சாத்தன் கதைகள்/4. காயசண்டிகை



4. காய சண்டிகை

மலைகளில் உயர்ந்தது இமயம். அதனால் அது எக்காலத்தும் பனிப்பாறைகளால் மூடப் பெற்றிருக்கும் பனிக்கட்டிகள் வெண்ணிறம் வாய்ந்தன. பகற்போதில் ஞாயிற்றின் ஒளியும், இராப்போதில் திங்களின் ஒளியும் படர்வதால், இமயம் எப்போது நோக்கினும், வெள்ளொளி வீசித்திகழும் அதனால் அது வெள்ளிமால்வரை எனவும் வழங்கப்பெறும்.

வெள்ளியங்கிரியைச் சூழ உள்ள நாடு விஞ்சையர் நாடு அல்லது வித்தியாதரவுலகு எனப் பெயர் பெறும். பற்பல பேருர்களையும், சிற்சில சிற்றுார்ககயுைம் கொண்ட அந்நாட்டில் வாழ்வார், விஞ்சையர் அல்லது வித்தியாதரர் என அழைக்கப்பெறுவர். விஞ்சையர் அழகிற் சிறந்தவர்! ஆடல் பாடல் போலும் அருங்கல்களில் கைதேர்ந்தவர்! வான வீதியில் உலாவல், வேற்றுருக் கொள்ளுதல் போலும் அறிவுத்திறனும் வாய்க்கப்பெற்றவர் என நூல்கள் நுவல்கின்றன.

விஞ்சையர் நாட்டில், காஞ்சனபுரம் என்பது ஒரு பேரூர். பசியையும், பிணியையும், பகையையும் பாழாக்க வல்ல பெருவளமும், பொன்னும் நவமணியும் போலும் பொருள்வளமும் நிறைந்திருந்தமையால், அம்மாநகர் பெருமதிலால் சூழப்பெற்று அரிய காவலும் அமையப் பெற்றிருந்தது. அப் பேரூரில் காஞ்சனன் எனப் பிறத்த ஊரின் பெயரையே தன் பெயராகக்கொண்ட ஒரு விஞ்சையன், காயசண்டிகை என்ற தன் மனைவியோடு வாழ்ந்தான்.

காஞ்சனன் கலையார்வம் நிரம்பப் பெற்றவன். மலை வளம் காணல், ஆற்று நீராடல் போன்றவற்றில், ஆர்வம் மிக்கிருந்தான். அதனால், வடகோடியில் உலகெலாம் விரும்பும் வெள்ளிமால் வரையகத்தில் வாழ்ந்திருந்தும், தென்கோடிக் கண்ணதாகிய தமிழகத்தும் பொதியமலைக் காட்சிகளைக் கண்டு களிப்புறவேண்டும்; அம்மலையினின்றும் பெருக்கெடுத்துப் பாயும் காட்டாற்று நீரில் ஆடிக் களிப்புற வேண்டும் என்ற வேட்கையுடையனைன். ஒருநாள், மனைவியோடு வானூடெழுந்து தமிழ்நாடு நோக்கிப் பறந்தான். இருவரும் பொதிய மலையை அடைந்தனர். மலைக்காட்சிகளைக் கண்டு மனங்களித்தனர். அம்மலைவளர் சந்தன மரங்கள் வீசும் மனம் கவர் மணத்தை நுகர்ந்து மகிழ்ந்தனர். அம்மலையினின்றும் பெருக்கெடுத்தோடும் காட்டாற்று வெள்ளங்களின் கவின் மிகு காட்சியைக் கண்டனர். அவற்றில் புகுந்து நீராடிப் பேரின்பம் கொண்டனர். இறுதியில் ஒரு காட் டாற்றங்கரையில், ஆற்று வெள்ளம் அவ்வப்போது கொண்டுவந்து குவித்த வெண்மணல் மேட்டில் அமர்ந்தனர்.

வனப்பு மிகுந்தவள்; விஞ்சைகளில் வல்லவள்; கருத்தொத்த கணவனைப் பெற்றவள் என்றதால், காய சண்டிகை இயல்பாகவே செருக்கு வாய்ந்திருந்தாள். பொதியமால் வரையையும் பெரு வெள்ளம் புரண்டோடும் பேராறுகளையும் கணவனோடு கண்டுகளித்த பேறு பெற்றமையால் அவள் சிந்தை, செருக்கில் மேலும் ஆழ்ந்து விட்டது. அதனால், மணல் மேட்டில் அமைதியாகச் சிறிது பொழுது அமர்ந்திருக்கவும் அவள் விரும்பவில்லை; எழுந்தாள். கணவனை விடுத்துக் கானாற்றங்கரையே நடந்து சென்றாள். அவ்வாறு செல்வாள், ஒரிடத்தில் ஒரு பெரிய தேக்கிலையில், நாவற்கனி யொன்று வைக்கப் பெற்றிருப்பதைக் கண்டாள். நிறத்திலும், அளவிலும் பருத்த பனம்பழத்தை ஒத்திருந்தது அக்கரு நாவற்கனி. அதைப் பார்த்த அவள் செருக்கு மிகுதியால், அதைத் தன் காலால் மிதித்துக் கெடுத்தாள்.

காயசண்டிகை, கனியைத் தன் காலால் உதைத்து உருக்குலைப்பதை, அப்போது ஆங்கு வந்த ஒரு முனிவன் பார்த்துவிட்டான். விருச்சிகன் என்பது அவன் பெயர். மார்பில் முறுக்குண்ட பூணூல்; முடியில் திரித்து முறுக்கிய சடை; இடையில் மரவுரி ஆடை; இவற்றோடு காட்சியளித்தான் அக்கானகத்து முனிவன். தேக்கிலையில் நாவற்கனியை வைத்தவனும் அவனே. அதை அங்கு வைத்துவிட்டு, அக் கானகத்திற்கு அண்மைக் கண் உள்ளதும், தன்னகத்தே மலர்ந்த மலர்களின் மணம் நெடுந் தொலைவும் நாறுவதுமாய ஒரு பொய்கையில் நீராடப் போயிருந்தான். நீராடி, நாட் கடனை முடித் துக்கொண்டு நாவற்கனியை உண்ணும் நினைவோடு வந்த அவன், காயசண்டிகை கனியை மிதித்து அழிப்பதைப் பார்த்து விட்டான். கோபம் கொதித்து எழுந்தது. “ஏடி! பெண்ணே! என்ன காரியம் செய்து விட்டனை; இந்நாவற்கனி எளிதில் கிடைக்கக் கூடியதல்லவே, நாவற்கனிகள் அனைத்தினும் சிறந்தது. கடவுட்டன்மை வாய்ந்தது. பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை ஒரு பழம் ஈனும் இயல்பு வாய்ந்த மரத்தினின்றும் பெற்றது. தன்னை உண்டவர்க்கும் பன்னிரண்டாண்டளவும் பசி நோய் உண்டாகாவாறு காக்கும் பெருமை வாய்ந்தது. அத்தகு நன்மை வாய்ந்த நாவற்கனியை அழித்து விட்டனேயே; நானே, பன்னிரண்டாண்டிற்கு ஒரு முறையே உண்ணும் உயர்நோன்பு மேற்கொண்டவன். அதனால் இக் கனியை அரிதிற் காத்து உண்ணும் வழக்கம் உடையேன். இப்போது, நீ அக்கனியை அழித்துவிட்டாய். இனி வரும் பன்னிரண்டாண்டளவும் என்னைப் பற்றி வருத்தும் பசி நோயை எவ்வாறு தாங்கி உயிர் வாழ்வேன்! இவ்வாறு என்னை வருத்த விட்ட நீ நன்கு வாழ்வையோ! வாழக் கூடாது நீ; வாழவிடேன் நான். உன் செருக்கு அழிதல் வேண்டும். பன்னிரண்டாண்டளவும் பசி நோயால் பாழுறப் போகும் என்னைப் போலவே, நீயும் பாழுறல் வேண்டும். வானூடெழுந்து விரும்பும் இடங்கட்கு விரைந்து செல்லவுதவும் மந்திரம் உனக்கு மறந்து போகட்டும். உண்ண உண்ணப் பசி நீங்கா யானைத்தீ எனும் உறுநோய் உன்னைப் பற்றி வருத்துமாக, உன்னைப் பற்றி வருத்தும் அப்பாவங்கள், பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து நான் உண்ணும் வரை உன்னை விட்டு அகலாதிருந்து உன் சக்தியை அழிக்குமாக” எனச் சினந்து சாபம் தந்து மறைந்துவிட்டான்.

காதலியைத் தொடர்ந்து, கானாற்றுக் காட்சிகளைக் கண்டுகொண்டே வந்த காஞ்சனன், அவள் கனியைச் சிதைத்ததைக் கண்டு, அதனால் அவளுக்கும் அவள் கணவனாகிய தனக்கும் யாது கேடு நேருமோ என அஞ்சினான். அதனால், அவளை ஆங்கே விடுத்து அகன்றவன், விருச்சிகன் மறைந்த பின்னரே அவன் மீண்டான்; மனைவியை நோக்கி, “மதியிழந்து மாத்துயர் உற்றனை. ஈண்டிருப்பின் இடர்பல உண்டாம். ஆகவே, இனி ஒரு நாழிகையும் ஈங்கிருத்தல் கூடாது. நம் நாட்டிற்கு இப் போதே ஓடி விடுதல் வேண்டும். வானூடெழுக” எனக் கூறி விரைந்தான். அந்தோ! அவளால் அது இயலவில்லை. காயசண்டிகை மந்திரத்தை நினைவூட்டி நினைவூட்டிப் பார்த்தாள். முடியவில்லை. அது அவள் மனத்தை விட்டே மறைந்துவிட்டது. அதை உணர்ந்தாள் அவள். “அன்ப! முனிவன் இட்ட சாபத்தால் மந்திரம் மறந்தேன். அது மட்டுமன்று. வயிறுகாய் பெரும் பசி வேறு என்னை வாட்டத் தொடங்கிவிட்டது. அதன் வெம்மையைத் தாங்கமாட்டாது, என் உயிர் என்னை விட்டுப் பிரிந்து, விடுமோ என்று அஞ்சவேண்டியதாகிவிட்டது. என் செய்வேன்!” எனக் கூறிக் கண்ணிர் உகுத்தாள்.

காஞ்சனன் மனைவி கூறியது கேட்டு மனங் கலங்கினான்; மறந்த மந்திரத்தை அவளுக்கு நினைவூட்டல் தன்னால் இயலாதாயினும், அவளை வருத்தும் வான் பசியைப் போக்குதலாவது இயலும் என நம்பினான். பசிக் கொடுமையால் காதலி படும் பாட்டைக் கண்டு கண் கலங்கினான். உடனே ஒடினான். காய் கனி கிழங்கு வகைகளில் நல்லனவற்றைத் தேடி நிறையக் கொணர்ந்து மனைவி முன் குவித்தான். அவள், அவற்றுள் ஒன்றையும் விடாது உண்டு தீர்த்தாள். ஆனால், அந்தோ! அப்போதும் அவள் பசி நோய் அகலவில்லை. நோய் கொடுமை தாளாது அவள் நொந்தாள்.

காதலிக்கு வந்துற்ற கேட்டினைக் கண்டு காஞ்சனன் கலங்கினான். அவளுக்குத் தன்னால் எவ்வுதவியும் செய்ய இயலாமை எண்ணி இடர் உற்றான். இறுதியில், “அன்பே! நாவலந்தீவில் தென் கோடியில் உள்ளதான இத்தமிழ் நாட்டில் புகார் எனப் பெயர் பூண்ட ஒரு பெரு நகர் உளது. குறையாப் பெருநிதி படைத்த பெருஞ் செல்வர்களின் வாழிடம் அப்பேரூர். அவர்கள் வளங் கொழிப்பது ஒன்றே வாழ்வின் பயனும் என எண்ணும் பண்பிலார் அல்லர். வறுமை காட்டி வந்து இரப்பார்க்குத் தம் வளத்தை வாரி வாரி வழங்கி வாழ்தலே விழுமிய வாழ்வனம் எனக் கொள்ளும் வான்புகழ் உடையவர் அவ் வணிகப் பெருமக்கள். அந்நகர் மிக்க தொலைவில் உளது. பறந்து அடைதல் உன்னால் இயலாத இப்போது அம் மாநகரை நடந்து அடைய நாள் பல ஆகும். எனினும், ஊக்கம் தளராது சென்று அவ்வூர் அடைக, உனக்குச் சாபவிடை ஆகும் வரை ஆண்டே வாழ்க” என அறிவுரை வழங்கி, அவளைப் பிரிய மனமின்றிப் பிரிந்து தன்னூர் அடைந்தான்.

கானாற்றங்கரை நிகழ்ச்சியால் காயசண்டிகையின் செருக்கடங்கிற்று. கணவன் இட்ட கட்டளையை ஏற்றுக் காவிரிப்பூம்பட்டினம் அடைந்து வாழ்ந்திருந்தாள். காஞ்சனன், ஆண்டுதோறும் புகார் நகரில் நிகழும் பெரு விழாவாகிய இந்திர விழாவின்போது வந்து, காதலியைக் கண்டு, அவளுக்கும் ஆறுதளித்துத் தானும் சிறிது ஆறுதல் உற்றுச் செல்லத் தொடங்கினன். கடந்த ஆண்டுகளையும், இனி, நோயோடு கடக்க வேண்டிய ஆண்டுகளையும் கணக்கிட்டவாறே வாழ்நாளைக் கழித்து வந்தாள் காயசண்டிகை.

புகார் நகரத்துப் பெருங்குடிச் செல்வர் துணையால் பதினோராண்டுகளைக் கழித்துவிட்டாள். பன்னிரண்டாம் ஆண்டும் தொடங்கிவிட்டது. தனக்குச் சாபவிடை உண்டாகும் நாளே ஆவலோடு எதிர்நோக்கியிருந்தாள். பற்றி வருந்தும் பசி நோய் எவ்வாறு நீங்குமோ? என்று நீங்குமோ? யாரால் நீங்குமோ என்ற வேட்கை தவிர, அவள் உள்ளத்தில் வேறு உணர்வுகள் இடம் பெற்றில.

இந்நிலயில் அனைவரும் வியக்கும் செய்தியொன்று அவள் காதில் பட்டது; மணிமேகலா தெய்வத்தால் மணிபல்லவத் தீவிற்குக் கொண்டு செல்லப்பட்ட மாதவி மகள் மணிமேகலை, புகார் நகர் மீண்டாள். மீண்டவள் அள்ள அள்ளக் குறையாததும் அனைத்துயிர்களின் பசிநோயைப் போக்க வல்லதும் ஆய அமுதசுரபி எனும் அரிய கலத்தோடு வந்துளாள் என்ற செய்தி புகார் நகரத்துப் பெரு வீதிகளில் பேசப்பட்டது. அச்செய்தி காயசண்டிகையின் காதுகளில் அமிழ்தம்போல் சென்று பாய்ந்தது. பன்னி ரண்டு ஆண்டுகளாகத் தன்னைப்பற்றி வருத்தும் பசிநோய் அன்றே அகன்றதுபோல் அகம் மகிழ்ந்தாள். உடனே, மணிமேகலையைத் தேடி அடைந்தாள். அவள்பால் தன் வரலாறு உரைத்து வருந்தினாள்.

காயசண்டிகை கடந்த பல ஆண்டுகளாகக் காவிரிப் பூம்பட்டினத்துத் தெருக்களில் அலைந்து திரிந்தவளாதலின், அவளை, மணிமேகலைபண்டே அறிந்திருந்தாள். அதனால், தன்னை வந்தடைந்த அவளை அன்போடு வரவேற்றாள். வாடாத இவள் வயிற்று நோயைப் போக்கும் பெருமை, அமுதசுரபி அளிக்கும் முதற்பிடிக்கு உண்டாகுக என உளம் கொண்டாள். அவ்வுணர்வோடு அமுதசுரபி ஏந்தி வீதியில் புறப்பட்ட மணிமேகலை அமுதசுரபியினின்றும் ஒரு பிடி எடுப்பதன் முன்னர், சிறந்தார் ஒருவர் அளிக்கும் ஒருபிடி உணவை அதில் இடுதல் நன்றென நினைத்தாள்.

மணிமேகலையின் மனக்குறிப்பைக் காயசண்டிகை கண்டுகொண்டாள். உடனே, அவளுக்குக் கடல்வளம் கொழிக்கும் அக்காவிரிப்பூம்பட்டினத்தில், அவ்வளத்தை கொண்டு வந்து குவிக்கும் வணிகர் குடியில் பிறந்த ஆதிரை என்பவள் வரலாற்றையும், அவள் கற்பின் பெருமையையும் விரிவாக எடுத்துரைத்து, “மணிமேகலை அவ்வாதிரைமனை புகுந்து முதற்பிச்சை யேற்றல் முறையாம்” என இயம்பினாள். அவ்வாறே அவளை ஆதிரை மனைக்கு அழைத்துச் சென்றாள். மணிமேகலையின் வருகையையும், அவள் மனக்கருத்தையும் ஆதிரை உணர்ந்து கொண்டாள். உடனே மனையகம் புகுந்து, அங்கை நிறைய உணவேந்தி வந்து, “பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக” என உளமார வாழ்த்தி அமுத சுரபியில் இட்டாள்.

ஆதிரைபால் ஆருயிர் மருந்தினைப் பெற்ற மணிமேகலை, அதில் ஒரு பிடி எடுத்துக் காயசண்டிகைக்கு அளித்தாள். அதைக் காயசண்டிகை ஆர்வமோடு வாங்கித் தன் வயிற்றினுள் இட்டாள். உடனே, இராமன் இலங்கை அடைவான் வேண்டிக் கடலிடையே அணை அமைக்க முனைந்த வானரப் படைகள் கொண்டு வந்து எறிந்த மலையும் மரங்களுமெல்லாம், ஆழ்கடல் நீரில் ஆழ்ந்து இருந்தவிடம் தெரியாமல் மறைந்து போனது போல், உண்ட உணவெல்லாம் எங்கோ மறைந்து போகத் தன்னை நெடிது வருத்திய யானைத்தீ நோய் மணிமேகலை அளித்த ஒருபிடி உணவால் உள்ளழிந்து போனமை கண்டு மனம் நிறைமகிழ் வெய்தினாள். தனக்குச் சாபவிடை கிடைத்துவிட்டது; அவ்வளவும் மணிமேகலையின் அருள் என நினைந்து அவளை வாழ்த்தி வணங்கினாள். பின்னர், “ஆருயிர் மருத்துவியாம் என் அன்னே! கேள்; பிறவித்துயர் கெடப் பெருந்தவம் மேற்கொண்ட பெரியோர்கள் வாழும் சக்கரவாளக் கோட்டத் தில் அறச்சால் ஒன்று உளது. வறுமையால் வருந்தி வருவோர்களே யெல்லாம் வரவேற்று வாழிடம் நல்கும் வகையில், அதன் வாயில் அடையா நெடுவாயிலாய் எப்போதும் திறந்து கிடக்கும். ஆங்கு உலகெங்கிலும் உள்ள உறுபசியாளர்களும் ஆதரிப்பார் இன்மையால் அலைந்து திரிவோர்களும் பல்லாயிரக் கணக்கில் பசி நோயால் வருந்தி, இடுவோரை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கின்றனர். அமுத சுரபி அவர் பிணிபோக்கும் அரு மருந்தாகுக. நீ ஆங்குச் செல்வாயாக; நான் என் நாடு அடைகின்றேன்” எனக் கூறி அவள்பால் விடை பெற்றுக் கொண்டாள்.

இருந்து அறம் புரிதற்கு ஏற்ற இடத்தை மணிமேகலைக்கு அறிவித்த காயசண்டிகை என்பாள் பிறந்த ஊரைக் காணவேண்டும். ஆண்டு தவறாமல் ஈண்டுவந்து தன் நிலைகண்டு இரங்கிச் செல்லும் கணவனைக் காண வேண்டும். சாப விடை பெற்ற இன்பச் செய்தியை இயம்பி அவன் துன்பத்தைத் துடைத்தல் வேண்டும் எனத் துடித்தாள். உடனே மந்திரம் ஓதி வானுடெழுந்து விஞ்சையர் உலகு நோக்கி விரைந்தாள். இடையே வித்த மலை குறுக்கிட்டது. விந்தம் துர்க்கையின் வாழிடம். அதனால் வான்வழிச் செல்வார் விந்தத்தை வலம் வந்து செல்வதல்லது கடந்து செல்லக் கருத்திலும் நினையார். கடந்து செல்வார் கேடுறுவார். காயசண்டிகையின் உள்ளத்தில் பிறந்த ஊர்ப்பற்றும், அன்பனக் காணும் ஆர்வமுமே ஓங்கிமுன் நின்றமையால் இவ்வுண்மையை மறந்து விட்டாள்; விந்த மலைமீது பறந்துவிட்டாள். அதை, அம்மலையைக் காத்து நின்ற வித்தாகடிகை கண்டாள்; கடுஞ் சினம் கொண்டாள். தன் பேரொளிப் பிழம்பால், பறந்து செல்லும் காயசண்டிகையைப் பற்றி யீர்த்துத் தன் வயிற்றகத்தே அடக்கிக் கொண்டாள்.

வளமார் வாழ்வு வாழ வேண்டும்; வாழ்க்கையின் வனப்பினைக் காணவேண்டும் எனும் வேட்கை மிகுதியால், கொடிய யானைத்தீநோயைப் பன்னிரண்டாண்டளவும் பொறுத்து நோயுற்று, வேற்று நாட்டில் வாழ்ந்து வருந்தியவள், அப்பேரின்ப வாழ்வு தன்னை அணுகும் நிலை வந்துற்ற அந்நிலையில், வித்தாகடிகையின் வயிற்றகத்தே சிறைப்பட்டு அழிந்துவிட்டாள். அந்தோ! அவள் நிலை அவலம்! அவலம்!

காயசண்டிகைக்கு நேர்ந்த கதியைச் காஞ்சனன் அறியான். அவள் வரும் நாளை ஆவலோடு எதிர்நோக்கிக், காலக்கழிவைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தான். பன்னிரண்டு ஆண்டுகளும் கழிந்துவிட்டன. ஆயினும் அவள் வந்திலள். காஞ்சனுக்குக் கவலை மிகுந்தது. உடனே காவிரிப்பூம்பட்டினம் வந்து சேர்ந்தான். ஆங்குப் பூத சதுக்கம் நாற்சந்திகள், உவவனம் முதலாம் பொழில்கள், பொது வில்லங்கள் பட்டி மண்டபம் முதலாம் மன்றங்கள், மாதவர் உரையும் தவப்புள்ளிகள், நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயில் முதலாம் கோயில்கள் ஆகிய எங்கும் தேடித் திரிந்துகொண்டிருந்தான். நிற்க.

மணிமேகலை மன்றம் புகுந்து , பிச்சைப் பாத்திரம் கையில் ஏந்தி மக்கள் பசியைத் தீர்த்துக் கொண்டிருந் தாள். அச்செய்தியை, அந்நாடாளும் அரசன் மகன் உதயகுமாரன் அறிந்தான். மணிமேகலைபால் மாறாக் காதல் கொண்டவன் அவன். அவள் அன்பைப் பெற முன்னம் ஓர் முறை முயன்றும், மணிமேகலா தெய்வத்தின் குறுக்கீட்டால், காரியம் கைகூடப் பெறாது கலங்கி வாழ்பவன் அவன். அவன், மணிமேகலை, இப்போது எவரும் எளிதில் புகவல்ல ஊரம்பலத்தில் உள்ளாள் என அறிந்ததும், அவளைக் கைப்பற்றி வர ஆங்கு விரைந்தான். மணிமேகலையைக் கண்டு நெகிழ்ந்தது அவன் மனம். அவளை அணுகி, “நல்லாய்! தவநெறி மேற்கொண்டது தக்கதாமோ? நனியிளமைப் பருவத்தளாய நினக்கு அது நன்றாமோ?” என வினவி நின்றான். போன பிறவியில் அவன் தன் கணவன் என்பதை அறிந்து, அவள் மனமும் அவன்பால் நெகிழ்ந்தது. ஆயினும், அதை ஒருவாறு அடக்கிக்கொண்டு, “அரசன் மகனே! மக்கள் யாக்கை, பிணி மூப்புற்று அழியவல்லது என அறிந்து, அறநெறி மேற்கொண்டேன்” என விடையளித்தாள். பின்னர், அவனுக்கு அணித்தாக, மேலும் ஆங்கிருந்தால், அவன் அடாதது புரிதலும் உண்டாம். தன் உள்ளம் அவன் ஆசைக்கு அடிமையாதலும் நேர்ந்துவிடும் என நினைந்து நடுங்கினாள். அதனால், அரசன் மகன் ஆண்டிருக்க அவள் ஆங்கிருந்த சம்பாபதி கோயிலுள் புகுந்து கொண்டாள்.

கோயிலுட் புகுந்துகொண்ட மணிமேகலை, எப்போதும் ஈண்டே அடையுண்டு கிடத்தல் இயலாது. வெளியே செல்லினோ வேந்தன் மகன் விடான். இவ்விடர் நிலையை எவ்வாறு தவிர்ப்பேன்" என எண்ணிக் கலங்கினாள். இறுதியில் ஒரு வழி புலப்பட்டது. “காயசண்டிகையை இவ்வூரார் அனைவரும் அறிவர்; அவள் பசி நோயை அறியும் இவ்வூரார், அவள் பசி தீரப்பெற்றுப் புகார் நகர் நீங்கிப் போய்விட்டதை அறியார். ஆகவே அவள் வடிவை நான் மேற்கொண்டால், என்னை அவ்வுருவில் காணும் எவரும், என்னைக் காயசண்டிகையென்றே கருதுவர். காவலன் மகனும் என்னைக் கைப்பற்றக் கருதான்” எனத் துணிந்தாள். உடனே மணிமேகலா தெய்வம் அறிவித்த மந்திர ஆற்றலால் காயசண்டிகை வடிவு கொண்டு வெளியே வந்தாள். மன்னன் மகன், அவளைக் காயசண்டிகை எனவே மயங்கவுணர்ந்து. மன்றம் விட்டகன்றான்.

மணிமேகலை, அன்றுதொட்டு, காயசண்டிகை வடிவிலேயே காலங்கழித்து வந்தாள். அவ்வடிவோடே சென்று ஆங்காங் குள்ளாரின் பசிப்பிணியைப் போக்கி வந்தாள். காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் அனைவரும் அவளைக் காயசண்டிகை என்றே கருதினர்.

இந்நிலையில், காயசண்டிகையைத் தேடித் திரிந்த காஞ்சனன், ஒருநாள், மணிமேகலையை ஊரம்பலத்தில் கண்டான். அவளைத் தன் மனைவியென்றே மனத்திடைக் கொண்டான். அவளை அணுகினான். தீராப்பசி நோயால் துயர் உற்றவள் தன்னைச் சூழ்ந்து நிற்கும் பல்லோர் பசியைப் போக்கும் காண்டற் கினிய காட்சியைக் கண்டு களிப்புற்றான். “உன் கையில் இருப்பதோ ஒரு கலம்; ஆனால் அதனால் பசிதீரப் பெறுவோரோ பலர்; உன்னைப் பற்றி வருத்திய யானைத்தீநோயின் கொடுமை கண்டு உன்பால் பரிவுகொண்டவானவர், இவ்வற்புதப் பாத்திரத்தை உணக்கு அளித்தார் கொல்லோ?” என வினவியவாறே அவளை அணுகி நின்றான்.

மணிமேகலை காயசண்டிகையை அறிவளேயல்லது, காஞ்சனனே அறியாளாதலின், அவனுக்கு விடையளித்திலள். அவன் அணுக அணுக, அவள் அகன்று அகன்று நின்றாள். அவனே விடுத்து, அவன் வருதற்கு. முன்னரே ஆங்கு வந்திருந்த அரசன் மகனை அணுகினாள். அவனுக்குத் தெருவூடே செல்லும் நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி, இளமைப் பருவத்தில் அம்முதியாள் பெற்றிருந்த பேரின்ப நிலையினை நினைவூட்டி நிலையாமை இயல்பினை அவன் உளங்கொள உணர்த்தத் தொடங்கினாள். ஆனால், அவ்வறிவுரை கேட்கும் அவன் அறிவு தெளிந்திலது. “இவள் மணிமேகலையே; நம்மை ஏமாற்றவே இவ்வுருக் கொண்டு திரிகிறாள்; அயலான் ஒருவன் இவளுக்குப் பண்டே அறிமுகமாகியுள்ளான் போலும், இப்புதியான் அவன் போலும். இவ்விருவர் தம் உறவினை இரவு வந்து காண்பேன்” என உளத்திடை எண்ணி அகன்றான்.

காஞ்சனன் மணிமேகலையைத் தன் மனைவியென்றே கருதினனாதலின், மணிமேகலை தன்னை மதியாது மன்னன் 71.

மகனை அணுகி அறிவுரை கூறி அனுப்புவதைக் கண்ட தும் கடுஞ்சினம் கொண்டான்; கண்கள் சிவப்பேறின. இவள் இவன்பால் காதல் கொண்டுள்ளாள். அதன. லேயே கனவளுகிய என்னை மதித்திலள். சாபவிடை பெற்ற பின்னரும் ஊர் திரும்பாது ஈண்டேயிருப்பதும் அதேைலயே. இவளை யும், இவனையும் உயிரோடு விடேன். இன்று இரவு இவன் ஈண்டு வருவான். இவனை அப்போது அழித்தல் வேண்டும் என்ற வஞ்சம் நெஞ்சில், எழ, விஞ்சையன், புற்றில் அடங்கும் அரவுபோல், மன்றத்தின் உட்புகுந்து ஒருவரும் அறியாவாறு மறைத் திருந்தான்.

இரவு வந்தது. ஊரெல்லாம் உறங்கிவிட்டது. மணிமேகலைபால் கொண்ட மாருக்காதலால் உறக்கம் இன்றிக் கிடந்த உதயகுமரன், இடையாமத்தில் எழுத் தான்; யானவேட்டை விரும்பி எழும் புலியேபோல் அரண்மனை வாயிலைக் கடந்து வெளிவந்தான். அம்பலம் அடைந்தான். பாம்புறையும் புற்றிடையே புகுவான்போல், அடிமேல் அடியிட்டு அம்பலத்தின் உட்புகுந்தான். அவன் வரும் அரவம் கேட்டிலதாயினும், அவன் மார்பிற் கிடந்து நாறும் சந்தனத்தின் மணம் அவன் வருகையை பலர் அறியத் தூற்றி விட்டது. அவன் வருகையை எதிர் நோக்கி விழித்திருந்த விஞ்சையன், அவன் வருகையை அறிந்து கொண்டான். உடனே படம் விரித்தெழும் பாம்புபோல் எழுந்து, அவன்பின் சென்று, தோள் துணிந்து வீழுமாறு, அவனே வாளால் வெட்டிச் சாய்த் 72

தான். உதயகுமரன் உயிரிழந்து வீழ்ந்தான். காஞ்சனன் உடனே உள்ளே விரைந்து சென்று, "வானூடெழுந்து விஞ்சையர் உலகம் புகுவோம்; வருக விரைந்து’’ எனக் கூறியவாறே, மனைவியின் வடிவில் நின்ற மணிமேகலை வின் கையைப் பற்றி ஈர்த்தான்.

அம்பலத்துத் தூண் ஒன்றில் இடம் பெற்றிருந்த பாவை, திடுமென வாய்திறந்து, “காஞ்சன! அணுகல் அவளை, அணுகல் அவளை, உன் மனைவி அல்லள் அவள்; அவள் மாதவி யீன்ற மடக்கொடி மணிமேகலையாவாள். காயசண்டிகை பசிநோய் நீங்கப்பெற்றதும், உன்னை நினைந்து,உன்நாடுநோக்கி வருங்கால், விந்தமலேமீது அறி யாமற் சென்றமையாற், குற்றம்பட்டு விந்தாகடிகையின் வயிறு புகுந்து அடங்கிவிட்டாள். அவள் முன்னே வினை செய்த பயன் இது. அரசன் மகனைக்கொன்றமைக்கு உன் அறியாமையே காரணமாம். என்ருலும் அக்கொடுவினைப் பயன் உன்னையும் விடாது வந்து வருத்தும்; வினைப் பயன நீ நுகர்ந்தே ஆதல் வேண்டும். வருந்தாது விஞ்சையர் உலகிற்கு ஏகுவாயாக’ எனக் கூறிற்று.

கந்திற்பாவை கூறிய உரையால் காயசண்டி கைக்கு வந்துற்ற கேட்டினை அறிந்து, காஞ்சனன் கலங்கி அழுதான். செருக்கால் சீரழிந்தாள் அவள்; ஆத்திரம்மிக்கு அறிவிழந்தமையால் அழிவுற்றேன். நான்; அந்தோ! என்செய்வேன்' என அழுது ஊர் அடைந்

காயசண்டிகை, காவலன் மகன் கொலையுண்டமைக் குக் காரணமாயிருளாயினும், அவள் மணி மேகலையின் மாட்சிமிகு கற்பிக்கு மாசு நேராவண்ணம் காக்கும் நற்று. ணையும் ஆயிஞள். வாழ்க அவ்விஞ்சையாள்!