கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வேறு வழி

24. வேறு வழி

அமைப்பு:

‘தொட்டால் போதும்’ என்ற ஆட்டத்தைப் போல்தான். ஆனால், ஏதாவது ஒரு பொருளைத் தொட்டால் போதும் என்பதற்குப் பதிலாக, நன்றாகத் - தரையில் அமர்ந்து சாப்பிடுவதுபோல, கால்களை மடக்கி உட்கர்ந்து கொள்ளும் முறைதான். ‘வேறு வழி’ என்ற தலைப்பில் விளையாடப்படுகிறது.

ஆடும் முறை:

வெகுவாக விரட்டப்பட்டுத் தப்பிப்பதற்காக ஓடுகின்றபொழுது, திடீரென்று உட்காருவது கடினந்தான். இருந்தாலும், முன்னரே விளக்கியுள்ளபடி சரியாக உட்கார்ந்தால்தான், தப்பிக்கமுடியும். இல்லையென்றால் தொடப்பட்டு, பிடிபட்டுவிட்டார் என்று, அவரைப் பிடிக்கும் ஆளாக மாற்றிவிடுவார்கள்.

குறிப்பு:

விரட்டுபவர் எக்காரணத்தை முன்னிட்டும் நின்று ஒய்வு எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி அடிக்கடி நிற்கத் தொடங்கி விட்டால் ஆட்டத்தில் சுவை குன்றிப் போய்விடும்.

அடுத்தடுத்து, அனைவரையும் விரட்டித் தொடுவதற்கு முயற்சித்தால்தான் பொழுதும் இன்பமாகப் போகும். விளையாட்டில் விறுவிறுப்பும் நிறைய, எதிர்பார்த்த இன்பமும் கிடைக்கும்.