37அப்பா டாக்டர் வைத்திருக்கும் தெர்மாமீட்டர் பாட சாலையில் உள்ளது போல் இல்லையே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பாடசாலையில் இரண்டு விதமான தெர்மாமீட்டர் வைத்திருப்பார்கள். ஒன்று செண்டிகிரேட் தெர்மாமீட்டர் என்றும், மற்றொன்று பாரன்ஹீட் தெர்மா மீட்டர் என்றும், பெயர் பெறும். தெர்மா மீட்டரில் பாதரசம் அடைத்திருப்பது உனக்குத்தெரியும். அவ்வாறு பாதரசம் அடைத்த தெர்மாமீட்டரை முதல் முதலாகச் செய்தவர் பாரன்ஹீட் என்பவர். அதற்கு முன் சாராயத்தை அடைத்தே தெர்மாமீட்டர் செய்து கொண்டிருந்தார்கள். பாரன்ஹீட் தெர்மாமீட்டரில் நீர் ஐஸாக மாறும் உஷ்ண நிலையை 32°F என்றும் நீர் கொதிக்கும் உஷ்ண நிலையை 212°F என்றும் குறிப்பார்கள்.

செல்சியஸ் என்பவர் செண்டிகிரேட் தெர்மா மீட்டரைச் செய்தார், அதில் ஐஸ் டிக்கிரி O°c என்றும் கொதிநீர் டிக்கிரி 100°c என்றும் குறிக்கப்படும். இந்த செண்டிகிரேட் தெர்மா மட்டரைத்தான் விஞ்ஞான ஆராய்ச்சியில் உபயோகிப்பது வழக்கம்.

டாக்டர் வைத்திருப்பது பாரன்ஹீட் தெர்மா மீட்டரே. ஆனால் அது உடம்பின் உஷ்ண நிலையை அறிவதற்காக மட்டுமே உபயோகிக்கட்படுவதால் அதில் அதனடியிலுள்ள குமிழுக்கு மேலாக 95°F என்றும், உச்சியில் 110°F என்றும் குறித்திருப்பார்கள். மனிதருடைய உஷ்ண நிலை எப்பொழுதும் 98.4°F ஆகவே இருக்கும்.அதனால் அந்த இடத்தில் தெர்மாமீட்டரில் X

தெர்மாமீட்டர்

போன்ற ஒரு குறி இட்டிருப்பார்கள். சுரம் கண்டால் உஷ்ணநிலை ஏறும், ஆனால் அது 105 டிக்கிரிக்கு அதிகமாவதில்லை. உடல்நலம் குறைந்து உஷ்ண நிலை குறையும் பொழுதும் அது 96 டிக்கிரிக்குக் கீழே இறங்குவதில்லை. அதனால்தான் 96 முதல் 110 வரையே குறிக்கிறார்கள். அதனால்தான் டாக்டர்கள் இந்தத் தெர்மாமீட்டரை குளிர்ந்த நீரால் கழுவுகிறார்கள். கழுவும் நீர் அதிகச் சூடாக இல்லாமல் இருந்தாலும் கூட அதன் உஷ்ண நிலை 110 டிக்கிரிக்கு அதிகமாயிருக்கும், அதனால் தெர்மா மீட்டர் உடைந்து போகும்.

இதில் இன்னும் ஒரு வித்தியாசம் உண்டு. சாதாரணமான தெர்மாமீட்டரில் குமிழ் உஷ்ணமாகும் பொழுது பாதரஸம் மேலே ஏறும், குமிழ் குளிரும் பொழுது கீழே இறங்கிவிடும். ஆனால் டாக்டருடைய தெர்மாமீட்டரில் அப்படி நடைபெறாது. அதற்குக் காரணம் குமிழுக்கும் குழாய்க்குமிடையில் ஒரு குறுகிய வளைவு இருப்பதுதான்.

டாக்டர் தெர்மாமீட்டரை சிறிது நேரம் நோயாளியின் நாக்கின் அடியில் வைப்பார். அப்பொழுது பாதரஸம் விரிந்து குறுகிய வளைவில் நுழைந்து குழாய்க்குள் ஏறும். தெர்மாமீட்டரை வாயிலிருந்து எடுத்தால் உடனே குமிழ் குளிர்ந்து குறுகிவிடுகிறது. ஆனால் குழாயிலுள்ள பாதரஸம் குறுகிய வளைவு வழியாகக் குமிழுக்கு வரமுடியாமல் குழாயிலேயே தங்கி விடுகிறது. அதனால்தான் தெர்மாமீட்டரைப் பார்த்துநோயாளியின் உஷ்ண நிலையை அறிந்து கொள்ள சாத்தியமாகிறது. இவ்வாறு விரிவடைந்த பாம்ஸதர குழாயில் தங்கி விடுவதனால்தான் டாக்டர் உஷ்ண நிலையைப் பார்த்துக் கொண்டபின் தெர்மாமீட்டரை உதறுகிறார். உதறியதும் பாதரஸம் முன்போல் குமிழுக்குப் போய்விடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/37&oldid=1538120" இலிருந்து மீள்விக்கப்பட்டது