தமிழ்மொழி இலக்கிய வரலாறு/நற்றிணை

12. நற்றிணை

முன்னுரை

இவ்வகப்பொருள் நூல் நானூறு அகவற் பாக்களையுடையது. பாக்கள் ஒன்பதடிச் சிறுமையும் பன்னிரண்டு அடிப் பெருமையும் உடையவை, இந்நூல் மிகச் சிறந்த அகத்திணை இலக்கியம். 187 புலவர் பாடிய பாக்கள் இந் தூரலில் அடங்கியுள்ளன. இந்நூலைத் தொகுப்பித்தோன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவன். தொகுத்தவர் இன்னவர் என்பது தெரியவில்லை. காலஞ் சென்ற பெரும் புலவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரவர்கள் இந்நூற்பாடல்கட்குப் பொழிப்புரை முதலியன எழுதியுள்ளனர். அப்பெரியார் தொண்டு பாராட்டத்தக்கது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரும் அண்மையில் இந்நூலுக்கு உரையெழுதி வெளியிட்டுள்ளனர்.

நற்றிணையில் செய்யுட்களைப் பாடிய புலவர்கள்-187 பேர்[1]

1. அகம்பன் மாலாதனார்
2. அஞ்சில் அஞ்சியார்
3. அஞ்சில் ஆந்தையார்
4. அம்மள்ளனார்
5. அம்மூவனார்
6. அம்மெய்யனாகனார்
7. அல்லங்கீரனார்
8. அறிவுடைநம்பி

9. ஆலங்குடி வங்கனார்
10. ஆலம்பேரிசாத்தனார்
11. ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
12. இடைக்காடனார்
13. இளங்கீரனார்
14. இளந்திரையனார்
15. இளந்தேவனார்

16. இளநாகனார்
17. இளம் புல்லூர்க்காவிதி
18. இளம்போதியார்
19. இளவெயினனார்
20. இளவேட்டனார்
21. இனிசந்த நாகனார்
22. உக்கிரப் பெருவழுதி
23. உரோடோகத்துக் கந்தரத்தனார்
24. உலோகச்சனார்
25. உறையூர்க் கதுவாய்சாத்தனார்
26. எயினந்தை மகன் இளங்கீரனார்
27. எயினந்தையார்
28. ஐயூர் முடவனார்
29. ஒரு சிறைப் பெயரியனார்
30. ஒரம்போகியார்
31. ஒளவையார்
32. கச்சிப்பேட்டு[2] இளந்தச்சனார்
33. கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
34. கடுவன் இளமள்ளனார்
35. கண்ணகனார்
36. கண்ணகாரன் கொற்றனார்
37. கண்ணங் கொற்றனார்
38. கண்ணம் புல்லனார்
39. கணக்காயனார்

40. கணிபுன் குன்றனார் (கணியன் பூங்குன்றனார்)
41. கதப்பிள்ளைச் சாத்தனார்
42. கந்தரத்தனார்
43. கபிலர்
44. கயமனார்
45. கருவூர்க் கோசனார்
46. கழார்க்கீரன் எயிற்றியார்
47. கள்ளம் பாளனார்
48. கள்ளிக்குடிப் பூதம் புல்லனார்
49. காசிபன் கீரனார்
50. காஞ்சிப் புலவனார்
51. காப்பியஞ்சேந்தனார்
52. காமக்கணிப்ப்ச்லை
53. காரிக்கண்ணனார்
54. காவன் முல்லைப் பூதனார்
55. காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணனார்
56. கிடங்கில், காவிதி, கிரங்கண்ணனார்
57. கிடங்கில், காவிதி, பெருங்கொற்றனார்
58. கிள்ளிமங்கலங் கிழார் மகனார் சோகோவனார்
60. குடவாயிற்கீரத்தனார்.

61. குண்டுகட் பாலியாதனார்
62. குதிரைத் தறியனார்
63. குளம்பனார்
64. குறமகள் குறியெயினி
65. குன்றியனார்
66. குன்றூர்கிழார் மகனார் கண்ணத்தனார்
67. கூடலுர் பல்கண்ணனார்
68. கூற்றங் குமரனார்
69. கொள்ளம் பக்கனார்
70. கொற்றங் கொற்றனார்
71. கொற்றனார்
72. கொட்டம் பலவனார்
73. கோக்குளமுற்றனார்
74. கோட்டியூர் நல்லந்தையார்
75. கோண்மா நெடுங்கோட்டனார்
76. கோவூர்கிழார்
77. கோளியூர் கிழார் மகனார் செழியனார்
78. சல்லியங்குமரனார்
79. சாத்தந்தையார்
80. சிறுமோலிகனார்
81. சிறைக்குடி யாந்தையார்
82. சீத்தலைச்சாத்தனார்
83. செங்கண்ணனார்
84. செம்பியனார்
85. சேகம் பூதனார்
86. சேந்தங் கண்ணனார்
87. பேசந்தம் பூதனார்
88. தங்கால், ஆத்திரேயன் செங்கண்ணனார்
89. தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகளார்

90. தனிமகனார்
91. தாயங்கண்ணனார்
92. தும்பிசேர் கீரனார்
93. துறைக் குறுமாவிற்பாலங்கொற்றனார்
94. தூங்கல் ஓரியார்
95. தேய்புரிப் பழங்கயிற்றனார்
96. தேவனார்னார்
97. தொண்டை மான் இளந்திரையன்
98. தொல்கபிலர்
99. நக்கண்ணையார் னார்
100. நக்கீரர்
101. நப்பாலத்தனார்
102. நம்பி குட்டுவனார்
103. நல்லந்துவனார்
104. நல்லாவூர் கிழார்
105. நல்லூர்ச் சிறுமே தாவியார்
106. நல்விளக்கனார்
107. நல்வெள்ளியார்
108. நல்வேட்டனார்னார்
109. நற்சேந்தனார்
110. நற்றங் கொற்றனார்
111. நற்றமனார்
112. நிகண்டன், கலைக்கோட்டுத் தண்டனரர்
113. நெய்தல் தத்தனார்
114. நொச்சி நியமங்கிழார்
115. பரணர்
116. பராயனார்
117. பாரதம் பாடிய பெருந்தேவனார்
118. பாண்டியன் மாறன் வழுதி
119. பாலை பாடியபெருங் கடுங்கோ

120. பிசிராந்தையார்
121. பிரமசாரி
122. பிரான் சாத்தனார்
123. புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
124. பூதங்கண்ணனார்
125. பூதன் தேவனார்
126. பூதனார்
127. பெருங்கண்ணனார்
128. பெருங்குன்றூர் கிழார்
129. பெருங் கௌசிகனார்
130. பெருந்தலைச் சாத்தனார்
131. பெருத்தேவனார்
132. பெரும் பதுமனார்
133. பெருவழுதி
134. பேராலவாயர்
135. பேரி சாத்தனார்
136. பொதும்பில் கிழார்
137. பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார்
138. பொய்கையார்
139. போதனார்
140. மடல் பாடிய மாதங்கீரனார்
141. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
142. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
143. மதுரை ஆருலவியனார் நாட்டு ஆலம்பேரி சாத்தனார்


144. மதுரை இளம்பாலா சிரியன் சேந்தன் கூத்தனார்
145. மதுரை ஈழத்துப்பூதன் தேவனார்
146. மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
147. மதுரைக் கண்ணத்தனார்
148. மதுரைக் காருவவியங் கூத்தனார்
149. மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
150. மதுரைச் சுள்ளம் போதனார்
151. மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சோகத்தனார்
152. மதுரைப் பூவண்டனாகள் வேட்டனார்
153. மதுரைப் பெருமருதனார்
154. மதுரைப்பெருமருதிள நாகனார்
155. மதுரைப் பேராலவாயர்
156. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
157. மதுரை மருதனிள நாகனார்
158. மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
159. மருதம் பாடிய இளங்கடுங்கோ

160. மலையனார்
161. மள்ளனார்
162. மாறன் வழுதி
163. மாங்குடி கிழார்
164. மாமூலனார்
165. மாறோக்கத்து நப்பசலையார்
166. மிளைகிழான் நல்வேட்டனார்
167. மீளிப் பெரும் பதுமனார்
168. முக்கல், ஆசான் நல்வெள்ளையார்
169. முடத்திருமாறன்
170. முதுகூற்றனார்
171. முப்பேர் நாகனார்
172. முறுவெங் கண்ணனார்
173. மூலங்கீரனார்
174. மோசி கண்ணத்தனார்
175. மோசி கீரனார்
176. வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்


177. வட்டி வண்ணக்கன் சொருமருங் குமரனார்
178. வண்ணப்புறக் கந்தரத்தனார்
179. வன்பரணர்
180. வாலம் பேரி சாத்தனார்
181. விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
182. விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
183. வினைத் தொழிற்சோகீரனார்
184. வெள்ளியந் தின்னனார்
185. வெள்ளி வீதியார்
186. வெள்ளைக்குடி நாகனார்
187. வெறி பாடிய காமக்கண்ணியார்

இப்புலவர் பெயர்களுள் சில வடமொழிப் பெயர்களாகக் காணப்படுகின்றன. சாதேவனார், இனிசந்த நாகனார் உக்கிரப் பெருவழுதி, உரோடோகம், உலோச்சன். சந்தாத்தன், கோசன், கபிலன், காசிபன், சேகம் (பூதனார்): சிறுமோலிகனார், ஆத்திரேயன், தேவன், மேதாவியார் நிகண்டன், தத்தன், பராயன், பிரமசாரி, கௌசிகன். போதன், ஆசான் இவற்றை நோக்க, இந்நூற்பாக்கள் பாடப்பெற்ற காலத்தில் வடமொழியாளர் எந்த அளவு தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது ஓரளவு அறியப்படும். காசிபன், ஆத்திரேயன், பராயன், நிகண்டன் பிரமசாரி, கௌசிகன், உலோச்சன் முதலிய பெயர்களோடு விளங்கியவர் 'வடமொழியாளரென்றே கொள்ளலாம். ஆயினும் அவர்கள் தமிழரோடு கலந்து, தமிழராய் வாழ்ந்து தமிழ்ப் புலவராய் விளங்கி நற்றமிழில் நன்கு பாடியுள்ளனர் என்பது மறக்கற்பாலதன்று.

அரசனால் காவிதிப் பட்டம் பெற்ற வணிகப் பெரு மக்களும், அறுவை வணிகர் போன்ற பலதுறை வணிகப் பெருமக்களும், சிறுபிள்ளைகளுக்குப் பாடம் கற்பிப்பவர் முதல் பலருக்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியன்மார்களும், குறத்தி முதலிய திணை நில மக்களும், கொல்லன் முதலிய பலவகைத் தொழிலாளரும் நல்லிசைப் புலவராய்த் திகழ்ந்தனர் என்பது இப் புலவர் பட்டியலைக் கொண்டு இனிதுணரப்படும். இங்ஙணம் மக்கள் இனத்தில் எவ்வித வேறுபாடும் இன்றி எல்லாத் தரத்தினரும் புலவர்களாய் விளங்கிய சங்க காலம் தமிழர் வரலாற்றில் பொற்காலம் என்று கூறுவதில் தடையுண்டோ?

இனி இந்நூலுள் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காண்போம்:

நூற்செய்திகள்

அரசரும் சிற்றரசரும் : குறுந்தொகைப் பாக்களில் குறிக்கப்பட்டாற் போலவே சேர சோழ பாண்டியர் தமக் குரிய பொதுப் பெயர்களால் நற்றிணைப் பாக்களில் குறிக்கப் பட்டுள்ளனர். ஆலங்கானத்துச் செழியன் (387) என்று நெடுஞ்செழியன் குறிக்கப்பட்டுள்ளான், சிற்றரசருள் ஒரி (6, 52, 265, 320) , பழையன் (10) , தித்தன் (58), அழிசி (87), மலையமான் (100, 170, 291), பெரியன் (131), ஆய் அண்டிரன் (167, 237), அன்னி (180), பாரி (253), விராஅன் (260, 350), நன்னன் (270, 391), மிஞரிலி (265) , தழும்பன் (300) , வாணன் (340), அருமன் (367), நெடுமானஞ்சி (381), முடியன் (390) என்பவர் குறிக்கப் பட்டுள்ளனர்.

அரசியல் : அரசர் தம் கடமையை அறிந்து நடப்பாராயின், அவரது ஆட்சி இன்பந்தரும் குளிர்ந்த நிழலைப் போன்றது (146). சோழர் அறம் கெடாது நீதி வழங்கு பவர் (400). போர்க்களத்தில் களம் பாடுவாரும் இசைக் கருவியை இசைப்பவர்களும் கூடி இருந்து வெற்றி பெற்ற அரசனை வாழ்த்துவது வழக்கம் (113).

குறிஞ்சிநில ஊர்களில் ஊர்க்காவல் இருந்தது. காவலர் குறிஞ்சி என்னும் பண்ணைப் பாடிக்கொண்டு இரவு முழுமையும் தூங்காமல் ஊரைக் காவல் காத்தனர் (255), நெய்தல் நில ஊர்களிலும் காவலர் யாமந்தோறும் மணியடித்து ஓசை யெழுப்பி, “தலைக்கடை புழைக்கடை வாயில்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்,” என்று கூறிச்சென்றனர் (132).

தகுதி உடையவர் பெயரையும் அவர் வாழும் ஊரையும் ஏட்டில் வரைந்து ஊர்ப்பொது மன்றத்தில் வைத்திருப்பது வழக்கம் (365).

ஆயன் : ஆயன் முல்லை மலரை இரவிலே கொய்து பனங்குருத்தின் போழுடன்ே சேர்த்து மாலையாகத் தொடுத்து அணிவான் (169) . அவன் பலவாகிய காலிட்டுப் பின்னிய மெல்லிய உறியுடனே, தீக்கடை கோல் முதலிய கருவிகளை இட்டு வைத்த தோல் பையைச் சுருக்கிக் கட்டிப் பனையோலைப்பாயோடு முதுகிற் கட்டியிருப்பான்; பால் விலை கூறி விற்பான்; கையில் கோலூன்றி இருப்பான்; அக் கோல்மீது ஒரு காலை வைத்து ஒடுங்கிய நிலையில் நிற்பான்; வாயைக் குவித்து ‘வீளை’ எனப்படும் அழைத்தலாகிய குறியை எழுப்புவான். அது கேட்ட ஆடுகள் பிறநிலம் புகாமல் நிற்கும் (142). ஆயர் தயிர்த்தாழியின் முடை நாற்றம் நீங்க விளம்பழம் இட்டு வைப்பர் (12).

பரதவர் வீடுகள் பனையோலைகளாலும் இலைகளாலும் தழைகளாலும் வேயப்படும். பனை ஓலைகளோடு முட்களைச் சேர்த்துக் கட்டப்பட்ட வேலி ஊரைச் சூழ்ந்து இருக்கும் (38). பரதவர் திமிங்கிலத்தையும் வேட்டையாடுவர்: மீன்களைப் பிடித்து விடியற்காலையில் கொண்டு வருவர் புன்னைமர நிழலில் இருந்து தேன் மணம் வீசும் தெளிந்த கள்ளைப் பருகுவர் (328); சில சமயங்களில் கடலிலேயே சுறா மீன்களையும் வேறு பெரிய மீன்களையும் தம் திமிலிலேயே துண்டித்து இறைச்சிகளை நிரப்பிக்கொண்டு கரைக்கு வருவர் (112).

ஊர்கள் : இந்நூற் பாடல்களில் கீழ்வரும் ஊர்கள் குறிக்கப்பட்டுள்ளன! தொண்டி - சோனுக்குரிய துறைமுக நகரம் {8, 195), போர் - பழையன் என்ற சிற்றரசனுக்கு உரியது (10), கொற்கை - பாண்டியர் துறைமுக நகரம் (23), மாந்தை - சேர நாட்டுக் கடற்கரை ஊர் (35, 395), காண்ட வாயில் - கடற்கரை ஊர், கூடல் - பாண்டியர் தலைநகரம் (39, 298) , கிடங்கில் (65), சாய்க்காடு(73), பொறையாறு (131). அம்பர் (141) , ஆர்க்காடு (190), மருங்கூர்ப்பட்டினம் - பாண்டிய நாட்டுக் கடற்கரை நகரம் (358), புனல்வாயில் (260), இருப்பையூர் (260), பாரம் (265), ஆறேறு (265), குன்றூர் (280}, கழாஅர் (281), முள்ளூர் (291), ஊனூர் (300), வாணன் சிறுகுடி (340), அருமன் சிறுகுடி (357), குடந்தைவாயில்[3] (379), வெண்ணி (390).

உடை : கலிங்கம், பூங்கலிங்கம், துகில், நுண்துகில், அம்துகில் என்பன உயர்ந்த மெல்லிய ஆடை வகைகள் (20, 90, 43, 120, 366). பாலை நிலத்து ஆடவர் துவர் ஆடையை உடுத்திருந்தனர் (33). வீரர் இடையில் கச்சு அணிந்தனர் (21), கானவர் (குறிஞ்சி நிலத்து ஆடவர்) மரப்பட்டை நாரால் பின்னிய உடையை உடுத்திருந்தனர் (64). அவர்தம் மகளிர் தளிர்களையும் பூங்கொத்துகளையும் நெருக்கமாக வைத்துக் கட்டப்பெற்ற தழைகளை ஆடையாக உடுத்திருந்தனர் (204) . நாரை பிறகின் மென்மையும் வெண்மையும் வாய்ந்த ஆடைகளும் வழக்கில் இருந்தன (70).

வாணிகம் : பல நாடுகளிலிருந்தும் கப்பல்கள் வந்து துறைமுகத்தில் தங்குவது வழக்கம் (293) . கடைத்தெரு நியமம் எனப்பட்டது (45). தமிழ் வாணிகர் வாணிகத்தின் பொருட்டு வடநாட்டிற்குச் சென்றனர்; கங்கையாற்றில் கலத்தில் சென்றனர் (189). பரதவர் மீனை விற்றுக் கள்ளைப் பெற்றனர். உப்பு வாணிகர் உப்பை விற்று நெல்லைப் பெற்றனர் (183). இவற்றை நோக்க, அக்காலத்தில் பண்டமாற்று வழக்கில் இருந்தமை தெளிவாகும்.

கலைகள் : தமிழகத்தில் ஒவியர் இருந்தனர் (118, 146, 177, 182, 268). பாணர் சீறியாழ் (38), பேரியாழ் (40) வாசித்தனர். முழவு (67), மயிர்க்கண் முரசு (93), தண்ணுமை (130), கிணைப்பறை (108), தொண்டகச் சிறுபறை (104), குடமுழா[4] (220), குழல் (69) முதலிய இசைக் கருவிகள் வழக்கில் இருந்தன. குறிஞ்சிநில மகளிர் நெல் முதலியவற்றைக் குற்றும்போது பாடிக்கொண்டே குற்றினர் (379).

மருத்துவன் அறவோன் எனப்பட்டான் (136), நோயை ஆராய்ந்து அந்நோய்க்குத் தக்க மருந்தையே கொடுத்தான் (136). சோதிடம் பார்த்தவர் ‘கணியர்’ எனப்பட்டனர். எனவே, சோதிடக்கலையும் சங்ககாலத் தமிழகத்தில் இருந்தது என்பது தெளிவாகும் (373).

சமயம் : அக்கால் மக்கள் தைத்திங்கள் முதல் நாளில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்டனர் (22). தை மாதத்தில் குளிர்ந்த நீரில் நீராடிப் பெண்கள் நோன்பிருந்தனர் (80). நீண்ட சடையையும் அசையாத மெய்யையும் கொண்டு மலையில் தவம் செய்பவர்(தவசியர்) அக்காலத்தில் இருந்தனர் (141). கடற்கரையில் பலவகைக் கொடிகள் படர்ந்த இடங்களில் அக்கொடிகளை அறுத்து அவ்விடங்களில் நோன்பினைக் கொண்ட மாதர் உறைவது வழக்கம்.

அவர்கள் ‘படிவ மகளிர்’ எனப்பட்டினர் (272). இவர்கள் கவுந்தியடிகள் போன்ற சமண சமயப் பெண் துறவிகளாகலாம்.

பண்பாடு

தேரின் உருளையில் நண்டுகள் அகப்பட்டு நசுங்காதபடி பாகன் தேரைச் செலுத்தினான் (11) என்பது, அவனுக் கிருந்த அருள் உணர்ச்சியை உணர்த்துகிறது. சங்ககால மக்கள் செல்வத்தை நில்லாப் பொருள்' என்றனர் (126, 241); மன்னாப் பொருள் (71) என்றனர்; இன்பமும் இளமையும் விரைவில் கழிவன (46) என்னும் உண்மையை அறிந்திருந்தனர். பெரியோர் கொடிய தீத்தொழிலைச் செய்தவரிடத்து அச்செயலை நேரிலே கண்டும் உள்ளத்தால் ஆராய்ந்து அத்தொழில் செய்தோர் இனி அதனைச் செய்யாது ஒழியும்படி பலவாறு அறிவுரை கூறினர் (116): ஒன்றன் காரணமாக உண்டானதை வேறொன்றன்மேல் இட்டுக் கூறுதல் பண்புடையதன்று (117), விருந்தினர்களுக்கு உணவுப் பொருள்களைப் பகிர்ந்து கொடுத்தல் சிறந்த பண்பாடு (185) என்பவற்றைத் தமிழ்மக்கள் அறிந்திருந்தனர்; இரவில் விருந்து வரினும் உவகையோடு உபசரித்தனர் (142).

தம் வாழ்நாளும் பொருளும் பிறர் பொருட்டே என்று எண்ணி அருள்மிக்க நெஞ்சுடனே தமிழர் பொருளிட்டச் சென்றனர் (186, 286). இல்லின்கண் செயலற்று இருப்பவர்க்கு இம்மைக்குரிய புகழும் இருமைக்கு முரிய இன்பமும், மறுமையிலும் இன்புறுவதற்கு ஏதுவாகிய இரந்தோர்க்கு ஈதல் முதலிய கொடைமையும் ஆகிய மூன்றும் கைகூடுவதில்லை (214). புகழ் மிகும்படி அருள் உணர்ச்சியோடு வாழ்கின்றவரது செல்வம் பொலிவடையும் (217). மக்கள் மரம் பட்டுப் போகும்படி அதனிடமுள்ள மருந்தை முற்றும் கொள்ளார் (226). விருந்தினரை உபசரித்தல் உயர்ந்த பண்பாடு (258, 280, 281). ஆயுள் முதிர்ந்து யாக்கை மூத்துத் தளர்ந்தவர் இளமையை விரும்பின் அடைதல் இயலாது; தம் வாழ் நாளின் எல்லையை எவரும் அறியார் (314). நட்பின்கண் சிறுதவறும் நேராதபடி தடத்தல் வேண்டும் {315). தீயநெறி நரகம் போன்றது (329). இவை தமிழர் தம் உயர்ந்த கருத்துகள்.

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நோக்கி, “இவ்வுலகத்தில் பிறந்தவர் இறப்பர் என்பது உண்மை . கணவன் பிரிவால் இறப்பு வந்ததே என்று நான் அஞ்சவில்லை . அவ்வாறு இறப்பின், இனிவரும் எனது பிறப்பு மக்கட் பிறப்பு இல்லாமல் வேறு ஒரு பிறப்பாக மாறிவிடின், என் காதலனை அப்பொழுது மறப்பேனோ என்று அஞ்சுகின்றேன் (397),” என்று உள்ளம் உருக உரைத்தாள். உயிர் பல பிறவிகள் எடுக்கும் என்ற நம்பிக்கை அக் காலத்தில் இருந்தது என்பதையும், உண்மை மனைவி பல பிறவிகளிலும் தன் கணவனையே பெற விரும்புவதையும் இத்தலைவியின் கூற்று உணர்த்துகின்றது அல்லவா?

மேற்கோள்

நற்றிணைப் பாடல்களில் திருக்குறள் கருத்துகளும் சொற்களும் சொற்றொடர்களும் ஆங்காங்கு அமைந் துள்ளன. அவற்றை நிரலே கீழே காண்க!

1.“நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்தயந் தருளி” 1

“நீரின் றமையா துலகெனின் யார்பார்க்கும்
வானின் நலமயா தொழுக்கு” -குறள் 20

2.“......................பெரியோர்
நாடி நட்பி னல்லது
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே.” 32

“நாடாது நட்டலிற் கேடில்லை: நட்டபின்
வீடில்லல கட்பாள் புவர்க்கு” -குறள் 791


3.“அழுந்து படு விழுப்புண் வழும்புவாய் புலரா” 97

“விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை எடுத்து” -குறள் 776

4.“மருந்துய ரவலந் தீர்க்கு
மருந்து பிறி தில்லையா னுற்ற நோய்க்கே.” 140

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.” -குறள் 1102

5.“ஆள்வினைக்கு அகறி யாயின் இன்றொடு” 205

“ஆள்வினையுடைமை” -குறள் அதிகாரம் 62

6.“ஐதே சும்ம விஷ் வுலகு படைத் தோனே” 240

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான்” -- திருக்குறள் 1062

7.“முந்தை மருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நளிநா கரிகர்.” 355

“பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.” -குறள் 580

8.“உயிர்செலத் துணைதரு மாலை
செயிர்தீர் மாரியொ டொருங்குதலை வரினே.” 364

“மாலையோ வல்லை மணந்தார்

உயிருண்ணும் வேலை வாழி பொழுது”
-குறள் 1221

புறநானூறு முதலிய தொகை நூல்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் நற்றிணைத் தொடர்கள் சில பயின்று வருவதைக் காணலாம்.

1.“எம்மனோரில் செம்மலும் உடைத்தே”

45

“நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே”

-புறநானூறு 47

2.“கடியுடை வியனகர்க் காவல் விேயும்”

156

“கடியுடை வியனக ரவ்வே”

-புறநானூறு 35

3.“கிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய......”

- 289

“கிலம் பெயரினும் கின்சொல் பெயரல்”

-புறநானூறு 3

4.“செம்மறு கொண்ட வெண்கோட் டியானை”

151

“வெண்கோட் டியானை சோணை படியும்”

-குறுந்தொகை 75

5.“அழுமே தோழியவர் பழமுதிர் குன்றே

88

“பழமுதிர் சோலை மலைகிழ வோனே”

-திருமுருகாற்றுப்படை

6.“பழவிறல் நனந்தலை”
37
“பழவிறல் மூதூர்”
-சிலம்பு, காதை 10, வரி 4


7.“வருமழை கரந்த வானிற விசும்பின்”
6

“வருபனி கரந்த கண்ண னாகி”

-சிலம்பு. காதை 16, வரி 97
8.“யாரை யோகின் தொழுதனம் வினவுதும்”
55

“யாரை யோநீ மடக்கொடி யோய்என”

-சிலம்பு, காதை, 20, வரி 49
9. “செங்கதிர்ச் செல்வன் தெறுதலின்”
164

“காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்”

-சிலம்பு, காதை 18, வரி 51
10. “மாலை அக்தி மாலதர் கண்ணிய”
238

“அந்திமாலைச் சிறப்புச் செய் காதை”

-சிலம்பு, காதை 4
11. “இனிது பெறுமீன் எளிதினில் மாறி”
239

“மாறி வருவன் மயங்கா தொழிகென”

-சிலம்பு. காதை 16, வரி 93
12. “முற்றா முலையள்”
312

“முதிரா முலை குறைத்தாள்”

-சிலம்பு, காதை 22, வெண்பா
13.“பொன்செய்கொல்லனின் இனிய தெளிர்ப்ப”
394

“பொன்செய் கொல்லன் தன்சொல் கட்ட” -சிலம்பு, காதை 20, வரி 74

14.“ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தகமும்” 125

“ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது” -மணிமேகலை, காதை 2, வரி 42

உவமை முதலியன

நற்றிணைப் பாடல்களில் உள்ளத்தைக் கவரும் உவமை கள் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன (84, 97, 131, 184, 345). தற்குறிப்பேற்றம் (242), பிறிது மொழிதல் (286) போன்ற பிற அணிகள் சிலவும் இடம் பெற்றுள்ளன. இவை படித்துச் கவைத்தற்குரியன.

வட சொற்கள்

நற்றிணைப் பாடல்களில் மிகச் சிவ வட சொற்களே இடம் பெற்றுள்ளன . அவற்றுள் வதுவை (125), தவசியர் (141), சாபம் (228), பிரசம் - வண்டு (268), தாமம் (232), அற்சிரம் (312) என்பவை குறிப்பிடத் தக்கவை.


  1. 175 சங்கப்புலவர்கள் பாடியுள்ளனர் என்று தஞ்சை சீநிவாசப் பிள்ளையவர்களும் S. வையாபுரிப் பிள்ளையவர்களும் கூறுவர்.- தமிழ் வரலாறு பக். 34; தமிழ் மொழி-இலக்கிய வரலாறு, பக். 24
  2. 2. கச்சிப்பேடு என்பது பழைய காஞ்சி நகரத்தை அடுத்திருந்த பகுதி; இன்றைய யதோத்காரி கோவிலும் கச்சிநெறிக் காரைத்தாடு கோவிலும் உள்ள பகுதி, பராந்தது சோழன்! காலத்தில் சோழர் அரண்மனை கச்சிப்பேட்டில் தான் இருந்தது. -21 of 1921, 4200 of 190, S.I.I III. 142
  3. இப்பொழுது தஞ்சை மாவட்டத்தில் ‘குடவாசல்’ - என்பது இப்பழைய ஊரே போலும்!
  4. திருத்தருப்பூண்டி-சிவன் கோவிலில் இஃதுஇன்றும் உள்ளது.