தண்டியலங்காரம்
ஆசிரியர்: பெரும்புலவர் தண்டி
தொகுதண்டியலங்காரம்
தொகு(தமிழ் அணி இலக்கணநூல்)
1. பொதுவணியியல்
தொகுநூற்பா: 01 (சொல்லின் கிழத்தி)
- சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி சொல்லின் கிழத்தி மெல் இயல் இணை அடி
- சிந்தைவைத் தியம்புவன் செய்யுட் கணியே.(01) சிந்தை வைத்து இயம்புவன் செய்யுட்கு அணியே. (01)
நூற்பா:02 (செய்யுளென்பவை)
- செய்யு ளென்பவை தெரிவுற விரிப்பின் செய்யுள் என்பவை தெரிவு உற விரிப்பின்
- முத்தகங் குளகந் தொகைதொடர் நிலையென (01) முத்தகம் குளகம் தொகை தொடர்நிலை என
- வெத்திறத் தனவு மீரிரண் டாகும் (02) எத்திறத்தனவும் ஈர் இரண்டு ஆகும்.(02)
நூற்பா:03 (அவற்றுள்)
- அவற்றுள், அவற்றுள்
- முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும் (03) முத்தகச் செய்யுள் தனி நின்று முடியும் (03)
நூற்பா:04 (குளகம்)
- குளகம் பலபாட் டொருவினை கொள்ளும் (03) (01) குளகம் பல பாட்டு ஒரு வினை கொள்ளும். (04)
நூற்பா:05 (தொகைநிலைச்)
- தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறி தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின்
- னொருவ ருரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும் (01) ஒருவர் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
- பொருளிடங் காலந் தொழிலென நான்கினும்> பொருள் இடம் காலம் தொழில் என நான்கினும்
- பாட்டினு மளவினுங் கூட்டிய வாகும். (05) (01) பாட்டினும் அளவினும் கூட்டிய ஆகும். (05)
நூற்பா:06 (பொருளினுஞ்)
- பொருளினுஞ் சொல்லினு மிருவகை தொடர்நிலை (06) பொருளினும் சொல்லினும் இரு வகை தொடர்நிலை (06)
நூற்பா:07 (பெருங்காப்பிய)
- பெருங்காப் பியமே காப்பிய மென்றாங் (01) பெருங்காப்பியமே காப்பியம் என்று ஆங்கு
- கிரண்டா யியலும் பொருள்தொடர் நிலையே (07) இரண்டாய் இயலும் பொருள்தொடர்நிலையே (07)
நூற்பா:08 (அவற்றுள், பெருங்)
- அவற்றுள், அவற்றுள்,
- பெருங்காப் பியநிலை பேசுங் காலை பெரும் காப்பிய நிலை பேசும் காலை
- வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினொன் வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின் ஒன்று
- றேற்புடைத் தாகி முன்வர வியன்று ஏற்புடைத்து ஆகி முன் வர இயன்று
- நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகித் நாற்பொருள் பயக்கும் நடை நெறித்து ஆகித்
- தன்னிக ரில்லாத் தலைனை யுடைத்தாய் தன் நிகர் இல்லாத் தலைவைன உடைத்தாய்
- மலைகட னாடு வளநகர் பருவ மலை கடல் நாடு வள நகர் பருவம்
- மிருசுடர்த் தோற்றமென் றினையன புனைந்து இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து
- நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் நல் மணம் புணர்தல் பொன் முடி கவித்தல்
- பூம்பொழி னுகர்தல் புனல்விளை யாடல் பூம் பொழில் நுகர்தல் புனல் விளையாடல்
- தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் தேன் பிழி மதுக் களி சிறுவரைப் பெறுதல்
- புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென் புலவியில் புலத்தல் கலவியில் களித்தல் என்று
- றின்னன புனைந்த நன்னடைத் தாகி இன்னன புனைந்த நல் நடைத்து ஆகி
- மந்திரந் தூது செலவிகல் வென்றி மந்திரம் தூது செலவு இகல் வென்றி
- சந்தியிற் றொடர்ந்து சருக்க மிலம்பகம் சந்தியின் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
- பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி
- நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
- கற்றோர் புனையும் பெற்றிய தென்ப. (08) கற்றோர் புனையும் பெற்றியது என்ப. (08)
நூற்பா:09 (கூறிய)
- கூறிய வுறுப்பிற் சிலகுறைந் தியலினும் கூறிய உறுப்பில் சில குறைந்து இயலினும்
- வேறுபா டின்றென விளம்பினர் புலவர் (09) (01) வேறுபாடு இன்று என விளம்பினர் புலவர். (09)
நூற்பா:10 (அறமுத )
- அறமுத னான்கினுங் குறைபா டுடையது அறம் முதல் நான்கினும் குறைபாடு உடையது
- காப்பிய மென்று கருதப் படுமே (10) (01) காப்பியம் என்று கருதப்படுமே (10)
$$
தொகுநூற்பா:11 (அவைதாம்,ஒருதிறப் )
- அவைதா, அவைதாம்,
- மொருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினு (01) ஒரு திறப் பாட்டினும் பல திறப் பாட்டினும்
- முரையும் பாடையும் விரவியும் வருமே. (11) (01) உரையும் பாடையும் விரவியும் வருமே. (11)
நூற்பா:12 (செய்யுளந்தாதி)
- செய்யுளந் தாதி சொற்றொடர் நிலையே (12) செய்யுள் அந்தாதி சொல் தொடர் நிலையே (12)
நூற்பா:13 (மெய்பெறு )
- மெய்பெறு மரபின் விரித்த செய்யுட்கு (01) மெய் பெறு மரபின் விரித்த செய்யுட்கு
- வைதருப் பம்மே கௌட மென்றாங் வைதருப்பம்மே கௌடம் என்று ஆங்கு
- கெய்திய நெறிதா மிருவகைப் படுமே (13) (01) எய்திய நெறி தாம் இரு வகைப்படுமே (13)
நூற்பா:14 (செறிவே) )
- செறிவே தெளிவே சமநிலை யின்ப செறிவே தெளிவே சம நிலை இன்பம்
- மொழுகிசை யுதார முய்த்தலில் பொருண்மை (01) ஒழுகு இசை உதாரம் உயத்தல் இல் பொருண்மை
- காந்தம் வலியே சமாதி யென்றாங் (01) காந்தம் வலியே சமாதி என்று ஆங்கு
- காய்ந்த வீரைங் குணனு முயிரா ஆய்ந்த ஈர் ஐங் குணனும் உயிரா
- வாய்ந்த வென்ப வைதருப்பம்மே (14) (01) வாய்ந்த என்ப வைதருப்பம்மே (14)
நூற்பா:15 (கௌடமென்ப )
- கௌட மென்பது கருதிய பத்தொடுங் கௌடம் என்பது கருதிய பத்தொடும்
- கூடா தியலுங் கொள்கைத் தென்ப (15) (01) கூடாது இயலும் கொள்கைத்து என்ப (15)
நூற்பா:16 (செறிவெனப் )
- செறிவெனப் படுவது நெகிழிசை யின்மை (16) செறிவு எனப்படுவது நெகிழ் இசை இன்மை (16)
நூற்பா:17 (தெளிவெனப் )
- தெளிவெனப் படுவது பொருள்புலப் பாடே (17) (01) தெளிவு எனப்படுவது பொருள் புலப்பாடே (17)
நூற்பா:18 ( விரவத்)
- விரவத் தொடுப்பது சமநிலை யாகும் (18) (01) விரவத் தொடுப்பது சம நிலை ஆகும் (18)
நூற்பா:19 ( சொல்லினும்)
- சொல்லினும் பொருளினுஞ் சுவைபட லின்பம் (19) சொல்லினும் பொருளினும் சுவை படல் இன்பம் (19)
நூற்பா:20 (ஒழுகிசை )
- ஒழுகிசை யென்பது வெறுத்திசை யின்மை (20) (01) ஒழுகு இசை என்பது வெறுத்திசை இன்மை (20)
நூற்பா:21 ( உதார)
- உதார மென்ப தோதிய செய்யுளிற் உதாரம் எனபது ஓதிய செய்யுளில்
- குறிப்பி னொருபொரு ணெறிப்படத் தோன்றல் (21) (01) குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றல் (21)
நூற்பா:22 (கருதிய )
- கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற் கருதிய பொருளைத் தெரிவு உற விரித்தற்கு
- குரியசொல் லுடைய துய்த்தலில் பொருண்மை (22) (01) உரிய சொல் உடையது உய்த்தல் இல் பொருண்மை (22)
நூற்பா:23 (உலகொழுக் )
உலகொழுக் கிறவா துயர்புகழ் காந்தம் (23) உலக ஒழுக்கு இறவாது உயர் புகழ் காந்தம் (23)
நூற்பா:24 (வலியெனப் )
- வலியெனப் படுவது தொகைமிக வருதல் (24) (01) வலி எனப்படுவது தொகை மிக வருதல் (24)
நூற்பா:25 (உரிய )
- உரியபொரு ளின்றி யொப்புடைப் பொருண்மேற் (01) உரிய பொருள் இன்றி ஒப்பு உடைப் பொருள் மேல்
- றரும்வினை புணர்ப்பது சமாதி யாகும் (25) தரும் வினை புணர்ப்பது சமாதி ஆகும் (25)
நூற்பா:26 (ஏற்ற )
- ஏற்ற செய்யுட் கியன்ற வணியெலாம் (01) ஏற்ற செய்யுட்கு இயன்ற அணி எலாம்
- முற்ற வுணர்த்தும் பெற்றிய தருமையிற் முற்ற உணர்த்தும் பெற்றியது அருமையின்
- காட்டிய நடைநெறி கடைப்பிடித் தவற்றொடு (01) காட்டிய நடை நெறி கடைப்பிடித்து அவற்றொடு
- கூட்டி யுணர்த லான்றோர் கடனே (26) கூட்டி உணர்தல் ஆன்றோர் கடனே (26)
முதலாவது பொதுவணியியல் சூத்திரம் 26
முதலாவது 'பொதுவணியியல்' முடிந்தது
தொகுபார்க்க: தண்டியலங்காரம் தண்டியலங்காரம்-பொருளணியியல் தண்டியலங்காரம்-சொல்லணியியல்