கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/குதிரைச் சண்டை
76. குறிரைச் சண்டை
ஆட்டக்காரர்களை இருவர் இருவராகப் பிரிக்க வேண்டும். ஒருவர் தன் முதுகின்மேல் மற்றவரை ஏற்றிக் கொள்ள, குதிரையும் குதிரை வீரனுமாக மாறிவிடுகின்றார்கள்.
குறிப்பிட்டிருக்கும் ஒரு வட்டத்திற்குள்ளே எல்லா இரட்டையர்களும் ‘குதிரை குதிரை வீரர்களாக நிற்க வேண்டும். ஆட்டத்தைத் தொடங்கியவுடன் ஒருவருக் கொருவர் தள்ளியோ, மெதுவாக இடித்தோ, மற்றக் குதிரையாளரை வட்டத்திற்கு வெளியே தள்ளிவிட வேண்டும் அல்லது வெளியே அனுப்பி விடவேண்டும்.
இறுதிவரை வட்டத்துக்குள் நிற்பவரே வெற்றி பெற்றவராவார்.
குறிப்பு:
குதிரை வீரன் குதிரையிலிருந்து கீழே விழுந்தாலும் சரி, அல்லது வட்டத்தின் கோட்டையோ, வட்டத்திற்கு வெளித்தளத்திலோ குதிரையாயிருப்பவர் காலடி வைத்தாலும் சரி, இருவரும் ஆடுதற்குரிய வாய்ப்பை இழக்கின்றனர்.
தள்ளுவதும் இடிப்பதும் மட்டுமே ஏற்றுக்கொண்ட விதிகளாகும். தாக்குவது, உதைப்பது, அடிப்பது, முட்டியால் குத்துவது எல்லாம் முரட்டுத்தனமான ஆட்டத்திற்கு இட்டுச் செல்வதால் மேற்கூறிய வன்முறைகளைத் தவிர்த்துவிடவேண்டும்.