தந்தையும் மகளும்/36
36அப்பா! குண்டூசியைக் கீழே தேய்த்துக் கன்னத்தில் வைத்தால் சூடாயிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! குண்டூசிதான் தேய்த்தால் சூடாகும் என்று எண்ணாதே எந்தப் பொருளைத் தேய்த்தாலும் சூடு உண்டாகவே செய்யும் அதற்குக் காரணம் என்ன?
அம்மா! பொருள்கள் எல்லாம் அணுக்களால் ஆகியவை என்பதை அறிவாய். ஒவ்வொரு பொருளிலும் அதிலுள்ள அணுக்கள் சதாகாலமும் அசைந்து கொண்டே இருக்கின்றன. இந்த அணு அசைவுதான் நமக்கு உஷ்ணமாகத் தெரிகிறது. அதிகமான அசைவானால் அதிகமான உஷ்ணம், குறைவான அசைவானால் குறைவான உஷ்ணம்.
நீ குண்டூசியைக் கீழே தேய்க்கும் பொழுது அதிலுள்ள அணுக்கள் முன்னிலும் அதிகமாக அசைய ஆரம்பிக்கின்றன. அதனால் அதைக் கன்னத்தில் வைத்ததும் உஷ்ணமாகத் தெரிகிறது. நீ கடுதாசியில் பென்சிலைக் கொண்டு எழுதியதை ரப்பர் கொண்டு அழிக்கிறாயே, அப்பொழுதும் உஷ்ணம் உண்டாகிறது. ஆனால் அதன் அளவு சிறிதாக இருப்பதால் உஷ்ணமாகத் தெரியவில்லை உஷ்ணம் அளக்கும் தெர்மா மீட்டரை வைத்துப் பார்த்தால் உஷ்ணம் உண்டாவது தெரியும். குண்டூசி உலோகத்தால் செய்தது. உலோகங்கள் உஷ்ணத்தை எளிதில் கடத்திச் செல்லும் சக்தி உடையது. அதனால் நான் தேய்க்குமிடத்தில் உண்டாகும் உஷ்ணம் கன்னத்தில் வந்து சேர்கிறது குண்டூசி சுடுகிறது என்று கூறுகிறோம்.