தமிழ்மொழி இலக்கிய வரலாறு/தொல்காப்பியம்

7. தொல்காப்பியம்
(1) தொல்காப்பியத்தின் பழைமை

சங்க நூல்கள்

     தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, அக நானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன சங்க நூல்கள் என்பதும், சங்ககாலம் என்பது ஏறத்தாழக் கி.பி. 300 உடன் முடிவு பெற்றது என்பதும், அதன் தொடக்கம் கூறற்கியலாப் பழைமை வாய்ந்தது என்பதும் முன்னரே கூறப்பட்டவை. இப்பரந்து பட்ட காலத்தில் பல இலக்கண நூல்களும் இலக்கிய நூல்களும் தோன்றின. அழியக்கூடிய பனையோலை ஏடுகளில் எழுதப்பட்ட காரணத்தாலும், கடல் கோள்கள் போன்ற பேரழிவுகளினாலும் பல நூல்கள் அழிந்து போயின; போனவை போக, மேலே கூறப்பெற்ற நூல்கள் இன்று சங்க நூல்கள்’ என்னும் பெயரில் உயிர் வாழ்கின்றன. காலப்போக்கில் மறைந்தொழிந்த நூல்களின் பெயர்கள் சில தொல்காப்பிய உரை, சிலப்பதிகார உரை, யாப்பருங்கல உரை முதலிய உரைகளிற் காணக் கிடக்கின்றன.

சங்ககாலத் தமிழ்

    தொல்காப்பியர் தமக்கு முற்பட்ட இலக்கண ஆசிரியர் பலர் இருந்தனர் என்பதை, என்ப' என்மனார் புலவர்' எனத் தம் நூலில் பல இடங்களில் குறித்துள்ளார்: "யாப்பென மொழிய யாப்பறி புலவர் என்றாற் போலவும். பல இடங்களில் கூறியுள்ளார்; ஆயின் வடசொற்கள் தமிழில் வழங்குவதற்கு விதிகூறும் இரண்டு இடங்களிலும்,                தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

’ என்ப" என்மனார்' என்னும் சொற்களை ஆளாததை நோக்க, அவர்க்கு முன்பு இருந்த இலக்கண ஆசிரியர்கள் காலத்தில் பிறமொழிச் சொற்கள் தமிழிற் புகவில்லை என்பது தெரிகிறது; தெரியவே, தமிழ் தனித்தியங்கிய காலம் இருந்தது என்பது தெளிவாகிறதன்றோ?

   சங்ககாலம் மிகப் பரந்துபட்டது என்பது முன்பே கூறப்பெற்றது. இதன் முற்பகுதியில் (தொல்காப்பியத்திற்கு முன்பு) வடவர் கூட்டுறவு தமிழகத்தில் இல்லை. எனவே, தொல்காப்பியத்திலும் பிற சங்க நூல்களிலுமே வட சொற்கள் தமிழிற் கலந்தன. பெரும்பாலும் சமயத் தொடர்பான சொற்கள் இப்பிறமொழிச் சொற்களாகவே காணப்படுகின்றன. எனவே, பிறமொழிச் சொற்களைச் சிலவாகக் கொண்ட செய்யுட்களும் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பதை இங்கு அறிதல் நலம். வடநாட்டுப் புராணக் கதைகளும் புத்த சாதகக் கதைகளும் சில தொகை நூற்பாக்களிலும், மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பரந்துபட்ட சங்ககாலத்தின் இறுதியில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டவை. இந்த உண்மைகளை உளங்கொள்ளின் சங்ககாலத்தின் முற்பகுதி தமிழ் மட்டும் வழங்கிய பகுதி என்பதும், பிற்பகுதி தமிழோடு பிறமொழிகளும் கலந்து வழங்கிய பகுதி என்பதும் நன்கு அறியப்படும். இவ்வுண்மையைத் தொல்காப்பியத்திலேயே காணலாம்.
தொல்காப்பியம்
    தொல்காப்பியம், இன்றுள்ள சங்க நூல்களுள் காலத்தால் முற்பட்டது என்பது பலர் கருத்து. முற்காலத்திலிருந்த தமிழ் நூல் வகைகளையும் செய்யுள் வகைகளையும் உலக வழக்காகிய நெறிமுறைகளையும் அறிவதற்குச் சிறந்த கருவியாக உள்ளது இந்நூலே என்பது அறிஞர் கருத்து. இந்நூல் எழுத்து, சொல் , பொருள் என்னும் மூன்றையும் பற்றி எடுத்துக் கூறுவது. இதன்கண் உள்ள விதிகளைக் கூர்ந்து நோக்கின், அவற்றுக்கெல்லாம் அடிப் 

படையாகத் தொல்காப்பியர்க்கு முன்னரே மிகப்பல இலக்கி யங்களும் இலக்கண நூல்களும் தமிழ்மொழியில் நிலைபெற்று இருத்தல் வேண்டும் என்பது அறிவுடையோர்க்கு நன்கு புலனாகும். தொல்காப்பியர் தம் காலத்தனவும் தமக்கு முன்னர் எழுந்தனவும் ஆகிய இலக்கண இலக்கிய நூல்களை நன்கு ஆராய்ந்தே அவற்றின் இயல்புகள் அனைத்தும் விளங்கத் தம் நூலை இயற்றினார் என்பது தெளிவாகும்.

தொல்காப்பியச் சூத்திரங்களுள் ஏறத்தாழ இருநூற்று அறுபது இடங்களில் தொல்காப்பியர், தமக்கு முன்பு இருந்தவரும் தம் காலத்தவருமான இலக்கண ஆசிரியர் பலரைப் பலபடியாகக் குறிப்பிட்டுள்ளார்

(1) என்ப'- மொழிப' என்னும் முறைமை தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 147 இடங்களில் வந்துள்ளன.

(2) என்மனார் புலவர்' என்பது சுமார் 8.8 இடங்களில் வந்துள்ளது.

(3) வரையார்’ என்பது 15 இடங்களில் வந்துள்ளது. (4) பிற சிறப்புடன் வந்துள்ள தொடர்கள் ஏறத்தாழ முப்பதாகும். இத்தொடர்கள் தாம் சுவையுடையவை. ஆதலின்,

அவற்றை அதிகார முறைப்படி ஒன்றன்பின் ஒன்றாக இங்குக் காண்போம்:

1. எழுத்ததிகாரத்தில்1. நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே நூற்பா 7 2. ஒத்த தென்ப உணரு மோரே' ** 193. 3 செவ்வி தென்ப சிறந்திசி னோரே' ’’ 295 4. புகரின்று என்மனார் புலமை யோரே' ** 369

11. சொல்லதிகாரத்தில்1. உளவென மொழிப உணர்ந்திசி னோரே' 116 2 . வழுக்கின் றென்ப வயங்கி யோரே' ** 119 3. விளியொடு கொள்ப தெளியு மோரே' "" 153 4. ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே' ’’ 15 8. . தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

11. பொருளதிகாரத்தில்- நூற்பா 1. இயல்பென மொழிய இயல்புணர்க் தோரே " 4 2. புலனன்குணர்ந்த புலமை யோரே' ** 14 3. கொள்ளும் என்ப குறியறிந் தோரே' • 50 4. நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென

வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே' ** 315 5. இடையும் வரையார் தொடையுணர்ந்

தோரே' 371 6. வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர்' 388 7. யாப்பென மொழிப யாப்பறி புலவர்' " ’’ 380 8. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர்' ** 384 9. பொழிப்பென மொழிதல் புலவர் ஆறே 403 10. ஒன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே' * * 406 11. தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும் 407 12. நூல்கவில் புலவர் நுவன்றறைந் தனரே 4.57

13. $ ஒத்தென மொழிப உயர்மொழிப் புலவர்' 472 14. தோன்றுமொழிப் புலவரது பிண்டம் என்ப 474

15. ஆங்கென மொழிய அறிந்திசி னோரே' 514 16. தோலென மொழிப தொன்னெறிப் புலவர் 539 17. புலனென மொழிய புலனுணர்ந் தோரே 542 18. நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்

தினரே ’’ • * 571 19. நூலென மொழிய நுணங்குமொழிப்

புலவர்' " ””644

20. சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர் 646

சுவை பயக்கும் இத் தொடர்களை, அவையுள்ள இயல் களையும் நூற்பாக்களையும் கொண்டு ஆராய்ந்து முடிபு கூறல் அழகிதாகும். இத் தொடர்கள் பலதுறைப் புலவர்களைச் சுட்டுதல் தெற்றென விளங்குதல் காண்க: இவற்றை நோக்கும் அறிஞர் சிறப்பாகப் பொருளதிகாரத்தில் வரும்

4, 5, 7, 8, 9, 11, 12, 14, 15, 16, 20 ஆம் எண்கள் சுட்டும் தொடர்களைக் காண்கையில், மேற் கூறப்பெற்ற உண்மையை எளிதில் உணர்வர்.

தொல்காப்பியத்தின் பழைமை

தொல்காப்பியம்-எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் என்பவற்றிற்குக் காலத்தாற் முற்பட்டது என்பது பலர் கொள்கை, பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் தொல்காப்பியம் மேற்சொல்லப் பெற்ற நூல்களுக்குக் காலத் தால் பிந்தியது என்று கூறியுள்ளனர். இவர் கூறியுள்ள காரணம் ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்ந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சியாளர் வித்துவான் க. வெள்ளை வாரணனார் தமது 'தொல் காப்பியம்’ என்னும் ஆராய்ச்சி நூலில் மறுத்துள்ளார் (பக். 6-127,

இலக்கண நூல் செய்யும் ஆசிரியன் தன் காலத்தில் உள்ள எல்லா இலக்கிய நூல்களையும் இலக்கண நூல்களையும் நன்கு ஆராய்ந்த பின்பே இலக்கண விதிகளை அமைப்பது இயல்பு: உலக வழக்கில் உள்ள சொற்கள், செய்யுள் வழக்கிலுள்ள சொற்கள் ஆகிய இவற்றை ஆராய்ந்து விதி கூறுதல் இயல்பாகும். தொல்காப்பியர் புறநானூறு முதலிய நூல்களுக்குப் பிற்பட்டவராயின், அவற்றின் கண் காணப்படும் வழக்காறுகளை உள்ளத்துள் வைத்தே நூல் செய்திருப்பார். அவர் மேற்கூறப்பெற்ற நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டவர் ஆயின், பின் நூல் களிலுள்ள மாறுதல்களுக்கு அவர் பொறுப்பாளியாகார். இந்த உண்மையை நினைவிற் கொண்டு கீழ்வரும் செய்தி களைக் காண்போம்:

அகச்சான்றுகள்

(1) சகரமெய், அ ஐ ஒள என்னும் மூன்று உயிரோடும் கூடி மொழிக்கு முதலில் வராது என்பது தொல்காப்பிய விதி. 9 6 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

'சகரக் கிளவியும் அவற்றோரற்றே

அஐ ஒளவெனும் மூன்றலங் கடையே.'

(எழுத்து நூற்பா 82) இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில் சடை , சமம்", சகடம் என்னும் சொற்கள் வந்துள்ளன. (செ. 1, 14, 10:) பத்துப்பாட்டில் சவட்டி’, ‘சலம்' , 'சந்து' என்பவை இடம் பெற்றுள்ளன) பெரும்பாண், வரி 217; மதுரைக் காஞ்சி. வரி 112; மலையடு, வரி, 392) : பதிற்றுப்பத்தில் சவட்டும்' என்பது வந்துள்ளது (செ. 84). திருக்குறளில் சமம்' , ' சமன்’ என்பன வந்துள்ளன (குறள் 99, 112). - (2) ஞகர மெய் ஆ, ஏ, ஓ, என்னும் மூன்று உயிரோடு மட்டுமே கூடி மொழிக்கு முதலில் வரும் என்பது தொல்காப்பிய விதி.

'ஆ எஒ, எனு மூவுயிர் ஞகாரத் துரிய (எழுத்து. 64) இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில் ஞமன்', ஞமலி ", திமிறு' என ஞகர மெய் அகர இகரத்துடன் கூடி முதலில் வந்துள்ளது (செ. 6, 74. 93); அகநானூற்றில் திமிறு ஞமலி என்பன இடம் பெற்றுள்ளன (செ. 59, 140 , 388); பதிற்றுப்பத்தில் ஞரல’ என்பது வந்துள்ளது (செ. 30) . பட்டினப்பாலையில் ஞமலி என்பது காணப்படுகின்றது (வரி 140) .

(3) யகரமெய் ஆ என்னும் உயிரோடு மட்டும் மொழிக்கு முதலில் வரும். ஏனைய பதினொரு உயிர்களோடும் மொழிக்கு முதலில் வராது என்பது தொல்காப்பிய விதி - -

ஆவோ டல்லது யகர முதலாது." (எழுத்து. 65) இவ்விதிக்கு மாறாக யவனர்' என்னும் சொல் சங்க இலக்கியங்களில் வழக்குப் பெற்றுள்ளது.'

1. புறநானூறு, 56;பெரும்பாண்ற்றுப்படை, வரி 316; முல்லைப்பாட்டு, வரி 61; நெடுநல்வாடை, வரி 101; சிலப்பதிகாரம், காதை 5 வரி 10: காதை 14 வரி 67; காதை 29, வரி 25: மணிமேகலை, காதை 19 வரி 108 முதலியன.

(4) தொல்காப்பியத்தில் கூறப்பட்டுப் பிற்காலத்தில் வழக்கொழிந்த சொற்கள் சில; அவை சுட்டு முதலாகிய இகர இறுதியும் என்று தொடங்கும் நூற்பாவில் (எழுத்து, 159) குறிக்கப்பட்ட அதோளி' (அவ்விடம்), "இதோளி', உதோளி", எதோளி' என்னும் சொற்கள். அவை, இன்றுள்ள சங்க நூற் பாடல்களில் இடம் பெற்றில என்பது கவனிக்கத் தக்கது.

(5) நான்கு என்னும் எண்ணுப் பெயர் பிற சொற்களோடு சேரும்போது எவ்வாறு புணரும், எவ்வெவ்வாறு திரியும் என்பன பல நூற்பாக்களில் கூறப்பட்டுள்ளன. (நூற்பா 442, 453, 462, 467, 475). ஆயின், அக நானூற்றில், நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்", (செ.104) என்னும் வரியில் நான்கு-நால்கு' என்று திரிந்துள்ளமைக்குத் தொல்காப்பியத்துள் விதி கூறப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.

(6) தொல்காப்பியர் ஒன்று முதல் பத்து, நூறு, ஆயிரம், நூறாயிரம் வரையில் உள்ள எண்களுக்குப் புணர்ச்சி விதி கூறியுள்ளார் (எழுத்து, 488-471), நூறு நூறாயிரமாகிய கோடி என்னும் எண்ணினைப் பற்றி அவர் யாண்டும் கூறவில்லை. இதனால் அவர் காலத்தில் கோடி' என்னும் எண் வழக்கில் இல்லை என்பது தெரிகிறதன்றோ? ஆயின், கோடி' என்னும் எண் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

ஒன்றுபத் தடுக்கிய கோடி கடையிரீஇ

பெருமைத் தாககின் ஆயுள் தானே.” (செ. 18) திருக்குறளில்,

கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.”

(குறள் 377)

என வந்துள்ளமை காண்க.

த-7 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

(7) 'கள்' என்னும் பன்மை விகுதி அஃறிணையில் வரும் என்பது தொல்காப்பிய விதி.

கள்ளொடு சிவனும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பலவறி சொற்கே’’ (சொல், 169)

இவ்விதிக்கு மாறாகத் திருக்குறளில் மற்றையவர்கள். பூரியர்கள் ' என உயர்திணைப் பன்மையில் 'கள்' வந்துள்ளது (குறள் 263, 919) . கலித்தொகையில் "ஐவர்கள்' எனக் கள்” (செ. 26) விகுதி உயர்திணையில் வந்துள்ளது.

(8) அன்’ விகுதி ஆண்பால் படர்க்கைக்கே உரியது என்பது தொல்காப்பிய விதி.

அன்ஆன் அள்ஆள் என்னும் நான்கும் ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.'

(சொல். 205)

இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில், உரைத்தனன் யானாக', 'அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே’’ (செ. 136, 201) என அன்’ விகுதி தன்மை ஒருமையில் இடம் பெற்றுள்ளது: அகநானூற்றில் நினக்கியான் கிளைஞன் அல்லனோ , 'யான் வாழலனே' , மிகுதி கண்டன்றோ இலனே', நனி அறிந்தன்றோ இலனே’’ (செ. 342, 362, 379, 384) என வழங்கப்பெற்றுள்ளது. நற்றிணையில் கூறுவன் வாழி தோழி , உள்ளினன் அல்லனோ யானே". (செ. 233, 826) என வந்துள்ளது; குறுந்தொகையில், அளியள் யானே' , ' நீயலன் யான் என ’, யானிழந் தனனே', யான் கண்டனனோ விலனோ (செ. 30, 36 , 43, 311) என வழங்கப் பெற். றுள்ளது. -

(9) பலர்பால் படர்க்கையில் வழங்கும் 'மார் ஈற்று

முற்றுச் சொல் பெயர் கொள்ளாது வினை கொண்டு முடியும் என்பது தொல்காப்பிய விதி. .

மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை

காலக் கிளவியொடு முடியும் என்ப. '"

(சொல், 207)

இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில், 'உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே (செ. 362) என மார்’ ஈறு பெயர் கொண்டு முடிந்துள்ளமை காணத்தகும். இதுவன்றிப் பாடன்மார் எமர் (செ. 375) எனப் புறநானூற்றிலும், காணன்மார் எமர்" (செ. 64) என நற்றிணை யிலும் எதிர்மறையாய் நின்று பெயர் கொண்டு முடிந்துள்ள மையும் காண்க,

(10) வியங்கோள் வினை, முன்னிலை தன்மை ஆகிய இரண்டு இடங்களிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி.

முன்னிலை தன்மை யாயி ரிடத்தொடு மன்னாதாகும் வியங்கோட் கிளவி, '

(சொல் : 226) இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில், 'நடுக்கின்றி நிலீஇயரோ" (செ. 2) என முன்னிலையில் வியங்கோள் வினை இடம் பெற்றுள்ளது.

(11) மோ' என்னும் அசை முன்னிலைக்கு உரியது என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

மியாயிக மோமதி விகுஞ்சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்"

(சொல். 274) இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில், 'சென்மோ பெருமளம் விழவுடை நாட்டென' (செ. 381) எனமோ" என்னும் அசை தன்மைக்கண் ஆட்சி பெற்றுள்ளது.

(12) கைக்கிளை முதல் பெருந்திணை இறுதியாகக் கூறப்பட்ட அகப்பொருள் செய்திகள் கலிப்பாவிலும் தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பரிபாடலிலும் பாடுதற்குச் சிறப்பு உரிமை உடையன என்பது தொல்காப்பியர் கருத்து.

     "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
      பாடல் சான்ற புலனெறி வழக்கம் 
      கலியே பரிபாட் டாயிரு பாவினும் 
      உரிய தாகும் என்மனார் புலவர் '
                                  (பொருள் அதிகாரம், 56) 
      இவ்விதிக்கு மாறாகச் சங்கத் தொகை நூல்களில் அகப் பொருள் செய்திகள் பெரும்பாலும் அகவற்பாவிலேயே அமைந்துள்ளன என்பது கவனிக்கத்தகும். தொல்காப்பியர் சங்கத் தொகை நூல்களுக்குப் பிற்பட்டவராயின், இங்ங்னம் நூற்பா செய்திருப்பாரோ என்பது எண்ணத் தகுவதாகும்.
   (13) தொல்காப்பியத்தில் சேயோன், மாயோன், வருணன், வேந்தன் என்னும் நானிலத் தெய்வங்களையும் கொற்றவையையும் எல்லா நிலத்திற்கும் உரியதாகிய கடவுளையும் குறித்துள்ளார் (பொருள் 5, 85), ஆயின், தொகை நூல்களில் முருகன், சிவன், கண்ணன், பலதேவன் ஆகிய நால்வரும் சிறப்புடைக் கடவுளராகப் போற்றப் பெற்றனர் (புறநானூறு 56, 58 முதலியன). ஞாயிறும் திங்களும் மழையும் தெய்வங்களாகச் சிலப்பதிகாரத்தில் போற்றப்பட்டன. காமன் வழிபாடும் இருந்தது (சிலம்பு, காதை 9, வரி 60) .

(14) பரிபாடல் அகப்பொருள் பற்றி வரும் என்றே தொல்காப்பியர் கூறியுள்ளார்.

           "கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு
            செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் 
            காமங் கண்ணிய நிலைமைத் தாகும்."
                                                        (செய், 121)
   இவ்விதிக்கு மாறாக இன்றுள்ள பரிபாடல்கள் பல கடவுள் வாழ்த்துப்பற்றி அமைந்துள்ளமை நோக்கத் தகும். 

'இதனால், கடவுள் வாழ்த்துக் கூறிய கடைச்சங்க காலப் பரிபாடற் செய்யுட்தொகை நூலுக்கு இவர் (தொல்காப்பி யர்) இலக்கணம் முந்தியதாதல் ஒருதலை........உரைகாரர்கள் கடவுள் வாழ்த்தைக் கடைச் சங்கப் பரிபாடலுட் கண்டு அதற்கிலக்கணம் தொல்காப்பியத்துள் அமைத்தற்குப் பல் வகையானும் முயன்று இடர்ப்படுதல் இதனால் உணரலாகும்...... தொல்காப்பியனார் இப்பரிபாடற்குப் பிற்பட்டவ ராயின், தம் இலக்கணத்து இங்ஙனம் காமங் கண்ணாத கடவுள் வாழ்த்து வருவதற்கும் இலக்கணம் கூறியே செல்வர் என்க. ' '2

(1.5) அதோளி, இதோளி, உதோளி என்னும் சுட்டு முதலாகிய இகர இறுதிச் சொற்கள் கடைச்சங்க காலத்தி லேயே வழக்கு வீழ்ந்தன என்பதைப் பேராசிரியர் கீழ்வருமாறு கூறியுள்ளார் : -

'ஒரு காலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து வாராதாகப் பொருள் வேறுபடுதலுமுடைய; அதோளி, இதோளி, உதோளி எனவும் குயினெனவும் நின்ற இவை ஒரு காலத்துளவாகி இக்காலத்திலவாயின; இவை முற்காலத்துள வென்பதே கொண்டு வீழ்ந்த காலத்துஞ் செய்யுள் செய்யப்படா. அவை ஆசிரியர் நூல் செய்தகாலத் துளவன்யினும் கடைச் சங்கத்தார் காலத்து வீழ்ந்தமையிற் பாட்டி னுந் தொகையினும் அவற்றை நாட்டிக்கொண்டு செய்யுள் செய்திலர் அவற்றுக்கு இது மரபிலக்கண மாகலினென்பது (செய், 80)

இங்ஙனம் தொல்காப்பியத்திற்கும் தொகை நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் இவற்றிற்கும் உள்ள வேறுபாடுகள் மேலும் பலவாகும். அவற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழத்தார் வெளியிட்டுள்ள

2. ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு ,

பக். 306-307 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

"தமிழ் வரலாறு', 'தொல்காப்பியம்’ என்னும் நூல்களில் கண்டு தெளியலாம்.

மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் இவ் வேறுபாடுகளைக் குறிப்பிட்டு,

இவர் செய்யுள் பற்றியும் வழக்குப் பற்றியும்கூறியுள்ள இலக்கணங்களிற் பலவற்றிற்கு இலக்கியம் காட்டுதல் இப் பொழுது வழங்கும் நூல்களைக்கொண்டு இயலாமையாலும், இவர் கூறிய இலக்கணங்களின் வேறாய்ச் சில சொற்களும் கொள்கைகளும் இந்நூற்களிற் காண்டலானும் இவர் இந்நூற்கெல்லாம் முக்தியவர் என்று துணிதல் ஒரு தலையாவது' (u#. 268)

என்று கூறியிருத்தல் தொல்காப்பியத்தின் பழைமையை நன்கு வலியுறுத்துவதாகும்.

பன்மொழிப் புலவர் வே. வேங்கடராசுலு ரெட்டியார் அவர்கள் தமது 'பரணர் ' என்ற ஆராய்ச்சி நூலில், 'இலக்கண ஆசிரியர்கள் தம் காலத்தனவும் முந்தியனவுமான செய்யுட்களைக்கொண்டு இலக்கணம் செய்தல் மரபு. பரணர், கபிலர், நக்கீரர் இவர்கட்குப் பிற்பட்டவர் தொல் காப்பியராயின் அவர்தம் பாடல்களுக்கு முரணாக விதிகள் செய்திரார் அல்லவா? தொல்காப்பிய சூத்திர விதிகட்கும் அப்புலவர்களின் செய்யுட்களில் காணப்படும் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் சிறந்த இலக்கண மாறுபாடுகள் இருத்தல் ஒன்றே, தொல்காப்பியர் கடைச்சங்கப் புலவராய்

3. மகா வித்துவான் ரா. இராகவையங்கார் எழுதியுள்ள தமிழ் வரலாற்றில் தொல்காப்பியர் கடைச்சங்கப் புலவர்கட்கு முற்பட்டவர் என்பதைப் பல சான்றுகள் காட்டி (பக். 268-273, 308-309) நிறுவியுள்ளார்; வித்துவான் க. வெள்ளை வாரணனார் தொல்காப்பியம், பக். 90-94, 213. டி. ஆர். சேஷ ஐயங்கார் தமது திராவிட இந்தியா' என்னும் பெயர் கொண்ட ஆங்கில நூலில் இதே முடிவைக் (பக். 175-178) குறித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

பரணர் முதலியோர்க்கும் பல நூற்றாண்டுகட்கு முற்பட்டராவர் என்பது திண்ணம் (பக். 172-178) என்று வரைந்திருத்தல் கவனத்திற்குரியது.

தொல்காப்பியர் இன்றுள்ள சங்க நூல்கட்குக் காலத்தால் முற்பட்டவர் என்பதைப் பேராசிரியர் மு. இராக வையங்கார் அவர்கள் பல சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார். அவற்றைப் படித்து உண்மையுணர்தல் நல்லது (ஆராய்ச்சித் தொகுதி, பக். 101-120).

இதுகாறும் காட்டப்பெற்ற அகச்சான்றுகள் அனைத்தும் தொல்காப்பியர், புறநானூறு போன்ற சங்க நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டவர் என்னும் உண்மையை ஐயமற விளக்கி நிற்கின்றன என்பதை நன்குணரலாம். இம்முடி வினையே வேறு சில புறச்சான்றுகளும் ஆதரித்து நிற்றலைக் கீழே காண்க. புறச் சான்றுகள்

(1) பனம்பாரனார் எழுதிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் தமிழக எல்லைகள் கூறப்பட்டுள்ளன.

வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து’’ இவ்வரிகளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள். குமரி என்பதைக் குமரியாறு எனவே கொண்டனர்.

(1) கடல் கொள்வதன் முன்பு பிற நாடும் உண்மையின், தெற்கும் எல்லை கூறப்பட்டது, கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின் கூறப்படாவாயின’’ என்பது இளம் பூரணர் தரும் விளக்கமாகும். அதுதானும் (தொல்காப்பியமும்) பனம்பாரனார் "வடவேங்கடம் தென்குமரி எனக் குமரி யாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரம் செய்தமை கடலகத்துப் பட்டுக் குமரியாறும் பனை நாட்டோடு கெடுவதற்கு முன்னையது (தொல் காப்பியம், மரபியல், நூற்பா 94 உரை) என்று பேராசிரியர் குறித்துள்ளார். தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வடக்கும் தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடம் குமரி தீம்புனற் பெளவமென்(று) இக்கான் கெல்லை அகவையிற் கிடந்த நூலதின் உண்மை வாலிதின் விரிப்பின் என்று (பெருங்) காக்கைபாடினியார் தெற்கே குமரியாற்றை எல்லை கூறினர். எனவே, அவர் தொல்காப்பியரோடு ஒரு சாலை மாணவர் என்று பேராசிரியர் கருதுவர்.

பின் வந்த (சிறு) காக்கை பாடினியார் வடதிசை ஒழிந்த மற்ற மூன்றிற்கும் கடலையே எல்லையாகக் குறித்தமை,

'வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத்

தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்கம்’ என்னும் அடிகளால் உணரலாம். இங்ஙணம் கூறியதால், அவர் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவர் என்று பேராசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் (தொல்காப்பியம், செய், நூற்பா , பேராசிரியர் உரை). நச்சினார்க்கினியர் இவரைப் பின்தோன்றிய காக்கை பாடினியார்’ ’ என்பர். சிறு காக்கை பாடினியார் கூறிய எல்லைகளையே கி. பி. இரண் டாம் நூற்றாண்டில் செய்யப்பெற்ற சிலப்பதிகாரமும், "நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்

தமிழ்வரம் பறுத்த தண்புனல் நாடு '

(காதை 8 , வரி 1-2) என்று கூறுகிறது.

தொல்காப்பியருக்குப் பின்பு குமரியாற்றுக்குத் தென்பாற்பட்ட நிலப்பரப்புக்கும் இன்றுள்ள குமரி முனைக்கும்

4. இங்ஙனம் ஒரு நாட்டின் எல்லைகளுள் ஒன்றோ பலவோ ஆறுகளாக அமைதல் இயல்பு என்பதனை, வட வெள்ளாற்றுக்கும் தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது. சோழநாடு’ என்னும் கூற்றால் உணர்க .

இடைப்பட்ட நிலப்பகுதி அழிந்துபட்டதால், தென்திசையும் கடல் எல்லையெனச் சிறுகாக்கை பாடினியாராலும் இளங்கோவடிகளாலும் கூறப்பட்டதெனக் கொள்வதே. பொருத்தமாகும். ஆகவே, தொல்காப்பியர், சிறுகாக்கை பாடினியார் இளங்கோவடிகள் ஆகியோருக்குக் காலத்தால் முற்பட்டவர் என்பது காண்க.

(2) தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடித் தொல்காப்பியம் செய்தார் என்று பனம்பாரனார் தமது பாயிரத்தில் கூறியுள்ளார். அவர் கூறியதற்கு ஏற்பவே தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று பகுதிகளாகவே வகுத்துரைக்கப்பட்டுள்ளது சிறுகாக்கை பாடினியார் வாழ்ந்த பிற்காலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றின் வேறாக யாப்பு என்னும் இலக்கணம் நான்காவதாக வகுக்கப் பெற்று வழங்கியது என்பது,

  • காட்டியல் வழக்கம் கான்மையிற் கடைக்கண் யாப்பின திலக்கணம் அறைகுவன் முறையே என்று கூறியுள்ளதிலிருந்து தெளிவாகும். இதற்கு ஏற்றாற் போலவே, பிற்காலத்தவராகிய களவியலுரை ஆசிரியரும்,

தமிழ்தான் நான்கு வகைப்படும்: எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்புமென' என்று தமிழ் இலக்கணத்தை நான்கு வகையாகப் பகுத்தமை காண்க .

குமரியாறு தமிழகத்தின் தென் எல்லையாக இருந்த பொழுது தொல்காப்பியம் இயற்றப்பட்டது என்பதும், குமரியாற்றுக்கும் இன்றுள்ள குமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி அழிந்து கடலே தென் எல்லையாக அமைந்த,

5. தொல்காப்பியர் காலத்தே குமரியாற்றின் தெற்கே இருந்த தமிழ் வழங்கிய நிலத்தை அடுத்துத் தமிழ் திரிநிலமாகிய குறும்பனை நாடு அமைந்திருந்தமையால், தமிழ்நாட்டின் தென் எல்லையாகக் குமரியாற்றினைக் கூற வேண்டிய இன்றியமையாமை நேர்ந்தது. ”...வெள்ளை வாரணனார், தொல் காப்பியம், பக்.32. 106 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பின்பு சிறுகாக்கை பாடினியார் வாழ்ந்தனர் என்பதும் இது காறும் கூறியவற்றால் நன்கறியலாம்.

(2) தொல்காப்பியத்தின் காலம் வடமொழியில் வல்ல வடநாட்டார் தமிழகத்தில் நுழைந்து, இங்கேயே தங்கி வாழலாயினர். அதனால் அவர் தம் சொற்கள் தமிழ் மொழியில் இடம்பெறலாயின. இக்காரணத்தால்தான்,

"வடசொற் கிளவி வடஎழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”

(சொல் : 401)

எனவும்,

"சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்"

(சொல் : 402)

எனவும் தொல்காப்பியர், வடசொற்கள் தமிழிற் கலத்தற்கு இலக்கணம் கூறினார்; மேலும் சூத்திரம், படலம், பிண்டம், அம்போதரங்கம், காண்டிகை முதலியவற்றுக்கு இலக்கணம் கூறியுள்ளார். அவருக்கு முற்பட்ட காலத்தில் பிறமொழிச் சொற்கள் தமிழில் எடுத்தாளப்படுவதற்கு இலக்கண ஆசிரியர் விதி கூறி இருப்பரேல் , தொல்காப்பியர் அவ்விதியைச் சுட்டிக்காட்டி, 'என்ப' என்றோ. ' என்மனார் புலவர்' என்றோ கூறியிருப்பர், அங்ஙனம் அவர் கூறாமையால், அவரே இப்புது விதிகளை வகுத்தவர் என்று சொல்லலாம் (இது முன்பே கூறப்பெற்றது). அவர் காலத்தில் தள்ள முடியாத அளவிற்கு வடசொற்கள் தமிழில் இடம் பெற்று விட்டமையால் அவர் அவற்றிற்கு விதிகூறும் நிலைமை ஏற்பட்டது என்று கூறலாம்.

ஆரியர் (வடமொழியாளர்) தமிழகத்திற்கு வந்த காலம் .கி. மு. 7ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனப் பேராசிரியர் வி. அரங்காச்சாரியார் குறித்துள்ளனர். தமிழகத்தில்

6. Educational Review, October, 1928.

கி. பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இசுலாம் பரவத் தொடங்கியது, கி. பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபர அடிகள் தம் செய்யுட்களில் 'சலாம்', 'சொக்காய்' என்னும் இந்துஸ்தானிச் சொற்களைப் பயன்படுத்தினார். இதனை நோக்க, வடமொழியாளர் தமிழகத்தில் தங்கித் தமிழரோடு ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் பழகிய பின்புதான் அவர்தம் சொற்கள் தமிழில் இடம் பெற்றிருத்தல் வேண்டும் என்று கருதுதல் தவறாகாது. இதனை நோக்கத் தொல்காப்பியர் ஏறத்தாழக் கி. மு. 4ஆம் நூற்றாண்டினர் எனக் கொள்ளலாம்.

சந்திரகுப்தன் (கி. மு. 322-2.98) காலத்துச் சமண சமய குரவரான பத்திரபாகு முனிவரின் மாணவரான விசாக முனிவர் தமிழ்நாட்டில் சமண சமயப் பிரசாரம் செய்தார் என்பது சமண நூல் செய்தி. மதுரை மாவட்டத்திற் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகள் சமணரால் வெட்டப்பெற்றவைஅவற்றின் காலம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு என்பது கல்வெட்டறிஞர் கருத்து. எனவே, சமணம் கி. மு. 3ஆம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் நுழைந்து பரவத் தொடங்கியதெனலாம்.7 சமணம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை.8

அசோகன் தனது இரண்டாம் பாறைக் கல்வெட்டில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் மனிதர்க்கும் விலங்குகட்கும் மருத்துவ வசதி அளிக்க வசதி செய்ததாகக் கூறியுளளான்; 13ஆம் பாறைக் கல்வெட்டில் தமிழகத்தில் பெளத்த தருமம் பரவ ஏற்பாடு செய்தமையைக் குறிப்பிட்டுள்ளான். இவற்றால் அசோகன் காலத்திற்றான் (கி. மு. 278-232)

7. மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக். 34-36. -

8. M. Srinivasa Ayyangar, Tamil Studies, p. 8; T. R. Sesha Ayyangar, Ancient Dravldians, p. 109. முதன் முதலாகத் தமிழகத்தில் பெளத்த சமயம் நுழைந்து பரவத் தொடங்கியது என்னும் உண்மை வெளியாகிறது.

தமிழகத்தில் கழுகுமலை முதலிய இடங்களிற் காணப்படும் பெளத்தருடைய பிராமிக் கல்வெட்டுகள் கி. மு. 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவை என்பது ஆராய்ச்சி அறிஞர் முடிபாகும். பெளத்தம் பற்றிய குறிப்புத் தொல்காப்பியத்தில் சிறிதும் இல்லை. [1] எனவே தொல்காப்பியம் தமிழகத்தில் பெளத்தம் நுழைவதற்கு முன்பு செய்யப்பட்ட தென்னலாம்.

பனம்பாரனார் பாயிரம்,

"ஐந்திரம் கிறைந்த தொல்காப்பியன்"

என்று கூறுகின்றது. ஐந்திரம் என்பது வடமொழியில் சிறந்து விளங்கும் பாணினீயம் என்னும் இலக்கணத்திற்கு முற்பட்டது என்பது வடநூற்புலவர் கருத்து. தொல்காப்பியர் அப்பழைய வடமொழி இலக்கணத்தை நன்கு படித்தவர் என்று பனம்பாரனார் தம் பாயிரத்தில் பாராட்டியுள்ளார். பாணினீயம் வந்த பிறகு ஐந்திரம் மறைந்து விட்டது தொல்காப்பியர் பாணினிக்குப் பின்பு வந்தவராயின் , அந்நூலையே. கற்றுச் சிறப்படைந்திருப்பார்; 'பாணினீயம் நிறைந்த தொல்காப்பியன்' என்றும் பெயர் பெற்றிருப்பார். அவர் அங்ஙனம் குறிக்கப் பெறாமையால், பாணினி காலத்திற்கு

முற்பட்டவர் எனலாம்;அல்லது பாணினியம் வடநாட்டில் தோன்றிய பொழுது அதனை அறியாது அதே காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவராகலாம். எனவே, தொல்காப்பியர் பாணினிக்கு முன்பு அல்லது அவரது காலத்தில் (அவரது நூல் தமிழகத்தில் பரவாத காலத்தில்) வாழ்ந்தவர் என்று கூறலாம். பாணினியின் காலம் கி. மு. 4-ஆம் நூற்றாண்டு என்று மேனாட்டு அறிஞர் கூறியுள்ளனர்.1

தொல்காப்பியம் செய்யப்பட்ட பின்பே பாண்டியர் தலை நகரான கபாடபுரம் கடலாற் கொள்ளப்பட்டது என்று இறையனார் களவியலுரை கூறுகின்றது, பாண்டியரது கபாடபுரம் பற்றிய குறிப்பு வால்மீகி இராமாயணத்திலும், வியாச பாரதத்திலும் வருகின்றது. வியாச பாரதம் பல இடைச்செருகல் பெற்று இன்றுள்ள நிலையை அடைந்த காலம் கி. மு. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்படாது என்று வின்டர்நிட்ஸ் கூறியுள்ளார். எனவே, பாரதத்திற் குறிக்கப் பெற்ற கபாடபுரம் கி.மு. 3, 4-ஆம் நூற்றாண்டுகளில் நல்ல நிலையில் இருந்திருத்தல் கூடியதே எனக் கொள்ளலாம்.

இதற்கு அரண் செய்வது போலக் கி. மு. 4ஆம் நூற்றாண்டினனான சந்திரகுப்தன் (கி.மு 325-301) அமைச்சனான சாணக்கியன் தனது பொருள் நூலில் முத்துகளின் பெயர்களைக் கூறும் இடத்தில் 'பாண்டிய கவாடம்" என்றும்

10. தொல்காப்பிய சூத்திரங்கள் சில பாணினிய சூத்திரங்களை ஒத்துள்ளன என்றும், சில பரத முனிவருடைய நாட்டிய சாத்திரசூத்திரங்களை ஒத்துள்ளன என்றும் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் தமது இலக்கிய வரலாற்றில் (பக். 68) கூறியுள்ளனர். வித்துவான் க. வெள்ளை வாரணனார் தாம் இயற்றிய 'தொல்காப்பியம்' என்னும் அரிய ஆராய்ச்சி நூலில் (பக். 106-127) பிள்ளையவர்கள் கூற்றுகளுக்கு மறுப்பு வழங்கியுள்ளார். இரண்டையும் படித்துணர்வது நல்லது. - . . .

11. History of Ceylon, Vol. I, Part I, p. 208. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ஒரு முத்தின் வகையைக் குறிப்பிட்டுள்ளான். அது பாண் டியாது கபாடபுரத்துக் கடல் முத்தே என்பது தெளிவு. கபாடபுரம் அழிந்த பிறகு அந்நகரின் பெயரைக் கூட்டி அக் கடற்பகுதியில் கிடைக்கும் முத்திற்குப் பெயர் வழங்கினர் என்று கூறுதல் ஏற்புடையதாகாது. கபாடபுர அழிவிற்குப் பின்பு கொற்கை முத்தே தொகை நூல்களில் பேசப்படுகின் றது காண்க.“ எனவே, கி. மு. 4ஆம் நூற்றாண்டில் கபாடபுரம் இருந்தது என்று கொள்வதே பொருத்தமாகும்.

"இலங்கையில் தோன்றிய மூன்று கடல் கோள்களுள் முதற் கடல்கோள் கி. மு. 2387இல் இலங்கையை இந்தியா வினின்றும் பிரித்தது; இரண்டாம் கடல்கோள் கி. மு. 504இல் நிகழ்ந்தது; ஆயின் குறிப்பிடத்தக்க பேரிழப்பு இல்லை. மூன்றாம் கடல்கோள், அசோகன் காலத்தில் வாழ்ந்த தேவனாம்பிரிய திஸ்ஸன் காலத்தில் கி.மு. 306இல் உண்டானது. அதனால் ஒரு லட்சம் ஊர்களும், மீன் பிடிப்பவர் வாழ்ந்த சிற்றுார்கள் 910ம் (தொள்ளாயிரத்துப் பத்தும்), முத்தெடுப்பவர் வாழ்ந்த நானூறு சிற்றுார்களும் அழிந்தன '1' என்று இலங்கை வரலாற்று நூல்கள் கூறு கின்றன.

முதற் கடல்கோள் இலங்கையைத் தமிழகத்திலிருந்து வேறு பிரித்தது என்பதால், அடுத்து நிகழ்ந்த கடல்கோள் களும் இலங்கையைப் போலவே தமிழகத்தையும் பாதித் திருத்தல் இயற்கையேயாகும். அதனாற்றான் தென் மதுரை அழிய ஒரு கடல்கோளும், கபாடபுரம் அழிய மற்றொரு கடல்கோளும் காரணமாயிருந்தன என்று இறையனார் களவியலுரை இயம்புகின்றதுபோலும்!

12. ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, பக். 87-88.

13. Sir James Emerson Tennent, Ceylon, Vol. 1 p. 7"

foot-aote. -> டாக்டர் மா.இராசமாணிக்கனார்

"பஃறுளி யாற்றுடன் பன்மலை

                   யடுக்கத்துக்

குமரிக் கேர்டும் கொடுங்கடல்

                     கொள்ள"

என்னும் சிலப்பதிகார அடிகள் ஒரு கடல் தோளைக் குறிக் கின்றன. இது பேரழிவைக் குறிப்பது. தமிழகத்திலிருந்து இலங்கையைப் பிரித்த பெருங்கடல்கோளே சிலம்பு கூறும் இப்பேரழிவை உண்டாக்கியிருக்கலாம். அதனால் பாண்டிய நாட்டின் தென் எல்லை குமரியாறாயிற்று என்று கொள்ளலாம் .

கபாடபுரம் அழியக் காரணமாயிருந்த கடல்கோள் இலங்கையில் நிகழ்ந்த இரண்டாம் அல்லது மூன்றாம் கடல் கோளாயிருத்தல் வேண்டும். இரண்டாம் கடல்கோள் குறிப்பிடத்தக்க இழப்பை உண்டாக்கவில்லை என்று. இலங்கை வரலாறு இயம்புகின்றது.

எனவே, இலங்கையில் தோன்றிய மூன்றாம் கடல் கோளே கபாடபுரத்தை அழித்தது என்று கொள்வது, மேலே காட்டப்பெற்ற பல காரணங்களை நோக்கப்பொருத்த மாகும். ஆகவே, வேறு தக்க சான்றுகள் கிடைக்கும் வரையில், தொல்காப்பியர் கி.மு.4ஆம் நூற்றாண்டின்ர் என்று கருதுதல் தகும்.அவர் காலம் ஏறத்தாழக் கி.மு.300 என்று கொள்ளலாம்.

14. காதை 11, வரி 19-20;காதை 8 , வரி 1- அடியார்க்கு நல்லார் விளக்கவுரை.

15. வடமொழியில் வேதங்களையும் பிராமணங்களையும். எழுதிய_ஆரியர் ஏறத்தாழக் கி.மு. 2300 அல்லது கி.மு. 2200இல் இந்தியாவிற் புகுந்தனர் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து (N.K. Dutt, Aryanisation of India, pp. 39-58). ஆரியர் ஏறத்தாழக் கி. மு. 7ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்திருக்கலாம் என்று பேராசிரியர் வி. அரங்காச் சாரியார் கூறியுள்ளார்(இது முன்பே கூறப்பட்டது). எனவே, கி. மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழில் வடசொற்கள் கலக்கத் தொடங்கியிருத்தல் வேண்டும் என்று நினைப்பது. பொருத்தமாகும். இங்ங்னம் காலப்போக்கில் நீக்க முடி யாத அளவு வடசொற்கள் தமிழிற் கலந்தமையாற்றான் தொல்காப்பியர் வடசொல் தமிழிற் கலத்தலைப் பற்றி" இரண்டு சூத்திரங்கள் கூறினார்; பிராமணர் தொழில்களை யும் கூறினார். எனவே, தொல்காப்பியர், வடமொழியாளர் தமிழகம் வந்து தங்கிச் சில நூற்றாண்டுகளேனும் கழிந்த பின்னரே தோன்றியவராதல் வேண்டும் என்பது த்ெள் வாதல் காண்க. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பெயர் முதலியன

மதுரைப் பேராலவாயர், மதுரைக் குமரன் எனவரும் பெயர்களில் மதுரை என்பது ஊர்ப்பெயர்: பேராலவாயர், குமரன் என்பன இயற்பெயர்கள். இவ்வாறே வெள்ளுர்க் காப்பியன், காப்பியாற்றுக் காப்பியன் எனவரும் பெயர் களில் காப்பியன்’ என்பது இயற்பெயர். நக்கீரன், நப்பாலத்தன் என்றாற்போல வரும் பெயர்களில் 'ந' என் னும் சிறப்பு அடுத்து நிற்றல் போலப் பல்காயனார் தொல் காப்பியர் என்பவற்றிலும், பிற பெயர்களிலிருந்து பிரித்துக் காட்டப் பல்", "தொல்’ என்னும் அடைமொழிகள் சேர்க்கப் பெற்றன என்று கொள்வதே பொருத்தமுடையது. தமது பெயரையே தாம் செய்த நூலுக்குத் தோற்றுவித்தார் என்னும் கருத்திற்றான் பனம்பாரனார்,

"தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றி"

எனக் கூறினார். எனவே, தொல்காப்பியன் என்பது ஒரு சொல் தன்மையில் வழங்கப்பெற்ற இயற்பெயர் என்று கோடலே தக்கது.

தொல்காப்பியர் தமிழகத்து நல்லாசிரியருடைய வழக் கையும் செய்யுளையும் அடியாகக்கொண்டு, செந்தமிழ் நாட்டுக்கு இயைந்த முன்னை இலக்கணங்களை முற்றக் கண்டு, எழுத்து-சொல்-பொருள் இலக்கணங்களை முறைப்பட ஆராய்ந்து தமது நூலைத் தொகுத்துச் செய்தார் என்பது பனம்பாரனார் பாயிரத்தால் தெரிகிறது.

தொல்காப்பியர் நிலந்தரு திருவிற் பாண்டியன் தலை நகரான கபாடபுரத்தில் அதங்கோட்டாசான் தலைமையிற் பனம்பாரனார் போன்ற புலவர் பெருமக்கள் கூடிய பேரவையில் தொல்காப்பியத்தை அரங்கேற்றினார் என்பது சிறப்புப் பாயிரத்தால் புலனாகிறது. டாக்டர் மா.இராசமாணிக்கனார்

 தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை உடையவர்: எல்லாத் தெய்வங்களையும் ஒப்ப மதிப்பவர். அவர் இன்ன சமயத்தவர் என்று அறுதியிட்டுக் கூற இயலாது.

(3) தொல்காப்பியத்தின் சிறப்பியல்புகள்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை உடிை யது; 1502 நூற்பாக்களை உடையது (எழுத்ததிகாரம் 488 நூற்பாக்களையும், சொல்லதிகாரம் 463 நூற்பாக்களையும், பொருளதிகாரம் 656 நூற்பாக்களையும் உடையது)".

எழுத்ததிகாரம்

 எழுத்ததிகாரத்தில் நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்னும் ஒன்பது இயல்கள் உள்ளன.
மக்கள் ஒருவருக்கொருவர் கருத்தைத் தெரிவிப்பதற்கு உரியது சொற்றொடர். ஒரு சொற்றொடர் பல சொற்களைக் கொண்டிருப்பது. ஒவ்வொரு சொல்லும் எழுத்துகளால் ஆகியது. எழுத்தின்றேல் சொல் இல்லை; சொல் இன்றேல் சொற்றொடர் இல்லை. எனவே, மொழிக்கு உயிர்நாடியாக இருப்பது எழுத்தென்பது வெள்ளிடைமலை: ஆதலால் தொல்காப்பியர் எழுத்துகளின் தன்மை முதலியவற்றை

16. தொல்காப்பியர் சமணர் என்று கூறுவோர் வாதத் தையும் அதற்குரிய மறுப்பையும் வித்துவான் க. வெள்ளை வாரணனார் எழுதியுள்ள 'தொல்காப்பியம்’ ’ என்னும் நூல் (பக். 159-172) நோக்கி உணர்க.

இந்நூற்பாக்கள் 1595 என இளம்பூரணரும், 1611 என்று நச்சினார்க்கினியரும் வகுத்து உரை எழுதியுள்ளனர்.

த-8 483 நூற்பாக்களில் தெரிவிக்கின்றார்; தமிழ் எழுத்துகள் உயிர், மெய், உயிர் மெய் , ஆய்தம் என்பன என்றும், எழுத்துகளின் ஒலி வடிவங்களும் வரி வடிவங்களும் இவை. என்றும், மாத்திரை, முதலெழுத்து-சார்பெழுத்து வகைகள், சுட்டு வினா வகைகள் இவை என்றும், சொற்களின் எழுத்து நிலை, மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், மொழிக்கு ஈற்றில் வரும் எழுத்துகள், மொழிக்கு நடுவில் வரும் எழுத் துகள், அளபெடை இன்னவை என்றும், உயிர் எழுத்து களும் மெய்யெழுத்துகளும் இன்னின்ன முறையில் பிறக்கும் என்றும் இவ்வியலில் கூறப்பட்டுள்ளன. மேனாட்டார் இக் காலத்தில் கூறும் ஒலிமுறைகள் தொல்காப்பியர் காலத் திலேயே தமிழில் விளக்கப்பட்டுள்ளன என்பது அறிந்து இன்புறத்தக்க செய்தியாகும். தொல்காப்பியர், சொற் றொடர்களில் சொற்கள் ஒன்றோடு ஒன்று சேருவதால் உண்டாகும் ஒலி மாற்றங்கள் புணரியல் முதலிய இயல்களில் விரித்துக் கூறியுள்ளமை படித்து வியத்தற் குரியது.

சொல்லதிகாரம்

எழுத்துகளாலாகிய சொற்களின் இலக்கணம் கூறுவதே சொல்லதிகாரம். இதனுள் கிளவியாக்கம், வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு. பெயரியல், வினை யியல், இடையியல், உரியியல், எச்சவியல் என ஒன்பது இயல்கள் உள்ளன.

தொல்காப்பியர் சொற்றொடர் மரபுகளைக் கிளவியாக் கத்தில் கூறியுள்ளார்; சொற்றொடர் அமைப்புக்குப் பெரிதும் தேவைப்படும் வேற்றுமையை அடுத்துக் கூறியுள்ளார். அவர் காலத்திற்கு முன்பு தமிழில் ஏழு வேற்றுமைகளே கொள்ளப்பட்டன; விளிவேற்றுமை தனியாகவே எண்ணப் பட்டுவந்தது. தொல்காப்பியர்தாம் விளியையும் சேர்த்து வேற்றுமை எட்டு என்று கூறியுள்ளார். "வேற்றுமை தாமே ஏழென மொழிய"

"விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே"

என்னும் நூற்பாக்கள் இவ்வுண்மையை உணர்த்துகின்றன.

தொல்காப்பியர் விளிவேற்றுமைக்குத் தனி இயல் வகுத்து அதன் இயல்புகளை முப்பத்தேழு நூற்பாக்களில் கூறியிருப்பதைக் கொண்டே, அஃது அக்காலத் தமிழில் பெற்றிருந்த முதன்மையை நாம் நன்குணரலாம். தொல் காப்பியர் வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளி மரபு என்னும் மூன்று இயல்களாலும் வேற்றுமையை ஆராய் வதிலிருந்து, மொழி அமைப்பிற்கும் வழக்கிற்கும் வேற்றுமை எவ்வளவு இன்றியமையாதது என்பதனை நாம் தெளிவாக அறியலாம். தொல்காப்பியர் காலத்திலும் அவர்க்கு முன்னும் இவ்வேற்றுமை பற்றிய ஆராய்ச்சி எந்த அளவு உயர்ந் திருப்பின் அவர் வேற்றுமைபற்றி மூன்று இயல்கள் கூறத் துணிந்தார் என்பது புலனாகும்.

தொல்காப்பியர் பெயர்ச் சொற்களையும் வினைச்சொற் களையும் தனித்தனி இயலில் அடுத்துக் கூறியுள்ளார். அடுத்து இடைச் சொற்களும் இவை என இரண்டு இயல் களில் உணர்த்தப்படுகின்றன.

கிளவியாக்கம் முதல் உரி இயல் ஈறாக எட்டு இயன் களிலும் விளக்கப்படாமல் எஞ்சி நிற்பனவற்றை ஆசிரியர் எச்சவியல் என்னும் ஒன்பதாம் இயலில் கூறியுள்ளார். மொழி, பேச்சுமொழி, நூல்மொழி, வேற்றுமொழி, கிளைமொழி எனப் பலவகைப்படும். ஒரு மொழியே, காலப்போக்கில் பேச்சுமொழி என்றும் நூல்மொழி என்றும் கிளைமொழி என்றும் இனமொழி என்றும் மாறுபாடும் பிரிவும் பெற்றுவிடும். மொழியறிவு நிறைவுபெற இவைபற்றிய அறிவு தேவைப்படும். தொல்காப்பியர் இவற்றைப் பற்றியும் கூறியுள்ளார். தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்என்(று) அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"

என்பது தொல்காப்பியம்.

இவற்றுள் இயற்சொல் என்பது பேச்சு மொழிக்கு உரியது; திரிசொல் என்பது நூல்மொழிக்கு உரியது. இவை இரண்டும் ஒரு மொழிக்கே உரியவை. திசைச்சொல் என்பது ஒரு மொழியிலிருந்தே கிளைத்தது; தன்னைச் சுற்றிலும் வழங்குவது. மலையாளம் தமிழிலிருந்து கிளைத்தது. அது தமிழிலிருந்து வேறுபடும் நிலையை அடையும்போது அதன் சொல் தமிழில் ஆளப்படுமாயின் அது திசைச்சொல் எனப் பெயர் பெறும் வடசொல் என்பது வேற்றுமொழி. அது வடக்கிலிருந்து வந்து தமிழோடு தொடர்பு கொண்டதால் வட மொழி எனப்பெயர் பெற்றது. இந்நான்கு மொழிகளும் தமிழ் நூல்களில் பயின்று வருதலின் தமிழர் இதனை அறிய வேண்டும் என்று கருதியே தொல்காப்பியர் இவற்றைப் வற்றிக் கூறினார். -

வடசொல் தமிழில் வழங்கும்போது அதற்குரிய ஓசை யைத் தமிழாக்கித் தமிழ்ப்படுத்தி வழங்க வேண்டும் என்பது தொல்காப்பியர் கருத்து.

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

சீதா : வடசொல். சீதை-வட எழுத்து நீக்கித் தமிழ் ஓசையோடு அமைக்கப்பட்டது. பிறமொழிச் சொல்லுக்குத் தமிழோசை ஊட்டுவதனால் அச்சொல் வடிவில் சிதையினும் குற்றமில்லை என்பது தொல்காப்பியர் கருத்து.

" சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்' என்பது விதி. இந்த விதியைப் பின்பற்றியே விபீஷணன் என்பது வீடணன் எனவும், லகஷ்மணன் என்பது இலக்குவன் எனவும், கர்ணன் என்பது கன்னன் எனவும் தமிழில் வழங்கப்படு டாக்டர்.மா.இராசமாணிக்கனார்

கின்றன. இந்நூற்பாவினால் ஆணை, வட்டம், நட்டம், கண்ணன் எனப் பாதகமாய்ச் சிதைந்து வருபவனவும் தமிழிற் கொள்ளப்பட்டன என்று உரையாசிரியர்களான சேனாவரை யரும் நச்சினார்க்கினியரும் கூறியுள்ளனர்.

இவ்விரண்டு நூற்பாக்களாலும் நாம் அறிவது யாது? தொல்காப்பியர் காலத்தில் வடமொழிச் சொற்கள் சில தமிழிற் கலக்கும் கிலைமை ஏற்பட்டது. அதனால்: அவற்றைத் தமிழோசை ஊட்டியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் கருதினார் என்பன இவ்விரு நூற்பாக் களாலும் புலப்படும். ஆசிரியர் வகுத்த இம்முறை, காலத் தால் பிற்பட்ட கம்பர் முதலிய புலவர்களாலும் பொன்னே போல் போற்றப்பட்டது. இங்ங்ணம் குறிப்பிட்ட வரையறை யோடு குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றியதால்தான் தமிழ் மொழி தனக்குள்ள ஆற்றலில் சிதையாமல் இன்றளவும் இயங்கிவருகிறது என்னும் உண்மையைத் தமிழ்மக்கள் நன்கு உணர்தல் வேண்டும். பொருளதிகாரம்

எழுத்தும் சொல்லும் பற்றியே உலகத்து உள்ள எல்லா மொழிகளிலும் இலக்கணம் உள்ளது. எழுத்தையும் சொல்லையும் பயன்படுத்தும் மனிதனுடைய வாழ்க்கையைவாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் இலக்கண நூல் உலகத்து வேறெம்மொழியிலும் இல்லை. மனிதனுடைய வாழ்க்கையை உணர்த்தும் பகுதியாக-இலக்கணமாகத் தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் விளங்குகின்றது."

மனித வாழ்க்கை மனிதனது இல்லத்தைப் பற்றியது, அவனோடு தொடர்பு கொண்ட வெளியுலகத்தைப் பற்றியது என இருவகைப்படும். இல்வாழ்க்கை பற்றிய செய்திகள் அகப்பொருள் என்றும், மற்ற அனைத்தும் புறப்பொருள் என்றும் சொல்லப்படும். மனிதன் அடையத்தக்க அறம்


2. T. R. Sasha Ayyangar, Dravidian India, p. 179 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பேறுகளுள் இன்பம் அகத்தின்பாற் பட்டதாகும்; ஏனைய மூன்றும் புறத்தின்பாற் பட்டவையாகும். இவைபற்றி ஒவ்வொரு மொழியிலும் நூல்கள் தோன்றியுள்ளன. எனவே, மனிதனுடைய அநுப வங்களே இலக்கியமாகும். அந்த இலக்கிய நூல்கள் வாழ்க்கை இன்பத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றி யவையாகும். மனிதனுடைய அகவாழ்வு, புறவாழ்வு ஆகிய இரண்டும் இன்பத்தையே குறிக்கோளாகக் கொண்டவை. அந்த வாழ்வை விரித்து உரைப்பதே பொருளதிகாரத்தின் நோக்கமாகும்.

 பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையி யல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் அகத்திணையியல், கள வியல், கற்பியல், பொருளியல் என்பன அகப்பொருள் பற்றி யவை. புறத்திணையியலும் மரபியலும் புறப்பொருளைப் பற்றியவை. பிற இயல்கள் அகம் புறம் ஆகிய இரண்டையும் பற்றியவை.

நிலத்தின் பிரிவுகள் ஐந்து, அவற்றிற்குரிய பெரும் பொழுதுகள், சிறுபொழுதுகள், அங்கிலத்திற்குரிய தெய் வர்கள், அந்நிலத்தில் வாழும் விலங்குகள், பறவைகள்,

"குறிஞ்சி நிலக் கடவுளான முருகன் அல்லது வேலன் வேலைப் போர்க் கருவியாகவும் சேவலைக் கொடியாகவும் கொண்டவன். கி. மு. நாலாயிரத்துக்கு முற்பட்ட் ஆதிச்ச நல்லூர் நாகரிகத்தைச் சேர்ந்தபொருள்களில் இரும்பு வேல் களும் பித்தளையாற் செய்யப்பட்ட சேவல்களும் கிடைத் துள்ளன. இவை, முருக வழிபாடு மிகப் பழைய காலத்தி லிருந்தே தென்னாட்டவர்க்குரியதென்பதை மெய்ப்பிக் &sirspor.—K. A. N. Sastry, A History of S. India, p. 55. - மாயோன் வணக்கமும் வேத காலத்திற்கு முற்பட்டது.

—P. T. Srinivasa Ayyangar, Stone Age in India,

PP, 50–52. டாக்டர் மா.இராசமாணிக்கனார்

பயிராகும் மரங்கள், அந்நில மக்களின் தொழில்கள் முதலி யன அகத்திணையியலில் கூறப்பட்டுள்ளன.

தலைவன் கப்பலிற் செல்ல நேருமாயின் தன் மனைவியுடன் செல்லான் என்று பொருள்படத் தொல்காப்பியர்,

"முந்நீர் வழக்கம் மகடுஉவோ டில்லை"

என்றார் (அகத்திணையியல்-34). போருக்காக அல்லது வாணிகத்திற்காகவே கப்பல் பயன்படுத்தப்படும். சங்ககாலத் தமிழர் கடல் கடந்த நாடுகளில் சென்று வாணிகம் செய் தமைக்கே சான்றுகள் பல உண்டு. இதனால் தொல்காப்பி யர் காலத்திற்கு முன்னரும் அவர் காலத்தும் தமிழர் கடல் வாணிகம் கருதிக் கப்பலிற் சென்றனர், அங்ங்ணம் சென்ற போது தாம் மட்டுமே சென்றனர் என்பது இங்கு அறியத் தகும். மிகச் சில ஆண்டுகள் வரையில் இந்த வழக்கம் தன வணிகரிடம் இருந்துவந்தது இங்கு நினைக்கத் தகும்.

ஒருவன் ஒருத்தியைக் கண்டு காதல் கொள்வதும், அக் காதல் வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளும், அவ்வாழ்வில் தொடர்பு கொள்ளும் தோழி, செவிலி, தோழன், பாணர், அறிவர் முதலியோர் தொழில்களும் காதலர் களவு வாழ்க்கை யும் களவியலில் இடம் பெற்றுள்ளன.

பலர் அறிய மணந்துகொண்ட தலைவனும் தலைவியும் வாழ்க்கை நடத்தும் முறைமை கற்பியலில் கூறப்பம் டுள்ளது. கணவன்-மனைவி வாழ்க்கை, கணவன் பல செயல்களை முன்னிட்டு மனைவியைப் பிரிதல், அப் பிரிவுகள் காரணமாக மனைவி வருந்துதல், தோழி முதலியோர் அவளைத் தேற்றுதல் போன்ற பல செயல்கள் இவ்வியலில் இடம் பெற்றுள்ளன.

மக்களது இன்ப வாழ்க்கைக்கு அவரது நாடு, உரிமை நாடாக விளங்குதல் வேண்டும். தம்மாட்சி உடைய நாட்டில்தான் மக்களது இன்பம் களங்கமின்றி இருத்தல் இயலும். இந்த உண்மையை உணர்ந்த நம் முன்னோர் தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

நாட்டைக் காக்கப் போர்த் திறத்தில் சிறந்து விளங்கினர்;வெட்சி-கரந்தை, வஞ்சி-காஞ்சி, நொச்சி-உழிளுை, தும்பை, வாகை என்னும் பல வகைப் போர் முறைகளை வகுத்துச் செயலாற்றினர்; ஒவ்வொரு போர் முறையிலும் பல துறைகளை வகுத்துக்கொண்டனர். புறத்திணையியல் இவை பற்றிப் பேசுகின்றது. போரில் வெற்றி பெற்ற வேந்தர்க்குப் புலவர் வாழ்க்கை நிலையாமை கூறி அறிவுறுத்துதல், முடிசூடல், பிறந்த நாள் விழாக் கொண்டாடுதல் போன்ற செய்திகளும் பிறவும் இவ்வியலில் கூறப் பட்டுள்ளன.

உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கு ஏற்ப உடலில் தோன்றும் வேறுபாடு மெய்ப்பாடு எனப்படும். மெய்ப்பாடுகள் சுவை பற்றித் தோன்றுவன. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டு வகைப்படும். இவ்வெட்டனுள் ஒவ்வொன்றும் நந்நான்கு வகைப்படும். ஆகவே இவை முப்பத்திரண்டு வகைப்படும். இவை அல்லாமல் வேறு முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் உள்ளன. இவ்வறுபத்து நான்கு மெய்ப்பாடுகளும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானவை. களவுக்கு உரியவை, கற்புக்கு உரியவை என அகத்திற்கு உரிய மெய்ப்பாடுகள் எழுபதாக விரியும். இவற்றை நுணுகி ஆராயும் பொழுதுதான் பழந்தமிழ் மக்களுடைய மெய்ப்பாடுகள் பற்றிய ஆராய்ச்சி அறிவை நாம் உள்ளவாறு உணர்ந்து பாராட்டுதல் கூடும். இவை மெய்ப்பாட்டியலில் கூறப்பட்டுள்ளன.

தொல்காப்பியர் காலத்தில் அணி இலக்கணம் என்று. தனியாக ஓர் இலக்கணப் பிரிவு ஏற்படவில்லை. பிற்கால ஆசிரியர்கள் அணிகளை முப்பத்தாறாகவும் அவற்றிற்கு மேலாகவும் கூறிச் சென்றனர். அவ்வணிகள் எல்லாவற்றிலும் தலைசிறந்து விளங்குவது உவமை அணியாகும். தொல்காப்பியர் உவமையைப் பற்றி ஓர் இயலில் விளக்கி

யுள்ளார். உவமைகளுள் உள்ளுறை உவமம் மிகச் சிறந்த, பொருள் நயம் உடையது. அது அகப்பொருள் பற்றிய. செய்யுட்களில் இடம் பெற்றுச் செய்யுளின் பொருளைச் சுவையுறச் செய்யும். உவமவியலில் இச்செய்திகள் இடம் பெற்றுள.

மக்களுக்கு வாழ்வும் வளமும் தாழ்வும் சாவும் உண்டு. இவ்வாறே சொற்களுக்கும் இந்நான்கும் உண்டு. சொற்கள் மக்களைச் சார்ந்தே இந்நான்கு நிலைகளையும் அடை கின்றன. மக்கள் பல நூற்றாண்டுகளாக ஒரு சொல்லை ஒரு முறை பற்றியே வழங்கி வருவாராயின், அவர்தம் பின்னோர் அம்முறையிலேயே அதனை வழங்குதல் மரபு எனப்படும். சோறு உண்டான், கறி தின்றான் என்று கூறுவதே வாழையடி வாழையாக இருந்துவரும் வழக்கம். இந்த வழக்கமே 'மரபு' என்பது. இதற்கு மாறாகக் கறி உண்டான், சோறு, தின்றான் என்று கூறுவது மரபு அன்று. இவ்வாறே நம் முன்னோர் ஒவ்வொன்றையும் எச்சொல்லால் சொல்லி வந்தனர் என்பதை உணர்த்துவதே 'மரபியல்’ என்பது. குட்டி என்பதும் கன்று என்பதும் விலங்குகளின் இளமைப் பெயர்கள். ஆயினும் பசுக்குட்டி என்றும் நாய்க்கன்று என்றும் சொல்லுதல் மரபு ஆகாது; பசுக்கன்று, நாய்க்குட்டி என்று கூறுவதே மரபு. இத்தகைய செய்திகளைக் கூறுவதே இவ்வியலின் நோக்கமாகும்.

அகத்திணையியல் முதல் மரபியல் ஈறாக உள்ள எட்டு இயல்களிலும் சொல்லப்பட்ட செய்திகளை அமைத்துக் கூறும் செய்யுட்களின் இலக்கணம் செய்யுளியலில் விரித்துக் கூறப்பட்டுள்ளது. அகம்-புறம் பற்றி இதுகாறும் கூறப்பெற்ற செய்திகள், சில ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்ட செய்யுள் அமைப்பில் இடம் பெற்றால்தான் அறிவுடையோர் அவற்றின் சுவையைப் படித்து உணர்வர். ஆதலால் செய்யுளுக்கு இலக்கணம் இன்றியமையாததாயிற்று. உலக மொழிகள் அனைத்திலும், பாக்களே முதலில் தோன்றின. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

என்று மொழிநூல் அறிஞர் கூறுவர். இலக்கண அறிவு மிக மிக, செய்யுட்கள் வடிவாலும் பொருளாலும் சிறப்புறலாயின. தொல்காப்பியருக்கு முற்பட்ட தமிழ்ச் செய்யுட்கள் இலக்கண அமைதியால் சீரும் சிறப்பும் பெற்றிருந்தன என்பது, "நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதின் கூறி வகுத்துரைத் தனரே",என்னும் அடிகளால் அறியலாம்.

தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளையும், பாக்களின் வகைகளையும் இவ்வியலில் விளக்கியுள்ளார்; இருபது வண்ணங்களையும் எட்டு வனப்புகளையும் குறித்துள்ளார். எட்டு வனப்புகளாலும் அமைந்த நூல்கள் பலவாகும். அவை தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரும் சமகாலத்திலும் செய்யப்பட்டனவாகும். செய்யுளியலை நுணுகி ஆராயும் பொழுது தொல்காப்பியர் காலத்தில் இருந்த நூல்களின் வகைகள் மிகப்பல என்பது நன்கு உணரலாம்.

தொல்காப்பியம் கருத்தூன்றிப் படிப்பவருக்கு மிகவும் எளியது. அதனில் கூறப்பெற்றுள்ள செய்திகள் இன்னவை என்பதைப் பொதுமக்கள் அறிய வேண்டும் என்னும் கருத்தால் அறிஞர் க. சுப்பிரமணிய பிள்ளை என்பவர் பல ஆண்டு கட்கு முன்பு ஓர் உரைநடை நூல் எழுதியுள்ளார்; வித்துவான் க: வெள்ளைவாரணனார் 'தொல்காப்பியம்’ என்னும் பெயரில் அரிய ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியுள்ளார்; பேராசிரியர் சி. இலக்குவனார் 'தொல்காப்பிய ஆராய்ச்சி’ என்னும் பெயரில் மிக எளிய நடையில் ஒரு நூலை வெளியிட்டுள்ளார். இப் பெருமக்களுக்குத் தமிழ் உலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

சுருங்கக் கூறின், பண்டைத் தமிழ் மக்களின் நாகரிகம். பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமூக அமைப்பு முறை, அரசியல் நிலை, கடவுட் கொள்கை, வாழ்க்கை முறை, அரிய கருத்துகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு

மிளிர்வதும்-தமிழரது வாழ்வும் வரலாறுமாக விளங்குவதும் பொருளதிகாரமே என்று கூறலாம். இதனைத் தன்னகத்தே கொண்டுள்ள தொல்காப்பியம் தமிழர்க்கு உயிர்நாடி போன்றதாகும்."

(4) தொல்காப்பியர்க்கு முற்பட்ட நூல்கள் தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 1600 நூற்பாக்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்குப் பதினாறு இடங்கள் வீதம் தொல்காப்பியர் தம் காலத்தவரும் தமக்கு முற்பட்டவருமாக வாழ்ந்த இலக்கண இலக்கிய ஆசிரியர்களைப் பற்றிக் கூறி யுள்ளார் :

"செவ்வி தென்ப சிறந்திசி னோரே" (உயிர் மயங்கியல்-96)

" என்மனார் புலவர்" (குற்றியலுகரப் புணரியல்-78)

"உளவென மொழிய உணர்ந்திசி னோரே" (வேற்றுமை மயங்கியல், 34)

"தோன்றுமொழிப் புலவரது பிண்டம் என்ப" (செய்யுளியல், 185) "தோலென மொழிய தொன்னெறிப் புலவர்"

(செய்யுளியல், 230) "புலனென மொழிய புலனுணர்ந் தோரே"

(செய்யுளியல், 238) "நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே"

(toņúliusb, 27) "நூலென மொழிய நுணங்குமொழிப் புலவர்" - (மரபியல், 98)

4 Among the sources which throw light upon the condition, political and social, of the Tamil people in தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

இவ்வாறு தொல்காப்பியர் தம் நூலுள் ஏறத்தாழ இருநூறு இடங்களுக்கு மேல் கூறியிருத்தலைக் காணலாம். இவற்றோடு, அவர் தமிழ்நாட்டில் தமக்கு முன்பு பன்னெடுங் காலமாக வழக்கில் இருந்து வந்த மரபினை நன்கு கவனித்தே நூல் செய்தார் என்பது அவர் எடுத்தாளும் பின்வரும் தொடர்களால் நன்கு துணியப் பெறும்:

"தொல்லியல் மருங்கின் மரீஇய மரபே " (புள்ளி மயங்கியல், 60)

"பண்டியல் மருங்கின் மரீஇய மரபே" (வேற்றுமை மயங்கியல், 7)

" தொன்னெறி மரபின் தோன்ற லாறே (மரபியல், 27) “

". . . . . . . . . . . . . . . வழக்கியன் மரபே"(வினையியல், 47)

"பாடலுட் பயின்றவை நாடுங் காலை"(அகத்திணையியல், 8)

"சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே" - (அகத்திணையியல், 5) *

"பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை" (செய்யுளியல், 51)

தொல்காப்பியர் காலத்திலும் அவர்க்கு முன்னும் தமிழ் நூல்கள் பல இருந்தன என்பதைப் பல நூற்பாக்களால் அறியலாம். முதல்நூல், தொகைநூல், விரிநூல், தொகை

ancient times, the Tolkappiyam will easily hold an important płace.................. it is no wonder that this antique work should have through the ages excited the interest and curiosity of the Tamil people. Its subject matter is the history of the Tamil race itself, the life of the ancient Tamil country.

—T. R. Seshe Ayyangar, Dravidian India,

pp. 91-92..

விரிநூல், விரிதொகைநூல், மொழி பெயர்ப்பு நூல் எனப் பலவகை நூல்கள் அவர் காலத்தில் இருந்தன. பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பெற்ற நூல்கள் அப்பழங் காலத்திலேயே இருந்தன என்பது இந்நூற்பாவால் நன்கு புலனாகின்றதன்றோ?

1. "கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி புறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கம்"

"முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரைகிலை யின்றே ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்"

தொல்காப்பியர்க்கு முன்பே ஆற்றுப்படை நூல்கள் இருந்தன என்பதை இவ்விரண்டு நூற்பாக்களும் உணர்த்துகின்றன அல்லவா?

அகப்பொருள் பற்றிய நூல்கள் கலிப்பாவிலும் பரிபாடலிலும் வரும் எனத் தொல்காப்பியர் கூறுவதால், அவர்க்கு முன்பும் அவர் காலத்திலும் அவ்விரு பாக்களிலும் அமைந்த செய்யுள் நூல்கள் இருந்தமை வெளிப்படை.

2. "குழவி மருங்கினும் கிழவ தாகும்" என்று தொல்காப்பியர் கூறுவதால், பிற்காலப் பிள்ளைத் தமிழ் போன்ற நூல்கள் தொல்காப்பியர் காலத்தில் இருந்திருக்கலாம் எனக் கருதுதல் தவறன்று.

1, மரபியல் 97; ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, ப. 803. 2. புறத்திணை இயல், 36, 3. எச்சவியல், 66 4. அகத்திணையியல், 53. 5. புறத்திணையியல், j 26 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

3. 'ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப' என்று தொல்காப்பியர் கூறுவதால், அவர் காலத்தில் உலா நூல்கள் இருந்திருக்கலாமென்று கூறுதல் பொருத்தமாகும்.

4. மடன்மாக் கூறும் இடனுமா ருண்டே' என்று தொல்காப்பியர் கூறலால், ஆண்கள் தலைவியரை விரும்பி மடன்மா ஏறுவதாகக் கூறிய மடல் நூல்கள் தொல் காப்பியர் காலத்தில் இருந்திருக்கலாம்.

5. அங்கதக் தானே அரில்தபத் தெரியிற் - செம்பொருள் கரந்த(து) என இரு வகைத்தே? என்று தொல்காப்பியர் கூறுவதால், ஒருவனைப் பழித்தே வைத செய்யுட்களும், பழி மறைத்து மொழியும் செய்யுட்களும் அவர் காலத்தில் இருந்தன எனலாம். இவை முறையே செம்பொருள் அங்கதம் (வசைப்பாட்டு), பழிகரப் பங்கதம் (வசை மறைத்துக் கூறும் பாட்டு) எனப்படும்.

6. எளிதில் பொருள் தோன்றாது சொற்களால் மறைய வைத்துக் கூர்ந்து நோக்கின் இன்ன பொருளையுடையது என்று அறியக்கூடும் வகையில் இக்கால விடுகதை போன்ற ஒருவகை, பிசி எனத் தொல்காப்பியர் காலத்தில் பெயர் பெற்றிருந்தது. அது உவமத்தாலும், தோன்றுவது கிளந்த துணிவினாலும் வரும்; செய்யுள் வடிவிலும் உரை நடை வடிவிலும் வரும். இப்பிசி பற்றிய நூல்கள் இருந்தமை பற்றியே தொல்காப்பியர் இதனைக் குறித்தார்.

" ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானும்

தோன்றுவது கிளந்த துணிவி னானும் என்றிரு வகைத்தே பிசிவகை கிலையே. ' 8. முதுமொழி அல்லது பழமொழி என்பது இலக்கிய வளர்ச்சிக்கு முற்பட்டது; மக்கள் அநுபவ வாயிலாகப்

6. அகத்திணையியல் 30. 7. களவியல், 11.8. செய்யுளியல், 124.9. செய்யுளியல், 176

பிறந்தது. அது வேறொரு செய்தியை விளக்கப் பயன்படுகின்றது. புலவர் அதனைப் பயன்படுத்தித் தம் கருத்துகளை விளக்கும் பாடல்கள் உண்டு. இத்தகைய பழமொழி பற்றித் தொல்காப்பியர்,

நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப"

என்று குறித்துள்ளார். இதனால் முதுமொழியை உள்ளடக்கிய பழமொழி நானூறு போன்ற செய்யுள் நூல்கள் தொல்காப்பியர் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை உணரலாம். -

9. " மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்பு 1. என்னும் நூற்பாவினால், தொல்காப்பியர் காலத்தில் மந்திரச் செய்யுட்களைக் கொண்ட நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. பிற்காலத்தில் பாடப்பெற்ற "திருமந்திரம்' போன்ற நூல்களாக அவை இருக்கலாம்.

10. இசையை முதன்மையாகக் கொண்ட பழம்பாட்டிடைக் கலந்த பொருளையே தனக்குப் பொருளாகக் கொண்ட பாடல்வகை பண்ணத்தி எனப்படும். இது பற்றிப் பேராசிரியர்;

மெய்வழக்கல்லாத புறவழக்கினைப் பண்ணத்தி என்ப. இஃது எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப என்பது. அவையாவன நாடகச் செய்யுளாகிய பாட்டுமடையும் வஞ்சிப்பாட்டும் மோதிரப் பாட்டும்.

10. செய்யுளியல், 177. - 11. டிை, 178. கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதேபோலப் பாட்டென்னாராயினார், நோக்கு முதலாயின உறுப்பின்மையின் என்பது. "அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க." என்று கூறியுள்ளார்.

தம் காலத்தில் இருந்த எல்லா நூல்களையும் பழுதறக் கற்ற பேராசிரியரே, "வல்லார்வாய்க் கேட்டுணர்க' என்று கூறினர் எனின், அவர் காலத்தில் பண்ணத்தி என்பது வழக்கற்றுப் புலவரும் அறிய முடியாத நிலையை அடைந்து விட்டது என்பது தெரிகிறதன்றோ?

"பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத்தி என்பு"[2]

இப்பண்ணத்தி பற்றியே ஆசிரியர்,

"அடியிகந்து வரினும் கடிவரை யின்றே"[3]

என்று கூறினார். இதற்கு உரை எழுதிய பேராசிரியர், அவை, முற்காலத்துள்ளார் செய்யுட் காணாமையின் காட்டாமாயினோம். இக்காலத்துளவேற் கண்டு கொள்க. இலக்கணம் உண்மையின், இலக்கியம் காணாமாயினும் அமையும் என்பது, என்று கூறியிருத்தல் பண்ணத்தியின் பழைமையை நன்கு உணர்த்துவதாகும். (தொல்காப்பியர் இன்றுள்ள நூல்கட்கு முற்பட்டவர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாதல் காண்க.)

11. தொல்காப்பியர் காலத்தில் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எண்வகை வனப்புகளுள் தனித்தனி வனப்புக்குரிய நூல்கள் இருந்தன என்பது, அவர் கூறும் எண்வகை வனப்புகளுக்குரிய நூற்பாக்களைக் கொண்டும் உரையாசிரியர் தரும் விளக்கம் கொண்டும் நன்கறியலாம்.

- - (1) அறம் பொருள் இன்பங்களைச் சேர்த்தும், தனித் தனியாகவும் வைத்து அடிகள் குறைந்த செய்யுட்களில் 

பாடப்படுவன அம்மை வனப்பமைந்தநூல்கள் ஆகும். ' பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவ்வனப்பிறகு எடுத்துக் காட்டாம். எனவே, இவைபோன்ற நூல்கள் தொல்காப்பியர் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும்.

2. சிறந்த செய்யுள் நடையில் பொலிவுபெற்ற பாடல்கள் அழகு என்னும் வனப்புடையவை. எட்டுத் தொகை நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். எனவே, இவை போன்ற தொகை நூல்கள் தொல்காப்பியர் காலத் திலும் இருந்திருத்தல் வேண்டும்.

3. உரையொடு புணர்ந்த பழைமைப் பொருளாகக் கதை வடிவில் வருவது தொன்மை என்னும் வனப்பாகும்.19 உரையொடு புணர்தல்-நெடுங்காலமாகப் பலரால் சொல்லப் பட்டு வருதல் பழைமை-பழங்கதை, பழைமைத்தாகிய பொருள்மேல் வருவன. இராமசரிதை, பாண்டவ சரிதை முதலியவற்றின்மேல் வரும் செய்யுள் என்று இளம்பூரணர் கூறுவர். ஆயின், பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் "உரையொடு புணர்ந்த' என்னும் தொடர்க்கு உரைநடை யுடன் விரவிய' எனப்பொருள் கொண்டனர்; 'பெருந்தேவ னாரால் பாடப்பட்ட பாரதமும் தகடூர் யாத்திரையும் போல் வன, என்று குறித்துள்ளனர்.

4. இழும் என்னும் ஓசையையுடைய மெல்லென்ற சொற்களால் விழுமிய பொருள் பயக்கும்படி செய்யப்படு வனவும், பரந்த மொழியால் அடிநிமிர்ந்து வரத் தொடுக்கப் படுவனவும் தோல் என்னும் வனப்பைப் பெற்றவை. இளம் பூரணர் முதலுக்கு எடுத்துக்காட்டாக மார்க்கண்டேயனார் காஞ்சியையும், இரண்டாவதற்கு எடுத்துக்காட்டாகக் கூத்த

14. டிை, 235. 15. டிை,236. 16. டிை,237. 17. டிை,238.

த-9 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ராற்றுப் படையையும் சுட்டியுள்ளனர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ஆசிரியப்பாவினால் ஒரு கதைமேல் தொடுக்கப்பட்ட தொடர்நிலைச் செய்யுட்கள் இரண்டாம் நிலைக்கு எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளனர். இரண்டு இலக்கணங்களையும் கொண்டது சிலப்பதிகாரம் என்று கூறலாம். இத்தகைய நூல்கள் தொல்காப்பியர் காலத்தில் இருந்த காரணம் பற்றியே 'தொன்மொழிப் புலவர் தோலென மொழிப' என்று கூறினாராதல் வேண்டும்.

5. புதிதாகத் தொடுக்கப்படும் தொடர்நிலைச் செய்யுள் விருந்து என்னும் வனப்பை உடையதாகும். பேராசிரியர் முத்தொள்ளாயிரம், பொய்கையார் முதலியோர் செய்த அந்தாதி நூல்களை இவ்வனப்புக்குக் காட்டாகக் காட்டுவர். கலம்பகம் முதலாயினவும் சொல்லுப' என்றும் கூறி யுள்ளனர்.

6, ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றனை இறுதியாகக் கொண்டு முடியுஞ் செய்யுள் இயைபு எனப்படும்.' இயையென்ற தனானே பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வரு மென்பது கருத்து; சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும், கொங்கு வேளிராற் செய்யப்பட்ட தொடர் நிலைச் செய்யுளும் போல்வன. அவை னகார ஈற்றான் இற்றன. மற்றையீற்றான் வருவனவற்றுக்கும் ஈண்டிலக் கணம் உண்மையின், இலக்கியம் பெற்றவழிக் கொள்க. இப்பொழுது அவை வீழ்ந்தன போலும்," என்று பேராசிரியர் விளக்கம் கூறியுள்ளார்.

சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு காதையின் இறுதியும் 'ன்' என்பது பெற்று முடிகின்றது. மணிமேகலையிலுள்ள ஒவ்வொரு காதையும் இம்முறையிலேயே முடிகின்றது. ஒரு

18. டிை,239. 19. டிெ, 240.

காதையின் முடிவில் ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினொரு மெய்களுள் ஒன்று பெற்று முடியலாம். இவ்வெழுத்துகளை ஈற்றில் பெற்று முடியும் பகுதிகளைக் கொண்டவை இயைபு எனப் பெயர் பெறும் என்று தொல் காப்பியர் கூறியுள்ளார். இப்பதினொரு மெய்களுள் ஒவ்வொன்றையும் ஈற்றில் பெற்ற இலக்கிய நூல் தொல்காப்பியர் காலத்தில் இருந்திராவிடில், அவர் இவ்வெழுத்துகள் மட்டும் ஈற்றில் வரும் என்று கூறவேண்டிய தேவை ஏற்பட்டிராது. அவர் தேர்ந்தெடுத்து இவ்வெழுத்துகளைக் கூறியிருத்தலால், இவற்றுள் ஒவ்வொன்றையும் இறுதியிலே பெற்று முடியும் நூல்கள் அவர் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது வெள்ளிடைமலை.

7. உலக வழக்குச் சொல்லினாலே செவ்விதாகக் கூறப்பட்டு எளிதில் தானே விளங்கத் தோன்றுவது புலன் என்னும் வனப்புடைய செய்யுளாகும். விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன என்று பேராசிரியர் கூறியுள்ளனர்.

இங்குப் புலன் என்பது நாடகத்தைக் குறிக்கும் சொல்லாகும். நாடகம் என்பது வடமொழிப் பெயர். அதற்குத் தமிழர் வழங்கிய பெயர் புலன்" என்பது.” பாணர், விறலியர், கூத்தர் என்பவர் தமிழகத்தில் மிக்கிருந்தனர். இவர்களை வள்ளல்கள்பால் ஆற்றுப் படுத்தும் நூல்கள் பல இருந்தன. வள்ளல்கள் இவர்களைப் பெரிதும் ஆதரித்தனர் என்னும் விவரங்களை இன்றுள்ள தொகை நூல்களால் அறிகிறோம். இவர்கட்கு இவர்தம் துறையிற் புலமை நல்கிய பெருநூல்கள் தொல்காப்பியர் காலத்தில் மிக்கிருந்தனவாதல் வேண்டும் என்பது இச் சூத்திரத்தால் உணரப்படும்.'

20. டிை,241உரை. 21. ரா.இராகவையங்கார் தமிழ் வரலாறு, பக். 811. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

8. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்துப் பயிலாமல் இரு சீரடி முதலாக எழுசீரடி அளவும் வந்த அடி ஐந்தனையும் ஒப்பிட்டு ஓங்கிய மொழியால் பொருள் புலப்படச் செய்வது இழைபு என்னும் வனப்பாகும்." அவையாவன கலியும் பரி பாடலும் போலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத் தன என்பது.'

1. பலவகைச் செய்யுள் நூல்களைக் குறிப்பிட்ட தொல்காப்பியர் தமது நூலில் கால்வகை உரைநடையைப் பற்றியும் கூறியுள்ளார். அவற்றுள் ஒன்று பாட்டினிடையே வைக்கப்பட்ட பொருட் குறிப்பினால் வருவது, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய சிலப்பதிகாரத்தில் இடை யிடையே வரும் உரைநடை இவ்வகையைச் சார்ந்தது.

2. பாட்டில்லாமல் பேச்சு வழக்கில் உரையளவாய் வருவது. இது உலக வழக்கில் மக்கள் பேசும் உரைநடை.

3. உண்மை நிகழ்ச்சி இல்லாமல் பொய்யே புனைந்துரைக்கும் அளவில் வருவது ஒருவகை உரைநடை, ஓர் யானையும் குருவியும் தம்முள் நட்புக்கொண்டு இன்ன இடம் சென்று இன்னவாறு செய்தன என்று அவற்றுக்குப் பொருந்தாத பொருள்படும்படி தொடர்நிலையால் நீண்ட காலமாக வழங்கப்பட்டுவருவது என்று பேராசிரியர் கூறி யுள்ளனர்.

4. பொய்யெனப்படாது மெய்யெனப்பட்டும் நகைப் பொருள் அளவாய் வருவது நான்காம் வகை. முழுமையும் பொய்யென்று தள்ளப்படும் நிலையில் அமையாது, உலகிய லாகிய உண்மை நிலையை ஒரளவு அறிவுறுத்துவனவாய்க் கேட்போர்க்கு நகைச்சுவையை விளைக்கும் பஞ்சதந்திரக் கதைபோலும் உரைநடை இவ்வகையைச் சேர்ந்தது.

22. செய்யுளியல், 242. டாக்டர் மா. இராசமாணிக்கனார் i83

இந்நால்வகை உரைநடை நூல்களும் தொல்காப்பியர் காலத்திலும் அவர்க்கு முன்பும் தமிழில் இருந்தமையால்தான் அவர், -

பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புனர்ந்த நகைமொழி யானுமென்(று) உரைவகை நடையே கான்கென மொழிப.'"

என்று நூற்பாவொன்றினைச் செய்தனர்.

"இவையன்றி 'அகமும் புறமும்’ என்னும் பொருட்பாகு பாட்டிற்குரிய இன்பத் துறைகளிலும் கொடை, வீரம் முதலிய வற்றிலும், உற்றார் இறந்த கையறு நிலையினும், மன மகிழ்தற்குக் காரணமான மங்கலங்களிலும், எல்லாந்துறந்த துறவிலும் இன்னும் மக்கள் வாழ்நாளில் நிகழ்ந்த பல்வகை நிகழ்ச்சியினும் எத்துணையோ பலநூல்களும் உண்டாயிருந்தன வென்பது இந்நூலுள். அகத்திணை, புறத்திணை, பற்றிவரும் சூத்திரங்களால் அறியக் கிடப்பது.'

தொல்காப்பியர் தமக்கு முன்னும் தம் காலத்திலும் இருந்த பலவகைச் செய்யுள் நூல்களையும் உரைநடை நூல்களையும் தமிழ் இலக்கண நூல்களையும் நன்கு பயின்று தமது இலக்கண நூலைச் செய்தார் என்பது இதுகாறும் கூறப்பட்ட செய்திகளால் நடுவுநிலை யறிவுடையார்க்கு - இனிது புலனாகும்."

23. டிை, 178. • , 24. ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, பக். 318

35. ' ' ... Much of Tamil literature and many stages ef grammars should have existed before the Tolkapplyam to satisfy the existence of this perfect Grammar,”

-T. R. Sesha Ayyangar, Dravidian India, P. 92. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

(5) தொல்காப்பிய உரையாசிரியர்கள்

இளம்பூரணர்

தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் என்ற புலவர் பெருமக்கள் உரை கண்டுள்ளனர். இவருள் காலத்தால் முற்பட்டவர் இளம்பூரணர்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (கி. பி. 1178-12.18) குவலாள புரத்தை (கோலாரை)ச் சீயகங்கன் என்பவன் ஆண்டுவந்தான். அவன் கி.பி.1214இல் காஞ்சி அருளாளப் பெருமாள் கோவிலில் ஒரு திருப்பணி செய்தான் என்று அக்கோவில் கல்வெட்டுக் கூறுகிறது. அச்சீயகங்கன் காலத்திற்றான் பவணந்தி முனிவர் நன்னூலைச் செய்தார் என்று நன்னூல் சிறப்புப்பாயிரம் செப்புகின்றது . எனவே, பவணந்தியார் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்னலாம். இவர், இளம்பூரணர் தொல்காப்பியத்திற்கு வரைந்த உரையைத் தழுவியே நன்னூல் செய்தார்.” எனவே, இளம்பூரணர் பவணந்திக்கு முற்பட்டவராவர். அவர் காலம் கி.பி.11 அல்லது 12ஆம் நூற்றாண்டு என்று கூறலாம். இளம்பூரணர் உரை தொல்காப்பியம் முழுமைக்கும் கிடைத்துள்ளது.

சேனாவரையர்

சேனாவரையர் என்னும் பெயர் சில கல்வெட்டுகளில் காணப்படுகின்றது. அவற்றுள் ஒன்று கொற்கைக்கு அண்மையில் உள்ள ஆற்றூர்ச் சேனாவரையன்' என்ற ஒருவரைக் குறிக்கின்றது. கொற்கையைச் சூழ்ந்த நாடு "மாறோக்கம்’ எனப் பண்டைநாளில் வழங்கப்பட்டது. ஆற்றூர் அந்நாட்டைச் சேர்ந்ததேயாகும். தொல்காப்பியத்

1. A. R. E. 589 of 1919.

2. கலைக்களஞ்சியம் 2, பக். 141.

திற்கு உரைவரைந்த சேனாவரையர் சொல்லதிகாரத்துப் பெயரியலில், பெண்மையடுத்த மகனென் கிளவியும்' என்பதன் சிறப்புரையாக, புறத்துப்போய் விளை யாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக்கத்தார் இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குப,' " என்று பயிலுமிடம் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். இவ்வாறு தென்பாண்டி நாட்டைச் சேர்ந்த மாறோக்கம் என்ற பகுதியின் வழக்கினைக் கூறியவர், கல்வெட்டில் குறிக்கப்பெற்ற ஆற்றூர்ச் சேனாவரையராய் இருக்கலாம். அக் கல்வெட்டின் காலம் கி.பி.1276.8

சேனாவரையர் நன்னூலார் கொள்கைகளை மறுத்து உரை கூறுதலால் பவணந்தி முனிவருக்குப்பிற்பட்டவராவர். இவரது காலம் கல்வெட்டில் கண்டபடி கி.பி. 13ஆம் நூற் றாண்டின் பிற்பகுதி எனலாம். இவர் வடமொழிப் புலமை நிரம்பியவர். இவரது உரை சொல்லதிகாரத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது.

பேராசிரியர்

பேராசிரியர் நன்னூல் சூத்திரத்தையும் சூத்திரக் கருத்தையும் தமது தொல்காப்பிய உரையில் எடுத்து ஆண்டுள்ளார். ஆதலின் இவர் பவணந்தி முனிவருக்குப் பிற்பட்டவர் என்பது தெளிவு. எனவே, இவர் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 14ஆம் நூற்றாண்டு என்று கொள்ளலாம். இவரது உரை மெய்ப்பாட்டியல், செய்யுளியல், உவமையியல், மரபியல் என்னும் நான்கு இயல்களுக்கே கிடைத்துள்ளது.

நச்சினார்க்கினியர் .

நச்சினார்க்கினியர் மதுரையைச் சேர்ந்தவர்; பாரத்து வாசகோத்திரத்தினர். இவர் வடமொழியிலும் தென்மொழி

3. 465 of 1929–30, 4. கலைக்களஞ்சியம், 7, பக். 681. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

யிலும் புலமை மிக்கவர். இவரது உரை எழுத்ததிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும் பொருளதிகாரத்தின் முதல் ஐந்து இயல்களுக்கும் கிடைத்துள்ளது. இவர் தமது உரையில் இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், பரி மேலழகர், ஆளவந்தபிள்ளை ஆசிரியர் ஆகிய உரையாசிரியர்களைக் குறிப்பிடுவதால் அவர்களுக்குப் பிற்பட்டவராவர்.

இவரது காலம் ஏறத்தாழப் பதினைந்து அல்லது பதினாறாம் நூற்றாண்டு என்று கூறலாம்.

தெய்வச்சிலையார்

தெய்வச்சிலையார் உரை சொல்லதிகாரத்திற்கு மட்டும் கிடைத்துள்ளது. செந்தமிழ் நாடு இன்னது என இளம் பூரணரும் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் கூறிய கூற்றைக் குறிப்பிட்டு இவர் மறுத்துள்ளார். அதனால் இவர் நச்சினார்க்கினியருக்கும் பிற்பட்டவர் என்பது தெளிவாகும். திருப்புல்லாணியில் உள்ள பெருமாளுக்குத் தெய்வச் சிலையார் என்பது பெயர். அப்பெயரைத் தாங்கியுள்ள இவ்வுரையாசிரியர் அப்பகுதியைச் சேர்ந்தவராகலாம்.

கல்லாடர்

கல்லாடர் உரை சொல்லதிகாரத்திற்கு மட்டுமே ஒலைச் சுவடிகளில் இருந்தது. அஃது இவ்யாண்டு அச்சாகியுள்ளது. கல்லாடர் முன்பு கூறப்பெற்ற உரையாசிரியருள் ஒருவராலும் குறிக்கப் பெறாமையால், அவர் அனைவருக்கும் பிற்பட்டவர் என்று கொள்ளுதல் பொருத்தமாகும். செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர்ச் சிவபெருமானுக்குக் கல்லாட ஈசுவரர் என்பது பெயர். எனவே, இன்றைய மீஞ்சூர் சங்க காலத்தில் கல்லாடம் எனப் பெயர் பெற்றிருந்தது எனலாம். சங்ககாலக் கல்லாடர் இவ்வூரினராதல் கூடும். பின் வந்த கல்லாடதேவ நாயனாரும் இத்தொல்காப்பிய உரை யாசிரியரான கல்லாடரும் இவ்வூரினர் எனக் கருதுதல் பொருத்தமாகும்.

இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளால், தொல்காப்பிய உரையாசிரியர் காலம், தொல்காப்பியர் காலத்திற்கு மிகப் பிற்பட்டது என்பது தெளிவாகும்; அஃதாவது, ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்குப் பின்பே இளம்பூரணர் தோன்றினார்.அவருக்குப் பின்பு பிற உரையாசிரியர் தோன்றினர் என்பது தெளிவு. தொல்காப்பியருக்குப் பின்பு தமிழகத்தில் வட மொழியின் செல்வாக்கு மிகுதிப்பட்டது: ஆட்சிமுறையில் மாறுதல்கள் ஏற்பட்டன: சாதி வேறுபாடுகள் வேரூன்றி விட்டன; ஒரு சாதிக்கு ஒரு நீதி கூறும் நூல்கள் பெருகி விட்டன; பக்திநெறி பரவி விரிவடைந்தது. இம்மாற்றங்கள் தோன்றிய பின்பு வந்த உரையாசிரியர்கள் தங்களுக்கு ஏறத் தாழ 1600 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பெற்ற தொல் காப்பியத்திற்கு உரை கூறுதல் முற்றும் இயலவில்லை;அதனால் பல இடங்களில் குழப்ப உரை கூறிச் சென்றனர்: சாதிகளை நுழைத்து உரை கூறினர்; இங்ஙனம் இவர்கள் தவறு செய்த இடங்களைப் பேராசிரியர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் தம் உரையில் சுட்டிக் காட்டி இருத்தல் காணத்தகும். நடுவுநிலை உள்ளம் படைத்த நன்மக்கள் இவ்வுரை களைப் படித்து உண்மை தெளிவாராக, -


  1. “The famous Tamil grammatical work, the Tolkappiyam, may be assigned to the period (B.C. 325– B.C.188) under survey; it is said to exhibit the influence of Aindra Vyakarana, a pre-Panini system of Sanskrit grammar, but it is free from Buddhist influence.”

    -R. Sathyanatha Ayyar, History of India,
    Vol. i., pp. 170–171.

  2. ௸ 180.
  3. ௸ 183.