தந்தையும் மகளும்/43
43அப்பா! சோறு சமைக்கும் போது தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் பானையை மூடிவிடுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! எங்கும் காற்று இருப்பதை அறிவாய். அது எல்லாவற்றையும் அழுத்திக கொண்டிருக்கிறது. அதுபோல் தான் அது சோறு வேகும் பாத்திரத்தையும் அழுத்துகிறது. அப்படிச் சாதாரணமாக அழுத்தும் நிலைமையில் தண்ணீர் 100° c டிக்கிரி உஷ்ண நிலையிலே கொதிக்க ஆரம்பிக்கிறது. அதைக் கொதிநிலை என் கூறுவார்கள்.
காற்றின் அழுத்துதல் கூடினால் கொதி நிலையும் கூடும். காற்றின் அழுத்துதல் குறைந்தால் கொதிநிலையும் குறையும். கொதிநிலை கூடுதல் என்பதன் பொருள் கொதி நீரில் அதிகமான உஷ்ணம் இருக்கிறது என்பதாகும். அது போல் கொதிநிலை குறைந்தால் கொதிநீரிலுள்ள உஷ்ணமும் குறைவாகவே இருக்கும். இதை நீ நினைவில் வைத்துக்கொள்.
அம்மா! சோறு ஆக்கும் போது முதலில் பானை திறந்திருக்கிறது. அதன் மீதுள்ள காற்றின் அமுக்கம் சாதாரண அளவு உள்ளது. தண்ணீர் கொதித்ததும பானையை மூடிவிடுகிறோம். அப்பொழுது காற்றின் அமுக்கம் கூடிவிடுகிறது. அதனால் பானையின் கொதி நிலையும் கூடிவிடுகிறது. அதனால் அதிகமான உஷ்ணம் உண்டாய்விடுகிறது. அதன் காரணமாகச் சோறு சீக்கிரமாக வெந்துவிடுகிறது. இதற்காகத்தான் நீர் கொதித்ததும் மூடிவிடுகிறார்கள்.