தமிழ்மொழி இலக்கிய வரலாறு/சங்ககால வரலாறு



6. சங்ககால வரலாறு
(கி. மு. 1000-கி. பி. 300)
(1) கடல் வாணிக வரலாறு

உள்நாட்டு வாணிகத்திலும் கடல் வாணிகத்திலும் சிறப்புற்ற நாடே நாகரிக நாடு என்பது பொதுக் கருத் தாகும். வாணிகமே ஒரு நாட்டுச் செல்வ வளத்தைக் கணிக்கும் அளவு கோலாகும். கிறிஸ்துப் பெருமானுக்கு முற்பட்ட பல நூற்றாண்டுகளிலேயே தென்னிந்தியர் கடல் வாணிகத்திற் சிறந்திருந்தனர் என்று அயல் நாட்டார் எழுதிவைத்த குறிப்புகளைக் கொண்டும் புதைபொருள் ஆராய்ச்சி கொண்டும் அறிஞர் கூறுகின்றனர். அவர்கள் கூறுவனவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க.

கிறிஸ்துவுக்கு முன்பு

கி. மு. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் அரசனுக்குத் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்கள் வாயிலாக மயில் தோகை, யானைத்தந்தம், மணப்பொருள்கள் முதலியன சென்றன. ஈப்ரு மொழியிலுள்ள துகி என்பது தமிழ்த் தோகை என்பதாகும்; அகல் என்பது அகில் என்பதாகும்.

திமில் உடைய எருதுகள் பாரசீக வளைகுடாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன. பொனிசியருடைய கப்பல்களில் சேரநாட்டு மிளகு மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டது. அக்காலத்தில் ஏடன் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது. தமிழ் வணிகர் கொண்டு

த-5 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

சென்ற பொருள்களை அரேபியர் ஏடன் என்ற துறைமுகத் தில் பெற்று, ஆப்பிரிக்கருக்கு விற்றனர்.'

பிலிப்பைன்ஸ் தீவுகளின் வடபகுதியில் தென் இந்தியாவிற் கிடைத்த இரும்புக்காலப் பொருள்கள் கிடைத்துள்ள தைக் காண, அப்பண்டைக்காலத்திலேயே பிலிப்பைன்ஸ் தீவுகட்கும் தென் இந்தியாவுக்கும் இடையில் கடல் வாணிகம் நடைபெற்றதென்பது தெளிவாகும். அக்காலம் ஏறத்தாழக் கி. மு. முதல் ஆயிரம் என்னலாம்.

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு பாபிலோன் நகரத்திற்குக் கடல் வழியாக அனுப்பப்பட்ட அரிசி, மயில், சக்தனம் முதலிய பொருள்களின் பெயர்கள் திராவிட மொழிப் பெயர்களாகவே காணப்பட்டமை, அப்பழைய காலத்தில் தமிழர் மேற்கொண்டிருந்த கடல் வாணிகச் சிறப்பை நன்கு உணர்த்துவதாகும்.”

கி. மு. 606 இல் அசிரியப் பேரரசு மறைந்தது. பாபி லோன் நகரம் வாணிகத்தில் சிறந்த நகரமாய் மாறியது. யவனர், யூதர், பொனீசியர், இந்தியர், சீனர் என்பவர் தங்கள் பொருள்களைக் கொண்டு சென்று அந்நகரத்தில் விற்கலாயினர். அந்நகரத்தில் தென்னிந்திய வணிகர் குடியேறி வாழலாயினர். அக்குடியேற்றம் கி. பி. 7 ஆம் நூற்றாண்டு வரையில் அந்நகரில் தொடர்ந்து இருந்து வந்தது. கி. மு. 538 இல் சைரஸ் என்ற பாரசீகப் பேரரசன் பாபிலோனிய பேரரசை வீழ்த்தினான். அவனுக்குப் பின்பு வந்த டேரியஸ் தரை வழி வாணிகத்தையும் கடல் வாணிகத் தையும் பெருக்கினான், அலெக்ஸாண்டரால் ஏற்படுத்தப் பட்ட அலெக்ஸாண்டிரியா நகரம் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நடைபெற்ற கடல் வாணிகத்தில் சிறந்த பங்கு

1. P. W. S. Ayyangar, History of the Tamils, pp

129–134.

2. K. A. N. Sastry, A History of india, pp: 76-78.

கொண்டது. சூயஸ் கால்வாய் வழியாகவும் வாணிகம் நடைபெற்றது. இவ்வாணிகத்தால் எகிப்து, முன்பு இழந்த வாணிகப் பெருமையை மீண்டும் பெற்றது. கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் பேரரசனாய் விளங்கிய முதலாம் தாலமியின் ஊர்வலங்களில் இந்தியப் பெண்கள் காணப்பட்டனர்; இந்திய வேட்டை நாய்களும், இந்தியப் பசுக்களும், இந்திய மணப் பொருள்களும் காணப்பட்டன.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட முதல் ஐந்து நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நடைபெற்ற வாணிகத்தில் கிரேக்கர் சிறந்த பங்கு கொண்டனர். அவர்கள் மொழியில் அரிசி, என்பது ஒரிஸா’ என்றும், கருவா என்பது கர்ப்பியான்’ என்றும், இஞ்சிவேர் என்பது சிக்கி பெரஸ் (ziggiberos) என்றும், பிப்பிலி என்பது 'பெப்பரி' என்றும் மாறி வழங்கலாயின.

ரோமப் பேரரசனான அகஸ்டஸ் ஏறத்தாழ கி. மு. 30 இல் எகிப்தைக் கைப்பற்றினான். அவன் ரோமப் பெரு நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நேரான கடல் வணிகத்தை வளர்க்க முயன்றான். பாண்டியனிடமிருந்து வணிகர் தூதுக்குழு கி. மு. 21 இல் அப்பேரரசனைச் சென்று கண்டது. அப்போது நடைபெற்ற வாணிகத்தில் இந்திய வாணிகமே ரோமப் பெருநாட்டு வாணிகத்தைவிடச் சிறந் திருந்தது. பண்டமாற்றுக் குறைவாக இருந்தமையால், ரோம நாணயங்கள் மிகுதியாகச் செலவாயின."

சீனத்துப்பட்டும் பிறபொருள்களும் தரைவழியாக மேலைநாடுகளுக்குச் சென்றதோடு, கடல் வழியாகவும் சென்றன. தமிழர் அவற்றைச் சூயஸ் கால்வாய் வரையில் கொண்டு சென்று யவன வணிகர்களுக்கு விற்றுவந்தனர்.

பர்மா, மலேயா, சீனம் முதலிய நாடுகளுடன் தமிழகம் வாணிகம் செய்துவந்தது. தமிழகப் பொருள்களுள் மிகச்

3. P. T. S. Ayyangar, History of the famils, pp.

192–196. : - தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

சிறந்தவை மிளகும் மணப் பொருள்களும் ஆகும். தமிழ் வணிகர் இவ்விரண்டிற்கும் பதிலாகப் பட்டும் சர்க்கரையும் பெற்றனர்.

தமிழர் கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட பல நூற்றாண்டுகளாகவே பர்மாவுடனும் இந்தோசீனத்துடனும் வாணிகம் செய்தனர். அவர்கள் அந்நாடுகளில் பல இடங்களில் குடியேறி வணிக நிலையங்களை அமைத்துக்கொண்டனர். அவற்றுள் தக்கோலா (தக்கோலம்) என்பது ஒன்று. இவ்விடப் பெயர் சென்னைக்கு அருகில் உள்ள தக்கோலம் என்னும் ஊரின் பெயரை நினைவூட்டுகிறது.4

கிறிஸ்துவுக்குப் பின்பு

தமிழகம் ரோமப் பேரரசுடன் கிறிஸ்துவுக்குப் பின்னும் தொடர்ந்து வாணிகம் செய்துவந்தது. இரும்பு, விலங்குகளின் தோல்கள், ஆட்டுமயிர், நெய் முதலியன ரோமப் பெருநாட்டிற்கு அனுப்பப்பட்டன. யானைத் தந்தம் மிகுதியாக அனுப்பப்பட்டது. உருவச்சிலைகள், தேர்கள். வண்டிகள், மேசைக் கால்கள், பெட்டிகள், பறவைக் கூண்டுகள், சீப்புகள் முதலியன ரோமப் பெருநாட்டில் தந்தத்தால் செய்யப்பட்டன.

சேரநாட்டிலிருந்த முசிறி முதலிய துறைமுகங்களிலிருந்து தந்தம் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆமை ஓடுகள் மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டன. ரோமப் பெருநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவற்றுள் மிக்க விலையுயர்ந்தவை முத்துகளேயாகும். மதுரை, உறையூர் என்னும் இரண்டு தலைநகரங்களிலும் முத்து வாணிகம் குடிகொண்டிருந்தது.5

ரோமர்கள் முத்துகளையும் யானைத் தந்தத்தையும் மஸ்லின் ஆடைகளையும் மிளகையும் மிகுந்த விலை

4. P. T. S. Ayyangar, History of tho Tamils,

pp. 205–206

5. Ibid., pp. 301–304.

கொடுத்து வாங்கியதால், ரோம் நாடு ஆண்டுதோறும் இந்தியாவிற்கு (தமிழகத்திற்கு) ஏறக்குறைய ஆறு லட்சம் பவுன் கொடுத்து வந்தது. ரோமாபுரி இராணிகளும் சீமாட்டி களும் முத்துகளை அணிவதில் பெரும் பொருளைச் செலவிட்டனர். அதனால் ரோம் நாட்டு அரசியல் தலைவர்கள் முத்துகளைப் பயன்படுத்திய பெண்மணிகளை வன்மையாகக் கண்டித்தனர்.[1]

"இங்ஙனம் பெண்கள் முத்துகளை அணிந்து வருவதால் ரோமப் பெருநாட்டின் செல்வம் வற்றிவருகிறது" என்று திபெரியஸ் (கி. பி. 16-37) என்ற ரோமப் பேரரசன் செனட் சபைக்கு எழுதியுள்ளான். இதைக்கொண்டு முத்து வாணிகம் எந்த அளவு ரோமப் பெருநாட்டில் நடந்திருத்தல் வேண்டும் என்பதை எளிதில் அறியலாம். தமிழகத்துப் பொருள்களுக்குப் பதிலாக ரோம்நாட்டுப் பொன், வெள்ளி நாணயங்கள், மதுவகைகள் என்பவை தமிழகத்துக்கு அனுப்பப்பட்டன.[2]

தமிழகத்திலிருந்து ரோமப் பெருநாட்டிற்குச் சென்ற ஒவ்வொரு கப்பலிலும் பாதிக்கு மேற்பட்ட சரக்குமிளகாகவே இருந்தது. ஏலக்காய், இலவங்கப்பட்டை, வெல்லப்பாகு, நல்லெண்ணெய் முதலியனவும், உறையூரில் நெய்யப்பட்ட மிகவுயர்ந்த மெல்லிய ஆடை வகைகளும் ரோம் நாட்டுக்கு அனுப்பப்ட்டன; தேக்கு அகில், சந்தன மரத்துண்டங்களும் அனுப்பப்பட்டன. தேங்காய் , நெய், வாழை, அரிசி, சோளம் , கம்பு முதலிய கூலங்கள், புளி[3], வெற்றிலை, பாக்கு, மூலிகைகளான மருந்து வகைகள் முதலியனவும். ஏற்றுமதி செய்யப்பட்டன. முசிறித் துறைமுகத்திலிருந்து வயிரம் முதலிய விலை உயர்ந்த மணிகள் ரோமப் பெரு நாட்டுக்கு அனுப்பப்பட்டன.

இப்பல பொருள்களையும் பெற்றுக்கொண்ட ரோமர்கள் இவற்றுக்குப் பதிலாகப் பொன் வெள்ளி நாணயங்களையும், உயர்ந்த மதுவகைகளையும், பவழம், ஈயம், தகரம், எந்திரப் பொறிகள் முதலியவற்றையும் ஏற்றுமதி செய்தனர்.[4] பிளைநி (கி. பி. 24-79) என்ற மேனாட்டு யாத்திரிகர், தமிழகத்திலிருந்து ரோம் நாட்டுக்கு ஏற்றுமதியான முத்துகள், மெல்லிய ஆடைகள், இன்பப் பொருள்கள் இவற்றுக்காக ரோம் நாட்டுச் செல்வம் மிகுதியாகச் செலவழிக்கப்பட்டது என்று வருந்திக் கூறியுள்ளனர்.[5] “செங்கடலிலுள்ள ஏசிரிஸ் என்னும் இடத்திலிருந்து (பருவக்காற்றுச் செம்மையாக வீசினால்) நாற்பது நாட்களில் சேரநாட்டு முசிறியைக் கப்பல்கள் அடையக்கூடும். முசிறி கடற் கொள்ளைக்காரரால் தாக்கப்படுவதால், பிரயாணிகள் பக்கரே (வைக்கரை)யில் இறங்க விரும்புகின்றனர்” என்றும் கூறியுள்ளார்.[6]

கி. பி 60 இல் பெரிப்ளுஸ் என்னும் நூலை எழுதிய ஆசிரியர் இந்தியத் துறைமுகங்களை நேரில் கண்டு பல செய்திகளைக் குறித்துள்ளார். சேரநாட்டில் தொண்டி, முசிறி, குமரி என்ற துறைகளையும், பாண்டிய நாட்டில் கொற்கைத் துறைமுகத்தையும், சோழ நாட்டில் காவிரிப் பூம்பட்டினத்தையும் குறித்துள்ளார்; கொற்கையில் கொடிய குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவரே முத்துக்குளித்து வந்தனர் என்று கூறியுள்ளார்; உறையூர் முத்து வாணிகத்திற்குப் பெயர்போனது என்றும் குறித்துள்ளார்; கிழக்குக் டாக்டர் மா.இராசமாணிக்கனார்

                         71

கரைத் துறைமுகங்களிலிருந்து பெரிய கப்பல்கள் கங்கைக்கும் பர்மாவுக்கும் சென்றன என்று கூறியுள்ளார்.

கி. பி. 150 இல் தமது குறிப்பு நூலை வரைந்த தாலமி என்பவர் பெரிப்ளுஸ் நூலாசிரியரைவிடத் தமிழகத்தைப் பற்றி மிகுதியான விவரங்களைத் தந்துள்ளார். அவர் தென்னிந்தியாவைப் பார்க்கவில்லை; ஆயினும் அவர் இந்தியாவில் தங்கியிருந்த தம்மவர் கூறியவற்றையே விவரமாக எழுதியுள்ளார். அவற்றை நோக்க, தமிழகத்தை முடியுடைய மூவேந்தரும் சிற்றரசர் பலரும் ஆண்டுவந்தனர் என்பதும் , மூவேந்தரும் ஏறத்தாழச் சமநிலையில் இருத்தனர் என்பதும் தெரிகின்றன. சேரர், ஆயர், கரையார் (கரையாளர்) , பாண்டியர், பரதர், சோழர், அருவாளர் எனப் பல இனத்தவர் தமிழகத்தில் இருந்தனர் என்று அவர் குறித்துள்ளார். கருவூர், மதுரை, உறையூர்,மாவிலங்கை, தொண்டி,முசிறி,கொட்டாரக்கரை, கோட்டயம், பொரக்காடு, குமரி, கொற்கை, நாகப்பட்டினம், பொதுசா (புதுச்சேரி) , சோபட்டினம் (மரக்காணத்திற்கு அண்மையில் இருந்த நகரம்), கோடிக்கரை காவிரிப்பூம்பட்டினம்,' மோகூர் முதலிய நகரங்கள் அவரால் கண்டறியப்பட்டுள்ளன.

மதுரையில் வைகை ஆற்றங்கரைப் பகுதிகளிலும் பிற வெளியிடங்களிலும் கணக்கற்ற ரோமச் செம்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. இவை மதுரையில் இருந்த யவன வணிகர் தம்முள் வழங்கிவந்த நாணயங்கள் ஆகலாம். எனவே, யவனர் பலர் மதுரை மாநகரில் தங்கியிருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்."

11. Karikala did not found Kavirippumpattinam, for it existed a thousand years before his time, since it is mentioned in the Jataka Tales, and probably was a sea port long before those Tales were born, - P. T. 5. Ayyangar, History of the Tamlis, p. 363.

12. P. T. S. Ayyangar, History of the Tamiis,

- -- pp. 309–312. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

                          72

தாலமி போன்ற யவன ஆசிரியர்கள் கொற்கை, குமரி, நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், பொதுசா (புதுச்சேரி) சோபட்டினம், முசிறி முதலிய தமிழகத்துத் துறைமுகப் பட்டினங்களைக் குறிப்பிட்டுள்ளனர். சேரநாட்டுக் கடற்கரையில் யவனர் குடியிருப்பும் அகஸ்டஸ் கோயிலும் இருந்தன. இன்றைய புதுச்சேரிக்கு அண்மையில் பழைய காலத்தில் ரோமர் தொழிற்சாலை இருந்தமைக்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. யவனர் தமிழரசர் மெய்காவலராகத் தமிழரசர் அரண்மனைகளில் இருந்தனர்.'13

யவனப் பொறியியல் அறிஞர்கள் தமிழரசர்க்குப் பல போர்ப் பொறிகளைச் செய்து தந்தனர். அவை இன்னவை.

என்பதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். அவை மதுரையில் இருந்த கோட்டையின் சிறப்பு வாயிலின்மீதும் கோட்டைச் சுவர்மீதும் வைக்கப்பட்டிருந்தன. யவனத் தச்சரும் தமிழகத்தில் இருந்து பல பொருள்களைச் செய்து கொடுத்தனர். இவை அனைத்தையும் நோக்க, யவனர்க்கும் தமிழர்க்கும் இருந்த வாணிக உறவு நன்கு புலனாகும்'14

கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வரையப்பட்ட கிரேக்க பரிகாசக் கூத்து நூலில் பழைய கன்னட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அக்காட்சி, தென்கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த உடுப்பிக்கு அருகில் உள்ள மால்பே என்னும் இடத்திற்கு அண்மையில் நடைபெற்றதாக அந்நூல் கூறுகிறது."15 இதனால் கிரேக்கருக்கும் கன்னடருக்கும் இருந்த வாணிகத் தொடர்பு நன்கு புலனாகும். -

இதுகாறும் கண்ட செய்திகள், தமிழகம் ஏறத்தாழக் கி. மு. ஆயிரம் முதலே கடல் வாணிகத்திற் சிறந்திருந்தது. 13. History of Ceylon, voi. 1, Part I, pp.213–214. 14. P. T. S. Ayyangar, History of the Wamils,pp. 312–316. . . 15. R. Sathyanatha Aiyar, History of India.Vol. I.p. 222.

என்னும் வரலாற்று உண்மையை நன்கு தெரிவிக்கின்றன அல்லவா?

தமிழ் இலக்கங்கள் ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட பின்னங்களையும் உடையவை. 1/320×1/21 = இம்மி

1/320×1/21×1/7= அணு 1/320×1/21×1/7×1/11 = மும்மி

1/320×1/21×1/7×1/11×1/9=குணம்

தமிழர் இவற்றைக் கீழ்வாய் இலக்கம் என்பர். இந்தப் பின்ன அளவைகளே தமிழரது வாணிகச் சிறப்பை விளக்கப் போதியவையல்லவா? இப்பின்ன அளவைகள் தமிழைத் தவிரப் பிற திராவிட மொழிகளில் இல்லை என்பதும் இங்கு அறியத்தகும். மேலும், எண்களைக் குறிக்கத் தமிழர் தமிழ் எழுத்துகளையே பயன்படுத்தினர் என்பதும் அறியத்தகும்.

(2) இந்திய வரலாறு

சங்ககாலம் மிகப் பரந்துபட்ட கால எல்லையை உடையது என்பதும், அதன் கீழ் எல்லை ஏறத்தாழக் கி.பி.300 என்பதும் மேலே அறியப் பெற்றன. அக்கால இந்திய அரசியல் செய்திகளையும் அப்பழைய காலத்தில் தமிழ்நாடு பிற இந்தியப் பகுதிகளுடனும் அயல்நாடுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்ததையும் இங்கு அறிவது, தொல் காப்பியம் போன்ற சங்க நூல்களைப் பற்றி அறியப் பெருந்துணை புரிவதாகும். தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து ரிக்வேதம் இயற்றிய காலம் ஏறத்தாழக் கி. மு. இரண்டாயிரம் என்றும், பிராமணங்கள் எழுதிய காலம் கி. மு. ஆயிரம் என்றும் வரலாற்றாசிரியர் கூறுவர் வேதகால இலக்கியத்தில் தமிழ் நாடுகளைப் பற்றிய பேச்சே இல்லை. பிராமணங்களின் காலத்தில்தான் தென்னிந்தியாவில் ஆரியர் நுழைவு ஏற்படத் தொடங்கியது. அக்காலத்தில் தென்னிந்தியா மேற்கு ஆசிய நாடுகளுக்கும் எகிப்துக்கும் தந்தம். மயில், மிளகு முதலியவற்றை ஏற்றுமதி செய்து வந்தது "16

வட இந்தியாவில் கெளதம புத்தர் வாழ்ந்த காலம் கி.மு. 587-487. அவர் பெளத்த சமயத்தை வட இந்தியாவில் பரப்பினார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக் கொண்ட ஆண் துறவிகள் பிட்சுக்கள் என்றும், பெண் துறவி கள் பிட்சுணிகள் என்றும் பெயர் பெற்றனர். அத்துறவிகள் இருக்கவும், புத்த தருமத்தைப் பரப்பவும் நாடெங்கும் சங்கங்கள் ஏற்பட்டன. புத்தர், அவர் உபதேசித்த தருமம், அவர் ஏற்படுத்திய சங்கம் ஆகிய மூன்றும் பெளத்த மும்மணிகள் என்று கூறப்பட்டன.

சமண சமயத்தைத் தோற்றுவித்த மகாவீரர் வாழ்ந்த காலம் கி.மு. 539-467 ஆகும். அவரும் புத்தரைப் போலவே அரச மைந்தராகப் பிறந்தவர். சமண சமயக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட ஆண் துறவிகள் சமண முனிவர் எனப்பட்டனர், பெண் துறவிகள் ஆரியாங்கனை கள், கந்தியார், அடிகள் , குரத்தியர் எனப்பட்டனர். சமணத் துறவிகள் கூட்டமும் சங்கம் எனப்பட்டது. சமண சமயம் இன்னா செய்யாமை என்பதை மிகுதியாக வற்புறுத்தியது, கடுந்தவத்தை வற்புறுத்தியது; உண்ணா நோன்பை மேற்கொண்டு உயிர் விடுதலையும் ஏற்றுக்கொண்டது. இதனை 'வடக்கிருத்தல்’ என்று தமிழ் நூல்கள் கூறும்.

16. R. Sathayanatha Iyar, History of India,

Vol. 1, pp. 36 - 45.

புத்தர் காலத்தில் வட இந்தியாவில் மகதநாடு சிறப்புற் றிருந்தது. அக்காலத்தில் அதனைப் பிம்பிசாரன்.17 (கி. மு. 525-500) என்பவனும், அஜாத சத்ரு (கி. மு. 500-476) என்பவனும் அரசாண்டனர். இவர்களுக்குப் பின்பு தர்சகன் (கி. மு. 475-450) , உதயணன் (கி. மு, 450-425) என்பவர் அரசாண்டனர். இந்த உதயணன் காலத்தில் வாழ்ந்தவன் தான் வத்சநாட்டு மன்னனான உதயணன் என்பவன்."18

ஏறத்தாழத் கி. மு. 425 இல் நந்திவர்த்தனன் என்பவன் மகதநாட்டை ஆளத் தொடங்கினான். அவன் கி.மு. 400 வரையில் ஆண்டான். அவனுக்குப் பின்பு மகாபத்ம கந்தன் என்பவன் கி. மு. 375 முதல் 350 வரையில் ஆண் டான். அவனுக்கு எட்டு ஆண்மக்கள் இருந்தனரென்றும், தந்தையும் மக்களும் கவருந்தர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்றும் வரலாறு கூறுகிறது. நந்தர்கள் மிக்க செல்வத்தைப் பெற்றிருந்தனர் என்று கிரேக்க ஆசிரியர்களும், மாமூலனார் என்ற சங்ககாலப் புலவரும் குறித்துள்ளனர்."19

ஏறத்தாழக் கி பி. 327 இல் அலெக்ஸாண்டர் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்து வந்து வெற்றி கண்டார். அவரது வெற்றிக்குப் பிறகு கிரேக்கர்கள் வட இந்தியாவில் தலைகாட்டத் தொடங்கினர். அக்காலத்தில் வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் வாணிகத் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென்பது சாணக்கியர் தமது பொருள் நூலில் எழுதியிருப்பதைக் கொண்டு உணரலாம். மேற்கு ஆசியாவுடனும் எகிப்துடனும் தென்னிந்தியா நடத்தி

17. தமிழில் பிம்பிசாரகதை என்னும் ஒரு காவியம் இருந்தது என்பது நீலகேசி உரையினால் தெரிகின்றது-பக். 71, செ. 190 உரை.

18. இவன் வரலாறே தமிழில் உள்ள பெருங்கதை என்பது. 19. History of India, vol 1, p. 87;

அகநானூறு 265. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வந்த கடல் வாணிகம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆந்திரர்கள் தம்மாட்சி பெற்றிருந்தனர். தமிழ் அரசுகளும் விளக்கமுற்றிருந்தன."20

நந்தர்களுக்குப் பின்பு சந்திரகுப்தமெளரியன் மகத நாட்டு மன்னனானான். அவனும் அவன் மரபினரும் ஏறத்தாழக் கி. மு. 188 வரையில் வட இந்தியாவின் பேரரசர்களாய் விளங்கினர். சந்திரகுப்த மெளரியன் வடஇந்தியா முழுமையும் வென்று பேரரசனாய் விளங்கினான். அவனுடைய அமைச்சனே சாணக்கியன் என்றும் கெளடில்யன் என்றும் கூறப்பெற்ற பேரறிஞன். அவன் சிறந்த பொருள் நூல் ஒன்றை எழுதினான். அந்நூலை மூன்று பெரும்பகுதிகளாகப் பிரிக்கலாம். முதற்பகுதி அரசனைப் பற்றியும்: அவனுடைய ஆட்சிக்குழுவைப் பற்றியும், அரசாங்கப் பிரிவு களைப் பற்றியும் கூறுவது. இரண்டாம் பிரிவு பலவகைக் குற்றங்களுக்கு உரிய தண்டங்களைப் பற்றிப்பேசுவது. மூன்றாம் பகுதி உள்நாட்டுச் சட்டம், அரசதந்திரம், போர் ஆகியவற்றை விளக்குவது. இப்பொருள் நூல் தாப் ரொபேன்" 21(இலங்கை) முத்துகளையும் பாண்டிய கவாடம் என்ற முத்துகளையும் உயர்த்திக் கூறியுள்ளது; மதுரையில் நெய்யப்பெற்ற மெல்லிய ஆடைகளைப்பற்றியும் குறித் துள்ளது.'22

சந்திரகுப்த மெளரியன் காலத்தில் கிரேக்க அரசியல் தூதனாய்ப் பாடலிபுரத்தில் ஒருவன் தங்கியிருந்தான். அவன் பெயர் மெகஸ்தனிஸ் என்பது. அவன் தான் கண்டவற்வற்றையும் கேட்டவற்றையும் பற்றிச் சில குறிப்புகள் எழுதி

20. History of Indian, Vol. i., p. 105. 21. தாம்பன்னி' என்று இலங்கை பண்டைக்காலத்தில் பெயர் பெற்றிருந்தது. அயல் நாட்டார் அப்பெயரைத் 'தாப் ரொபேன்’ என்று வழங்கலாயினர்.-History of Ceylon, vol. 1. part 1, (pp. 16–17) Publication of the University of Ceylon.) .

22. Ibid. p. 170.

வைத்தான். அக்குறிப்புகள் அடங்கிய நூலுக்கு இண்டிகா என்பது பெயர்.

அந்த நூலில் பாண்டிய நாட்டைப் பற்றியும் அந்த நாட்டு அரசியைப்பற்றியும் மெகஸ்தனிஸ் குறித்துள்ளான், அரசியின் படையில் ஐந்நூறு யானைகளும் நாலாயிரம் குதிரைகளும் இருந்தன என்றும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் வீரர் இருந்தனர் என்றும் , பாண்டிய நாட்டில் முத் தெடுக்கும் தொழில் நடைபெற்றது என்றும் குறித்துள்ளான்.”23

சந்திரகுப்த மெளரியன் தனது ஆட்சி இறுதியில் பத்திரபாகு என்ற சமண முனிவருடன் மைசூர் நாட்டிலுள்ள சிரவணபெள்குளா (வெள்ளைக்குளம்) என்னும் இடத்தை அடைந்தான். அங்குத் தவம் கிடந்து முத்திபெற்றான் என்று சமண நூல்கள் கூறுகின்றன."24

சந்திரகுப்தன் மகனான பிந்துசாரன் கி. மு. 301 முதல் 273 வரையில் அரசாண்டான். அவன் தமிழகம் ஒழிந்த தக்கணப் பகுதி முழுமையையும் வென்றான். பிந்துசாரன் தமிழகத்தையும் வெல்லப் படையெடுத்தான். ஆயினும் அப்படையெடுப்புப் பயனற்றுப் போயிற்று. ஏறத்தாழக் கி. மு.165 இல் கலிங்க மன்னனாய் முடிசூட்டிக்கொண்ட காரவேலன் என்பவன், தமிழ்வேந்தர்கள் தம்முள் ஒன்று பட்டுத் தனக்கு முன்னே 113 ஆண்டுகளாக வலிமை பெற்று இருந்தார்கள் என்றும் அவர்களது ஒன்றுமை தனக்கு இன்னல் விளைப்பது என்றும் எண்ணித்தான் அவர்தம் கூட்டணியை ஒழித்ததாகவும் ஒரு கல்வெட்டில் குறித்துள்ளான். இங்ஙனம் அவன் குறிப்பிட்ட தமிழரசர் ஒற்று

23. History of Ceylon, Vol. I, Part I, p. 170;

இது மதுரையை ஆண்டதாகத் திருவிளையாடல் கூறும் தடாதகைப் பிராட்டியைக் குறித்ததாகுமோ?

24. History of India vol 1, p. 113 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

மையே மெளரியர் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தியது. என்று கூறலாம்." இப்படையெடுப்பைப் பற்றிச் சங்கப் பாடல்களில் குறிப்புகள் வந்துள்ளன :

பிந்துசாரன் மகனான அசோகன் கி.மு 273 முதல் 232 வரையில் அரசாண்டான். அவனது ஆட்சியில் கலிங்க நாடு சேர்ந்தது. அவன் தமிழகம் நீங்கலாக உள்ள இந்தியா முழுமையும் அரசாண்டான். அம்மன்னன் கலிங்கப் போருக்குப் பின்பு பெளத்த சமயத்தைத் தழுவினான்; பெளத்த சமயக் கொள்கைகளைக் கற்றூண்களிலும் பாறை களிலும் குறிக்கும்படி செய்தான். அக்கல்வெட்டுகள் வடக்கே இமயமலை முதல் தெற்கே மைசூர் வரையில் பரவி யுள்ளன. அவற்றுள் இரண்டு கல்வெட்டுகளில் தமிழகத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன: சேர சோழ பாண்டிய நாடுகளில் பெளத்த சமயப் பிரசாரகரை அனுப்பிய தாகவும் மருத்துவ வசதியளிக்க உதவி செய்ததாகவும் அக் கல்வெட்டுகளில் அசோகன் குறித்துள்ளான்." அவனது பெருமுயற்சியால் ஈழநாட்டிலும் பெளத்த சமயம் பரவியது.??

25. History of India, vol. i. p. 122; sn't Gousosit தமிழரசர் ஒற்றுமையை உடைத்ததாகக் கூறும் கல்வெட்டின் காலம் கி.பி 165. தமிழரசர் கூட்டணி 113 ஆண்டுகளாக யிருந்துவந்தது என்று காரவேலன் குறித்துள் ளான்; அதாவது கி.மு 278 இல் அக்கூட்டணி ஏற்பட்ட தென்பது பொருள். பிந்துசாரன் ஆட்சிக் காலம் கி.மு. ஐ01.278, எனவே, இக்கூட்டணிக்குக் காரணம் பிந்துசாரன் மேற்கொண்ட மோரியர் படையெடுப்பேயாகும் என்று கூறுவது பொருத்தமாகும்.

26. அகநானூறு, 251, 281 புறநானூறு, 175: செந்தமிழ்ச் செல்வி vol. 15, பக். 546-5 54; vol. 16, pp. 117–119.

27. History of Ceylon, vol. I, part I. p. 47.

28. R. Sathyanatha Aiyar, History of India,

- §

vol I, p. 170.

அசோகன் குறித்த சத்திய புத்திரர் கொங்கு நாட்டை ஆண்டவராவர்." . -

அசோகனது முயற்சியால் சேர சோழ பாண்டிய நாடு களில் பெளத்த சமயப் பிரசாரகர் சென்றனர் என்பது முன்பு கூறப்பட்டதன்றோ? மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த கழுகுமலை போன்ற மலைகளில் குகைகள் இருக்கின்றன. அக்குகைகளில் பிராமி எழுத்துகளில் சில கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை கி.மு 3-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் எழுந்தவை என்று கூறலாம். எனவே, அசோகன் காலத்தில் பெளத்த பிட்சுகள் தமிழகத்தில் தங்கலாயினர் என்று கொள்ளுதல் பொருத்தமாகும்." அசோகனுக்குப் பின்பு

ஏறத்தாழக் கி.மு 188இல் புஷ்யமித்ரசுங்கன் என்பவன் மகதநாட்டு மன்னனானான். அவனுக்குப் பின்பு, அவன் மரபினர் சிறிது காலம் அரசாண்டனர். சுங்கர் ஆட்சியில் வைதிகர் செல்வாக்குப் பெற்றனர்; இராமாயண பாரத நூல்கள் திருத்தி எழுதப்பட்டன; பிரமன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சமநிலையில் வைக்கப்பட்டனர்." இராமனும் கிருஷ்ணனும் விஷ்ணுவின் அவதாரங்களாகக் கருதப்பட்டனர். ஒரு சாரர் சிவனை உயர்த்தினர், மற்றொரு சாரர் விஷ்ணுவை உயர்த்தினர்: கீதை முடிவான உருவெடுத்தது. கிருஷ்ணன் விஷ்ணுவின் முழு அவதாரம் என்று கருதப் 29, Do. History of Ancient Whondaimandalam,

pp., 4-6. . 30. Do. History of India, Vol. 1, p. 171. stop;#51 கள் தமிழ் உச்சரிப்பிற்கேற்ற தென்பிராமி எழுத்துகள். அவை: கூறும் மொழி தமிழேயாகும்.-K. A. N. Castry, A History of india, p. 87.

31. புறநானூறு போன்ற சங்க நூல்களில் சிவன், முருகன், திருமால், பலதேவன் ஆகிய நால்வரும் தோலா நல்லிசைநால்வர் ' என்று சமமாகக் கூறப்பட்டுள்ளனர். தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பட்டான்; ' பகவான்' என்று அழைப்புண்டான். அவனுடைய கதைகள் பொதுமக்களிடம் பரவின. அம்மதத்தைப் பின்பற்றியவர் 'பாகவதர் எனப்பட்டனர். அவன் வரலாற் றைக் கூறும் நூல் 'பாகவதம்’ எனப்பட்டது."32

சுங்கர்களுக்குப் பின்பு கன்வர் மரபினர் மகதநாட்டை 45 ஆண்டுகள் ஆண்டனர். அவர்களுக்குப் பின்பு ஆந்திரப் பேரரசு இந்தியாவில் ஏற்பட்டது.

கி.மு. 176 முதல் 163 வரையில் கலிங்கப் பேரரசனாய் இருந்த காரவேலன் மகதநாட்டை வென்றான்; தனக்கு முன்பு 113 ஆண்டுகளாய் இருந்த தமிழரசரது வலிமை மிகுந்த கூட்டணியை அழித்தான்."33 பாண்டியன் அவனுக்கு முத்துகளையும் யானைகளையும் பரிசாக வழங்கினான்.34

சிறந்த வடமொழிப் புலவரான பதஞ்சலி ஏறத்தாழக் கி.மு. 150இல் வாழ்ந்தவர். அவர் காஞ்சி நகரைக் குறிப் பிட்டுள்ளார். எனவே, தொண்டைமண்டலம் அப்பொழுது

32. D. A. Pai, A Monograph on the Religious Sects in India among the Hindus, pp. 30–34; usurlலிலும் கலித்தொகையிலும் திருமால் சிறப்புறப் பேசப்பட் டுள்ளமை காணலாம் .

33. R. Sathyanatha Aiyyar, Histoty of India, Vol 1, p. 178; காரவேலன் கி. மு. இரண்டாம் நூற்றாண்டின் முற் பகுதியைச் சேர்ந்தவன். அவன், தமிழரசர் 118 ஆண்டுகளாகத் தம்முள் கூட்டணி அமைத்திருந்தனர் என்று கி. மு. 165இல் கூறியுள்ளான். அஃதாவது, கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழரசர் கூட்டணி அமைத்திருந்தனர் என்பது பொருளாகும். அக்கூட்டணி மெளரியரை விரட்டவே அமைக்கப்பட்டது எனக்கொள்வது பொருத்தமாகும். தொகை நூல்களில் வரும் ஆரியர் பற்றிய போர்களில் கார வேலன் போரும் ஒன்றாகலாம்.

34. History of Ceylon, Vol. I, pat I, p. 209. டாக்டர் மா. இராசமாணிக்கனார்

                         81

சோழராட்சிக்கு உட்படாமல் தொண்டையர் என்ற திரையர் ஆட்சியில் இருந்திருத்தல் வேண்டும்."35

அலெக்ஸாண்டர் பஞ்சாப் நிலப் பகுதியைக் கைப்பற்றி மீண்ட பின்பு, அப்பகுதியையும் இன்றைய ஆப்கனிஸ்தானம், பலுஸிஸ்தானம் முதலிய பகுதிகளையும் கிரேக்கர்கள் அரசாளத் தொடங்கினர். அவர்களுள் மினான்டர் என் பவன் ஒருவன். அவன் புத்த சமயத்தின்பால் பற்றுக் கொண்டவன், நாகசேனர் என்ற பெளத்த முனிவர் அவனைப் பெளத்தனாக்க முயன்றார். அப்பொழுது அவன் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு நாகசேனர் அளித்த விடைகளும் மிலிந்த பன்ஹ (Milinda panha) என்ற பெயர் கொண்ட நூலாக வெளியானது. அது பாலி மொழியில் எழுதப் பெற்றது. அதன் காலம் ஏறத்தாழக் கி. பி. முதல் நூற்றாண்டாகும்."36

மினாண்டருக்குப் பின்பு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரையில் இந்தியாவின் வடமேற்குப் பகுதியைக் கிரேக்கர்கள் ஆண்டனர். அக்காலத்தில் (கி. மு. இரண்டாம் நூற்றாண்டில்) சாகர் அல்லது சித்தியர் என்னும் புதிய இனத்தவர் நடு ஆசியாவிலிருந்து இந்தியாவினுள் நுழைந்தனர். அவர்கள் (வட) மதுரை, தட்சசீலம் முதலிய

35. R. Sathyanatha Aiyar, Ancient History of Thondaimandalam, p 6: சங்க நூல்களில் திரையன், இளந் திரையன் பற்றிய குறிப்புகள் வந்துள்ளன.

36. மிலிந்த - மினாண்டர்; பன்ஹ - வினாக்கள். R. Sathyanatha Aiyar, History of India, vol, I, p. 229; ஏறத்தாழ இந்நூற்கேள்வி-விடைகளைப் போலவே சம்பந்தர்-புத்தர் வாதத்தில் எழுந்த வினா-விடைகள் இருத்தலைப் பெரிய புராணத்திற் காணலாம்; சம்பந்தர் புராணம்-915-924.

த-6 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

இடங்களிலிருந்து ஆளத் தொடங்கினர். அவர்கள் இராச ராசர் என்ற பட்டத்தை மேற்கொண்டனர்.37 சாகர்களுக்குப் பின்பு குஷானர் என்ற புதிய இனத்தவர் இந்தியாவிற்கு வந்து சில பகுதிகளைக் கி. மு. முதல் நூற்றாண்டில் ஆளத் தொடங்கினர். அம்மரபில் மிகச் சிறந்தவன் கனிஷ்கன். ஆயின், குஷானர் தனிப்பட்ட இனத்தவர் அல்லர். அவர்களும் சாகர் இனத்தவரே” என்று இப்பொழுது ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்; கனிஷ்கன் என்னும் சக மன்னன் கி பி. 78இல் மன்னனானான் அது முதல் சக அப்தம் (சகாப்தம்) ஆட்சிக்கு வந்தது.38 சக அப்தத்திற்கு 'சாலிவாகன' அல்லது சாதவாகன என்பது சேர்த்து வழங்கப்பட்ட காலம் கி. பி. 1272 என்பது இங்குக் கவனிக்கத்தகும். எனவே, சாலிவாகன சகாப்தம்' அல்லது 'சாதவாகன சகாப்தம்’ என்று கூறுவது பொருத்தமற்றது."39

கனிஷ்கன் கி. பி 78 முதல் 120 வரையில் அரசாண்டான். அவன் வடஇந்தியாவின் பெரும் பகுதிக்குப் பேரரசனாய் விளங்கினான். அவன் பெளத்த சமயத்தைத் தழுவினான். புத்தர் உபதேசித்த கொள்கைகள் ஹீனயான (சிறுவழி) பெளத்தத்தைச் சேர்ந்தவை. கனிஷ்கன் காலத்தில் பெருகிப் பரவிய பெளத்தம் மஹாயானம் (பெருவழி) எனப்பட்டது. பெருவழியில் புத்த விக்கிரகம் வைத்து வழிபடுதலும் சடங்குகளும் ஏற்பட்டன. பிரார்த்தனையும் சிறந்த ஒழுக்கமுடைமையும் வற்புறுத்தப்பட்டன. அறவழி காட்டிய புத்தரை மதித்துப் போற்றலே சிறுவழியின் உயிர் நாடியாய் இருந்தது."40

37. R. Sathyanatha Aiyer, History of ndia, vol. I, p. 184. 38. Ibid. pp. 185–189. 39. Ibid. P. 187. 40. தமிழில் உள்ள மணிமேகலை என்னும் பெளத்த காவியத்தில் கூறப்பட்டுள்ளது ஹீனயான பெளத்தமாகும்.

குஷானர் ஆட்சிக்குப் பிறகு ஏறத்தாழக் கி. பி. 180இல் பாரசிவர் என்று பெயர் கொண்ட அரச மரபினர் வடஇந்தி யாவின் பெரும் பகுதியை ஆளத்தொடங்கினர். இவர்கள் நாக மரபினர். இவர்கள்,பின்வந்த குப்தர்களால் கி.பி.4 ஆம் நூற்றாண்டில் ஒடுக்கப்பட்டனர்.

சாதவாகனர்

ஏறத்தாழக் கி.மு.235 முதல் கி.பி.220 வரையில் சாதவாகனர் என்ற ஆந்திர அரசர்கள் கங்கைக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். இவர்கள் சாதவாகனர் என்றும் சதகர்ணிகள் என்றும் பெயர் பெற்றனர். சதகர்ணிகள் என்பவர் தமிழில் நூற்றுவர் கன்னர்' என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளால் குறிக்கப்பெற்றனர்: ஆந்திரப் பேரரசருள் கெளதமீபுத்ர சதகர்ணி (கி. பி. 106-130) என்பவன் மிக்க புகழ் பெற்றவன். அவனது ஆட்சியில் மகாராட்டிரம், வடகொண்கானம், பீரார், கூர்ச்சரம், கத்தியவார், மாளுவம் ஆகிய நாடுகள் சேர்ந்திருந்தன. அவனுக்குப் பின்பு ஆந்திரப் பேரரசு வரவர அளவிற் சுருங்கத் தொடங் கிக் கி.பி.220இல் மறைந்தது.

ஆந்திரப் பேரரசின் தென்பகுதி மாகாணங்கனை இக்கு வாகர், பிருகத் பலாயனர், சாலங்காயனர் என்பவர் மாகாணத் தலைவராய் இருந்து ஆண்டு வந்தனர். பல்லாரி மாவட்டத்தைப் பல்லவர் என்பவர் சாதவாகனர் சார்பில் ஆண்டு வந்தனர். ஆந்திரப் பேரரசின் வன்மை குறைந்தவுடன் இம்மாகாணத் தலைவர்கள் தாம்தாம் ஆண்டு வந்த மாநிலங்கட்குத் தாமே அரசராயினர்." பல்லவர் தொண்டை

41. நூற்றுவர் கன்னர் செங்குட்டுவன் நண்பர் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.

42. R. Sathyanatha Alyar, History of India, part 1, pp. 207 & 210. நாட்டைக் கைப்பற்றி ஏறத்தாழக் கி. பி. 300 முதல் ஆளத் தொடங்கினர் எனலாம். காஞ்சி அவர்தம் தலைநகரமாயிருந்தது.

சமயநிலை

பிராமணங்களின் காலத்தில் வேதியர் தமிழகத்தில் நுழைந்தனர். அவர்தம் வடமொழி தமிழகத்தில் பரவலாயிற்று அரசர்கள் வேதவேள்விகள் செய்யத் தொடங்கினர். காலப்போக்கில் சிவன், திருமால் முதலிய தேவர்கட்குக் கோவில்கள் எழுந்தன; விழாக்களும் பூசைகளும் நடந்தன. ஒவியம், சிற்பம், இசை, நடனம் முதலிய நுண்கலைகள் வளர்ச்சி பெற்றன. பெளத்த சமய ஆண் பெண் துறவிகளும், சமண சமய ஆண் பெண் துறவிகளும் தமிழகத்தில் மடங்களில் தங்கிச் சமயப் பிரசாரம் செய்தனர். பலவகைச் சமயங்கள் இருந்தபோதிலும், அவை வெளிப்படையாகப் பூசலிடவில்லை. தமிழர் தத்தம் விருப்பம்போல அச்சமயங்களைத் தழுவினர்.

பெளத்த சமயம் சாதவாகனர் ஆட்சியில் சிறந்த முறையில் ஆந்திர நாட்டில் வளர்ச்சி பெற்றது. ஆந்திர நாட்டுத் தலைநகரான அமராவதியில் பெரிய கோவில்கள் கட்டப் பட்டன. அவை ஏறத்தாழக் கி. மு. 200 முதல் கி. பி. 200 வரையில் கட்டப்பட்டவையாகும். அவற்றில் புத்தருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்கள் கண்டு வியக்கத் தக்கவை.[7]

3. இலங்கை வரலாறு

தமிழகத்திற்கு ஏறத்தாழ முப்பது கல் தொலைவில் உள்ள கடல் கடந்த நாடு இலங்கையாகும். அது ஒரு தீவு. அது வடக்குத் தெற்காக 270 கல் நீளமும் கிழக்கு மேற்காக 140 கல் அகலமும் உடையது. அதன் வட பகுதியில் யாழ்ப்பாண நாடு அமைந்துள்ளது. அதனைச் சுற்றிலும் பல சிறிய தீவுகள் அமைந்துள்ளன. ஏறத்தாழக் கி. மு. ஆறு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் விசயன் என்பவன் வட இந்தியாவிலிருந்து வந்து இலங்கை அரசனாய் முடி சூடிக் கொண்டான்.

இந்திய இலக்கியங்களுள் இலங்கையைப் பற்றிக் குறிக்கும் முதல் நூல் கெளடில்யன் (சாணக்கியன்) எழுதிய பொருள்நூலேயாகும். அதே காலத்தில் வாழ்ந்த மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞனும் இலங்கையைப் பற்றி எழுதியுள்ளான். கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அசோகன் தன் மகனான மகேந்திரனையும் தன் மகளான சங்கமித்திரையையும் பெளத்த சமயத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினான்.

அசோக மன்னன் காலத்தில் இலங்கை அரசனாய் இருந்தவன் தேவனாம்பிரியதிஸ்ஸன் என்பவன். அவனுக்குப் பிறகு அவன் பின்னவரான உத்தியன், மகாசிவன், சூரதிஸ்ஸன் ஆகிய மூவரும் (ஒவ்வொருவரும் ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் வீதம்) முப்பது ஆண்டுகள் அரசாண்டனர். சூரதிஸ்ஸன் ஆட்சிக் காலத்தில் கி. மு. 3 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் சேனன், குத்தகன் என்ற தமிழர் (தமிழகக் குதிரை வாணிகர்) இருவர் இலங்கையைக் கைப்பற்றி இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினர். அவர்கள் கதம்ப ஆற்றின் போக்கை இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்திற்கு அண்மையில் திருப்பி விட்டனர்.

தேவனாம்பிரியதிஸ்ஸனுடைய தம்பியான அசேலன் என்பவன் தமிழரசர் இருவரையும் முறியடித்துப் பத்து ஆண்டுகள் நாட்டை ஆண்டான். அக்காலத்தில் (கி. மு. 2 ஆம் நூற்றாண்டில்) ஏழாரன் என்ற தமிழன் இலங்கையைக் கைப்பற்றி ஏறத்தாழ நாற்பத்து நான்கு ஆண்டுகள் அரசாண்டான் [8] பின்னர் அவன் துட்டகாமணி என்ற இலங்கையரசனாற் போரிற் கொல்லப்பட்டான். ஏாழாரன் மநுநீதிச் சோழனைப்போல நீதி முறையை நிலைநாட்டத் தன் மகனைக் கொன்றான், எல்லாச் சமயங்களையும் சமமாக மதித்தான் என்று பெளத்தர்கள் எழுதி வைத்துள்ள வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

ஏறத்தாழக் கி. மு. 103 முதல் கி. மு. 89 வரையில் இலங்கையில் மீண்டும் தமிழர் ஆட்சி ஏற்பட்டது. புலஹத்தன், பாகியன், பனைய மாறன், பிளைய மாறன், தாட்திகன் என்ற தமிழர் ஐவரும் இலங்கையை ஆண்டனர். பின்னர்க் கி. பி. 43 முதல் 52 வரையில் சந்தமுக சிவன் என்ற சிங்கள அரசன் நாட்டை ஆண்டான். அவன் தமிழதேவி என்ற தமிழரசன் மகளை மணந்தான். அவன் மகனும் ஒரு தமிழரசன் மகளை மணந்து கொண்டான்.

வசபன் என்ற சிங்கள வேந்தன் கி. பி. 67 முதல் 111 வரை அரசாண்டான். அவன் சோழன் வலிமை பெறுவதை அறிந்து இலங்கையில் தக்க பாதுகாப்புகளை மேற்கொண்டான். வசபன் மகனான வங்கநாசிகதிஸ்ஸன் (கி பி. 111-114) காலத்தில் சோழ அரசன் (கரிகாலன்?) படையெடுப்பு இலங்கை மீது நடைபெற்றது. சோழன் பன்னீராயிரம் சிங்களவரைச் சிறை செய்து சோணாட்டுக்குக் கொண்டு சென்றான்; அவர்களைக் கொண்டு காவிரிக்குக் கரையிடு வித்தான். [9]

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வரையப்பெற்ற புண்ணிய குமாரனுடைய மேல்பாட்டுச் செப்பேடுகளிலும், கங்கை கொண்ட சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும், வீரராசேந்திர சோழனுடைய கன்னியாகுமரிக் கல்வெட்டிலும் கரிகாலன் காவிரிக்குக்கரை அமைத்து அதன் வெள்ளத்தைத் தடுத்து நாட்டிற்கு நலம் புரிந்தமை கூறப்பட்டுள்ளது. ஆதித்தன் முதற் பராந்தகன் ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் சில, காவிரிக் கரையைக் 'கரிகாலக்கரை' என்று கூறுகின்றன. இக்கல்வெட்டுகளால் அவ்வேந்தர்களின் காலமாகிய கி.பி 9, 10-ஆம் நூற்றாண்டுகளில் காவிரியாற்றின் வட கரையைக் 'கரிகாலக் கரை' என்றே மக்கள் வழங்கிவந்தனர் என்பது தெள்ளிதிற் புலனாதல் காண்க. இதுபற்றியே இவனைப் "பொன்னிக் கரை கண்ட பூபதி" என்று கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவிற் புகழ்ந்துள்ளனர். [10]

வங்க நாசிக திஸ்ஸன் மகனே சிலப்பதிகாரத்திற் குறிக்கப் பெற்ற 'கடல்சூழ் இலங்கைக் கயவாகு' வேந்தன். அவனை முதலாம் கஜபாஹு என்று இலங்கை வரலாறு கூறும். அவன் ஆட்சிக் காலம் கி.பி. 114-136. அவன் காலத்தில் இலங்கையில் இரண்டு அரச மரபின் கிளையினர் பிரிந்திருந்தனர். நாடு முழுமையும் தன் ஆட்சியிற் கொண்டுவர எண்ணிய கயவாகு, மற்றொரு கிளையின் அரச மகளை மணந்தான்; இந்த மணவுறவினால் இலங்கை முழுமைக்கும் இறைவனானான்.

கயவாகு சோழ நாட்டின்மீது படையெடுத்துச் சென்று, பன்னீராயிரம் தமிழரைச் சிறை செய்து இலங்கைக்குக் கொண்டுவந்தான் என்றும், பத்தினியின் காற் சிலம்பைக் கொண்டு வந்தான் என்றும் இலங்கைக் கதைகளும் நாட்டுப் பாடல்களும் கூறுகின்றன. கயவாகு சேரன் செங்குட்டுவனுக்கு நண்பன் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. சோழனுடன் பகைமை கொண்ட கயவாகு சேரனுடன் சேர்ந்ததில் வியப்பில்லை. கயவாகு இலங்கையில் பத்தினி வணக்கத்தை ஏற்படுத்தினான் என்று இலங்கைக் கதைகளும் நாட்டுப் பாடல்களும் நவில்கின்றன. பத்தினி வணக்கம் இன்றும் சிங்களவர் சமயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பது இங்கு அறியத்தகும்.[11]

அபயநாகன் என்ற சிங்கள இளங்கோ தென் இந்தியா சென்று, படையுடன் மீண்டுவந்து, தன் தமையனைக் கொன்று, கி. பி. 230 இல் அரியணை ஏறினான்.[12]

ஈழத்து வாணிகம்

இலங்கை நாட்டுக் கதைகளில் வணிகர் கடல் கடந்து பல நாடுகட்குச் சென்று மீண்டமை கூறப்படுகிறது. வணிகர் சங்கங்கள் பிராமி கல்வெட்டுகளிற் குறிக்கப் பெற்றுள்ளன. இவற்றை நோக்க, இலங்கை மிகப்பழைய காலத்திலிருந்தே கடல் வாணிகத்தை மேற்கொண்டிருந்தது என்று கூறலாம்.

பலவகைப்பட்ட முத்துகள் இலங்கைத் தீவிற் கிடைப்பதாகச் சாணக்கியன் தனது பொருள் நூலில் எழுதியுள்ளான். அக்காலத்தில் இலங்கையின் வடமேற்குக் கடலில் முத்துகள் கிடைத்தன; முத்துகள் கிடைத்த இடத்திற்கும் வடக்கேயுள்ள கடலில் சங்குகள் மிகுதியாகக் கிடைத்தன. தென் இலங்கையில் உள்ள மலை நாட்டில் விலையுயர்ந்த மணிகள் கிடைத்தன. இக்காரணத்தால் இலங்கைத் தீவு ‘இரத்தினத் தீவு’ என்று பழைய நூல்களில் எழுதப் பெற்றது.

இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட பொருள்களுக்கு ஈடாக அயல்நாட்டார் பொன், வெள்ளி, செம்பு, கண்ணாடி, பவழம், பலவகைப்பட்ட போலி இரத்தினங்கள், உயர்ந்த வகை மட்பாண்டங்கள், மது வகைகள், குதிரைகள் முதலியவற்றை இலங்கைக்குக் கொடுத்தனர். முதலில் இலங்கையோடு குதிரை வாணிகம் செய்தவர் தமிழரேயாவர்.

அசோகன் காலத்து இலங்கை இறைவனான தேவனாம் பிரிய திஸ்ஸன் அசோகனிடம் ஒரு தூதுக் குழுவை அனுப்பினான். அவருள் ஒருவன் வணிகர் தலைவன். அசோகன் அத்தலைவர்க்குச் ‘செட்டி’ என்ற பட்டத்தை வழங்கினான். பிராமிக் கல்வெட்டுகளில் தமிழ் வணிகர் குறிக்கப்பெற்றுள்ளனர்.

உள்நாட்டு வாணிகமும் சிறப்புற நடைபெற்றது. தலை நகரான அநுராதபுரத்தின் நான்கு வாயில்கட்கு அருகில் வணிக இடங்கள் இருந்தன. அவை நியமம் (வணிக இடங்கள்) என்று பெயர் பெற்றன. உள்நாட்டு வணிக இடங்கள் நகரங்கள் எனப்பட்டன.[13]

ஹிப்பலாஸ் (Hippalos) என்ற கிரேக்க அறிஞன் பருவக் காற்றுகளின் துணையைக் கொண்டு செங்கடலிலிருந்து இந்தியப் பெருங்கடல் வழியாக இந்தியாவிற்குக் கப்பல்களை எளிதில் செலுத்தலாம் என்று கி.மு.முதல் நூற்றாண்டில் கண்டறிந்தான். இக்கண்டு பிடிப்பைக் கிரேக்கர்களும் ரோமர்களும் பயன்படுத்திக்கொண்டனர். அது முதல், இலங்கைக்கும் மேல் நாடுகளுக்கும் நேரான கடல் வாணிகத் தொடர்பு ஏற்பட்டது. அதற்கு முன்பு அத் தொடர்பு ஏற்படவில்லை. ஆயினும் தமிழகத்துத் துறைமுக நகரங்களிலிருந்து இலங்கைப் பொருள்கள் மேல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. தமிழ் வணிகர் ஆமை ஒடுகள், மெல்லிய ஆடைகள் முதலிய ஈழ நாட்டுப் பொருள்களை வாங்கி அயல் நாடுகளுக்கு அனுப்பி வந்தனர்.

பிளைநி (கி.பி. 24-79), பெரிப்ளூஸ் (கி.பி.60) நூலின் ஆசிரியர் ஆகிய மேனாட்டு யாத்திரிகர் இலங்கையைப் பற்றி நன்கு எழுதியுள்ளனர். கிளாடியஸ் சீசர் (கி.பி. 41-54) காலத்தில் சிங்கள அரசனால் அனுப்பப்பட்ட அரசியல் தூதர் நால்வர் ரோம் நகரத்திற்குச் சென்றனர். இங்ஙனம் இலங்கை தனது கடல் வாணிகச் சிறப்பால் அயல் நாடுகளுக்குத் தெரியலாயிற்று. கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இந்தியாவையும் இலங்கையையும் அறிந்த தாலமி என்ற மேனாட்டு யாத்திரிகரும் இலங்கையைப் பற்றி எழுதி யுள்ளனர். [14] தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

   இங்ஙனம் சங்க காலத்தில் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் அரசியலிலும் வாணிகத்திலும் உறவு இருந்த காரணத்தாற்றான் இலங்கைத் தமிழ்ப்புலவர் ஒருவர் தமிழகத்திற்கு வந்து தமிழிற் சில பாக்களைப் பாடினார். அவர் பெயர் ஈழத்துப் பூதன் தேவனார் என்பது. அவர் பாடிய பாக்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.

51. அகநானூறு, 88, 231, 307; குறுந்தொகை, 189, 343, 360; நற்றிணை, 366.


  1. R. Sathyanatha Ayyar, History of India. voiI, pp. 222–223.
  2. P. T. S. Ayyangar, History of the Tamils, pp. 304–305.
  3. கரும்பு, வெல்லம் சேர்க்கப்பட்ட புளி ஏற்றுமதி செய்யப்பட்டது என்று மதுரைக் காஞ்சி (வரி 318) கூறியுள்ளது.
  4. 8. History of Ceylon, vol. 1, Part, I. p. 213.
  5. 9. Ibid. pp. 395–309.
  6. 10. Dr. S. A. G. Hussain, The History of the Pandya Country, p. 18.
  7. 43. Ibid. pp. 233—234.
  8. 44. History of Ceylon, Vol. 1, part i. p. 144
  9. 45. Ibid pp. 175–182.
  10. 46. டி.வி.சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் சரித்திரம், மூன்றாம் பகுதி, பக். 84-86,
  11. 47. History of Ceylon, Vol. I, Part 1, pp. 183-185.
  12. 48. Ibid. pp 187-188.
  13. 49 ibid. pp. 224–226.
  14. 50. Ibid. pp. 16–17.