தண்டியலங்காரம்-சொல்லணியியல்

ஆசிரியர்: பெரும்புலவர் தண்டி தொகு

தண்டியலங்காரம் தொகு

(தமிழ் அணி இலக்கணநூல்)


3. சொல்லணியியல் தொகு

நூற்பா:92 (எழுத்தின் )

எழுத்தின் கூட்ட மிடைபிறி தின்றியும் எழுத்தின் கூட்டம் இடை பிறிது இன்றியும்
பெயர்த்தும்வேறு பொருடரின் மடக்கெனும் பெயர்த்தே (01) பெயர்த்தும் வேறு பொருள் தரின் மடக்கு எனும் பெயர்த்தே (01)

நூற்பா:93 ( அதுதான்,ஓரடி)

அதுதான், (01) அது தான்,
ஓரடி முதலா நான்கடி காறுஞ் ஓர் அடி முதலா நான்கு அடிகாறும்
சேரு மென்ப தெளிந்திசி னோரே (02) சேரும் என்ப தெளிந்திசினோரே (02)

நூற்பா:94 (ஆதியிடை )

ஆதி யிடைகடை யாதியோ டிடைகடை ஆதி இடை கடை ஆதியோடு இடை கடை
யிடையொடு கடைமுழு தெனவெழு வகைத்தே (03) இடையொடு கடை முழுது என எழு வகைத்தே (03)

நூற்பா:95 (ஓரடி )

ஓரடி யொழிந்தன தேருங் காலை ஓர் அடி ஒழிந்தன தேரும் காலை
யிணைமுதல் விகற்ப மேழு நான்கு இணை முதல் விகற்பம் ஏழும் நான்கும்
மடைவுறும் பெற்றியி னறியத் தோன்றும் (04) அடைவுறும் பெற்றியின் அறியத் தோன்றும் (04)

நூற்பா:96 (அடிமுழுது )

அடிமுழுது மடக்கலு மாங்கதன் சிறப்பே (05) அடி முழுதும் மடக்கலும் ஆங்கு அதன் சிறப்பே (05)

நூற்பா:97 (ஓரெழுத்து )

ஓரெழுத்து மடக்கலு முரித்தென மொழிப (06) ஓர் எழுத்து மடக்கலும் உரித்து என மொழிப (06)

நூற்பா:98 ( கோமூத்)

கோமூத் திரியே கூட சதுக்கம் கோ மூத்திரியே கூட சதுக்கம்
மாலை மாற்றே யெழுத்து வருத்தனம் மாலை மாற்றே எழுத்து வருத்தனம்
நாக பந்தம் வினாவுத் தரமே நாக பந்தம் வினா உத்தரமே
காதை கரப்பே கரந்துறைச் செய்யுட் காதை கரப்பே கரந்து உறைச் செய்யுள்
சக்கரஞ் சுழிகுளஞ் சருப்பதோ பத்திர சக்கரம் சுழி குளம் சருப்பதோ பத்திரம்
மக்கரச் சுதகமு மவற்றின் பால (07) அக்கரச் சுதகமும் அவற்றின் பால (07)

நூற்பா:99 ( பிரிபொருட்)

பிரிபொருட் சொற்றொடர் மாறுபடு பொருண்மொழி பிரி பொருள் சொல் தொடர் மாறு படு பொருள் மொழி
மொழிந்தது மொழிவே கவர்படு பொருண்மொழி மொழிந்தது மொழிவே கவர் படு பொருள் மொழி
நிரனிறை வழுவே சொல்வழு யதிவழு நிரல் நிறை வழுவே சொல் வழு யதி வழு
செய்யுள் வழுவொடு சந்தி வழுவென செய்யுள் வழுவொடு சந்தி வழு என
வெய்திய வொன்பது மிடனே காலங் எய்திய ஒன்பதும் இடனே காலம்
கலையே யுலக நியாய மாகம கலையே உலகம் நியாயம் ஆகமம்
மலைவுமுள் ளுறுத்தவும் வரைந்தனர் புலவர் (08) மலைவும் உள் உறுத்தவும் வரைந்தனர் புலவர் (08)

நூற்பா:100 (மேற்கோ )

மேற்கோ ளேது வெடுத்துக் காட்டென மேற்கோள் ஏது எடுத்துக் காட்டு என
வாற்றுளிக் கிளக்கு மவற்றது வழுநிலை ஆற்றுளிக் கிளக்கம் அவற்றது வழு நிலை
நிரம்ப வுணர்த்த வரம்பில வென்ப (09) நிரம்ப உணர்த்த வரம்பு இல என்ப (09)

@@ தொகு

நூற்பா:101 ( அவற்றுள்,பிரி)

அவற்றுள், அவற்றுள்,
பிரிபொருட் சொற்றொடர் செய்யுண் முழுவது பிரி பொருள் சொல் தொடர் செய்யுள் முழுவதும்
மொருபொருட் பயவா தொரீஇத் தோன்றும் (10) ஒரு பொருள் பயவாது ஒரீஇத் தோன்றும் (10)

நூற்பா:102 (களியினு )

களியினும் பித்தினுங் கடிவரை யின்றே (11) களியினும் பித்தினும் கடி வரை இன்றே (11)

நூற்பா:103 ( மாறுபடு)

மாறுபடு பொருண்மொழி முன்மொழிந் ததற்கு மாறு படு பொருள் மொழி முன் மொழிந்ததற்கு
மாறுபடத் தோன்றி வருமொழித் தாகும் (12) மாறுபடத் தோன்றி வரும் மொழித்து ஆகும் (12)

நூற்பா:104 (காமமு )

காமமு மச்சமுங் கைம்மிகி னுரித்தே (13) காமமும் அச்சமும் கைம்மிகின் உரித்தே (13)

நூற்பா:105 (மொழிந்தது )

மொழிந்தது மொழிவே கூறியது கூறி மொழிந்தது மொழிவே கூறியது கூறி
வேறுபட வொருபொருள் விளங்கா தாகும் (14) வேறு பட ஒரு பொருள் விளங்கா தாகும் (14)

நூற்பா:106 (விரைவினுஞ் )

விரைவினுஞ் சிறப்பினும் வரைவின் றதுவே (15) விரைவினும் சிறப்பினும் வரைவு இன்று அதுவே (15)

நூற்பா:107 (ஒருபொரு )

ஒருபொரு டுணிய வுரைக்க லுற்றசொல் ஒரு பொருள் துணிய உரைக்கல் உற்ற சொல்
லிருபொருட் கியைவது கவர்படு பொருண்மொழி (16) இரு பொருட்கு இயைவது கவர் படு பொருள் மொழி (16)

நூற்பா:108 ( வழூஉப்)

வழூஉப்பட லில்வழி வரைவின் றதுவே (17) வழூஉப் படல் இல் வழி வரைவு இன்று அதுவே (17)

நூற்பா:109 (ஒருநிரன் )

ஒருநிரன் முன்வைத் ததன்பின் வைக்கும் ஒரு நிரல் முன் வைத்து அதன் பின் வைக்கும்
நிரனிறை பிறழ்வது நிரனிறை வழுவே (18) நிரல் நிறை பிறழ்வது நிரல் நிறை வழுவே (18)

நூற்பா:110 (உய்த்துணர )

உய்த்துணர வரும்வழி யவ்வாறு முரித்தே (19) உய்த்து உணர வரும் வழி அவ்வாறும் உரித்தே (19)

@@@ தொகு

நூற்பா:111 (சொல்வழு )

சொல்வழு வென்பது சொல்லிலக் கணத்தொடு சொல் வழு என்பது சொல் இலக்கணத்தொடு
புல்லா தாகிய புகர்படு மொழியே (20) புல்லாது ஆகிய புகர் படு மொழியே (20)

நூற்பா:112 (வழக்கா )

வழக்கா றாயின் வழுவின் றதுவே (21) வழுக்காறு ஆயின் வழு இன்று அதுவே (21)

நூற்பா:113 ( யதிவழு)

யதிவழு வென்ப தோசை யறுவழி யதி வழு என்பது ஓசை அறு வழி
நெறிப்பட வாரா நிலைமைய தென்ப (22) நெறிப் பட வாரா நிலைமையது என்ப (22)

நூற்பா:114 (வகையுளி )

வகையுளி யுரைப்புழி வரைவின் றதுவே (23) வகையுளி உரைப்புழி வரைவு இன்று அதுவே (23)

நூற்பா:115 (செய்யுள் )

செய்யுள் வழுவே யாப்பிலக் கணத்தோ செய்யுள் வழுவே யாப்பு இலக்கணத்தோடு
டெய்த லில்லா வியல்பிற் றாகும் (24) எய்தல் இல்லா இயல்பிற்று ஆகும் (24)

நூற்பா:116 (ஆரிடத் )

ஆரிடத் துள்ளு மவைபோல் பவற்றுளு ஆரிடத்து உள்ளும் அவை போல்பவற்றுள்ளும்
நேரு மென்ப நெறியுணர்ந் தோரே (25) நேரும் என்ப நெறி உணர்ந்தோரே (25)

நூற்பா:117 ( சந்திவழு)

சந்தி வழுவே யெழுத்திலக் கணத்துச் சந்தி வழுவே எழுத்து இலக்கணத்துச்
சந்தியொடு முடியாத் தன்மைத் தாகும் (26) சந்தியொடு முடியாத் தன்மைத்து ஆகும் (26)

நூற்பா:118 (இரண்டாம் )

இரண்டாம் வேற்றுமைக் கெதிர்மறுத்தும் வருமே (26) இரண்டாம் வேற்றுமைக்கு எதிர் மறுத்தும் வருமே (26)

நூற்பா:119 (இடமெனப் )

இடமெனப் படுபவை மலைநாடி யாறே (27) இடம் எனப் படுபவை மலை நாடு யாறே (27)

நூற்பா:120 (காலம் )

காலம் பொழுதொடு பருவமென் றிரண்டே (28) காலம் பொழுதொடு பருவம் என்று இரண்டே (28)

நூற்பா:121 (கலையெனப் )

கலையெனப் படுபவை காண்டக விரிப்பிற் கலை எனப்படுபவை காண் தக விரிப்பின்
காமமும் பொருளு மேமுறத் தழுவி காமமும் பொருளும் ஏமுறத் தழுவி
மறுவறக் கிளந்த வறுபத்து நான்கே (29) மறு அறக் கிளந்த அறுபத்து நான்கே (29)

நூற்பா:122 (உலகெனப் )

உலகெனப் படுவதீண் டொழுக்கின் மேற்றே (30) உலகு எனப்படுவது ஈண்டு உலகின் மேற்றே (30)

நூற்பா:123 ( நியாய)

நியாய மென்பது நெறியுறக் கிளக்கி நியாயம் என்பது நெறி உறக் கிள்ளின்
னளவையிற் றெளிக்கும் வினைபொருட் டிறமே (31) அளவையின் தெளிக்கும் வினை பொருள் திறமே (31)

நூற்பா:124 (ஆகம )

ஆகம மென்பன மநுமுத லாகிய ஆகமம் என்பன மநு முதல் ஆகிய
வறனொடு புணர்ந்த திறனறி நூலே (32) அறனொடு புணர்ந்த திறன் அறி நூலே (32)

நூற்பா:125 ( கூறிய)

கூறிய நெறியி னாறுவகை மலைவு கூறிய நெறியின் ஆறு வகை மலைவும்
நாடக வழக்கி னாட்டுதற் குரிய (33) நாடக வழக்கின் நாட்டுதற்கு உரிய (33)

நூற்பா:126 (மெய்பெற )

மெய்பெற விரித்த செய்யுட் டிறனு மெய் பெற விரித்த செய்யுள் திறனும்
மெய்திய நெறியு மீரைங் குணன எய்திய நெறியும் ஈர் ஐங் குணனும்
மையெழு வகையி னறிவுறு மணிய ஐ எழு வகையின் அறிவுறும் அணியும்
மடியினுஞ் சொல்லினு மெழுத்தினு மியன்று அடியினும் சொல்லினும் எழுத்தினும் இயன்று
முடிய வந்த மூவகை மடக்குங் முடிய வந்த மூ வகை மடக்கும்
கோமூத் திரிமுதற் குன்றா மரபி கோ மூத்திரி முதல் குன்றா மரபின்
னேமுற மொழிமிறைக் கவியீ ராறு ஏமுற மொழி மிறைக் கவி ஈர் ஆறும்
மிவ்வகை யியற்றுதல் குற்ற மிவ்வகை இவ் வகை இயற்றுதல் குற்றம் இவ் வகை
யெய்த லியம்புத லியல்பென மொழிந்த எய்தல் இயம்புதல் இயல்பு என மொழிந்த
வைவகை முத்திறத் தாங்கவை யுளப்பட ஐ வகை முத் திறத்து ஆங்கு அவை உளப்பட
மொழிந்த நெறியி னொழிந்தவுங் கோட மொழிந்த நெறியின் ஒழிந்தவும் கோடல்
லான்ற காட்சிச் சான்றோர் கடனே (34) ஆன்ற காட்சிச் சான்றோர் கடனே (34)

மூன்றாவது சொல்லணியியல் முடிந்தது தொகு

மூன்றாவது சொல்லணியியல் சூத்திரங்கள் 34

(ஆகமொத்தம் 26+65+34= 125 சூத்திரங்கள்)

தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்காரம் முற்றும் தொகு

பார்க்க: தொகு

தண்டியலங்காரம்பொதுவணியியல்

தண்டியலங்காரம்-பொருளணியியல்