கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வட்டத்துக்குள் சட்டம்

47. வட்டத்துக்குள் சட்டம்

அமைப்பு:

முன் ஆட்டம் போலவே, பெரிய வட்டம் ஒன்றைப் போட்டு, அந்தக் கோட்டின் மேலேயே, ஒருவர் நிற்பதற்கேற்ப, சிறு சிறு வட்டங்களை, சுற்றிலும் போட்டிருக்க வேண்டும்.

பிறகு, வட்டத்தின் மையப் பகுதியிலும் ஒருவர் நிற்பதற்கேற்ப ஒரு சிறு வட்டம் வரைந்திருக்க வேண்டும்.

சிறுசிறு வட்டத்திற்குள் நிற்பவர்கள் எல்லாம், தங்கள் காலிரண்டும் வட்டத்திற்குள் இருப்பதுபோல் தான் நிற்க வேண்டும்.

ஆடும் முறை:

நடுவில் உள்ளவர், வட்டத்தின் உள் நிற்பவர் களைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருப்பார். அவர் அருகில் வரும்பொழுது மட்டும், வட்டத்திற்குள்ளே இருப்பவர்கள், தங்கள் வட்டத்திற்குள் வந்து நின்றுவிட வேண்டும்.

அவ்வாறு வட்டத்திற்குள் நிற்காதவர்களை, சுற்றிவருபவர் தொட்டுவிட்டால் தொடப்பட்டவர் அவரோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தொடப்படுகிறவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டு, வட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்து நிற்க முயல் பவர்களைத் தொடவேண்டும்.

குறிப்பு:

வட்டத்திற்குள் இருப்பவர்கள் சோம்பலாகவோ, சும் மாவோ வட்டத்திற்குள்ளேயே தூண் போல நின்றுகொண்டிருக்கக் கூடாது. அப்படியும் இப்படியும் ஆட்டங் காட்டி விளையாடினால்தான், எல்லோருக்கும் ஆட்டம் பிடிக்குந் தன்மையில் அமையும்.

கடைசியில் ஒருவர் நின்றாடும் வரை தொடர்ந்தாடலாம்.