44அப்பா! சோறு கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பில் எரியும் விறகைக் குறைத்து விடுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பானையில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து விறகை எரிக்கிறோம். தண்ணீர் சூடு ஏற ஏற உஷ்ணம் உடையதாக ஆகிறது. சிறிது நேரம் சென்ற பின் அதிக உஷ்ணம் சேர்ந்ததும் கொதிக்கத் தொடங்கி ஆவியாக மாறுகிறது. அதன்பின் மறுபடியும விறகு எரிப்பதால் நீரில் அதிகச் சூடு உண்டாவதில்லை. கொதிக்க ஆரம்பித்த பொழுது இருந்த 100°C டிக்கிரியே இருந்து கொண்டிருக்கும், அதிகமாயிராது. நீர் கொதிக்க ஆரம்பித்த பிறகும் விறகு எரிவதால் நீர் சீக்கிரமாக ஆவியாகப் போய்விடும். அவ்வளவுதான். அதனால் சோறு சீக்கிரமாக வெந்துவிடப் போவதில்லை. அதை அறிந்து அம்மா சோறு கொதிக்க ஆரம்பித்தவுடன் தீ எரிவதைக் குறைத்து விடுகிறார்கள். அப்படிச் செய்வதால் விறகு அதிகமாகச் செலவாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/44&oldid=1538143" இலிருந்து மீள்விக்கப்பட்டது