சாவின் முத்தம்/சாவின் முத்தம்

சாவின் முத்தம்

இமை நெறித்து வானத்தில்
    அடுக்கி, கொஞ்சம்
இருள் கிடக்கும் பார்வையிலே
    கோணம் வாங்கி,
சுமைக் குடத் துடன் நடந்து
    மாந்தோப் போரம்
சென்றிட்டாள் நீலவள்ளி !
    வாய் இமைத்து,
“நமை விட்டுப் பிரியாத
    அந்தி நேரம்;
நல்ல இசை; பனித்தென்றல்,
    இருந்தும், காதல்
குமையாத நெஞ்சத் தான்,
    “அத்தான்” இன்னும்
கொத்திட ஏன் வரவில்லை?”
    எனத் துடித்து,

நடை யழுங்க நின்றிட்டாள்.
    மீண்டும் யாழை
நடத்துகின்ற வாய்திருத்தி
    ‘ஆமாம்’ சேரர்
படைத்தலைவன் என் அத்தான்!
    சிரிப்பின் ஆழம்
பார்ப்பதற்கு இது நேரம்
    அல்ல! நேற்று

உடை பொருத்தி விட்டவளும்
நானே! இன்று
உள்ளத்தால் ஏன் சோகம்
தெளிக்க வேண்டும்?
விடை பெற்று வளர்கின்ற
கொடிகள், கொம்பின்
மேனிருசி பார்க்காமல்
போமோ!' என்று

பிசைந்திட்டாள் எண்ணத்தை
பின்னும் "துன்பம்'
பதம் பார்க்க ஓடிவரும்
அதிர்வாள்! பச்சை
அசைவினிலே கொடிமுல்லை
ஆகி, சற்று
ஆடுவாள்; ஆனந்தம்
வைப்பாள்! மச்சான்
இசை உலகம் வார்த்தெடுத்து
மணி நிலாவில்
”இந்தாடி தென் குயிலே!”
என உடம்பின்
திசைஎங்கும் பாய்ச்சிடுவான்.
அதற்குள் எந்தன்
சிறு நெஞ்சம் ஏன்
கூத்து ஆடவேண்டும்?

எனக் கேட்டாள் தன் மனத்தை.
பறந்தாள் வீடு.

}}

“ஏன் இவ்வளவு நேரம்
”இழைத்தாய்?' என்று
வினவினன் அவள் தந்தை.
“அந்தி நேரம்
வெளிப் போக்கு வரத்துக்கு
ஏற்றதல்ல
மனம் சுருட்ட வேண்டுமடி
அம்மா! இன்னும்
மணம் உனக்கு ஆகவில்லை
அதற்குள், என்ன?
இனம் தேடிச் சென்றாயோ!
போடி உள்ளே!
இன்றுமுதல் கடை துவக்கக்
கூடா’ தென்று

தாய்எரிந்து மேல் விழுந்தாள்!
மலர்ப்பூங் கோதை
தரை ஊன்றும் விழியினிலே
பனி நிருத்தி
போய் அடைந்தாள் அறைவீடு.
அடுத்த வீட்டுப்
பெண் ஒன்று ஓடிவந்து
"வள்ளி அக்கா!
வேய் மூங்கில் தோள்
அணைந்து அமுதம் உண்ண
விடியலிலே வருவாராம்!
இதழில் முத்தம்

தோய்த்து வெகு ஆண்டாச்சாம்!
இதை உனக்குச்
சொல்லச்சொன்னர் அக்கா”
என்றாள் - துள்ளும்

ஆத்திரத்தில் வாய் உரித்தான்
தந்தை. “என்ன
இப்படியா நடக்க
இசைந்தாய்?' என்று
கோத்தெடுத்தாள் சுடு சொற்கள்
அன்னை, அந்தக்
கொந்தளிப்பில் அவள் மிதக்க,
கொண்டைக் கம்பால்
சாத்துதற்கு விரைந்திட்டான்
அண்ணன். வீட்டில்
தங்குதடை இல்லாமல்
பேசலானார்,
ஊத்தை முடிக் கழிசடையுங்
கூட, பேச்சு
ஒன்றிருக்க அதை மாற்றிக்
குகைவாய் காட்டும்.

சாத்திய வாய் திறக்கவில்லை;
வள்ளி. துக்கம்
சாய்த்து நெஞ்சை நனைக்கின்ற
அவளைப் பார்த்து
“தூத்தூத்து!" ஏன் இந்த
விசனம்! குட்டைச்

சமூகத்தார் வாழட்டும்
உன்னேப்போன்ற
மாத்தமிழர் வாழுகின்றார்
இறப்பில், நீயும்
மடிவதுதான் உதயத்தின்
தீர்ப்பு, அங்கே
கோத்தாட நீ போவாய்
“அத்தான்-வீரன்”
குரவமலர்ச் சிரிப்பேந்தி,
வருவான்” என்று

அந்தரங்கம் ஒசையிட,
இந்த்ர நீலம்
அடர்ந்தது போல் விஷ
இருட்டுபூக்க, வெப்பம்
சிந்துகின்ற கண்கொழித்து
‘ஆம், ஆம்’ இந்தத்
தீர்ப்பேதான் சரிஎன்று
முணுமு னுத்து
வந்திட்டாள் மரணத்தின்
ஒட்டில் நஞ்சை
மட்டித்து வாய் குளிர்ந்தாள்
“சாவின் உச்சி”
உந்திற்று விண்ணுக்கு
கிழிந்த கொள்கை
ஒருசொட்டுக் காட்டிற்றா?
என்ன கோரம்!

சிரிப்பின் நிழல்!

முல்லையிலே சிரிக்கின்றாள்! வான மென்னும்
முகம்பார்க்கும் கண்ணாடி மேனி எங்கும்
நெலநிறத்துப் பட்டாடை போர்த்து கின்றாள்!
நீல மலர் இதழ்வடிவில் அசைந்து பச்சைப்
புல் இனத்தில் ஒளிகின்றாள்! அருவி யாகிப்
புனல்வழித்துச் சிந்துகின்றாள்! அந்த ரத்து
வில்வளைவில் கூத்திட்டுக் கரும்புத் தோளின்
மணிவரியில் முத்துருவம் அடைகின்றாள்! செங்

கண்ணவிழ்த்து நெளிகின்றாள்! இதழ் வரம்பில்
கதிர்பரப்பி அந்தியினைப் படைத்து, காதல்
உண்ணுகின்றாள். படைக்கருவி முகத்தை ரத்த
ஊற்றாக்கிக் களிக்கின்றாள்! காந்தட் பூவின்
வண்ணத்து இளமைவிரற் கொத்தில், தங்க
மயில் நடனம் வைக்கின்றாள்! உத டிமைத்து,
எண்ணத்தை இசையாக்கி, வானம் பாடி
எடுத்துண்ணும் துாற்றலிலே மணியா கின்றாள்!

தன்நிறத்தை இவ்வுலகப் பொருளின் மேலே
தெளித்துவிடல் வேண்டுமெனும் பெருங்
துடிப்பை
மின் உதயம் சரிக்கின்றாள்! குமரித் தென்றல்
விளைவு அவள் இதயப்பூந் தோட்டம்! முத்தம்
தின்னுதற்குத் தளிர்க்கின்றாள்! கண்க லைத்துச்
சீர்திருத்தம் உதிர்க்கின்றாள். ஒளிமன் றத்தில்
இன்ன இடம் கலை! கவிதை இதுதான் ! காதல்
என்பதுவும் இவ்விடந்தான் எனவி ளக்கிக்

காட்டுகிறாள் பாண்டிநாட் டரசி! ஆலங்
கனிநிறத்து இதழ் ஊன்ற வரும்என்மீது
வாட்டத்துப் பார்வையினை அனுப்புகின்றாள்! வாரிஉண்ணப்போகையிலலே ‘தொடாதே’ என்று
ஆட்டிவைத்து மறைகின்றாள் மீண்டும் மீண்டும்
அன்புவரும்! இருட்டும்!பின் அமுதம் தந்து
ஊட்டத்தைக் கொடுக்கின்றாள்! அழகு என்னும்
ஒளிமடந்தை என் உலகம் அவள்தான் கண்டீர்!