பவரின் முகமானது முடிவெல்லைக் கோட்டைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். அதே சமயத்தில் அவருக்கு இடப்புறமும் வலப் புறமும் உள்ளவரின் முதுகுப்புறமும் முடிவெல்லைக் கோட்டைப் பார்ப்பதுபோல் இருக்க வேண்டும்.

அவர்கள் கைகளைப் பக்கவாட்டில் அடுத்தவர் கைகளுக்கிடையில் விட்டு சங்கிலிபோல், வசதிக்கேற்ப பிடித்துக் கொண்டிருக்கவேண்டும்.

‘ஒடுங்கள்’ என்று ஆணையிட்டவுடன், அவர்கள் மூவரும் முடிவெல் லைக்கோட்டை நோக்கி ஓட வேண்டும்.

நடுவிலே உள்ளவர்தான், தன்னுடன் பின்னோக்கி வருபவரை நடத்திச்சென்று ஓடச் செய்யவேண்டும்.

முடிவெல்லைக்கோட்டை முதலில் அடைபவரே வெற்றி பெற்றவராவார்.