தண்டியலங்காரம்-பொருளணியியல்

ஆசிரியர்: பெரும்புலவர் தண்டி

தொகு

தண்டியலங்காரம்

தொகு

(தமிழ் அணி இலக்கணநூல்)

2. பொருளணியியல்

தொகு

நூற்பா:27 (என்னை )

என்னை யுடையாள் கலைமடந்தை யெவ்வுயிர்க்கு என்னை உடையாள் கலை மடந்தை எவ் உயிர்க்கும்
மன்னை யுடைய வடித்தளிர்க - ளின்னளிசூழ் (01) அன்னை உடைய அடித் தளிர்கள் - இன் அளி சூழ்
மென்மலர்க்கே கன்று மெனவுரைப்பர் மெய்யிலா (01) மெல் மலர்க்கே கன்றும் என உரைப்பர் மெய் இலா
வன்மனத்தே தங்குமோ வந்து (01) வல் மனத்தே தங்குமோ வந்து (01)

நூற்பா:28 ( தன்மை)

தன்மை யுவமை யுருவகந் தீவகம் (01) தன்மை1 உவமை2 உருவகம்3 தீவகம்4
பின்வரு நிலையே முன்ன விலக்கே பின் வரு நிலையே5 முன்ன விலக்கே6
வேற்றுப் பொருள்வைப்பே வேற்றுமை விபாவனை (01) வேற்றுப் பொருள் வைப்பே7 வேற்றுமை8 விபாவனை9
யொட்டே யதிசயந் தற்குறிப் பேற்ற ஒட்டே10 அதிசயம்11 தன் குறிப்பு ஏற்றம்12
மேது நுட்ப மிலேச நிரனிறை ஏது13 நுட்பம்14 இலேசம்15 நிரல் நிறை16

யார்வ மொழிசுவை தன்மேம் பாட்டுரை ஆர்வம் மொழி17 சுவை18 தன் மேம்பாட்டு உரை19

பரியா யம்மே சமாயித முதாத்த பரியாயம்மே20 சமாயிதம்21 உதாத்தம்22
மரிதுண ரவநுதி சிலேடை விசேட அரிது உணர் அவநுதி23 சிலேடை24 விசேடம்25
மொப்புமைக் கூட்ட மெய்ப்படு விரோதம் ஒப்புமைக் கூட்டம்26 மெய்ப்படு விரோதம்27
மாறுபடு புகழ்நிலை புகழாப் புகழ்ச்சி (01) மாறுபடு புகழ்நிலை28 புகழாப் புகழ்ச்சி29
நிதரிசனம் புணர்நிலை பரிவருத் தனையே நிதரிசனம்30 புணர்நிலை31 பரிவருத்தனை32யே
வாழ்த்தொடு சங்கீ ரணம்பா விகமிவை (01) வாழ்த்தொடு33 சங்கீரணம்34 பாவிகம்35 இவை
யேற்ற செய்யுட் கணியே ழைந்தே (02) ஏற்ற செய்யுட்கு அணி ஏழ் ஐந்தே (02)

நூற்பா:29(எவ்வகைப் )

எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் (01) எவ் வகைப் பொருளும் மெய் வகை விளக்கும்
சொன்முறை தொடுப்பது தன்மை யாகும் (03) சொல் முறை தொடுப்பது தன்மை ஆகும் (03)

நூற்பா:30 (அதுவேபொருள் )

அதுவே, அதுவே,
பொருள்குணஞ் சாதி தொழிலொடு புலனாம் (04) (01) பொருள் குணம் சாதி தொழிலொடு புலன் ஆம் (04)

நூற்பா:31 (பண்புந் )

பண்புந் தொழிலும் பயனுமென் றிவற்றி பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்
னொன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்த் ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
தொப்புமை தோன்றச் செப்புவ துவமை (05) ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை (05)

நூற்பா:32 (அதுவே,விரியே )

அதுவே,
விரியே தொகையே யிதர விதர (01) விரியே தொகையே இதர விதரம்
முரைபெறு சமுச்சய முண்மை மறுபொருள் உரைபெறு சமுச்சயம் உண்மை மறு பொருள்
புகழ்த னிந்தை நியம மநியம புகழ்தல் நிந்தை நியமம் அநியமம்
மையந் தெரிதரு தேற்ற மின்சொ ஐயம் தெரி தரு தேற்றம் இன் சொல்
லெய்திய விபரீத மியம்புதல் வேட்கை எய்திய விபரீதம் இயம்புதல் வேட்கை
பலபொருள் விகார மோக மபூதம் பல பொருள் விகாரம் மோகம் அபூதம்
பலவயிற் போலி யொருவயிற் போலி பல வயின் போலி ஒரு வயின் போலி
கூடா வுவமை பொதுநீங் குவமை கூடா உவமை பொது நீங்கு உவமை
மாலை யென்னும் பால தாகும் (06) மாலை என்னும் பாலது ஆகும் (06)

நூற்பா:33 (அற்புதஞ்)

அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோத அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோதம்</>
மொப்புமைக் கூட்டந் தற்குறிப் பேற்றம் ஒப்புமைக் கூட்டம் தற்குறிப்பேற்றம்
விலக்கே யேதுவென வேண்டவும் படுமே (07) விலக்கே ஏது என வேண்டவும் படுமே (07)

நூற்பா:34 (மிகுதலுங் )

மிகுதலுங் குறைதலுந் தாழ்தலு முயர்தலும் மிகுதலும் குறைதலும் தாழ்தலும் உயர்தலும்
பான்மாறு படுதலும் பாகுபா டுடைய (08) பால் மாறுபடுதலும் பாகுபாடு உடைய (08)

நூற்பா:35 (போலமானப்)

போல மானப் புரையப் பொருள போல மானப் புரையப் பொருள
நேரக் கடுப்ப நிகர நிகர்ப்ப நேரக் கடுப்ப நிகர நிகர்ப்ப
வேர வேய மலைய வியைய ஏர ஏய மலைய இயைய
வொப்ப வெள்ள வுறழ வேற்ப ஒப்ப எள்ள உறழ ஏற்ப>
வன்ன வனைய வமர வாங்க அன்ன அனைய அமர ஆங்க
வென்ன விகல விழைய வெதிரத் என்ன இகல இழைய எதிரத்
துணைதூக் காண்டாங்கு மிகுதகை வீழ துணை தூக்கு ஆண்டு ஆங்கு மிகுதகை வீழ
விணைசிவண் கேழற்றுச் செத்தொடு பிறவு இணை சிவண் கேழ் அற்றுச் செத்தொடு பிறவும்
நவைதீர் பான்மை யுவமைச் சொல்லே (09) நவை தீர் பான்மை உவமைச் சொல்லே (09)

நூற்பா:36 (உவமையும் )

உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித் உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
தொன்றென மாட்டினஃ துருவக மாகும் (10) ஒன்று என மாட்டின் அஃது உருவகம் ஆகும் (10)

நூற்பா:37 (தொகையே )

தொகையே விரியே தொகைவிரி யெனாஅ தொகையே விரியே தொகைவிரி எனாஅ
யியைபே யியைபிலி வியநிலை யெனாஅச் இயைபே இயைபிலி வியநிலை எனாஅ
சிறப்பே விரூபகஞ் சமாதான மெனாஅ சிறப்பே விரூபகம் சமாதானம் எனாஅ
வுருவக மேக மநேகாங் மெனாஅ உருவகம் ஏகம் அநேகாங்கம் எனாஅ
முற்றே யவயவ மவயவி யெனாஅச் முற்றே அவயவம் அவயவி எனாஅச்
சொற்றவைம் மூன்று மற்றதன் விரியே (11) சொற்ற ஐம் மூன்றும் மற்று அதன் விரியே (11)

நூற்பா:38 (உவமை )

உவமை யேது வேற்றுமை விலக்கே உவமை ஏது வேற்றுமை விலக்கே
யவநுதி சிலேடையென் றவற்றொடும் வருமே (12) அவநுதி சிலேடை என்று அவற்றொடும் வருமே (12)

நூற்பா:39 ( உருவக)

உருவக முவமை யெனவிரு திறத்தவும் உருவகம் உவமை என இரு திறத்தவும்

நிரம்ப வுணர்த்தும் வரம்புதமக் கின்மையிற் நிரம்ப உணர்த்தும் வரம்பு தமக்கு இன்மையின்

கூறிய நெறியின் வேறுபட வருபவை கூறிய நெறியின் வேறுபட வருபவை
தேறினர் கோட றெள்ளியோர் கடனே (13) (01) தேறினர் கோடல் தெள்ளியோர் கடனே (13)

நூற்பா:40 (குணந்தொழில் )

குணந்தொழில் சாதி பொருள்குறித் தொருசொல் குணம் தொழில் சாதி பொருள் குறித்து ஒரு சொல்
லொருவயி னின்றும் பலவயிற் பொருடரிற் ஒரு வயின் நின்றும் பல வயின் பொருள் தரின்
றீவகஞ் செய்யுண் மூவிடத் தியலும் (14) தீவகம் செய்யுள் மூ இடத்து இயலும் (40)

நூற்பா:41 (அதுவே,மாலை )

அதுவே, (01) அதுவே,
மாலை விருத்த மொருபொருள் சிலேடையென மாலை விருத்தம் ஒரு பொருள் சிலேடை என
நால்வகை யானு நடைபெறு மென்ப (15) நால் வகையானும் நடைபெறும் என்ப (15)

நூற்பா:42 ( முன்வருஞ்)

முன்வருஞ் சொல்லும் பொருளும் பலவயிற் முன் வரும் சொல்லும் பொருளும் பல வயின்
பின்வரு மென்னிற் பின்வரு நிலையே (16) பின் வரும் என்னின் பின் வரு நிலையே (16)

நூற்பா:43 ( முன்னத்தின்)

முன்னத்தின் மறுப்பினது முன்ன விலக்கே முன்னத்தின் மறுப்பின் அது முன்ன விலக்கே
மூவகைக் காலமு மேவிய தாகும் (17) மூ வகைக் காலமும் மேவியது ஆகும் (17)

நூற்பா:44 (அதுவே,பொருள் )

அதுவே, அதுவே,

பொருள்குணங் காரணங் காரியம் புணரும் (18) பொருள் குணம் காரணம் காரியம் புணரும் (18)

நூற்பா:45 (வன்சொல் )

வன்சொல் வாழ்த்துத் தலைமை யிகழ்ச்சி வன் சொல் வாழ்த்து தலைமை இகழ்ச்சி
துணைசெயல் முயற்சி பரவச முபாயங் துணை செயல் முயற்சி பரவசம் உபாயம்
கையற லுடன்படல் வெகுளி யிரங்க கையறல் உடன்படல் வெகுளி இரங்கல்
லைய மென்றாங் கறிந்தனர் கொளலே (19) ஐயம் என்று ஆங்கு அறிந்தனர் கொளலே (19)

நூற்பா:46 (வேற்றுப்பொருள் )

வேற்றுப்பொருள் சிலேடை யேதுவென் றின்னவை வேற்றுப் பொருள் சிலேடை ஏது என்று இன்னவை
மேற்கூ றியற்கையின் விளங்கித் தோன்றும் (20) மேற்கூறு இயற்கையின் விளங்கித் தோன்றும் (20)

நூற்பா:47 ( முன்னொன்று)

முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப் முன் ஒன்று தொடங்கி மற்று அது முடித்தற்குப்
பின்னொரு பொருளை யுலகறி பெற்றி பின் ஒரு பொருளை உலகு அறி பெற்றி
யேற்றிவைத் துரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே (21) ஏற்றி வைத்து உரைப்பது வேற்றுப் பொருள் வைப்பே (21)

நூற்பா:48 (முழுவதுஞ் )

முழுவதுஞ் சேற லொருவழிச் சேறல் முழுவதும் சேறல்1 ஒரு வழிச் சேறல்2
முரணித் தோன்றல் சிலேடையின் முடித்தல் முரணித் தோன்றல்3 சிலேடையின் முடித்தல்4
கூடா வியற்கை கூடு மியற்கை கூடா இயற்கை5 கூடும் இயற்கை6
யிருமை யியற்கை விபரீதப் படுத்தலென் இருமை இயற்கை7 விபரீதப் படுத்தல்8என்று
றின்னவை யெட்டு மதன தியல்பே (22) இன்னவை எட்டும் அதனது இயல்பே (22)

நூற்பா:49 (கூற்றினுங் )

கூற்றினுங் குறிப்பினு மொப்புடை யிருபொருள் கூற்றினும் குறிப்பினும் ஒப்பு உடை இரு பொருள்

வேற்றுமைப் படவரின் வேற்றுமை யதுவே (23) வேற்றுமைப்பட வரின் வேற்றுமை அதுவே (49)

நூற்பா:50 (அதுவே,குணம் )

அதுவே, அதுவே,
குணம்பொருள் சாதி தொழிலொடும் புணரும் (24) குணம் பொருள் சாதி தொழிலொடு புணரும் (24)

நூற்பா:51 ( உலகறி)

உலகறி காரண மொழித்தொன் றுரைப்புழி உலகு அறி காரணம் ஒழித்து ஒன்று உரைப்புழி
வேறொரு காரண மியல்பு குறிப்பின் வேறு ஒரு காரணம் இயல்பு குறிப்பின்
வெளிப்பட வுரைப்பது விபாவனை யாகும் (25) வெளிப்பட உரைப்பது விபாவனை ஆகும் (25)

நூற்பா:52 (கருதிய )

கருதிய பொருடொத் ததுபுலப் படுத்தற் கருதிய பொருள் தொத்து? அது புலப்படுத்தற்கு
கொத்ததொன் றுரைப்பினஃ தொட்டென மொழிப (26) ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டு என மொழிப (26)

நூற்பா:53 ( அதுவே,அடையும்)

அதுவே, அதுவே,

அடையும் பொருளு மயல்பட மொழிதலு அடையும் பொருளும் அயல்பட மொழிதலும்1
மடைபொது வாக்கி யாங்ஙன மொழிதலும் அடை பொது ஆக்கி ஆங்ஙனம் மொழிதலும்2
விரவத் தொடுத்தலும் விபரீதப் படுத்தலு விரவத் தொடுத்தலும்3 விபரீதப் படுத்தலும்4
மெனநால் வகையினு மியலு மென்ப (27) என நால் வகையினும் இயலும் என்ப (27)

நூற்பா:54 (மனப்படு )

மனப்படு மொருபொருள் வனப்புவந் துரைப்புழி மனப்படு ஒரு பொருள் வனப்பு வந்து உரைப்புழி
யுலகுவரம் பிறவா நிலைமைத் தாகி உலகு வரம்பு இறவா நிலைமைத்து ஆகி
யான்றோர் வியப்பத் தோன்றுவ ததிசயம் (28) ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம் (28)

நூற்பா:55 ( அதுதான்)

அதுதான், அதுதான்,
பொருள்குணந் தொழிலையந் துணிவே திரிபெனத் பொருள் குணம் தொழில் ஐயம் துணிவே திரிபு எனத்
தெருளுறத் தோன்று நிலைமைய தென்ப (29) தெருள் உறத் தோன்றும் நிலைமைய (29)

நூற்பா:56 (பெயர்பொரு )

பெயர்பொரு ளல்பொரு ளெனவிரு பொருளினு பெயர் பொருள் அல் பொருள் என இரு பொருளினும்
மியல்பின் விளைதிற னன்றி யயலொன்று இயல்பின் விளை திறன் அன்றி அயல் ஒன்று
தான்குறித் தேற்றுத றற்குறிப் பேற்றம் (30) தான் குறித்து ஏற்றுதல் தன் குறிப்பு ஏற்றம் (30)

நூற்பா:57 (அன்னபோல )

அன்ன போலெனு மவைமுத லாகிய அன்ன போல் எனும் அவை முதல் ஆகிய
சொன்னிலை விளங்குந் தோற்றமு முடைத்தே (31) (01) சொல் நிலை விளங்கும் தோற்றம் உடைத்தே (31)

நூற்பா:58 (யாதன் )

யாதன் றிறத்தினு மிதனினிது விளைந்தென் யாதன் திறத்தினும் இதனின் இது விளைந்து என்று
றேதுவிதந் துரைப்ப தேது வதுதான் ஏது விதந்து உரைப்பது ஏது அதுதான்
காரக ஞாபக மெனவிரு திறப்படும் (32) காரகம் ஞாபகம் என இரு திறப்படும் (32)

நூற்பா:59 ( முதல்வனும்)

முதல்வனும் பொருளுங் கருமமுங் கருவியு முதல்வனும் பொருளும் கருமமும் கருவியும்
மேற்பது நீக்கமு மெனவிவை காரகம் (33) ஏற்பது நீக்கமும் என இவை காரகம் (33)

நூற்பா:60 (அவையல )

அவையல பிறவி னறிவது ஞாபகம் (34) அவை அல பிறவின் அறிவது ஞாபகம் (34)

நூற்பா:61 ( அபாவந்)

அபாவந் தானு மதன்பாற் படுமே (35) அபாவம் தானும் அதன் பால் படுமே (35)

நூற்பா:62 ( என்று)

என்று மபாவமு மின்மைய தபாவமு என்றும் அபாவமும்1 இன்மையது அபாவமும்2
னொன்றினொன் றபாவமு முள்ளத னபாவமு ஒன்றின் ஒன்று அபாவமும்3 உள்ளதன் அபாவமும்4
மழிவுபாட் டபாவமு மெனவைந் தபாவம் (36) அழிவு பாட்டு அபாவமும்5 என ஐந்து அபாவம் (36)

நூற்பா:63 (தூர )

தூர காரியமு மொருங்குடன் றோற்றமுங் தூர காரியமும்1 ஒருங்குடன் தோற்றமும்2
காரண முந்துறூஉங் காரிய நிலையும் காரணம் முந்து உறூஉம் காரியம் நிலையும்3
யுத்தமு மயுத்தமு முத்தையோ டியலும் (37) யுத்தமும்4 அயுத்தமும்5 முத்தையோடு இயலும்

நூற்பா:64 (தெரிபு )

தெரிபுவேறு கிளவாது குறிப்பினுந் தொழிலினு தெரிபு வேறு கிளவாது குறிப்பினும் தொழிலுனும்
மரிதுணர் வினைத்திற நுட்ப மாகும் (38) அரிது உணர் வினைத் திறம் நுட்பம் ஆகும் (38)

நூற்பா:65 (குறிப்பு )

குறிப்பு வெளிப்படுக்குஞ் சத்துவம் பிறிதின் குறிப்பு வெளிப்படுக்கும் சத்துவம் பிறிதின்
மறைத்துரை யாட லிலேச மாகும் (39) மறைத்து உரையாடல் இலேசம் ஆகும் (39)

நூற்பா:66 (புகழ்வது )

புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும் புகழ்வது போலப் பழித் திறம் புனைதலும்
பழிப்பது போலப் புகழ்புலப் படுத்தலு பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தலும்
மவையு மன்னதென் றறைகுந ருளரே (40) (01) அவையும் அன்னது என்று அறைகுநர் உளரே (40)

நூற்பா:67 ( நிரனிறுத்)

நிரனிறுத் தியற்றுத னிரனிறை யணியே (41) நிரல் நிறுத்து இயற்றுதல் நிரல் நிறை அணியே (41)

நூற்பா:68 (ஆர்வ )

ஆர்வ மொழிமிகுப்ப தார்வ மொழியே (42) ஆர்வ மொழி மிகுப்பது ஆர்வ மொழியே (42)

நூற்பா:69 (உண்ணிகழ் )

உண்ணிக டன்மை புறத்துத் தோன்ற உள் நிகழ் தன்மை புறத்துத் தோன்ற
வெண்வகை மெய்ப்பாட்டி னியல்வது சுவையே (43) எண் வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே (43)

நூற்பா:70 (அவைதாம்,வீர )

அவைதாம், அவைதாம்,
வீர மச்ச மிழிப்பொடு வியப்பே வீரம் அச்சம் இழிப்பொடு வியப்பே
காம மவல முருத்திர நகையே (44) காமம் அவலம் உருத்திரம் நகையே (44)

நூற்பா:71 ( தான்றற்)

தான்றற் புகழ்வது தன்மேம் பாட்டுரை (45) தான் தன் புகழ்வது தன் மேம்பாட்டு உரை (45)

நூற்பா:72 ( கருதியது)

கருதியது கிளவா தப்பொரு டோன்றற் கருதியது கிளவாது அப் பொருள் தோன்றல்
பிரிதொன் றுரைப்பது பரியா யம்மே (46) (01) பிரி?து ஒன்று உரைப்பது பரியாயம்மே (46)

நூற்பா:73 (முந்துதான் )

முந்துதான் முயல்வுறூஉந் தொழிற்பயன் பிறிதொன்று முந்து தான் முயல்வுறூம் தொழில் பயன் பிறிது ஒன்று
தந்ததா முடிப்பது சமாகித மாகும் (47) தந்ததாம் முடிப்பது சமாகிதம் ஆகும் (47)

நூற்பா:74 (வியத்தகு )

வியத்தகு செல்வமு மேம்படு முன்னமு வியத்தகு செல்வமும் மேம்படு முன்னமும்
முயர்ச்சிபுனைந் துரைப்ப துதாத்த மாகும் (48) உயர்ச்சி புனைந்து உரைப்பது உதாத்தம் ஆகும் (48)

நூற்பா:75 (சிறப்பினும் )

சிறப்பினும் பொருளினுங் குணத்தினு முண்மை சிறப்பினும் பொருளினும் குணத்தினும் உண்மை
மறுத்துப் பிறிதுரைப்ப தவநுதி யாகும் (49) மறுத்துப் பிறிது உரைப்பது அவநுதி ஆகும் (49)

நூற்பா:76 (ஒருவகைச் )

ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி ஒரு வகைச் சொல் தொடர் பல பொருள் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும் (50) தெரிதர வருவது சிலேடை ஆகும் (50)

நூற்பா:77 (அதுவே,செம் )

அதுவே, அதுவே,
செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும் (51) செம்மொழி1 பிரிமொழி2 என இரு திறப்படும் (51)

நூற்பா:78 ( ஒருவினை)

ஒருவினை பலவினை முரண்வினை நியமம் ஒருவினை1 பலவினை2முரண்வினை3நியமம்4
நியம விலக்கு விரோத மவிரோத நியமம் விலக்கு5விரோதம்6அவிரோதம்7
மெனவெழு வகையினு மியலு மென்ப (52) என எழுவகையினும் இயலும் என்ப (52)

நூற்பா:79 ( குணந்தொழின் )

குணந்தொழின் முதலிய குறைபடு தன்மையின் குணம் தொழில் முதலிய குறைபடு தன்மையின்
மேம்பட வொருபொருள் விளம்புதல் விசேடம் (53) மேம்பட ஒரு பொருள் விளம்புதல் விசேடம் (53)

நூற்பா:80 (கருதிய )

கருதிய குணத்தின் மிகுபொரு ளுடன்வைத் கருதிய குணத்தின் மிகு பொருள் உடன் வைத்து
தொருபொரு ளுரைப்ப தொப்புமைக் கூட்டம் (54) ஒரு பொருள் உரைப்பது ஒப்புமைக் கூட்டம் (54)

நூற்பா:81 (புகழினும் )

புகழினும் பழிப்பினும் புலப்படு மதுவே (55) புகழினும் பழிப்பினும் புலப்படும் அதுவே (55)

நூற்பா:82 (மாறுபடு )

மாறுபடு சொற்பொருண் மாறுபாட் டியற்கை மாறுபடு சொல் பொருள் மாறுபாட்டு இயற்கை
விளைவுதர வுரைப்பது விரோத மாகும் (56) விளைவு தர உரைப்பது விரோதம் ஆகும் (56)

நூற்பா:83 (கருதிய )

கருதிய பொருடொகுத் தாங்கது பழித்தற்கு கருதிய பொருள் தொகுத்து ஆங்கு அது பழித்தற்கு
வேறொன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை (57) வேறு ஒன்று புகழ்வது மாறுபடு புகழ் நிலை (57)

நூற்பா:84 (பழிப்பது )

பழிப்பது போலும் பான்மையின் மேன்மை பழிப்பது போலும் பான்மையின் மேன்மை
புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி (58) புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி (58)

நூற்பா:85 (ஒருவகை )

ஒருவகை நிகழ்வதற் கொத்தபயன் பிறிதிற்குப் ஒரு வகை நிகழ்வதற்கு ஒத்த பயன் பிறிதிற்குப்
புகழ்மை தீமை யென்றிவை புலப்பட புகழ்மை தீமை என்று இவை புலப்பட
நிகழ்வ தாயி னிதரிசன மதுவே (59) நிகழ்வது ஆயின் நிதரிசனம் அதுவே (59)

நூற்பா:86 (வினைபண்)

வினைபண் பெனவிவை யிருபொருட் கொன்றே வினை பண்பு என இவை இரு பொருட்கு ஒன்றே
புணர மொழிவது புணர்நிலை யாகும் (60) புணர மொழிவது புணர்நிலை ஆகும் (60)

நூற்பா:87 (பொருள்பரி)

பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே (61) பொருள் பரிமாறுதல் பரிவருத்தனையே (61)

நூற்பா:88 (இன்னார்க்)

இன்னார்க் கின்ன தியைக வென்றுதா இன்னார்க்கு இன்னது இயைக என்று தாம்
முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிப (62) முன்னியது கிளத்தல் வாழ்த்து என மொழிப (62)

நூற்பா:89 (மொழியப்)

மொழியப் பட்ட வணிபல தம்முட்> மொழியப் பட்ட அணி பல தம்முள்
டழுவ வுரைப்பது சங்கீ ரணமே (63) தழுவ உரைப்பது சங்கீரணமே (63)

நூற்பா:90 (ஒப்புமை)

ஒப்புமை யில்லது மையமு முவமையிற் ஒப்புமை இல்லதும் ஐயமும் உவமையின்
செப்பிய திறமு முவமை யுருவகமு செப்பிய திறமும் உவமை உருவகமும்
முருவகத் தடக்கலு முணர்ந்தனர் கொளலே (64) உருவகத்து அடக்கலும் உணர்ந்தனர் கொளலே (64)

நூற்பா:91 (பாவிக)

பாவிக மென்பது காப்பியப் பண்பே (65) பாவிகம் என்பது காப்பியப் பண்பே (65)

இரண்டாவது பொருளணியியல் சூத்திரங்கள் 65

(ஆகமொத்தம் 26+65= 91 சூத்திரங்கள்)

இரண்டாவது பொருளணியியல் முடிந்தது

தொகு

பார்க்க:

தண்டியலங்காரம்பொதுவணியியல்

தண்டியலங்காரம்-சொல்லணியியல்