கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வட்டத்தில் பந்தாட்டம்

91. வட்டத்தில் பந்தாட்டம்

ஒடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால், குழுக்கள் வரிசையாக நிற்கவேண்டும். (படம் 77ல் உள்ளபடி)

10 கெச தூரத்திற்கு அப்பால், ஒவ்வொரு குழுவிற்கும் நேராக, அந்தந்தக் குழுவுக்கென்று, ஒரு சிறு வட்டம் வரைந்து, அதன் மத்தியில் பந்து ஒன்றையும் முன் கூட்டியே வைத்திருக்கவேண்டும்.

போட்டித் தொடங்கிய உடனே, முன்னால் நிற்கும் முதலாட்டக்காரர் பந்திருக்கும் இடமான தமக்குரிய வட்டத்திற்குச் சென்று, பந்தை எடுத்து, 10 முறை பந்தைத் தரையிலே தட்டித்துள்ளவிட்டுப் பிடித்து, பிறகு பந்தை எடுத்துக்கொண்டு வந்து, தனக்கு அடுத்து நிற்கும் ஆட்டக்காரரிடம் கொடுத்துவிட்டு, குழுவின் பின்புறம் சென்றுநின்று கொள்ளவேண்டும்.

இரண்டாமவர் ஓடிச்சென்று, பந்தை 10 முறை தட்டிவிட்டு ஓடிவந்து, பந்தை அடுத்தவரிடம் அளித்துவிட்டு முன்னவரைப் போல அவருக்குப் பின்னால் சென்று நிற்க வேண்டும்.

இவ்வாறு 10முறை தட்டித் தட்டி பந்தை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஓடி வந்து முடிக்கின்ற குழுவே வெற்றிபெறும்.

குறிப்பு: 10 முறை பந்தைத் தட்டித்தான் விளையாட வேண்டும். குறைந்தளவு செய்தவர்களின் குழு போட்டியினின்றும் நீக்கப்பட்டுவிடும் பந்து உருண்டு ஓடி விட்டாலுங்கூட, அவரே போய் எடுத்துக்கொண்டு வரவேண்டும், வேறு யாரும் அவருக்கு உதவி செய்யக்கூடாது.