கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/மூன்று கால் ஓட்டம்
73. மூன்று கால் ஒட்டம்
கால் பந்தாட்ட ஆட்டம் போலவே, இரு பக்கமும் இலக்குகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஆட்டக்காரர்களை முதலில் இரு குழுக்களாகப் பிரித்து, அந்தந்தக் குழுவுக்குள்ளேயே, இரு இரு ஆட்டக்காரர்கள் சேர்ந்து, தங்களின் ஒவ்வொரு காலையும் கைக்குட்டையால் கட்டிக் கொள்ள வேண்டும்.
(இருவருடைய இடது காலும் வலது காலும் சேர்ந்து மூன்று கால் ஆகிறது)
இரட்டையர்கள் தோள்மேல் கைகளைப் போட்டுக் கொண்டு, ஒருவர் போலவே இணைந்து ஆடவேண்டும்.
இப்பொழுது, ஆட்டம் ஆரம்பமாகிறது. பந்தைக் கையால் தொடக்கூடாது யாரையும் தள்ளக் கூடாது. மிகஅருகிலே குறிக்கப் பெற்றிருக்கும் இலக்கை நோக்கிப் பந்தை உதைக்க வேண்டும்.
இலக்கைக் காக்கவும், ஒரு இரட்டையரே நிற்க வேண்டும்.
அதிக வெற்றி எண்கள் (Goal) பெற்ற குழுவே. இறுதியில் வெற்றி பெற்றதாகும்.