ஜெயகாந்தன் சிறுகதைகள்
ஜெயகாந்தன் சிறுகதைகள்
அனைத்திந்திய நூல வரிசை
ஜெயகாந்தன் சிறுகதைகள்
த. ஜெயகாந்தன்
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
முதற்பதிப்பு. 1973 (சக 1895)
நான்காம் மறு அச்சு, 1997 (சக 1919)
©த ஜெயகாந்தன. 1973
Jayakanthan Short Stories (Tamil)
ரூ 35.00
வெளியீடு இயக்குநர், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
ஏ-5, கிரீன் பார்க், புதுதில்லி 110016
முன்னுரை
இந்தத் தொகுதியில் உள்ள இந்தக் கதைகள் 1956 முதல் 1972 வரை தமிழ் நாட்டின் பல்வேறு பத்திரிகைகளில் அவ்வப்போது நான் எழுதியவை. 50-60-களில், லட்சக் கணக்கில் வெளியாகும் வெகுஜனப் பத்திரிகைகளில் இலக்கியத் தரமான கதைகள் இல்லை என்கிற வசை என்னால் கழிந்தது. நல்ல கதைகளுக்காகத் தமிழ்ப் பத்திரிகை படிக்கலாம் என்ற நிலை அக்காலத்தில் உருவாயிற்று. அதற்காக நியாயமான நன்றியை வாசகர்களும் பத்திரிகைக்காரர்களும் எனக்குப் பாராட்டினார்கள்
தமிழ்ச் சிறுகதை உலகில இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் உலகின் தரத்துக்கு உகந்த கதைகளை எழுதித் தமிழையும் தங்களையும் உயர்த்திக்கொண்ட ஒரு சில எழுத்தாளர்கள் உண்டு அவர்களில் நானும் ஒருவன். இந்த உண்மையை யார் சொன்ன போதிலும் அது வெறும் புகழ்ச்சி ஆகிவிடாது. இதை நானே சொல்வதனால் தற்புகழ்ச்சியாகிவிடக் கூடாது. இந்த முன்னுரையில் இதுபற்றிப் பிற மொழிக்காரர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு இதை ஒரு செய்தியாகவே நான் கூறுகிறேன்
தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் உலகில் வேறு யாருக்குமே இல்லாத சிறப்புக்கள் உண்டு அதே போல் வேறு யாருக்குமே இல்லாத சில அவலங்களும் உண்டு மனிதர்களையும் வாழ்வையும் நேசிப்பதே என் சித்தாந்தம் மனிதரையும் வாழ்வையும் சார்ந்திருப்பதே ஒரு மொழியின் முதற் சிறப்பு ஒரு மொழியிலே வெளிப்படுகின்ற எந்தப் படைப்பு அந்த மொழிக்கு மட்டுமே சொந்தமாக இருப்பது ஒரு சிறப்பு அல்ல மனிதரைப் பற்றிய மனிதனின் சிந்தனைகள் மொழி, தேசம் என்கிற எல்லைகளையெல்லாம் கடந்து உறவாடுதல் நாகரிக வளர்ச்சியாகும் இலக்கியம் நாகரிகத்தின் உரைகல். இந்தக் கதைகளுக்குக் கடுமையான விமர்சனங்களும் கட்டற்ற பாராட்டுதல்களும் அவை வெளிவந்த காலத்தில் நேர்ந்தன. எனது வளர்ச்சிக்கு ஏற்ப இந்த விமர்சன விவாதங்களில் நான் கலந்து பதில் அளித்ததும் உண்டு; கலந்து கொள்ளாமல் ஒதுங்கி மௌனம் சாதித்ததும் உண்டு ஆனால் காரியம் ஆற்றாமல் ஒருபோதும் நான் இருந்ததில்லை.
நான் பத்திரிகைகளின் மூலமே மக்களுக்கு அறிமுகம் ஆனவன். தமிழ் நாட்டின் நிலை அப்படித்தான். ஒரு 'கதம்ப ரசனை 'யை 'இலக்கிய ரசனை 'யாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது, இலக்கியம் படித்த யாரும் ரொம்ப அலட்டிக்கொள்ள வேண்டிய விஷயம் அல்ல ஏனெனில் படைக்கிற ஒவ்வொருவனிடமும், 'எதையாவது கதம்பமாகக் கட்டித் தாருங்கள்' என்று அவர்கள் கேட்பதில்லை. அப்படி நினைத்துக்கொண்டு— அவர்களை வசீகரித்துவிட வேண்டும் என்ற நினைப்பில்— தான் அறிந்த 'கவர்ச்சி வித்தை' களையெல்லாம் காட்டி, அந்த முயற்சியின் இயல்பேயாகிற தாழ்ச்சியை அடைந்தவர்கள் அதற்காக மக்களின் ரசனையைப் பற்றிப் பிரலாபிப்பது இங்கு இலக்கிய விமர்சனம் ஆகிவிட்டது
எனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை நான் சிறப்பாகவும் பயன்படுத்திக்கொள்ள முயன்றிருக்கிறேன். எனது கதைகளை அதிகமாக வெளியிட்ட தமிழ்நாட்டுப் பத்திரிகைகளெல்லாம் 'இலக்கிய உத்தாரணம் செய்கின்றனவா, இல்லையா?' என்பது வேறு விஷயம். இவர்கள் இலக்கியம் வளர்த்தாக வேண்டும் என்று வாதிட எனக்கு அதிகாரம இல்லை. நான் அவர்களின் ஊழியனே, பங்குதாரனோ அல்ல. அவர்கள் பத்திரிகை வியாபாரம் செய்கிறார்கள் வர வர மிக மோசமான வியாபார உத்திகளை அவர்கள கையாள ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு சமூகப் பிரஜை என்ற முறையில் இது பற்றி எனக்குக் கண்டனமும் விமர்சனமும் கூட உண்டு சௌஜன்னியமான சந்தர்பபயங்களின் போது அந்தப் பத்திரிகைகளிலேயே இந்த எனது கருத்தை நான் தெரிவித்திருக்கிறேன்
ஒரு எழுத்தாளன் எனகிற முறையில் எனது உரிமைகளை முன்வைத்துப் போராட நான் வெட்கப்படுகிறேன் ஏனெனில் இந்த உலத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் எந்தவித உரிமையும் இல்லாமல். போராட்டங்களின் பெயரால ஏமாற்றப்படுவதை நான் அறிவேன் உரிமைகளும் வசதிகளும் எல்லா மனிதர்களுக்கும வந்த பிறகுதான் - இரண்டாம் பட்சமாகத்தான். இறுதியில் தான் அறிவு ஜீவிகளுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அப்படி அல்லாமல் கிடைக்கிற உரிமையும் வசதியும் உள்ளூர அவனது ஆத்மாவில் எந்தவித நிறைவையும் ஏற்படுத்த முடியாது; மாறாக அது அவனது உள்ளுணர்வில் குற்ற உணர்வையே விளைவிக்கும்.
"அக்கினிப் பிரவேசம்"—1966-ல் ஆனந்த விகடனில் எழுதப்பட்டது இந்தக் கதையின் 'தீம்' எல்வோரும் சொல்லுகிற மாதிரி அப்படி ஒன்றும் புரட்சிகரமானது அல்ல. ஆனால், 'இப்படி ஒரு கதை புரட்சிகரமானது!' என்று தோன்றுகிற அளவுக்கு மிக மேலோட்டமான ரசனை உடையவர்கள் மத்தியில் இது பெரும் சல சலப்பை ஏற்படுத்திற்று.எனது கதையின் முடிவை மாற்றியும், அந்தக் கதாபாத்திரத்தைக் கொன்றும் அதே தலைப்பில் கதை எழுதித் தமிழ் நாட்டின் பெரும் பத்திரிகைகளில் அவற்றுக்கு ஊக்கம் தந்து, நடந்த அத்து மீறல்களையெல்லாம் மிகப் பொறுமையோடுநான் சகித்துக்கொண்டிருந்தேன் எழுதுகிற பணிக்குப் பொறுமை மிகமிக இன்றியமையாதது அதன் பிறகு அதன் முடிவை மாற்றி— நான் சொல்லவந்த கருத்தை மாற்றிக் கொள்ளாமல்—நான் ஒரு நாவலே எழுதுவதற்கு அந்த 'அத்து மீறல்'களும் எனது “அக்கினிப் பிரவேச”மும் காரணமானதால் அவர்களுக்கும்கூட நான் நன்றி பாராட்டுகிறேன்
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி“ (1956) ஆரம்பகாலக் கதைகளில் ஒன்று. நான் சுதந்திரமாக எழுதுவதற்கு முதலில் ஒரு தளம் அமைத்துத் தந்த, மார்க்ஸிஸத்தில் நம்பிக்கையுடைய நண்பர்களின் இலக்கிய மேடைகளில் ஒன்றாக அக்காலத்தில் விளங்கிய 'ஸரஸ்வதி பத்திரிகையில் அது வெளியயாயிற்று
“அந்தரங்கம புனிதமானது“ (1957, ஆனந்த விகடன்)
“இருளைத் தேடி“ (1961, ஆனந்த விகடன்) நான் பிராமணப் பெண்களை இழிவு படுத்துகிறேன் எனறு வதந்தி மாதிரியான ஒரு 'விமர்சன' த்திற்கு இலக்கான கதைகளில் இதுவும் ஒனறு
“குருபீடம்“ (1970, ஆனந்த விகடன் தீபாவளி மலர்).
“நான் இருக்கிறேன்“ (1962, ஆனந்தவிகடன்) எல்லாத் தரத்தினராலும் ஏகோபித்துப் பாராட்டப்பெற்ற எனது ஆரம்பகாலக் கதைகளில் ஒன்று
“சுய தரிசமை“ (1951, ஆனந்த விகடன்) எனது கதைகளை வாசிக்கிற வாசகர்கள் மத்தியில் என்னை ஒரு பிராமணனாக எண்ண வைத்த கதை இது பிராமணர்களின் மத்தியில் இருந்து இந்தக் கதைக்குத்தான் அதிக எதிர்ப்பு நேர்டும் என்று எதிர்பார்த்தேன் நல்ல வேளை ! அப்படி ஒன்றும் ஆகவில்லை தமிழ் நாட்டுப் பிராமணர்கள் மேல் எனக்கொரு புதிய நம்பிக்கை பிறந்தது.
“தவறுகள் குற்றங்களல்ல“ (1966,ஆனந்த விகடன்) “அக்ரஹாரத்துப் பூனை“ (1963, ஆனந்த விகடன் தீபாவளி மலர்)
“ஒரு பகல் நேரப் பாஞ்சர் வணடியிலே“ (1964, ஆனந்த விகடன்) ஒரு பெரிய நாவலுக்குப் போட்டிருந்த திட்டத்திலிருந்து உருவி எடுத்த ஒரு சிறு கதை இது. பின்னர் “பிரளயம்“ (1965, ஆனந்த விகடன்) என்ற தலைப்பில் சற்றுப் பெரியதான கதைக்கு
அடிப்படை ஆயிற்று இந்தக் கதை “பிரளயம்“— குறுநாவல் என்று சொல்லப்பட்டது.“ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது” (1969, ஆனந்த விகடன்) எனக்குக் கவிதைகள் மாதிரியும், நாடகம் மாதிரியும், கட்டுரை மாதிரியும், சிறுகதை எழுத வேண்டுமென்ற ஆசை வருவது உண்டு —அதாவது அவற்றின் சாயல் அதிகம் சார்ந்தும், சிறுகதைத் தன்மை அதனால் கெடாமலும் நான் சில கதைகள் எழுதியிருப்பதைப் பின்னால் கண்டுபிடித்தேன். இந்தக் குறிப்பிட்ட கதை, என் மனசில் நடந்த ஓரங்க நாடகம் ஒன்றின் ரிப்போர்ட்.
“சிலுவை“ (1958)-கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியப் பத்திரிகையான 'தாமரை'யில் வெளியாயிற்று.
“நான் என்ன செய்யட்டும், சொல்லுங்கோ...“ (1968 ஆனந்த விகடன்) தமிழகத்து மக்களின் சமூக வாழ்க்கையில் ஒரு கொள்ளை நோய் மாதிரிப் பரவி அவர்களைச் சூறையாடிய, அரசாங்கத்தின் சூதாட்டமான, லாட்டரிச் சீட்டு மோகத்தைப் பார்த்து ஏற்பட்ட அச்சத்தால் எழுந்த கற்பனை அது.
“புதுச் செருப்பு கடிக்கும்“ (1971, ஆனந்த விகடன்) "நிக்கி" (1969, கலைமகள் தீபாவளி மலர்) நான் வீட்டு மிருகங்களை வைத்துப் பல கதைகள் எழுதியிருக்கிறேன் எனக்கு மிருகங்களோடு உறவாடுதல் பிடிக்காது. ஆயினும் நான் எவ்வளவு ரகசியமாக அவற்றின் மீது அன்பு பாராட்டுகிறேன்; அவற்றை நான் எப்படி ரசிக்கிறேன் என்றெல்லாம் எனக்கே தெரியவைத்த கதை இது.
இந்தக் கதைகளின் இலக்கியத் தரம் குறித்துப் பேசுவது என் வேலை அல்ல. இந்தக் கதை ஒவ்வொன்றுக்கும் பின்னால் இதை எழுதியவனுக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவின் கதை ஒன்று உண்டு. அது குறித்துப் பேசுவது இந்த முன்னுரையின் நோக்கம் அல்ல. இங்கே நான் தந்திருப்பது வெறும் விவரங்களே. தனிப்பட்ட எனது பெயரையும், பெருமை சிறுமைகளையுமல்லாமல் இந்தக் காலத்தில் வாழ்கிற இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த பொதுவான மனிதர்களின் சிறப்பான தன்மைகளைப் பிறமொழிகளிலும் போய் இவை பேசுமாயின் எனக்கு அதில் மகிழ்ச்சி உண்டு.
இவற்றை, நான் அறியாத மொழிகளில் அறிமுகப் படுத்துகிற மேலான பொறுப்பை ஏற்று, என்னையும் எனது மொழியையும் கௌரவப்படுத்துகிற நேஷனல் புக் ட்ரஸட், இந்தியா— ஸ்தாபனத்தாருக்கு நான் நிரந்தரமாய் உள்ளார்ந்த நன்றி பாராட்டுவேன்.
சென்னை-31. 12-7-73 |
த. ஜெயகாந்தன். |
பொருளடக்கம்
பக்கம்
1. | 1 |
2. | 22 |
3. | 33 |
4. | 57 |
5. | 75 |
6. | 85 |
7. | 101 |
8. | 120 |
9. | 135 |
10. | 148 |
11. | 165 |
12. | 183 |
13. | 193 |
14. | 206 |
15. | 220 |