சாத்தன் கதைகள்/5. சுதமதி

5. சுதமதி

அங்க நாட்டில், கங்கைக் கரையில் சண்பை எனும் அழகிய நகர் ஒன்று இருந்தது. சம்பை எனவும் அது அழைக்கப்பெறும். கங்கை வழியே வந்து புகும் கலங் களின் துணையால் அந்நகர் கடல்படு செல்வத்தால் சிறந் திருந்தது. மேலும், மழைதரு மேகத்தைப் பணிகொள் ஞம் திறத்தைப் பிறவிக் குணமாகக்கொண்டு காராளர் எனும் காரணப் பெயர் பெற்ற உழவர்களின் வாழிடமாய் விளங்கிய அப்பேருர் வயல் வளத்திலும் சிறந்து விளங் கிற்று. வாணிக வளமும், வயல்வளமும், ஒருங்கே வாய்க்கப் பெற்ற அந்நகரில் கெளசிகன் எனும் பெயர் பூண்ட அந்தணன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன், உள்ளம் உணர்வுவயப்பட்டு அலேயாவண்ணம் அடங்கு தற் பொருட்டு விரதங்களால் உண்டி சுருங்கல் முதலிய ஒழுக்க நெறிகளே முறையாக மேற்கொண்டிருந்தான். காருக பத்தியம், ஆகவனியம், தென்திசை அங்கி என்ற

முத்தீப் பேணும் பெருமையும் அவன்ப்ால் பொருந்தியிருந்: தது. ஆண்டு. முதிர்ந்த அவ்வந்தணன் அரிய பல அறங்கள் ஆற்றியதன் பயனுய்ப் பெண் மகவு ஒன்று பிறந்தது. முதுமைப் பருவத்தில் பிறந்தவளாதலாலும், தம் வயிற்றில் வந்து தோன்றிய ஒரே மகவு ஆதலாலும், அந்தணனும் அவன் மனைவியும், பெற்ற மகவுக்குச் சுதமதி எனப் பெயர் சூட்டி, அவள் விருப்பம் போன் பேணி வளர்த்தனர். 74

சுதமதி வளர்ந்து பெரியவளானள். பிறந்த குடிப் பெருமையாலும், பெற்ருேர் அளித்த உரிமையாலும்: பிறந்த நாள் தொட்டே எவர்க்கும் அடங்காது, தன் விருப்பம்போல் ஆடிப்பாடி வரும் வழக்கம் உடையளா ள்ை. வளர்ந்து வரைவுப் பருவம் பெற்ற பின்னரும் அடங்கி வாழும் வாழ்க்கை நெறியறியாது அவ்வாறே வாழ்த்து வந்தாள். அச்சம் என்பதை அவள் அறியாள். எங்கும் அஞ்சாது செல்வாள். எதைக் கண்டும் அவள் அஞ்சாள். இருளோ, இரவோ, அவளே அச்சுறுத்த மாட்டா. தனியே செல்வது தகாது; எங்குச் செல்லினும், எதைச் செயினும் துணை வேண்டும் என்ற நினைப்பு அவளுக்கு உண்டாவதில்லை. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்ச வேண்டுவன கண்டவிடத்தும் அஞ். சாது செல்வதால் இடையூறு பல உண்டாம் என்ற உணர்வு அவள் உள் ளத்தில் உருக்கொள்ளவில்லை.

இவ்வாறு வளர்ந்து வந்த சுதமதி, ஒருநாள் ஊரை அடுத்திருந்த மலர் வனத்துட் புகுந்து மலச் கொய்து கொண்டிருந்தாள். அப்போது புகார் நகரில் ஆண்டு தோறும் நிகழும் இந்திர விழாவைக் காணும். ஆர்வம் உந்த, விஞ்சைமா நகரினின்றும் புறப்பட்டுப் புகார் நகர் நோக்கி வானவூர்தியில் செல்லும் மாருத வேகன் என்ற வித்தியாதரன், அம்மலர்ச் சோலையையும், ஆங்கு மலர் கொய்து கொண்டிருக்கும் சுதமதியையும், கண்டான். அவள் அழகும் இளமையும் அவன் கருத். தைக் கவர்ந்தன. மண்ணில் இழிந்து மங்கையை அனு: 75

கின்ை. மலர் மாலையும் மார்பிற் கிடந்து புரள, பொன்ன ணிகள் பல மேனியிற் கிடந்து மின்ன, பாருளோர் பார்த் , தறியாப் பேரழகு வடிவுடன் வந்து நின்ற வித்தியாதரன் வனப்பில் சுதமதியும் கருத்திழந்தாள். மாருதவேகன் தன்னல் வணங்கி வழிபடற்கேற்ற தெய்வப் பிறவியுடை

யான் எனக் கருதினுள். சுதமதியின் இளமை நலம். கண்டு கருத்திழந்து நிற்கும் அவன், தன் மீது அவளுக் கும் வேட்கையுளது என்பதைக் கண்டு கொண்டதும், துணிந்து அவளைக் கைப்பற்றிக் கொண்டான், நினைத் ததை முடிக்கும் நெஞ்சுரமும், செய்யும் செயலின் நலன் தீதுகளை நினைத்துப்பாரா அறியாமையும் உடைய சுதமதி: மாருதவேகன் செயலிற்குத் தடை செய்திலள். அவன்

விருப்பத்திற்கு அவளும் இசைந்து விட்டாள். அந்தணர் குலத்தவளான தான், வித்தியாதர இளைஞனே மணப்பது, முறையன்று என்பதை அவள் மனத்துட் கொண்டிலள். தன்னிலை கெட்டு அவன் வயப்பட்டு இன்பம் நுகர்ந். தாள். -

இருவரும், அவன் ஊர்ந்து வந்த வான ஊர்தி: ஏறிக் காவிரிப்பூம்பட்டினம் வந்து சேர்ந்தனர். இந்திர விழா நிகழ்ந்த இருபத்தெட்டு நாள் வரையும் புகார் நகரத். தின் பல்வேறு வளங்களையும் நலங்களையும் சுதமதிக்குக் காட்டி, இன்பம் ஊட்டி இன்புற்றன். அவள் தரும். இன்பத்தில் வேட்கை குறைந்தது. அவ்வளவே. ஒரு. நாள் அவளை விடுத்து அகன்று விட்டான். நிழல்போல். தொடர்ந்து, பிரிவின்றிப் பார்த்திருக்கும் போதே மறைத்து: 76

விட்ட மாருதவேகனைச், சுதமதி அம்மாநகரெங்கும் தேடி குள். கடற்கரையிலும், கடை வீதிகளிலும், மன்றங்களி லும் மலர்ச் சோலைகளிலும் தேடித் தேடி அலேந்தாள். எங்கும் அவனேக் கண்டிலள். கண்கள் நீர் சொரிய, நெஞ்சு கலங்கி நீள் துயருற்ருள். அன்பன இழந்து, அழுது அகலந்து திரியும் சுதமதியைக்கண்ட் புகார் நகரத்து மக்கள், விஞ்சையனே நம்பி வந்து வாழ்விழந்து போன வள் எனப் பழி துாற்றினர். அது கண்டு நாணிய அவள், பலருங் காணப் புலம்பித் திரிவதை விடுத்துப் புகார் நகரத்து அருகன் கோயிலே அடைந்து ஆங்கு வாழ்ந் திருந்தாள்.

மலர் கொய்யச் சென்ற மகள், மருதவேகனை மணந்துகொண்டாள் என்ற செய்தியைச் சுதமதி யின் பெற்ருேர் அறிந்தனர். அவள் தாய், ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பும் உயர்வுள்ளம் உடையவள். அதனல் மகளின் ஒழுக்கக் கேட்டினைக் கண்டு உயிர் கொண்டு வாழ்தல் அவளால் இயலாதாயிற்று. மகளின் மறைவுச் செய்தி கேட்ட அப்போதே அவள் உயிரும் மறைந்து விட்டது. மகளையும், மனைவியையும் இழந்து துன்புற்ருன் அந்தணன். ஒழுக்க நெறியோடு உலகியலையும் உணர்த் தவன் அந்தணன். அதனல், மகளின் செயல் கண்டு மருண்டிலன்; மகள்மீது குறை காணவும் அவன் உள்ளம் மறுத்துவிட்டது. மகள் கொண்டது பிழை மணமே என்ருலும், அது அவள் பிழையன்று. அது அவன் விதியின் பிழை. ஆகவே மகக்ளச் சினப்பதோ, 77

அவளை அறவே மறந்து கைவிடுவதோ கூடாது. மாருக, அவளைத் தேடிப் பெற்றுத் துணை புரிதல் வேண்டும் எனத் . துணிந்தான். மேலும், மனைவி இறந்து விட்டாள். இல்லாளோடு எல்லாம் போம். ஆகவே அவளை இழந்த பின்னர் ஆண்டுத் தனித்திருந்து வாழும் வாழ்க்கையில் இன்பம் இராது என உணர்ந்தான். அதனல், பிறந்து வளர்ந்து பெரு வாழ்வு வாழ்ந்த ஊரை மறந்து வெளி யேறி, மகளைத் தேடிப் புறப்பட்டான்.

சண்பை நகரத்து அந்தணர் சிலர், அப்போது குமரி' நீர் ஆடும் கருத்துட்ையராய்த் தமிழ் நாடு நோக்கிப் புறப்பட்டனர். அவரோடு, அவனும் தமிழ் நாட்டிற்கு வந்தான். தமிழ் நாடு புகுந்த அந்தணர், குமரித்துறையில் நீராடுவதன் முன், காவிரி கடலோடு கலக்குமிடத்தில் நீராடல் நிறை பயன் தரும் என்ற உணர்வினராய்ப் புகார் நகர் போந்து நீராடினர். அந்தணரோடு புகார் நகர் புகுந்த கெளசிகன், ஆங்குச் சுமதியைக் கண்டு கொண்டான். மகள் மீது கொண்ட காதல் மிகுதியால், அவள் ஒழுக்கங்கெட்டவள் என்பதை உணர்ந்திலன். மகளை மார்புற அனைத்துக் கொண்டு மனச்சுமை திர அழுதான். 'மகளே! ஈங்கு எவ்வாறு வந்தனை? உன் ഖrgജഖക கெடுத்துக் கைப்பற்றிக் கொணர்ந்த அவ் வித்தியாதரன் எங்கே துணையோடு வந்த நீ தனித்துக் கிடந்துதுயர் உறுவது ஏன்?" எனப் பலப்பல கேட்டுப் புலம்பினன். நிகழ்ந்தவற்றை மகள் கூறக் கேட்டு நெஞ். சுருகினன். அந்தணரோடு குமரியாடப் போவதைக். 78

கைவிட்டான். மகள் வாழும் புகார் தகர் வாழ்வில் அவன் மனம் சென்றது. அன்று முதல், புகார் நகரத்துப்

பெருவீதிகளில் பிச்சையேற்று உண்டு, மகளுக்குத் துணை

யாய், மகளோடு வாழ்ந்திருந்தான்.

ஒருநாள், கெளசிகன், கையில் பிச்சைப் பாத்திரம் ஏந் தித் தெருவழியே சென்றுகொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக ஓடிவந்த கன்றீன்ற பசு ஒன்று, அவன் மீது பாய்ந்து கோடுகளால் அவன் வயிற்றைக் கிழித்துக் குடரைச் சரித்து ஓடிற்று. குடர் சரிந்து கீழே வீழ்ந்த அந்தணன் மெல்ல எழுத்தான். செவ்வலரி மாலையை ஏந்திச் செல்வதுபோல், குருதிசொட்டும் குடரைக் கையில் தாங்கியவாறே நடந்துசென்று, மகள் வாழிடம் என்ற உரிமையாலும், மேலும் நடந்து செல்லமாட்டாது தளர்ந்து விட்டமையாலும் அண்மையில் இருந்த அருகன் கோயிலுட் புகுந்து, ஆங்குறையும் சமண முனிவர் பால் சரண் புகுந்தான். அந்தணனின் அந்நிலை கண்டும், அம் முனிவர்க்கு இரக்கவுள்ளம் உண்டாக வில்லை போலும், 'ஏடா! நீ ஈண்டு இருத்தற்குரியனில்லை. இவ்விடம் விட்டு இன்றே நீங்கு’ எனக் கடிந்து, சுதமதியோடு அவனை வெளியேற்றி வாயில் அடைத்துக்கொண்டனர்.

துரயோர்போல் தவவேடம் கொண்டிருந்தும், துன் புற்று வந்தவரின் துயர்போக்க நிகனயாது, துரத்தித் துன் புறுத்திய சமணர் செயல் கண்டு, சுதமதி செய்வதறியாது திகைத்தாள். கண்ணிர் சொரிந்து கலங்கினுள். தளர்ந்த 79

தந்தையைத் தாங்கி அழைத்துக்கொண்டு தெருவில் வந்தாள். புகார் நகரத்துப் புறநகர் வீதிகளில் புகுந்து, "அல்லல் உறுகிருேம்; ஆரும் துணை இலேம்; எம்பால் அன்பு காட்டும் அறவோர் எவரும் இலரோ? என அழுது புலம்பினுள். அப்போது அவர் எதிர்வந்த சங்க தருமன் எனும் புத்த துறவி, அழுது புலம்பும் சுதமதியை யும், அவளைப் பற்றுக்கோடாக் கொண்டு தளர் நடை வயிட்டு வரும் கெளசிகனையும் கண்ணுற்ருன். தூய பசும் பொன்னின் நீறம்காட்டும் காவி ஆடை உடுத்திருந்த அவன் முகம், கடும் வெயில் காயும் அந்நண்பகற்போதி லும் அருளும் அழகும் காட்டி அமைதியுற்றுத் தோன் நிற்று: வீதியின் இருமருங்கிலும் வானளாவ உயர்ந்து விளங்கிய வீடுகள் தோறும் சென்று பிச்சையேற்றுவந்த அம்முனிவன், அவர்களை அணுகி, "உற்றதுயர் யாது" என அன் போடு உசாவின்ை. அன்பும் அருளும் சொட்டும் அவன் சொல் கேட்ட அளவிலேயே, சுதமதி, தங்கள் துயர் ஒழிந்து போனதாக "உணர்ந்தாள். அவள் அகம் குளிர்ந்தது. தங்கள் வரலாற்றையும் தங்கட்கு நேர்ந்த இன்னலயும் விளங்க எடுத்துரைத் தாள். அவர் துயர்நிலைகேட்ட அத்துள்யோன், தன்கைப் பிச்சைப்பாத்திரத்தை அவள் கையில் கொடுத்து விட்டு, மறையோனைத் தோளில் சுமந்து, பெளத்தப் பள்ளியுட் கொண்டு சென்ருன். ஆங்கு மறையோன் புண் மறைய மருந்திட்டான். சுதமதியின் மனமாசு மறையப் புத்தன் பெருமைகளை உணர்த்தின்ை. அறவோன் உணர்த்த, புத்தன் பெருமைகளை உணர்ந்த சுதமதி, அவன் 80

புகழ் பரவும் பணிமேற்கொண்டு ஆண்டு வாழ்ந் திருந்தாள்.

அவ்வாறு வாழ்ந்திருக்கும்போது, காதலன் கொலை யுண்டான். காதலன் மனைவி வானேர் உலகம் புகுந்தாள் என்ற செய்தி கேட்டு வருந்தி, வாழ்க் கையை வெறுத்துத் துறவறம் மேற்கொண்டு, தன்னைப். போலவே, அப்புத்தப் பள்ளி அடைந்து வாழும் மாதவியைச் சுதமதி கண்டாள். அவள் மாண்புமிகு குணங்களை அறிந்து அவளோடு நட்புக் கொண்டான். அன்று முதல் அவளைவிட்டுப் பிரியாது அவளோடு. வாழ்ந்து வந்தாள்.

திங்கள் சில சென்றன. புகார் நகரில் இந்திர விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. வள்ளுவன் விழா நிகழ்ச்சியை, மூதூர் வீதிகளில் முரசறைந்து அறிவித்தான். அப்போது ஒருநாட் கால மாதவியின் உயிர்த் தோழியாகிய, வயந்தமாலை பெளத்த பள்ளியுட் புகுந்து மாதவியைக் கண்டாள். மாதவியின் வாடிய மேனி கண்டு வருந்தினள். பின்னர் மாதவியும், மணி மேகலையும் மன்றம் ஏறி ஆடவாராமைகுறித்து மக்கள் வழங்கும் ഖങ്ങ8ഫെrു கேட்டு மாதவியை -ஈன்று. சித்திராபதி சிந்தை நோவதை மாதவிக்கு எடுத் துரைத்தாள்.

அதுகேட்ட மாதவி, "தோழி! இதோ இருக்கும். இவள் யான் பெற்ற மகளேயாயினும், என் மகள் 81

அல்லள். கற்புக்கடம்பூண்ட கண்ணகியின் மகளாவன். அத்தகையாள் தவவொழுக்கம் மேற்கொள்வதல்லது அவவொழுக்கம் மேற்கொண்டு ஆடிப்பாட ஆங்கு வாராள். காதலன் இறந்த கடுந்துயர் பொருது கலங்கிய எனக்குப், பிறவி உற்ருேர் பெருந்துன்புறுவர். பிறவி அற்ளுேர் பேரின்பம் பெறுவர். பற்ருல் வருவது பிறவி, அது அற்ருல் வருவது விடு பேறு என்ற உண்மைகளையும், கள், காமம், கொலை, களவு, பொய் எனும் இவற்றை அகற்றுவதால் உண்டாம் அமைதி வின் ஆற்றலையும் உணர்த்தி உய்யும்நெறி கட்டிய உரவேர் வழி நின்று, துறவறம் மேற்கொண்டு ஆடல் பாடல்களில் ஆசை இழந்தேன். ஆகவே யானும் வாரேன்’ என மறுத்துக் கூறி அனுப்பிவிட்டாள். -

தாய் மாதவிக்கும் வயந்தமாலைக்குமிடையே திகழ்த்த உரையாடல், கொலையுண்ட தந்தை கோவலயுைம், மறைந்து மாண்புற்ற தாய் கண்ணகியையும் திண்ம் பூட்டவே, மாதவி அருகில் அமர்ந்து மலர் தொடுத் திருந்த மணிமேகலை கண்கள் நீர் சொரியக் கலங்கி அழுதாள். அவள் கண்களினின்றும் ஒழுகிய நீர், தென் டுக்கும் மலர்கள் மீது வீழ்ந்து மா சுபடுத்திவிட்டது. அதுகண்ட மாதவி மகளின் கண்ணிரைத் துடைத்து விட்டு, "மகளே! நின் கண்ணிரால் இம்மலர்கள் மாசுண் t-6Bs. பூசைக்கு இவை பொருந்தா சென்று புது மலர் கொணர்க எனப் பணித்தாள். -82

சுதமதி, மாதவி கூறியதைக் கேட்டாள். மணிமேக இலயோ வனப்பில் மிகுந்தவள். மேலும் நனி இளமைப் பருவத்தள், காலமோ, நகரில் விழா நிகழும் காலம் வீதி களில் வம்பரும் துர்த்தரும் வந்து திரிவர். இந்நிலையில் மணிமேகலை, மலர் கொய்யத் தனித்துச் செல்வது மதி யுடைத்தன்று என எண்ணினுள். தனக்கு தேர்ந்த கதி, தன் தோழியின் மகளுக்கு நேர்ந்து விடுதல் கூடாது எனக் கருதினுள். அதல்ை, மகளை மலர் பறித்து வருமாறு பணித்த மாதவியை நோக்கி, தோழி: மணிமேகலை யின் இம்மேனி நலத்தைக் கண்டால் காமன் மலர்க் கன தொடுப்பதை மறந்து நிற்பன், ஆடவர் கண்டால், இவனே விட்டும் அகல்வரோ? அவர்கள் தம் இயல்பு கெட்டு இவர்பின் திரியாது நிற்பதும் உண்டோ? பேடியர் அல்லவோ அவ்வாறு நிற்பவர்? ஆகவே, தோழி! மலர் கொய்ய, மகளைத் தனியே போக விடுதல் தகுதியுடைத்தன்று. மாதவி! நான் இம்மாநகர்க்கு வர தேர்ந்தது மலர்மீது கொண்ட காதலால், துணையின்றிச் சென்றதாலன் ருே; என்தாய் உயிரிழந்து போனதும், நான் காமுகன் வலைப்பட்டுக் கற்பிழந்து போனதும், தந்தை தேடி வந்து தளர்ந்ததும் அதல்ை விகாந்தன அல்ல்வோ?’ எனக் கூறி மலர் பறிக்க மணிமேகலை தனியே செல்லா வண்ணம் செய்தாள்.

பின்னர், “மாதவி புகார் நகரம் பூம்பொழில் வளத்' தால் பொலிவுற்றது என்ருலும், அவை அனைத்தும் மலர். 83

வேண்டுமளவு நீரை நிறைக்கவும் போக்கவும் வல்ல பொறி அமைக்கப்பெற்ற நீர் நிலையை நடுவே பெற்று, நாற்புறமும், மலர்ச் செடிகள் மண்டிக்கிடக்கும் இலவந் திகை என் ருெரு சோலேயுளது. ஆங்கு, அரசனும், அவன் உரிமைச் சுற்றமுமல்லது பிறர் எவரும் புகுதல் கூடாது. உய்யானம் என்ற பெயருடையதொரு பூம் பொழில் உளது. ஆங்கு மலர்த்த மலர்கள் வாடுவதில, அம்மலர்த்தேனை உண்ண வண்டுகள் விரும்புவதில்லை. வானுளோர் அல்லது மண்ணுளோர் அம்மலர்களை விரும் பார். மேலும் பூதக்காவல் பொருந்தியது அப்பொழில்; அத ஞல் அறிவுடையோர் அதை அணு கார். சம்பாதி வனம், கவேரவனம் இண்டும் நனி மிகப் பழமை உடையன, தெய்வக்காப்புடையன வாதலின் அவற்றை அணுகத் தெரிந்தோர் அஞ்சுவர். ஆகவே, மாதவி உவவனம் ஒன்றே மலர் பறித்து மகிழும் மாண்புடையது. அதனிடையே பளிங்கு மண்டபம் ஒன்று உளது. அதன் உள்ளிடு பொருள் புறந்தோன்றுமே யல்லது, உள்ளெழு ஒளி புறம் வந்து ஒலிக்காது. அம்மண்ட பத்தின் நடுவே புத்தன் திருவடித் தாமரை பொறித்த பீடிகை உளது. அதில் இட்ட அரும்புகள் இட்ட அப்போதே மலர்ந்து மணக்கும். மலர்ந்த மலர்கள் பல்லாண்டு கழியினும் வாடி மணம் இழப்பதில்லை. அப்பீடிகை முன் நின்று, கருத்தில் யாதேனும் ஒரு கடவுளை நினைத்து மலர் தூவில்ை, தூவிய மலர்சள், அப்பீடிகையின் நீங்கி அக்கடவுளரைச் சென்று சேரும். எவ்வித நிகணப்பும் இலாய் நின்று தூவிய மலர்கள், 84

அப்பீடிகையை விட்டு நீங்கா. சிந்தையும் செயலும் உறவுடைய; சிந்தை வழியதே செயல்; சிந்தையில்லே யேல் செய்வினை இல்லே என்ற உண்மையை உலகோர்க் குக் காட்டவே அமைக்கப்பெற்றது அப்பீடிகை. மாதவி : நின் மகள், மாண்பு மிகு அம்மலர்ச் சோலைக்கே சென்று. மலர் பறித்து வருக. அவளுக்குத் துணையாய் யானும் செல்கிறேன்" எனக் கூறி அவன் இசைவினைப் பெற்று, மணிமேகலையோடும் மலர்ச் சோலை நோக்கிப் புறப் பட்டாள்.

மணிமேகலையும் சுதமதியும் பெளத்தப் பள்ளியின் நீங்கி, புகார் நகரத்துப் பெரு வீதிகளைக் கடத்து உவ வனத்துள் நுழைந்தனர். மணிமேகலையை, அம்மலர்ச் சோலையைச் சுற்றி அழைத்துச் சென்ற சுதமதி, தும்பி குழல்ஊத, வண்டு யாழ் இசைக்க, மயிலாட மத்திகண்டு மகிழும் காட்சியையும்; பளிங்குபோல் தெளிந்த நீரால் நிறைந்த குளத்தில், பச்சைப் பசேலெனப் படர்ந்த இலைகளுக்கிடையே தனியே மலர்ந்திருக்கும் தாமரை மலரில் அரச அன்னம் அமைந்திருக்க, அது கண்டு மகிழுமாறு, கரையில் நின்று ஆடும் மயிலின் ஆட் டத்திற்கு ஒப்ப, கம்பங்கோழி முழவிசைக்க, குயில் பாடும் காட்சியையும், தெருப்புழுதி படித்த மணி மேகலையின் மதிமுகம் மங்கித் தோன்றுவதுபோல், விரிந்த வெண்தாழை மலரினின்றும் உதிர்ந்த தாதுகள் டிந்த செந்தாமரை மலரையும், தாமரை மலர் நிகர்க்கும் முகத்திற்கிடத்து ஒளிகட்டும் கருவிழிகளைக் கரு 85

நீலமலர் எனக்கருதி வந்து மொய்க்கும் வண்டுகளை ஒட்டும் மணிமேகலையின் செங்கைபோல், தாமரை மலரு மாறு அதன் மீது பாய்ந்து, அதில் கிடந்து பிறழும் கயல் மீன்களைக் கவர்ந்துண்ணும் கருத்தோடு அம் மலர்மீது பாய்ந்து வந்தே மீளும் சிரல் பறவையையும் மணி மேகலைக்குக் காட்டி மகிழ்வூட்டினன்.

அந்நிலையில், தெருவில் தேரொலி எழக்கேட்ட கணிமேகலை; ' சுதமதி! இவ்வூராளும் அரசன் மகன் உதயகுமாரன் என்மீது காதல் கொண்டுளான் என முன்னம் ஒருமுறை வயந்தமாலை கூறக் கேட்டுளேன். இப்போது கேட்கும் தேரொலி, அவன் ஊர்ந்துவரும் தேரொலியோ என்று எண்ணி, அஞ்சுகிறது என் நெஞ்சு எனக் கூறி நடுங்கிள்ை. மணிமேகலையின் மன தடுக்கத்தைக் கண்ட சுதமதி, அவளை ஆங்குள்ள பளிங்கு மண்டபத்தினுள் அடைத்து, அதன் புறத்தே விருந்தான்.

சிறிது பொழுது கழிந்தது. மணிமேகலை கூறிய வாறே உதயகுமாரன் அங்கு வந்தவன் சுதமதியை அணுகி, “அந்தணன் மகளே! உன் உடன் வந்த கணிமேகலை, மணப் பருவம் பெற்ற மங்கை ஆயி னள் கொல்? அவன் உடலுறுப்புக்கள் அப்பருவ வ ள | ச்சி க் கே ற் ற வனப்புடையவாயின.கொல்? தாயோடு தவநெறி மேற்கொண்டு பெளத்தப் பள்ளி புகுந்து வாழ்ந்திருந்தவன், இன்று மலர் கொய்யத் தனியே வந்த காரணம் யாதோ’ எனக் காமக் கருத்துப் புலப்படப் பலப்பல கேட்டு நின்ருன். 86

உதயகுமாரனே, அந்நிலையில் ஆங்குக் கண்ட சுதமதி, தனியறையில் அகப்பட்டுத் தவிப்பவள் பே ல் நடுங்கிளுள். பின்னர் ஒருவாறு உளம் தேறி, அரசிளங் குமரனை அணுகிளுள். "இளவரசே! நீயோ அறவழி அரசாண்ட பெரியோர் வழிவந்தவன். உன் முன்னேன் ஒருவன், தன்கண் வழக்குரைத்து முறை வேண்டி வந்த இருவர், தன் நனி இளமைப் பருவம் கண்டு, நம் வழக் குணரும் வன்மை இவ்விளையோனுக்கு இராது என எண்ணி, உரைக்க வந்த வழக்கை உரையாதே அகல் வது கண்டு, முதியோன் வேடம் பூண்டு வந்து, அவர் வழக்கினை, அனைவரும் வியக்கும் வண்ணம் ஆராய்ந்து முறை செய்தான் எனக் கூறக் கேட்டுளேன். அத்துணை மூதறிவுடையோர் குடியில் வந்த உனக்கு அறிவும் அருங்குணமும், அரசியல் முறையும் என் போலும் இள மகளிர் எடுத்துக் கூறுவது இயலுமோ? கூறுவதுதான் பொருந்துமோ? பொருந்தாது என்பதை நானும் அறி வேன் என்ருலும், ஒன்று கூற விரும்புகிறேன்' எனத் தொடங்கி,

'இவ்வுடல் முன்வினை காரணமாக வந்து வாய்த்த தாகும்; வரும் பிறவியின் வினையை விளைவிப்பதற்குக் காரணமாவதும் இவ்வுடல் ஆகும். புனைந்துள்ள ஒப் பனைகளை நீக்கினுற் புலால் நாற்றத்தை வெளிப்படுத்து ங்கம் இவ்வுடல் ஆகும்; மூப்பையும் அழிவையும் உடை யதும் இதுவாகும். கொடிய பிணிகளுக்கு இரும்பிடமாக சைக்ள் பற்றியிருக்கும் இடமாகவும், குற்றங் 87

களைக் கொண்டிருக்கும் கொள்கலமாகவும் அமைந்தது

இவ்வுடல். புற்றினுள் இருக்கும் பாம்பைப் போலச்

சினத்தை உள்ளே கொண்டிருப்பதும், துன்பம், கவலை,

வருத்தம், வாட்டம் முதலியவற்றை இடையருது

அடைவதுமாகிய உள்ளத்தைத் தன்பாற் கொண்ட

தும் இம்மானிடவுடல் ஆகும். அறிவின் மிக்கோய் !

உடலினது தகைமை இதுவென்பதை உணர்ந்து, இதன்

மேற்கொண்ட ஆசையை விட்டொழிப்பதைக் கருது' வாயாக."

சுதமதி உரைத்த உரை, உதயகுமாரன் செவி வழிப் புகுந்து அவன் சிந்தையுள் செயற்படுவதற்குள், பளிங்கு மண்டபத்தினுள் கிடந்த ഥങ്ങിഥേയ്ക്കു உருவம் அவன் கண்களிற் பட்டுவிட்டது. பளிங்குப் பார்வைபோல் காட்சி அளித்த மணிமேகலையின் வடிவைக் கண்டதும், சுதமதி உரைத்த, உயர்ந்த உண்மைகளை உதயகுமாரன்' மறந்தான். அவளே அடையும் ஆர்வம் உந்த, அவள் அடையுண்டிருக்கும் பளிங்கு மண்டப வாயிலைத் தேடி அதைச் சுற்றி சுற்றி வந்தான். எவ்வளவு முயன்றும் அதன் வாயிலக் காண மாட்டாது கலங்கி நின்ற அரசகுமரனைச் சுதமதி அணுகி, அரசிளங்குமர! முருகனை நிகர்க்கும் தின் முகப்பொலிவு கண்டும் மணிமேகலையின்மனம் நெகிழாது. முன்ன வினைப் பயத்தால் அவள் தவநெறி மேற்கொண்டுள்ளாள். தன் தவநெறிக்குக் கேடு சூழ்வாரைக் கெடுத்தொழிக்கும் ஆற்றல் அவள் 88

கைவரப் பெற்றுள்ளாள். மேலும் காமவுணர்ச்சியைக் கடந்து வென்றவள் அவள். ஆகவே, அவளே அடையத் துணிவது அறிவுடைமையாகாது’ என அவன் உள்ளம் ஏற்குமாறு மெல்ல எடுத்துரைத்தாள். அது கேட்ட அவன், சுதமதி ஆறு பெருகிளுல் அணை எதிர் நிற்காது. அதுபோல் காமவெறி தலைக்கேறியவர் பால், உள்ளத்தை ஒருவழி நிறுத்தும் நிறையெனும் தற்குணம் நில்லாது. அவளை, எவ்வாரேனும் என் அடையவளாக்கிக் கொள்வேன்” எனச் சூளுரைத்துச் சோலையின் நீங்கிச் செல்லலுற்றன்.

மலர்ப்பொழிலை விட்டு நீங்கும் மன்னன். மகன், சற்று நின்று சுதமதியை நோக்கி, ‘சுதமதி ஒன்று கேட்க மறந்து விட்டேன். விஞ்சையன் கைவிட சமணப் பள்ளியில் வாழ்பவள் நீ என ஊரார் உரைக்கக் கேட்டுள்ளேன் . ஆங்கு வாழ்ந்திருந்த நீ, இப்போது, புத்தப்பள்ளி புகுந்து வாழ்வதும், ஆங்குறையும் இவளோடு தொடர்பு கொண்டு இம் மலர்ப்பொழில் புகுந்ததும் ஏனே?’ என்று வினவினன். வினவிய அரசனுக்குத் தான் அருகன் கோயில் அடைந்து வாழத் தொடங்கியது முதல் மணிமேகலையோடு மலர் கொய்ய வந்தது ஈருக நிகழ்ந்த தன் வாழ்க்கை வரலாற்றின விளங்க உரைத்து, ‘அரசே! அன்று தொட்டு, உலக நோன்பில் பல கதி உணர்ந்து தனக்கெனப் வாழாப் பிறர்க்குரியாள! இன்பச் செல்வம் கன்பதை எய்த் அருளறம் ஆண்ட் அண்குல் காடனைக் 89

கடந்த வாமா என் அப்புத்தன் புகழைப்பாடுவதல்லாது பிற எதிலும் என் சிந்தை புகுவதில்லை” என விடை -யிறுத்தாள். . . - சுதமதியின் துயர்மிகு வரலாறு கேட்ட வேந்தன் மகன், சுதமதி! என் மனம் கவர்ந்த ഥങ്ങിശോധ. உன் துணையால் பெறமாட்டாது துயர் உற்றேன். இனி, இவளைச் சித்திராபதியின் துணை பெற்று அடைய இன்றே அவள்பாற் செல்கின்றேன்” எனச் சூளுரைத்துச் சோலையை விட்டகன்ருன். r

மன்னன் மகன் மலர்ப்பொழிலைவிட்டு அகன்றனன் என்பதை அறிந்து கொண்டதும் பளிங்கறையைத் திறந்துகொண்டு வெளியே வந்த மணிமேகலை, சுதமதி யைத் தாய்ப்போல் வந்து என் துயர் தீர்த்த ஆருயிர்த் தோழி, நீ எனப் பாராட்டினள். பின்னர் அவனை நோக்கிச், “சுதமதி கற்பு நெறி கெட்டவள், தவ தெறிக்குத் தகுதியற்றவள், உயர்குல உரிமை இழந்தவள், பொருள் விலையாட்டி என்றெல்லாம் விளித்து என்ன இழித்தும் பழித்தும் அகன் றன். அவ்வுரைகளைக் கேட்டும் என் நெஞ்சு அவன்பால் தேசம் கொள்கிறது. தோழி! இதற்கு யான் என்செய்வேன்; சுதமதி: காமத்தின் இயல்பு அன்னதோ? அன்னதாயின் அழிக அக்காமம்’ எனக் கூறிக் கலங்கிக் கண்ணிச் சிந்திள்ை. ' ' ' ' ". . .

சுதமதி, மாதவி மகளின் மனத்துயர் அறிந்து சிந்தை தெரிந்தாள். அப்போது ஆங்கோர் அதிசயம் நிகழ்ந்தது. 90

மணிபல்லவத் தீவை வாழிட மாக்கிக்கொண்டு, அவ்வழி யாக வரும் வங்கங்கட் கு ஏதும் நேராவாறு காக்கும் நற்றுணத் தெய்வமாய மணிமேகலா தெய்வம், புகார் நகரத்துப் பெண்ளுெருத்தியின் வடிவில் அவர் முன் வந்தது. பளிங்கு மண்டபத்தின் இடையே இடம் பெற்றிருக்கும் புத்த பீடிகையை வலம் வந்து வணங். கிற்று. புத்தன் புகழை வாயாரப் பாடிப் பரவிற்று. அதைப் பார்த்தவாறே இருவரும் ஆங்கு அசைவற்று நின்றிருந்தனர். அந்நிலையில், கணவனே இழந்த, கடுந்துயரால் பொலிவிழந்த முகத்தோடு வந்து தாய். மனை புகும் பெண்ணே போல், ஞாயிறு மறைய: மயங்கிருள் சூழ அந்திப் பொழுது வந்து படர்ந்தது.

மாலையும் மறைந்தது. எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது. வானவீதியில் வத்து தோன்றிய வெண் திங்கள் ஒளியால் மலர்ப்பொழில் விளக்கம் பெற்றது. அந்நிலயில் வ்ழிபாட்டை முடித்துக் கொண்ட மணிமேகலா தெய்வம், சுதமதியை அணுகி, நனி. இளம் பருவத்தினராய் நீவிர் இருவீரும், ஈங்கு இந்: நேரத்தில் தனித்து நிற்பது ஏனே? உங்கள் உள்ளம் வருந்த, ! உமக்கு நேர்ந்த துயர் யாதோ?’ என்று. அன்போடு வினவற்று. சுதமதி நிகழ்ந்ததைக் கூறினுள். அதுகேட்ட அத்தெய்வ மகள், "மகளே மன்னன் மகனுக்கு மணி மேகலையால் கொண்ட வேட்கை தனித்திலது. மலர்ப் மொழில் மாதவத்தோர் வாழிட, ஆ மிந்து அஞ்சி, இவன்.இப்போது விட்டு 9 |

அகன்றுளான். நீங்கள் பொழிலைவிட்டுப் புறத்தே சென்றதும் இவளைக் கைப்பற்றிக்கொள்வன். ஆதலின் தேரோடும் பெரிய தெருவழியே போகாதீர்கள், இப்பொழிலைச் சூழ்ந்து கிடக்கும் நாற்புற மதில் களில், மேற்றிசை மதிற்கண் ஒரு சிறிய நுழை வாயில் உளது. அதுவழியே சென்ருல், அரும்பெரும் தவம் ஆற்றும் பெரியோர்களும் விரும்பி வந்து வாழும் சக்கரவாளக் கோட்டம் தோன்றும். இவ்விருட்போதில் மட்டுமேயல்லாமல் பகற்பொழுதிலும் ஆங்கு உமக்குத் துயர் நேராது. இவ்விரவை ஆங்குக் கழித்து அகலுங்கள்’’ என்று கூறினுள். -

மணிமேகலா தெய்வம் கூறிய மாற்றங்களைக் கேட்ட சுதமதி, நன்று தாயே! தாங்கள் கூறியவாறே நாங்கள் ஆங்குச் செல்கிருேம் செல்வதன் முன் ஒன்று கேட்க விரும்புகிறேன். புகார்ப் பெரு நகரில் வாழ்வோர் அனைவரும் அக்கோட்டத்திற்குச் சுடுகாட்டுக் கோட்டம் என்றே. பெயர் குட்டி அழைக்கின்றனர். தாங்களும், என்னக் காதலித்துக் கைவிட்டு மறைந்த மாருதவேகனும் மட்டும் சக்கர வாளக் கோட்டம் என வழங்குகிறீர்கள். அது ஏனே? இவ்வையத்தை, அன்னையே! அகற்றி யருள்வாயாக" என வேண்டிக்

கொண்டாள். .

சுதமதியின் வினவிற்கு விடையளிக்க முன் வந்த மணிமேகலா தெய்வம், சுதமதி! இச்சோலையை. அடுத்துள்ள சுடுகாடு, புகார் நகர் தோன்றிய 92

காலத்தே தோன்றிய அவ்வளவு பழமையும் பெருமை யும் உடையது. காளிகோட்டம் முதலாம் பற்பல கோட்டங்களையும், கள்ளி கான்றை முதலாம் பற்பல மரவகைகளையும், வாகை மன்றம், முதலாம் வகை வகையான மன்றங்கனையும் கொண்டு, பிணங்களைச் சுடவும், இடவும், கவிக்கவும், புதைக்கவும், இரவிலும், பகலிலும் வருவார் எழுப்பும் அழுகையொலி போலும் பற்பல ஒலிகளால் நிறைந்தது.

  • சுதபதி! இச்சுடுகாட்டைப் பண்டொருநாள் சாரிங் கலன் எனும் அத்தணச் சிறுவன் ஒருவன் கண்டான். ஆங்குள்ள காட்சிகளைக் கண்ணுற்ற அவன், அதை ஒரு பெரிய பேருர் என மயங்க உணர்ந்தான். அவ்வுணர் வால், அவன், ஒரு நாள் நள்ளிரவில், அதனுன் தனித்துப் புகுந்தான்; புகுந்தவன், ஆங்கே ஒரு பிணத் தின்னும் பேயைக்கண்டான். அவ்வளவே, அச்சம் அவனை ஆட்கொண்டுவிட்டது. அலறிப் புடைத்துக் கொண்டு ஒடித், தாயின்முன் வீழ்ந்தான். அக்கணமே அவன். உயிரும் அவன் உடலைவிட்டு அகன்றது. தனக் கும் தன் கணவனுக்கும், தளர்ந்த பருவத்தில் தாங்கி நிற் கும் பற்றுக்கோடாய் விளங்கிய ஒரே மகன் உயிரிழந் தயை கண்டு, முதுமையால் கண்ைெளி இழந்திருந்த கோதமை உள்ளம் தொந்தாள். மகன் உடல் ஏந்தி மயனத்திற்குச் சென்ருள். சம்பாபதியின் கோயில் முன் தின்து, சம்புத்தீவின் காவற்றெய்வமே புகார் நகரத் தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து, இந்நகர் வாழ் 93

உயிர்க்கு எதகுலும், எந்த தேசத்திலும், எந்தவிதக் கேடும் நேராவாறு நின்று காப்பை எனக் கேட்டுள்ளேன். அத்தகையோய், என் மகனைப் பேய் உண்ணப் பார்த். திருந்தது ஏகுே?’ எனக் கூவிப் புலம்பி அழுதாள். கோதமையின் அழுகையொலி கேட்டு ஆங்கு வந்த, சம்பாபதி, அவள் துயர்க்காரணம் யாது என அன்போடு, கேட்டது. கோதமை நிகழ்ந்ததைக்கூறி, சம்பாபதி: கண்ணற்ற என் கணவனுக்குக் கைக்கோலாமாறு என் உயிரைக் கைக்கொண்டு இவன் உயிரைத் தத்தருள்: என வேண்டிக் கொண்டாள். கோதமை விரும்புமாறு, மாண்டவர் மீண்டும் உயிர் கொண்டெழுதல் உலகியல் பன்று: அவ்வாறு உயிர் அளிக்கும் ஆற்றல் தனக்கு மட்டு மன்று, ஏனைய எக்கடவுளர்க்கும் இல்லே என்பதை அவளுக்கு உணர்த்த விரும்பிய அத்தெய்வம், நால் வகை அருவப் பிரமர்முதலாம் வரம்கொடுக்கும் வன்மை வாய்ந்த கடவுளர் அனைவரையும் அவள் முன்வரவழைத் தது. வந்த கடவுளர்களும், நரை மூதாட்டி ஒர். உடலை விட்டுப்பிரியும் உயிர், பிரித்த அப்போதே பிறிதோர் உடலில் சென்று புகுந்து விடும். ஆதலின், போன உயிரை மீட்டளித்தல், எவ்வகையாலும் இயலாது. என் செய்வோம்’ எனச் சம்பாபதி கூறியவாறே கூறினர். தேவர் உரைத்தது கேட்டு உள்ளம் தெளிந்த கோதமை, மகன் உடல் மயானத்தில் இட்டு அகன் ருள். .

சுதமதி உலகின் பல்வேறு பகுதிகளை உறை விட மாகக் கொண்டு விளங்கிய கடவுளர் எல்லோரையும் 94

ஒர் இடத்தில் ஒருங்கே கூட்டிக் காண்பது அரிதினும் அரிதாம். அச்செயற்கரும் செயலைச் செய்து காட்டிய சம்பாபதியின் திறம் கண்டு, மயன் எனும் தேவதச்சன் வியந்தான். அக்கடவுளின் புகழ், புகார் நகர் உள்ளள வும் நின்ருேங்கச் செய்யவல்ல நல்ல நினைவுச் சின்னம் ஒன்றை, அச்செயல் நிகழ்ந்த இடத்தில் நிறுவ எண்ணிஞன். உடனே அவன் ஆற்றலால், மேருமக்ஸ், அம் மலேயைச் சூழ்ந்து நிற்கும் ஏழு சிறு மலைகள், எண் ணிலாச் சிறு சிறு தீவுகள் சூழ விளங்கும் நாற்பெரும் தீவுகள், ஆங்கு வாழ் உயிரினங்கள், அவற்றின் இயல்பு கள் ஆகிய இவற்றை ஆங்காங்கு உள்ளவாறே விளங் கக் காட்டும் ஓர் அரிய நினைவுச்சின்னம் ஆங்கு எழுந் தது; சக்கரவாளம்’ எனப் பெயர்பூண்ட அவ்வமைப் பினைத் தன்பாற் கொண்டதால், இச் சுடுகாட்டுக் கோட் டம் சக்கரவாள கோட்டம் என அழைக்கப்பெறும் சிறப் பினுக்கு உரியதாயிற்று” எனக்கூறிற்று. -

மணிமேகலா தெய்வம் கூறுவனவற்றைக் கருத் தோடு கேட்டுவந்த சுதமதி இறுதியில் சிறிதே கண் ணயர்ந்து விட்டாள். அவள் கண்ணயர் நிலையை எதிர் நோக்கியிருந்த அத்தெய்வம், மணிமேகலயை நினைவிழக் செய்து, தன் ஆகத்தோடு அணைத்துக்கொண்டு,

வழியேசென்று, மணிபல்லவத்தை அடைந்தது.

மணிபல்லவத்திடை கொண்டு தெய்வம், மீண்டும் உவவனம் மறத்து 536ು கொண்டிருந்த 95

சுதமதியை எழுப்பிற்று. துயில் நீத்தெழுந்த சுதமதி உடன் வந்த மணிமேகலை தன் அருகில் இல்லாமை கண்டு கலங்கிளுள் அவ்வாறு கலங்குவாள், தன் முன் நிற்கும் மணிமேகலா தெய்வத்தின் திருவுருவுகண்டு நடுங்கினுள். சுதமதியின் நடுக்க நிலை கண்ட மணி மேகலா தெய்வம், "மகளே! அஞ்சேல். நான் மணி மேகல்ா தெய்வம். மணிபல்லவத்திடை வாழ்வேன். புகார் நகரத்துப் பெருவிழாவான இந்திர விழாவைக் காண வந்தேன். வந்த இடத்தில் மணிமேகலைக்கு மாதவநெறி மேற்கொள்ளும் நல்வினை வாய்க்கப் பெற்றமை அறிந் தேன். அதனுல், அவளே என் தெய்வத்திருவருளால் மணிபல்லவத் தீவில் கொண்டு வைத்துள்ளேன். ஆங்கு அவள் தன் பழம் பிறப்புணர்ந்த பெருமையளாகி, இற்றைச் கு ஏழாம்நாள் ஈங்கு வந்தடைவாள் வருவோள் தன் வடிவு கரந்து வருவள். எனினும் உன்னை மறவாள்; உனக்கு ஒளிந்து வாழாள். அவள் இப்பேரூருட் புகும் அன்று ஈங்கு அரிய பல நிகழ்ச்சிகள் நிகழும். சுதமதி: நீ மாதவர் உறைவிடம் புகுந்து, என் வருகையையும் மகள் மாசிலாத் தவநெறி மேற்கொண்டதையும் மாத - விக்கு அறிவிப்பாயாக. அவள் என்னை அறிவாள். கட லிடையே வாழும் கடவுள் யான் என்பதைக் கோவலன் அவளுக்கு முன்னரே அறிவித்து, என் பெயரையே தன் மகளுக்குச் சூட்டியுள்ளான். பெயர் குட்டிய் அப்பெரு நாளன்று இரவில், மாதவி கனவில் தோன்றி, மாதவி! மாபெரும் தவக் கொடியை மகளாய்ப் பெறும்பேறு பெற்ற நீ வாழ்க’ என வாழ்த்தியும் உள்ளேன். அதையும் 96.

அவளுக்கு நினைவூட்டுவாயாக. நான் மணிபல்லவம் செல்கிறேன்' என அறிவித்துவிட்டு, ஆகாயத்தில் எழுந்து மறைத்துவிட்டது.

சுதமதி தனித்து விடப்பட்டாள். அரசன் சோயி. வில் நாழிகை அறிவார், நாழிகை உணர்த்த அவ்வப் போது எழுப்பும் அறிவிப்பொலியும், கூடங்களில் நிற்கும் யானைகளின் கூப்பீட்டு முழக்கமும், ஊர்க்காவலரின் துடி யொலியும், கடற்கரைக்கண் வந்து நிற்கும் கலங்களில் பணிபுரிவார் கள்ளுண்டுக் களித்துப் பாடும் பாட்டொவி யும், மகவின்ற மகளிர் புனிறுதிரப் புனலாடு அரவ்மும், வேந்தன் வெற்றி விளங்க, சதுக்கப் பூதத்திற்குப் பலி யிடும் வீரர்களின் ஆரவாரப் பேரொலியும் போலும் பற்பல ஒலிகள் ஒன்று கலந்து வந்து, அந்நள்ளிரவில் ஒலிக்கக்கேட்டு, உள்ளம் நடுங்கிளுள். பின்னர் ஒரு வாறு உள்ளம் தேறி மெல்ல எழுந்து, மணிமேகலா தெய்வம் கூறியவாறே வடபுலத்து வாயில் வழியே. சென்று சக்கரவானக் கோட்டத்தை அடைந்தாள்.

சக்கரவாளக்கோட்டம் புகுந்த சுதமதி ஆங்குச் சம்பாபதி கோயிலுக்கு அணித்தாக இருந்த ஊரம்பலத் துள் புகுந்து ஒருபால் அமர்ந்தாள். அப்போது, அவ். வம்பலத்தின் கீழ்ப்பால் துணில் இடம்பெற்று வாழும் ஒரு பாவை, சுதமதி மயங்கி மருளும் வண்ணம்,

" இரவிவன்மன் என்பானது ஒப்பற்ற மகளாக வினங்கியவளே! குதிரைப் படையிற் சிறந்தோனை துத்சயன், என்பவனின் மனைவியாக இருந்தவனே! .97

நெருங்கக் கட்டிய மலர் மாலையை அணிந்தோளான் நின் தமக்கையான தாரை என்பவள் சாவை அடைய மயக்க மூற்று, யானையின் முன்னர்ச் சென்று வீழ்ந்து நின்னு: பிரையும் விட்டவளே! இக்காலத்தே காராளர் நிரம்பி புள்ள சண்பை நகரத்துக் கெளசிகன் என்பவனின் மகளாகப் பிறந்தவளே! மாருத வேகன் என்பனேடு இந்நகரத்திற் புகுந்தவளே! முற்பிறவியில் நின் தமக்கை யாகிய தாரையென்பாளோடு மீண்டும் இப்பிறவியிலும் ஒன்று கூடியவளே! வீரையாகிய சுதமதியே’’

என்று, அவள் இப்பிறப்பு வரலாற்ருேடு முற்பிறப்பு வரலாற்றையும் அறிந்தாற்போல் விளித்தது. பாவை வாய் திறந்து பேசுவதையும், அது தன் வரலாற்றின அறிந்து உரைப்பதையும் கண்டு சுதமதி வியப்புற்ருள். - வியப்பின் வழித்தோன்றி அச்சம் அவளைப் பற்றத் தலைப் பட்டது. அப்போது, அப்பாவை மீண்டும் அவளை விளித்து, போன பிறவியில் இலக்குமி எனும் பெயரோடு உனக்கு இளையளாய் விளங்கிய மணிமேகல் தன் பழம் பிறப்போடு உன் பழம் பிறப்பையும் அறிந்துகொண்டு, . இற்றைக்கு ஏழாம்நாள் இடையிருள் யாமத்தில் வந்து

சேர்வள்; வருந்தற்க என்று உரைத்தது.

கந்திற்பாவை கூறியன கேட்டு, o சுதமதியுள்ளம் கலங்கி நடுங்கிற்று. அந்நிலையில் இருள் நீங்கிப் பொழுதும் புலர்த்துவிட்டது. எங்கும்.ஒளிபர்த்தது. புகார் உயிர் பெற்று எழுந்து விட்டது. அம்பேறுண்ட மயிலேபோல் நடுங்கியவாறே, சுதமதி, கிரநகர்வீதி

. . . . - 7شسس في 98

வழியே சென்று மாதவியை அடைந்தாள். இரவில் நிகழ்ந்தன அனைத்தையும் அவளுக்கு இயம்பிளுள். மகள் மறைவு கேட்ட மாதவி தன்மணி இழந்த நாகம் போல் திலகுலைந்து வருந்தினுள். அவள் அவலநிலை 'கண்டு, உயிரிழந்த யாக்கைபேசில் உணர்வற்றுப்போன் சுதமதி, மாத வியின் மனத்துயர் போக்கும் மருந்தென, அவளே விட்டுப் பிரியாது வாழ்ந்திருந்தான்.

சிலநாட்கள் சென்றன. மணிபல்லவம் சென்ற மணிமேகலை, உயிர்களை வருத்தும் உறுபசியைப் போக்க உணவளிக்கும் அமுதசுரபி எனும் அருங் கலம் பெற்றுப் புகார் நகர் வந்து சேர்ந்தாள். அவ ளாலும், அறவண அடிகளாலும் சுதமதி, தன் பழம் பிறப்பினை உணரும் பேறு பெற்ருள். -

அசோதர நகரத்து அ ச ஞ கி ய இரவிவன் மனுக்கு அமுதபதி வயிற்றில் பிறந்த மகளிர் மூவர். தாரை, வீரை, இலக்குமி என்பன அன்னர் பெயர்களாம். அவருள் மூத்தோர் இருவரும், அங்கநாட்டுக் கச்சய நகரை ஆண்டு கொண்டிருந்த துச்சயன் என்பான் 'ஒருவன மணந்து மகிழ்ந்து வாழ்ந்திருந்தனர். ஒருநாள் 'அவ்வேந்தன் தேவியர் இருவரோடும் மலைவளம் காணச் சென்ருன். சென்றவன், கங்கைக் கரையில் பாடி அமைத்து ஆங்கிருத்தான். அப்போது அறவண அடிகள் ஆங்கு வந்தார். வந்த முனிவரை வரவேற்று வழிபட்ட வேந்தன், "ஐயன்மீர் இவண் வந்த நீவிர் யாவிச்? வித்த காரணம் யாதோ அறியக் கூறுமின்’ எனப் பணி வோடு விவிைகுன். அரசன் அன்போடு ஆற்றிய அழிபாட்டினை ஏற்றுக்கொண்ட அடிகளார். “அரதுே ஆஅண்மையில் உள்ள மலமுடியில் புத்தன் திருவடித் في ؟ قة

தாமரை பொறிக்கப் பெற்ற பீடிகையுளது. அப்பெரு மையால் பாதபங்கயமலே எனப் பெயர் பெறும் அம் மலையை வலம் வந்து வணங்கும் விருப்புடையேன். மனைவியரோடு நீயும் வந்து வழிபடுக” எனக் கூறிஞர். அரசனும் அவ்வாறே தாரை வீரையாய மனைவியர் இ. நவரோடுஞ் சென்று மலையை வலம் வந்து வணங் கிளுன்..

சின்னுட்கள் சென்றன. ஒருநாள், வழக்கத்திற்கு மாரு மதுவுண்ட வீரை, மதுமயக்கத்தால் மதிகெட்டு, மதங்கொண்ட யானை முன் வீழ்ந்தது, அதன் கால் களால் மிதியுண்டு உயிரிழந்து போனள். உடன் பிறந் தாளுக்கு நேர்ந்த கேட்டினைக் கண்டு கலங்கிய தாரை, அரண்மனையுள் வானளாவ உயர்ந்து விளங்கிய மாடத்து உச்சியினின்றும் வீழ்ந்து உயிரிழந்தாள். இவ்வகை யால் அரசவாழ்விழந்து உயிர் நீத்த வீரையும் தாரையும் பாத பங்கய மலையை வலம் வந்து வணங்கிய நல்வினைப் பயத்தால், முறையே சுதமதியாகவும், மாதவியாகவும் காசிமா நகரிலும் காவிரிப்பூம்பட்டினத்திலும் வந்து பிறந்தனர். அந்நல்வினைப் பயனிஞலேயே, இப்பிறவி 'யில் நாடிடைப்பட்டுத் தோன்றினும், இறுதியில் ஓரிடத்தே ஒன்று கூடினர். அந் நல்வினைப் பயணி குலேயே, முற்பிறவியில் இலக்குமி என்பாளுக்குத் தமக்கையராய்ப் பிறந்தவர், இப்பிறவியில் அவ்விலக்குமி யின் மறு பிறப்பாம் மணிமேகலைக்குத் தாயாராம் தகுதி பெற்றனர். தன் பழம் பிறப்புணர்த்தும், இவ்வர றின அறிந்தமையால், சுதமதி, மாதவியாலும், அவள் மகள் மணிமேகலை பாலும் பேரன்பு காட்டி வாழ்த்திருத் தாள. 100

சில நாட்கள் சென்றன. மணிமேகலை ஊரம்பலத்தி விருந்தவாறே.அமுதசுரபியால் உயிர்களுக்கு உணவூட்டி வந்தாள். அவள் மீது கொண்ட காதலை மறக்கமாட்டாத ..மன்னன் மகன் அவள் பின் திரியத் தொடங்கினன். அதனுல் விஞ்சயன் ஒருவளுல் வாளால் வெட்டுண்டு: வீழ்ந்து இறந்தான். மகன் கொலையுண்டது. மணிமேகலை யால் என மயங்க வுணர்ந்த மன்னன் அவளைச் சிறையி: லடைத்துச் சிறுமை செய்தான். அரசன் தேவி அவகாச் சிறை வீடு செய்து தன் பால் கொண்டு சென்று கொடுமை, பல விகாத்தாள். மாதவி அஃதறிந்து வருந்தினள். மணிமேகலைக்கு தேர்ந்த இடையூற்றையும் அதனல் மாதவி படும் துயரையும் கண்ணுற்ற சுதமதி, அரசமாதேவிக்கு அறிவுரை வழங்கி மணிமேகலேயை. மீட்டல் வேண்டும் எனத் துணிந்தாள். துணிந்தவள், அதைச் செய்து முடிக்க வல்லவர் அறவண வடிகளே என உணர்ந்து, மாதவியோடும், அடிகளாரோடும் மன்னன் மனேக்குச் சென்ருள். அரசியார்க்கு அறவண அடிகள், அரிய பல அறிவுரை கூறிஞர். அதன் விளை வாய் மணிமேகலைக்கு விடுதலை கிடைத்தது. மணி மேகலைக்கு மன்னன் மகல்ை நேர இருந்த இழுக்கினை முன்னம் போக்கிய சுதமதி, அவளுக்கு, மன்னன் மனே வியால் நேர்ந்த கேட்டினையும் போக்கிப் பெருந்துணே

புரிந்தாள். நிற்க.

சிறைவீடு பெற்ற மணிமேகலை, அந்நிலையில் அந்: நகரில் வாழ்ந்திருத்தல் சிறப்பளிக்காது என உணர்ந்து ஆபுத்திரன் இருந்து ஆளும் நாகபுசத்திற்குச் சென்ருள். கண்ணிமேகல் பிசிவால், டிாதவியும் சுதமதியும் வருந்தி வாழ்ந்திருந்தனர். நாட்கள் சில சென்றன். மாவண் கிள்ளி, நாகநாட்டு அரசன் மகள் பீலிவளையால் பிறந்த 101

மகனே, அவன் கலம் ஊர்ந்து காவிரிப்பூம்பட்டினம் வகுங். கால், வங்கம் கவிழ்ந்து கடல்வாய்ப்பட்டு மறைந்து போளுன் என்ற செய்தியைக் கேட்டான். அவன் மனம் மாளாத்துயரில் ஆழ்ந்துவிட்டது. ஆண்டுதோறும். வழக்கமாகக் கொண்டாடும் இந்திர விழாவையும் அவன் மறந்துவிட்டான். அதனல் சினம் கொண்ட மணி மேகலா தெய்வம், காவிரிபூம்பட்டினத்தைக் கடல் கொள்க’ எனச் சாபம் இட்டாள். அவ்வாறே புகார்ப் பெருநகர் கடல் வயிறு புகுந்தது. மக்கள் அரண்மிக்க இடந்தேடி அலேந்தனர். அக்கால அந்நகரில் வாழ்ந் திருந்த சுதமதி, அறவண அடிகளோடும் ஆருயிர்த்தோழி மாதவியோடும் வஞ்சிமா நகரடைந்து வாழ்ந்திருந்தாள்.

பதியெழுவறியாப் பழங்குடிகள் பல்கிய பெரு மையுடையது என்ற பாராட்டினுக்குரிய புகார், கடலில் மூழ்கி அழிந்து விட்டது. கடல் நீர் பெருகிக் கேடு விளக்கும் காலத்தில் தம்மைக் காத்துக்கொள்ள விரைவில் அறவண அடிகளும், மாதவியும், சுதமதியும் அண்மையில் இருந்த வஞ்சி மாநகர்க்கு வந்து சேர்ந்தனர். ஆங்குத், தம் உயிருக்கும் உடைமைக்கும் நேர இருந்த கேட்டினைப் போக்கிக் கொண்ட பின்னர், மணிமேகலை குறித்து எண்ணத் தொடங்கினர். மன மாசு கெடுக்கும் நல்ல உண்மைகன் மணிமேகலை அறிய வேண்டுமாயின், அதற்கு ஏற்ற இட்ம் காஞ்சி மாநகரே ஆகும். காஞ்சி பல சமயத்தவரின் வாழிடம். சமய நெறி யுணர்ந்த பேராசிரியர் பலர் வாழும் இடம் அக்காஞ்சி, அவ்வாசிரியன்மார் அனைவரை யும்கண்டு அவர் கூறும் சமய உண்மைகளைக் கேட்ட பின்னரே உண்மைச் சமயம் எது என்பதை உள்ளம் உணரும். ஆதலின் மணிமேகலைக்கு உண்ண்ம். 102

யறத்தை யுணர்த்த வேண்டுமாயின், அதைக் காஞ்சி யிலேயே செய்தல் வேண்டும் என்ற அறவண வடிகளின் கருத்தினை இருவரும் ஏற்றனர். உடனே, மூவரும் காஞ்சி நகரடைந்து மணிமேகலையின் வருகையை எதிர் நோக்கி வாழ்ந்திருந்தனர்.

ஆபுத்திரன் நாட்டிற்கும், மணிபல்லவத் தீவிற்கும் சென்ற மணிமேகலை, தமிழகத்திற்குத் தண்ணிரால் நேர்ந்த கேட்டினைக்கேட்டு வருந்தினுள். தாயும், தாய் நிகர் சுதமதியும், ஆசிரியப் பெருமகனும் வஞ்சி சென்று வாழ்கின்றனர் என அறிந்து ஆங்குச் சென்ருள். ஆங்குச் சென்ற கால மூவரும் காஞ்சி சென்று விட்டமை யறிந்து ஆங்கடைந்தாள். காஞ்சிக் காவலன் வேண்டுகோட்கு இணங்கி, அமுதசுரபியால் அந்நாட்டு மக்களைப் பற்றி வருத்திய பசிப்பிணியைப் போக்கியவாறே, அரசன் கட்டிய அறச்சாலையில் வாழ்ந்திருந்தாள். அச் செய்தி கேட்ட சுதமதி, அறவண அடிகளோடும், மாதவியோடும் அவ்வறச்சாலை யடைந்து மணிமேகலையைக் கண்ணுற்று. மகிழ்ந்து மனநிறைவுற்ருள். மணிமேகலையின் மனப் பக்குவம் அறிந்து, அவளுக்கு அறவண அடிகள் உணர்த்திய உண்மை உரைகளைச் சுதமதியும் உடனி ருந்து கேட்டு உயர்வடைந்தாள். உண்மை நெறி உணர்த்தப் பெற்ற மணிமேகலை, பின்னர் பல சமயத் தலைவர்களையும் கண்டு, அவர்பால் சமய உண்மைகளைக் கேட்டு உணர்ந்ததையும், பின்னர் பவ த் திறம் அறவேண்டிய பெருந் தவநெறி மேற்கொண்ட பெருமை மிகு செயலையும் கண்டு உள்ளம் பூரித்தாள். மலர் பறிக்கச் சென்ற மணிமேகலைக்குத் துணை புரிய, அன்று அவளுடன் தான் சென்றதினலேயே, மணிமேகலை, இன்று மாண்பு. துமிகு பெரியோளாயினள் என்ற பெருமிதவுணர்வால். 103

அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் ஊற்றெடுத்துப் பாய்ந்தது. -

காமுகன் வலைபட்டுக் காவிரிப்பூம்பட்டினம் வந்து சேர்ந்த சுதமதி எண்ணிலா இடையூறுகளுக்கு உள்ளன. ளுள். அகளுல் உலகியல்பை உள்ளவாறு உணர்ந்த உரம்மிகு உள்ளம் பெற்ருள். அரசனுக்கும் அறம் உரைக்கும் அறிவு வளம் வாய்க்கப் பெற்ருள். மணி மேகலா தெய்வமும் மதிக்கும் மாண்புடையளாளுள், கந்திற்பாவையின் கருத்தினக்கவரும் கருவிலே வாய்த்த திருவுடையளாளுள். அரசன் மாதேவியால் அறவன அடிகளோடும் மாதவியோடும் ஒப்ப மதிக்கும் உயச் வுடையளாளுள். இறுதியில், அறவண அடிகளால் மணிமேகலைக்கு உணர்த் திய உயர்த்திய உண்மைகனே உடனிருந்து கேட்கும் பெரும்பேறு பெற்ற பெருமையளச விளுள் . - - -

மாதவிக்குத் தோழி:ர் இருவர். ஒகத்தி வந்த மாலை; மற்ருெருத்தி சுதமதி. மாதவியின் தோழியர் என்ற உரிமையால் இருவரும் ஒத்த நிலையினர் என்ரு லும், மாதவியின் மாலையை வீதியில் விலை கூறி விற்று, மாதவிக்கு விலைமாது எனும் பெரும்பழியைச் சூட்டிய இழிவும், பிழை நெறியுணர்ந்து தவநெறி மேற்கொண்ட மாதவி செயல் மாண்புடைத்து என மதிக்காது, அவன் யும் அவள் மகளையும் மீண்டும் பரத்தையர் ஒழுக்கத்தில் புகுத்த, மாதவியின் தாய் சித்ராபதிக்குத் துணையாய்ப் பெரும்பாடுபட்ட பழியும் உடையளாய், உயர்ந்தோர் உள்ளத்தில் இடம்பெறும் வாய்ப்பினை இழத்துவிட்ட வயந்தமாகல போலாகாது, அம்மாதவியின் தவலொழுக்கத் திற்கு உரம் ஊட்டும் நல்ல துணையாகியும். அவள் மகன் 104

பணிமேகலை, காமவெறி கொண்டு அலைந்த காவலன் மகன் கைப்பட்டுக் கெட்டுப் போகாவண்ணம் காத்து, அவளைத் துறவு மேற்கொண்ட துளயோளாக்கும் தூண்டு கோலாகியும், அறவண அடிகளும் மதிக்கும் அத வொழுக்க நெறியினளாகியும் நீள் புகழ்பெற்ற பெறற்கரும் பேறுடையளாளுள் சுதமதி. -

முற்பிறவியில், ம்ணிமேகலைக்குத் தமக்கையாய்ப்

பிறந்த சுதமதி, இப்பிறவியில் பெற்றதானும் பெரிய தாயாய, முன்னவன் அவள் உடலைப் பேன, இவள்

அவள் உயிரைப்பேணிப் பெருமையுற்ருள். வாழ்க அவ் விாரணவாசியான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=சாத்தன்_கதைகள்/5._சுதமதி&oldid=1350981" இலிருந்து மீள்விக்கப்பட்டது