நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 548:
:ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத் <b>||{{green|ஏற்புழி அறிந்து இதற்கு இவ் வகை ஆம் என}}</b>
:தகும்வகை செலுத்துத றந்திர வுத்தி. (15) <b>||{{green|தகும் வகை செலுத்துதல் தந்திர உத்தி.}}</b>
 
 
 
வரி 558 ⟶ 559:
:தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். (16) <b>||{{green|ஓத்து என மொழிப உயர் மொழி புலவர்.}}</b>
 
என்னுதலிற்றோவெனின், இருவகை (நூற்பா, 04) உறுப்பினுள் ஓத்துறுப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
 
'''இதன் பொருள்:''' ஒரு சாதியாயுள்ள மணிகளை முறையே பதித்தாற்போல ஒரு சாதியாயுள்ள பொருள்களை ஒருவழிப்படக் கூறுவது ஓத்துறுப்பாம் எனச் சொல்லுவர், உயிர்க்குறுதி பயக்கும் மெய்ம்மொழிகளையுடைய புலவர் என்றவாறு.
 
நேர்தல் - ஒன்றுபடல்.
 
இவ்வாறு வருதல் இந்நூலுறுப்பினுள் காண்க. (௧௬)
 
<small>'''குறிப்பு:''' இச்சூத்திரமும், அடுத்த சூத்திரமும் (நூற்பா, 16, 17) ஆசிரிய வசனம்; தொல்காப்பியம்-செய்யுளியல், 171, 172).</small>
 
'''நூற்பா: 17.'''
வரி 565 ⟶ 575:
:ஒருநெறி யின்றி விரவிய பொருளாற் <b>||{{green|ஒரு நெறி இன்றி விரவிய பொருளால்}}</b>
:பொதுமொழி தொடரி னதுபடல மாகும். (17) <b>||{{green|பொது மொழி தொடரின் அது படலம் ஆகும்.}}</b>
 
என்னுதலிற்றோவெனின், படலவுறுப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
 
;இதன் பொருள்: ஒருவழிப்படாது விராய பொருளோடு பொருந்திப் பலபொருளை உணர்த்தும் பொதுச்சொற்கள் ஒரோவழியின்றித் தொடர்ந்துவரின் அது படலவுறுப்பாம் என்றவாறு.
 
படலவுறுப்பினையுடைய காப்பியங்களுள் பாட்டுடைத் தலைவனது சரிதையேயன்றி மலை கடல்நாடு முதலிய பல பொருட்டிறங்களும் விரவிவருதலும், பல பொருளை உணர்த்தும் பொதுச்சொற்கள் ஒரோவழியின்றித் தொடர்ந்து வருதலும் காண்க. (௧௭)
 
 
வரி 574 ⟶ 590:
:செவ்வ னாடியிற் செறித்தினிது விளக்கித் <b>||{{green|செவ்வன் ஆடியில் செறித்து இனிது விளக்கி}}</b>
:திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம். (18) <b>||{{green|திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்.}}</b>
 
என்னுதலிற்றோவெனின், சூத்திரமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
 
;இதன் பொருள்: சிறிய கண்ணாடியில் பெரிய சரீர முதலியவற்றின் சாயை (நிழல்) செவ்வாகச் செறிந்து இனிதாக விளங்கினாற்போல, செவ்வாகச் செறிந்து இனிதாக விளங்கச் சில்வகை எழுத்துக்களான் இயன்ற யாப்பின்கண் பல்வகைப்பட்ட பொருள்களைச் செவ்வாகச் செறித்து இனிதாக விளக்கி, அப்பல பொருட்டிண்மையும் நுண்மையும் சிறந்து வருவன சூத்திரங்களாம் என்றவாறு.
 
திட்பம் - குற்றமின்மையின் அலைவற நிற்றல். இவ்வாறு வருதல் இச்சூத்திரத்துள்ளும் காண்க.
 
 
வரி 582 ⟶ 604:
:ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப் <b>||{{green|ஆற்று ஒழுக்கு அரிமா நோக்கம் தவளை}}</b>
:பாய்த்துப் பருந்தின்வீழ் வன்னசூத் திரநிலை. (19) <b>||{{green|பாய்த்து பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை.}}</b>
 
என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.
 
;இதன் பொருள்: மேற்கூறிய சூத்திரங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து நிற்கும் நிலைகள், ஆற்றொழுக்கு முதலிய நான்கினையும் போலும் என்றவாறு.
 
இவ்வாறு நிற்றல், இந்நூலுள் வந்துழி வந்துழிக் காட்டுதும்; ஆங்காங்கு உணர்க.
 
;<small>ஆற்றொழுக்கினை 291-ஆம்நூற்பாவிலும், அரிமா நோக்கத்தினை 109-ஆம் நூற்பாவிலும், தவளைப்பாய்த்தினை 101-ஆம் நூற்பாவினும், பருந்தின் வீழ்வினை 96-ஆம் சூத்திரத்தினும் காண்க.</small>
 
<small>'''ஆற்றொழுக்கு:'''ஆற்றுத் தண்ணீர் இடையறாது ஒழுகுதல் போல நூற்பாக்களும், தம்முள் பொருள் இயைபு உடையனவாக ஒழுகுதல்.
'''அரிமா நோக்கம்:'''சிங்கம் ஒரு பொருளை உடலைத் திருப்பாமல் முன்னும், பின்னும் பார்ப்பது போல ஒரு நூற்பாவின் பொருள் முன்னும் பின்னுமுள்ள நூற்பாவின் பொருளோடு இயைபு உடைத்தாதல்; (பொதுவியல், முன்னுள்ள பெயர் வினைகளோடும், பின்னுள்ள இடை உரிகளோடும் இயைபுடையதான பொது இலக்கணங்களை உணர்த்தல்); '''தவளைப் பாய்த்து:''' தவளையானது, இடையிட்டுத் தாவித் தத்திச் செல்வது போல ஒரு நூற்பாவின் பொருள் ள் ஒரு நூற்பாவையிடையிட்டு அடுத்த நூற்பாவோடு சென்று இயைந்து பொருள்பயத்தல்; '''பருந்தின் வீழ்வு:''' பருந்து நெடுந்தூரம் இடையிட்டுத் தான் விரும்பிய பொருளைக் கொண்டு விண்ணேகுவது போல ஒரு சூத்திரப்பொருள் பலசூத்திரங்களை இடையிட்டுச் சென்று பொருள் பயப்பது. இவை '''மயிலைநாதர்''' கண்ட குறிப்பு.</small>
 
 
"https://ta.wikisource.org/wiki/நன்னூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது