கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வளையத்துள் பந்தாட்டம்

92. வளையத்துள் பந்தாட்டம்

கூடைப் பந்தாட்ட வளையம் இருக்கும் இடத்திலிருந்து, தேவையான தூரத்திற்கு ஒரு ஒடத் தொடங்கும் கோட்டை குறிக்க வேண்டும்.

வழக்கம் போல, குழுக்கள் வரிசையாக நிற்க வேண்டும்.

குழுவிலுள்ள முதலாட்டக்காரர் அனைவரிடமும் ஒவ்வொரு பந்து இருக்கவேண்டும்.

போட்டித் தொடங்கிய உடனே, முதலாட்டக்காரர் அனைவரும் தமக்குரிய பந்துடன் கூடைப் பந்தாட்ட வளையம் நோக்கி ஓடி, பந்தை வளையத்திற்குள் எறிய வேண்டும்.

ஒருமுறை பந்தை வளையத்தில் போட்டு வெற்றிபெற்ற பிறகு, பந்தைப் பிடித்துக்கொண்டு, தனது குழு நோக்கி ஓடி வந்து, பந்தை அடுத்தவரிடம் தந்துவிட்டு குழுவின் பின்னாட்டக்காரராக மாறி நின்றுவிடவேண்டும்.

முன்னாட்டக்காரர் போலவே, குழுவில் உள்ள அனைவரும் ஒரு முறை செய்து, வளையத்துக்குள் பந்தை எறிந்து வெற்றி பெற்ற பிறகே வரவேண்டும்.

முதலில் முடிக்கின்ற குழுவே வெற்றிபெற்றதாகும். குறிப்பு: எறியும் முயற்சியில் எத்தனை முறை

தோற்றாலும் பரவாயில்லை. ஒரு முறை வளையத்திற்குள் பந்தைப் போட்ட பிறகுதான் தனது குழுவை நோக்கி ஓட முடியும்.

இதே விளையாட்டை இன்னொரு முறையிலும் ஆடலாம்.

ஓடிச் செல்கிறவர் வளையத்தை நோக்கி ஒரு முறை எறியவேண்டும். முயற்சியில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, உடனே பந்தைப் பிடித்துக் கொண்டு, தன் குழுவிலுள்ளவரை தொடர்ந்து ஆடச் செய்யலாம்.

எறிவதில் வெற்றி பெற்றால் 2 வெற்றி எண்கள் உண்டு. தோற்றால் 0 தான். ஆகவே கணக்கெடுத்துக் கொண்டு, ஆட்டக் கடைசியில் அதிக வெற்றி எண்கள் பெற்றக்குழுவையே வெற்றி பெற்றதென்று அறிவிக்க வேண்டும். ஆனாலும், முதலிலும் ஓடிவரவேண்டும்.