திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/31.வெகுளாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 50:
 
;உரை விளக்கம்: 'செல்லாஇடத்துச் சினம்' பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே; ஏனையது, இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன 'பிறஇல்லை' என்றார். ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.
 
 
 
==குறள்: 303 (மறத்தல்)==
 
 
;மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
;பிறத்த லதனான் வரும் (03)
 
 
 
:மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
:பிறத்தல் அதனான் வரும்.
 
 
;இதன்பொருள்: யார்மாட்டும் வெகுளியை மறத்தல்= யாவர் மாட்டும் வெகுளியை ஒழிக; தீய பிறத்தல் அதனான் வரும்= ஒருவர்க்குத் தீயன வெல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான்.
 
 
;உரை விளக்கம்: வலியார், ஒப்பார், மெலியார் என்னும் மூவர்மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தாற் துறத்தார்க்கு ஆகாதனவாகிய தீ்ச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்' என்றும் கூறினார்.
 
 
==குறள்: 304 (நகையும்)==
 
 
;நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
;பகையு முளவோ பிற (04)
 
 
:நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
:பகையும் உளவோ பிற.
 
 
:உரைவிளக்கம்: நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்= துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின்கண் உவகையையும் கொன்று கொண்டு எழுகின்ற சினமே அல்லது; பிற பகையும் உளவோ= அதனிற் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை.
 
 
 
:உரைவிளக்கம்: துறவாற் புறப்பகை இலராயினும், உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகையில்லையாயிற்று.
:இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.
 
 
==குறள்: 305 (தன்னைத்தான்)==
 
 
;தன்னைத்தான் காக்கிற் சினங் காக்க காவாக்காற்
;றன்னையே கொல்லுஞ் சினம் (05)
 
 
:தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
:தன்னையே கொல்லும் சினம்.
 
 
;இதன்பொருள்: தன்னைத் தான் காக்கின் சினம் காக்க= தன்னைத் தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தான்ஆயின், தன்மனத்துச் சினம் வாராமற் காக்க; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும்= காவானாயின், அச்சினம் தன்னையை கெடுக்கும் கடும் துன்பங்களை எய்துவிக்கும்.
 
;உரை விளக்கம்: "வேண்டிய வேண்டியாங்கு எய்தற்"<sup>1</sup> பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுதற்காக இழந்து, அத்தவத் துன்பத்தோடு பிணைய பிறவித்துன்பமும் ஒருங்கு எய்துதலின், தன்னையே கொல்லும் என்றார். "கொல்லச் சுரப்பதாங் கீழ்<sup>2</sup>" என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.
 
:<small>1.திருக்குறள்- 265.</small>
:<small>2.நாலடியார்</small>