திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/14.ஒழுக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 109:
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: 'நன்றிக்கு வித்தாகும்' என்றதனால், தீயவொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும், 'இடும்பை தரும்' என்றதனால் நல்லொழுக்கம் இன்பந் தருதலும் பெற்றாம். ஒன்றுநின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின், இதனாற் பின்விளைவு கூறப்பட்டது.
 
 
==திருக்குறள் 139 (ஒழுக்கமுடையவர்க்)==
 
;ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
;வழுக்கியும் வாயாற் சொலல்
 
:ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
:வழுக்கியும் வாயால் சொலல் (09)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): வழுக்கியும் தீய வாயால் சொலல்= மறந்துந் தீயசொற்களைத் தம் வாயாற் சொல்லும் தொழில்கள்;
:ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா= ஒழுக்கம் உடையவர்க்கு முடியா.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: தீயசொற்களாவன: பிறர்க்குத் தீங்குபயக்கும் பொய்ம் முதலியனவும், வருணத்திற்கு உரியஅல்லனவும் ஆம். அவற்றது பன்மையாற் சொல்லுதல் தொழில் பலவாயின. 'சொலல்' சாதியொருமை. சொல்லெனவே அமைந்திருக்க 'வாயால்' என வேண்டாது கூறினார். நல்லசொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு. இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.