இடம் : அண்ணா நகர், சென்னை

கேள்வி கேட்பவர் : பி. பத்மா

பங்கு கொள்வோர் :

கே. வரதராஜன், பமீலா நாராயணன். ஆர். பிரபாகரன் 3055–s

பதமா : கப்பல் ஒட்டிய தமிழர் சிதம்பரனார் பிறந்த அதே மாதத்தில், அதே தேதியில், நம் நாட்டு ஜனாதிபதியாக இருந்த ஒருவரும் பிறந்தார். அவர் யார்?

பமீலா : ராஜேந்திர பிரசாத்,

பத்மா இல்லை: ராஜேந்திர பிரசாத் பிறந்தது டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி, இவர்கள் பிறந்தது செப்டம்பர் 5-ஆம் தேதி, ஒரு குறிப்பு தருகிறேன்... அவரும் தென்னிந்தியர்தான்!

வரதராஜன்: சஞ்சீவிரெட்டி.

பத்மா : அவரும் இல்லை.

பிரபாகரன் : ம்...... ம்...... தெரிந்து வி ட் ட து. டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளைத்தானே ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்!

பத்மா : சரியாகச் சொல்லி விட்டாய்... கர்நாடக மாநிலத்திற்கு முன்பு என்ன பெயர் இருந்தது.

வரத: மைசூர் மாநிலம்.

பத்மா : ரொம்ப சரி. 1973-ல்தான் கர்நாடகம் என்று பெயர் மாற்றப்பட்டது. பாலே நடனம்' என்று சொல்கிறார்களே. அது

என்ன என்று சிறிது விளக்கமாகக் கூற முடியுமா?

பமீலா : நான் கூறுகிறேன். ரஷ்யக் குழு ஒன்று சென்னைக்கு வந்து பாலே நடனம் நடத்தியது. அதில் யாருமே பாடவும் இல்லை; பேசவும் இல்லை. பின்னணி இசைக்குத் தக்கபடி ஆடினார்கள். அபிநயம் மூலமாகவே ஒரு கதையைத் தெரிவித்தார்கள்.

பத்மா : அடடே, மிகவும் நன்றாகக் கூறி விட்டாயே! பின்னணி இசையுடன் அபிநயம் மூலமே ஒரு கதையை உணர்த்தும் ஒருவகை மேல்நாட்டு நடனமே பாலே என்பது... இந்தியாவில் வெளியான முதல் செய்தித் தாள் எது?

வரத : வங்காள கெஜெட்,

பத்மா : கரெக்ட். 1780-ல் அது கல்கத்தாவிலிருந்து வெளி வந்தது. பர்மா நாட்டின் தலைநகரம் எது?

பிரபா : ரங்கூன்.

பத்மா : சரியான விடை. ஐக்கிய அமெரிக்க நாடு களின் தலைநகரமாக இப்போது வாஷிங்டன் இருக்கிறது. இதற்கு முந்தி எது தலைநகரமாக இருந்தது!

பிரபா : நியூயார்க் !

பத்மா : சரியாகச் சொன்னாய். அமெரிக்கா விடுதலை பெற்று 1776-லிருந்து 1800-ஆம் ஆண்டு வரை நியூயார்க்தான் தலைநகரமாக இருந்தது. தரைப்படை கடற்படை, விமானப் படை ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனியாக ஒரு கொடி உண்டு. இதோ இங்குள்ள கொடி நம் தேசத்தின் எந்தப் படைக்கு உரிய கொடி என்று தெரியுமா?

(படம்)

வரத : கப்பற்படைக் கொடி.

பத்மா: தவறு.

பமீலா: தரைப்படைக் கொடி.

பத்மா : சரிதான். இருந்தாலும், மூன்றிலே ஒன்றைச் சொல்லியாயிற்று. மீதமுள்ள இரண்டிலே ஒன்றைச் சொல்லி வைப்போமே என்று சொல்லக்கூடாது. போகட்டும். மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தர் என்னும் ஊர் எந்த மாநிலத்தில் இருக்கிறது?

வரத : குஜராத்தில்.

பத்மா: ரொம்ப சரி. டென்னிஸ் எந்த நாட்டில் தோன்றிய விளையாட்டு?

பிரபா : இங்கிலாந்தில்.

பத்மா: ஆம் ஆங்கிலேயர் நம் நாட்டுக்கு வந்த பிறகே, இங்கும் இந்த விளையாட்டு பரவியது . தமிழ்ப் பல்கலைக் கழகம் எந்த ஊரில் இருக்கிறது?

வரத: தஞ்சாவூரில். பத்மா : சரி, உலகத்திலே மிகவும் உயரத்தில் இருக்கின்ற நாடு எது?

வரத: சிம்லா.

பத்மா தவறு. நான் கேட்டது எந்த நாடு என்று?

பமீலா : திபேத்து.

பத்மா : கரெக்ட். அதனால்தான் அதை 'உலகத்தின் கூரை" என்கிறார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பாடியவர் யார்?

வரத: அப்பர்.

பிரபா: இல்லை. திருநாவுக்கரசர்.

பத்மா : இருவர் கூறியதும் சரியே. திருநாவுக் கரசரைத்தான் அப்பர் என்றும் அழைப்

பார்கள். ஷேக்ஸ்பியர் எத்தனை நாடகங்கள் எழுதியிருக்கிறார். தெரியுமா?

எல்லோரும் : (மெளனம்)

பத்மா : 37 நாடகங்கள். மங்கள முடிவு நாடகங்கள், சோக முடிவு நாடகங்கள், சரித்திர நாடகங்கள் என்று மூன்று வகையில் எழுதி யிருக்கிறார்... காஷ்மீர் நகரம் எந்த ஆற்றங் கரையில் இருக்கிறது?

பமீலா: ஜீலம் நதிக்கரையில்.

பத்மா: சரியான விடை, ஆஸ்திரேலியாவின் தேசியப் பறவை எது?

வரத: கழுகு.

பத்மா: தவறு.

பிரபா :நினைவில் இருக்கிறது. வர மாட்டேன் என்கிறது. படத்தில் கூட அதைப் பார்த்திருக்கிறேன்? அது நெருப்புக் கோழி மாதிரி உயரமாயிருக்கும். பறக்கத் தெரியாத பறவை. அதன் பெயர் கி. மு....இல்லை. இல்லை. ஈமு.

பத்மா: ம்... அதன் பெயர் ஈ.மு தான். 6 அடி உயரம் வளரும். ஒவ்வொரு காலிலும் 3 விரல்கள் இருக்கும்...சரி, அடிக்கடி நாம் பார்க்கிறோம், பழகுகிறோமே நாய் அதற்கு

முன் காலில் எத்தனை விரல்கள்? பின்காலில் எத்தனை விரல்கள்?

பமீலா: இரண்டிலுமே ஐந்து விரல்கள்தான்.

பத்மா: இல்லை. முன் காலில் 5 விரல்களும் பின் காலில் 4 விரல்களும் இருக்கும். பின் காலில் 5 விரல்கள் இருப்பது அபூர்வமே... இந்தியாவில் மிகப் பெரிய இலக்கியப் பரிசான ஞான பீடப் பரிசு ஒவ்வோராண்டும் வழங்கப்படுகிறது. நம் தமிழ்நாட்டில் இந்தப் பரிசைப் பெற்றவர் யார்?

வரத: அகிலன்.

பத்மா : சரி, இந்தப் பரிசை ஏற்படுத்தியவர்கள் யார் என்று தெரியுமா?

எல்லாரும் : (மெளனம்).

பத்மா : சாந்தி பிரசாத் ஜெயின், அவரது மனைவி ரமாஜெயின் இருவரும் ஏற்படுத்தினர். இப்போது அந்த இருவரும் உயிருடன் இல்லை...தமிழ்த் தாத்தா உ. வே. சாமி நாதய்யர் அவர்களுக்கு, அவரது பெற்றோர் வைத்த பெயர் என்ன?

வரத: வேங்கடராமன்.

பத்மா : ஆமாம். பாட்டனார் பெயரையே பேரனுக்கு வைத்தார்கள். மாமனார் பெயரை மருமகள் சொல்லக் கூடாது என்று நினைத்த

அவரது தாயார், அவரை சாமிநாதன் என்று அழைத்தார்கள். அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இதோ இந்தப் படத்திலிருக்கும் பறவையின் பெயர் என்ன, தெரியுமா?

(படம்)

பிரபா : நீர் வாத்து.

பத்மா : இல்லை.

பமீலா : எனக்குத் தெரியும். பாம்புத் தாரா.

பத்மா: சரியான விடை. இது தண்ணிரில் நீங்தும்போது இதன் தலையும் கழுத்தும் மட்டுமே வெளியில் தெரியும். துரத்திலிருந்து பார்த்தால் பாம்பு நீந்துவது போல் இருக்கும். துருவ நட்சத்திரத்துக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது என்ன?

வரத: எல்லா நட்சத்திரங்களும் நகரும். துருவ நட்சத்திரம் மட்டும் நகராமலே இருக்கும்.

பிரபா : இல்லை. நான் சொல்கிறேன். துருவ நட்சத்திரம் சூரியனைப்போல் 4000 மடங்கு ஒளி உடையது என்று நான் படித்திருக்கிறேன்.

பத்மா : இருவர் சொன்னதும் சரியே. துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் இருப்பதால், அதை வைத்தே மாலுமிகள் அக்காலத்தில் திசையைத் தெரிந்து கொள்வார்கள். இப்போதுதான் திசை காட்டும் கருவி வந்து விட்டதே! சூரியனைப் போல் 4000 மடங்கு, ஒளி இருந்தாலும், அது சூரியனை விட வெகு தூரத்தில் இருப்பதால், ஒளி நமக்கு அதிக மாகத் தெரிவதில்லை. தனக்கு உதவி செய்த வருக்கே துரோகம் செய்பவனைப் புல்லுருவி' என்று திட்டுகிறார்களே, புல்லுருவி என்றால் என்ன ?

பமீலா . அது ஒரு செடி.

பத்மா : அது சரி. அதன் குணம் என்ன?

எல்லாரும் : (மெளனம்).

பத்மா : இந்தச் செடி ஏதேனும் ஒரு மரக்கிளையில் வேரை ஊன்றிக் கொண்டு, அங்கேயே வளரும். அதிலிருந்து பல பக்க வேர்கள் மரத்துக்குள்ளே செல்லும் அந்த மரத்திலுள்ள சத்துப் பொருள்களை இந்தச் செடி உறிஞ்சி எடுத்துக் கொண்டு, அந்த மரத்திற்கே கெடுதல் செய்யும். வளர இடம் கொடுத்த மரத்திற்கே கேடு செய்யும். அதனால்தான் உதவியவருக்கே துரோகம் செய்பவனைப் புல்லுருவி என்கிறார்கள்...

மதுரையைத் தலைநகராக வைத்து அரசாண்டு புகழ்பெற்றார் ஒர் அரசி. அவர் பெயர் தெரியுமா?

பமீலா : மங்கம்மாள்.

பத்மா: அடே, பமீலா சரியாகச் சொல்லி விட்டாளே! இரண்டாம் சொக்கநாதர் என்ற தன் பேரனுக்குக் காப்பாளராக இருந்து 17 ஆண்டுகள் திறமையாக ஆண்டவர் மங்கம்மாள்...கரும்பு அதிகமாக விளையும் நாடு எது?

பிரபா : நம் இந்தியாதான்.

பத்மா : கரெக்ட். கியூபா, பிரேசில், ஹாவாய், ஜாவா ஆகிய இடங்களிலும் கரும்பு விளைகிறது. இருந்தாலும் நம் நாட்டில்தான் அதிகம்...காஞ்சிபுரத்தில் நிறைய கோயில்கள் இ ரு ப் ப த க க் கேள்விப்பட்டிருப்பீர்கள். மொத்தம் எத்தனை கோயில்கள் என்று தெரியுமா?

வரத : 75.

பத்மா: என்ன, 50 கோயில்களைக் குறைத்துச் சொல்கிறாயே! மொத்தம் 125 கோயில்கள் அங்கு இருக்கின்றன. இவற்றில் 40 கோயில்கள் பெரியகோயில்கள். சரி. இப்போது ஒரு விடுகதை. விடுவியுங்கள்; பார்க்கலாம்.

காகிதத்தைக் கண்டால்

கண்ணிர் விடுவான்.

முக்காடு போட்டால்

சொக்காயில் தொங்குவான்.

பமீலா ; பேனா. பத்மா : என்ன பேனா? கட்டைப் பேனாவா?

பமீலா : இல்லை; பவுண்டன் பேனா.

பத்மா : சரி, சென்னைத் துறைமுகத்தில் வேலை பார்த்த ஒருவர், உலகம் போற்றும் கணிதை மேதையாக விளங்குகிறார்......

வரத : நான் சொல்கிறேன். கணிதை மேதை இராமானுஜம்.

பத்மா: கரெக்ட் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை வயதானவர் வாக்கு அளிக்கலாம்: எத்தனை வயதானவர் வேட்பாளராக நிற்கலாம்?

பிரபா : 21 வயதானவர்கள்.

பத்மா . இது முதல் கேள்விக்கு விடையா இரண்டாம் கேள்விக்கு விடையா?

பிரபா : இரண்டுக்கும்தான்.

பத்மா : முதல் கேள்விக்கு விடை-21வயது. சரிதான். இரண்டாவது கேள்விக்கு 25வயது என்பதுதான் சரி. முப்பழம்' என்கிறார்களே, அவை எந்த எந்தப் பழங்கள்?

பமீலா: மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்.

பத்மா : ஆம். மா, பலா, வாழை என்பார்கள். நத்தைக்கு எத்தனை கொம்புகள்?

வரத : கொம்புகளா? (எல்லாரும் சிரிக்கிறார்கள்).

பத்மா : ஆம், அவற்றை உணர் கொம்புகள் என்பார்கள்.

வரத: இரண்டு கொம்புகள்.

பத்மா: ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்புகள்தான். ஆனால், நத்தைக்கு கொம்புகள்! இரண்டு நீளமாக இருக்கும் இரண்டு குட்டையாக இருக்கும். ஒவ்வொரு நெட்டைக் கொம்பின் உச்சியிலும் கறுப்பாக புள்ளி போல் இருக்குமே, அதுதான் அதன் கண்!

"https://ta.wikisource.org/w/index.php?title=கேள்வி_நேரம்/11&oldid=494081" இலிருந்து மீள்விக்கப்பட்டது