தமிழ்மொழி இலக்கிய வரலாறு/அகநானுாறு



13. அகநானூறு

முன்னுரை

அகநானூற்றுப் பாடல்களின் சிறுமை பதின்மூன்று அடி: பெருமை முப்பத்தொன்று. இதற்கு நெடுந்தொகை என்றும் பெயர் உண்டு. இதனைத் தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி; தொகுத்தவன் மதுரை உப்பூரி குடி கிழான்மகன் உருத்திரசன்மன். இந்நூலில் முதல் நூற்றிருபது பாக்கள் 'களிற்றியானை நிரை' எனவும், 121 முதல் 300 வரையில் உள்ளவை 'மணிமிடை பவழம்' எனவும், இறுதி நூறு 'நித்திலக் கோவை’ என்றும் பெயர் பெற் றுள்ளன. இச் செய்திகள் இந்நூற்பாயிரத்தில் கூறப்பட்டுள்ளன.

இப்பாயிரத்தைப் பாடியவன் இடையள நாட்டு மணக் குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன். இவன் காலம் அறியுமாறில்லை. இவன், இந்நூலில் பாடியுள்ள புலவர் நூற்று நாற்பத்தைவர் எனக் கூறியுள்ளான். இங்ஙனம் இவன் கூறிய புலவர் எண்ணிக்கையே இலக்கிய வரலாறு எழுதியோர் அனைவரும் தத்தம் நூலில் குறித்துள்ளனர். புலவர் பெயர்களை எழுதிக் கணக்குப் பார்க்கும் போது அவர்கள் தொகை நூற்றைம்பத்தெட்டு ஆகிறது. மூவர் பெயர்கள் தெரியவில்லை.

1. பேரி சாத்தனார் வேறு, ஆலம்பேரி சாத்தனார் வேறு. இங்ஙனமே நக்கீரர் வேறு. மதுரை நக்கீரர் வேறு, மதுரை நக்கீரனார் வேறு கணக்காயனார் மகனார் நக்கீரனார் வேறு. இவ்வாறே மருதன் இளநாகனார் வேறு, மதுரை மருதன் இளநாகனார் வேறு. இப்படியே சீத்தலைச் சாத்தனார் வேறு, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத் தனார் வேறு.

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் வேறு, ஆசிரியர் நல்லந்துவனார் வேறு, அந்துவன் வேறு என்று பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள் கூறுவது இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.- தமிழ் மொழி-இலக்கிய வரலாறு, பக். 56. அடிக்குறிப்பு. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ஐந்திணை பற்றிய இப்பாடல்களின் வைப்பு முறை கவனித்தற்குரியது. ஒற்றை எண்பட வருபவை பாலை பற்றிய பாக்கள்; 10, 20, 30 என்னும் எண்களைப் பெற்று வருபவை நெய்தல் பற்றியவை; 4, 14, 24 என இறுதியில் 4 என்னும் எண்ணைப்பெற்று வருபவை முல்லை பற்றியவை; 2, 8, 12, 18 என 2, 8 என்னும் எண்களை இறுதியில் பெற்று வருபவை குறிஞ்சித் திணையைப் பற்றியவை; 6 என்னும் எண்ணை இறுதியில் பெற்று வருபவை (6, 16, 26 36 முதலியவை) மருதம் பற்றிய பாக்கள். இத்தகைய தொகுப்பு முறை குறுந்தொகையில் இல்லை. நற்றிணையிலும் இல்லை. எனவே, அவை இரண்டிற்கும் பின்னரே இந்நூல் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று நினைத்தல் தகும். 'குறுந்தொகைக்கு மறுதலையான நெடுந்தொகை' என்னும் பெயரும், இப்பாடல்கள் பின்பு தொகுக்கப் பெற்றவை என்பதை வலியுறுத்துவதாகும்.

அகநானூற்றுப் பாடல்களுள் குறிஞ்சி பற்றியவை 80; பாலை பற்றியவை 200; முல்லை பற்றியவை 40; மருதம் பற்றியவை 40; நெய்தல் பற்றியவை 40.

இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது, முதல் தொண்ணூறு பாடல்களுக்கு மட்டுமே குறிப்புரையாக உள்ளது. அடுத்து 70 செய்யுட்களுக்கு இந்நூலின் (அகநானூற்றின்) முதல் பதிப்பாசிரியரான வே. இராசகோபால ஐயங்கார் என்ற அறிஞர் உரை எழுதியுள்ளார். பின்னர் நூல் முழுமைக்கும் நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளையவர்களும் சேர்ந்து உரை யெழுதியுள்ளனர். இவ்வுரையினால் இந்நூலின் சிறப்பு நன்கு விளங்குகின்றது.

இப் பாடல்களில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து நிலங்களின் இயல்புகள் விளக்கப் பட்டுள்ளன; புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் டாக்டர் மா. இராசமாணிக்கனார் 223

என்னும் ஐவகை ஒழுக்கங்கள் தக்க இணையற்ற முறையில் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. பாடல்கள் சொற் செறிவும், பொருட் செறிவும் உடையவை. அகநானூற்றில் இடம் பெற்ற புலவர்கள்-158

1.அந்தியிளங்கீரனார் 2.அம்மூவனார் 3.அள்ளூர் நன்முல்லையார் 4.அண்டர் மகன் குறுவழுதியார் 5.அஞ்சியத்தை மகள் நாகையார் 6.அதியன் விண்ணத்தனார் 7.ஆலம்பேரி சாத்தனார் 8.ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் 9.ஆலங்குடி வங்கனார் 10.ஆவூர் மூலங்கிழார் 11.ஆமூர்க் கவுதமன் சாதேவனார் 12.ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் 13.ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் 14.இடைக்காடனார் 15.இடையன் நெடுங்கீரனார் 16.இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணார் 17.இறங்குகுடிக் குன்ற நாடன் 18.இடையன் சேந்தங்கொற்றனார் 19.இம்மென் கீரனார் 20.ஈழத்துப் பூதன் தேவனார் 21.உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் 22.உலோச்சனார் 23.உம்பற்காட்டு இளங் கண்ணனார் 24.உவர்க் கண்ணூர்ப் புல்லங்கீரனார் 25.உறையூர் மருத்துவன் தாமோதரனார் 26.உறையூர் முதுகூத்தனார் 27.ஊட்டியார் 28.எயினந்தை இளங்கீரனார் 29.எருமை வெளியனார் 30.எருமை வெளியனார் மகனார் கடலனார் 31.எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் 32.எழூஉப் புன்றி நாகன் குமரனார் 33.ஐயூர் முடவனார் 34. ஒக்கூர் மாசாத்தனார் 35.ஒரோடோகத்துக் கந்தரத்தனார் 36.ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் 37.ஒக்கூர் மாசாத்தியார் 38.ஓரம்போகியார்

224

39. ஒளவையார் 40. கடுந்தொடைக் காவினார் 41. கபிலர் 42. கயமனார் 43. கருவூர்க் கண்ணம் புல்லனார் 44.கருவூர்ப் பூதஞ்சாத்தனார் 45.கல்லாடனார் 46.காட்டுர் கிழார் மகனார் கண்ணனார் 47.காவன் முல்லைப் பூதரத்தனார் 48.காவிரிப் பூம்பட்டினத்து காரிக் கண்ணனார் 49.காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் 50.குன்றியனார் 51.குடவாயிற் கீரத்தனார் 52.குறுங்குடி மருதனார் 53.கடியலூர் உருத்திரங் கண்ணனார் 54.கருவூர்க் கண்ணம்பாளனார் 55.கருவூர்க் கலிங்கத்தனார் 56.கருவூர் நன்மார்பனார் 57.கழார்க்கீரன் எயிற்றியனார் 58.காவன் முல்லைப் பூதனார் 59.குமுழி ஞாழலார் நப்ப சலையார் 60. குறுவழுதியார் 61.கொடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார் 62.கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் 63.கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் 64.கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் 65.காவட்டனார் 66.சாகலனார் 67.சீத்தலைச் சாத்தனார் 68.செல்லூர்க் கோசிகன் கண்ணனார் 69.சாகலாசனார் 70.செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் 71.செல்லுரர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார் 72.சேரமான் இளங்குட்டுவன் 73.சேந்தன் கண்ணனார் 74.தங்கால் முடக்கொற்றனார் 75.தங்காற் பொற்கொல்லனார் 76.தாயங்கண்ணனார் 77.தொண்டி ஆமூர்ச் சாத்தனார் 78.தொல்கபிலர் 79.நக்கீரனார் 80.நக்கீரனார் (கணக்காயனார் மகனார் நக்கீரனார்) 81.நக்கீரனார் (மதுரை நக்கீரர்) 82.நல்லாவூர் கிழார் 83. நல்வெள்ளியார் 84.நண்பலூர்ச் சிறுமேதாவியார் டாக்டர் மா. இராசமாணிக்கனார்

85.நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார் 86.நொச்சி நியமங்கிழார் 87.நோய்பாடியார் 88.நக்கண்ணையார் 89.நரைமுடி நெட்டையார் 90.பரணர் 91.பாண்டியன் அறிவுடைநம்பி 92.பாண்டியன் கானப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி 93.பாலை பாடிய பெருங் கடுங்கோ 94.பெருங்குன்றூர் கிழார் 95.பெருந்தலைச் சாத்தனார் 96.பெருந்தேவனார் 97.பொருந்தில் இளங்கீரனார் 98.போந்தைப் பசலையார் 99.பேயனார் 100.பேரிசாத்தனார் 101.பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் 102.பொதும்பிற் புல்லாளங் கண்ணியார் 103.பறநாட்டுப் பெருங் கொற்றனார் 104.பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் 105.பாவைக் கொட்டிலார் 106.பிசிராந்தையார் 107.மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 108.மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 109.மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன் 110. மதுரை எழுத்தாளன் 111.மதுரைக் கணக்காயனார் 112.மதுரைக் கணியன் பூதத்தனார் 113.மதுரைக் காஞ்சிப் புலவர் 114.மதுரைச் செங்கண்ணனார் 115.மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் 116.மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் 117. மதுரைப் பாலாசிரியர் நற்றமனார் 118.மதுரைப் பேராலவாயார் 119.மதுரைப் போத்தனார் 120.மதுரை மருதனிள நாகனார் 121.மருதன் இளநாகனார் 122.மதுரையாசிரியர் நல்லந்துவனார் தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

123.மருங்கூர் பெருங் கண்ணனார் 124.மருதம் பாடிய இளங்கடுங்கோ 125. மாமூலனார் 126.மாற்றூர் கிழார் மகனார் கொற்றனார் 127.முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் 128.மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் 129.மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனார் 130.மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் 131.மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் 132.மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 133.மதுரைத் தமிழ்க்கூத்தன் நாதன் தேவனார் 134.மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் 135.மதுரைப் புல்லங் கண்ணனார் 136.மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார் 137.மதுரை ... மள்ளனார் 138.முள்ளியூர்ப் பூதியார் 139.மோசிக்கரையனார் 140.மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் 141.மதுரை இளங்கெளசிகனார் 142.மதுரைக் கண்ணத்தனார் 143. மதுரைக் கூத்தனார் 144.மதுரைத் தத்தங்கண்ணனார் 145.மதுரைப் பொன் செய் கொல்லன் வெண்ணாகனார் 146.மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் 147.மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் 148. மோசிகீரனார் 149.வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் 150.வண்ணப்புறக் கந்தரத்தனார் 151.வடமோதங் கிழார் 152.விற்றூற்று மூதெயினார் 153.வெள்ளாடியனார் 154.வெள்ளி வீதியார் 155.வெறி பாடிய காமக் கண்ணியார் 156.வீரை வெளியன் தித்தனார் 157.வெண்கண்ணனார் 158.வேம்பற்றுார்க் குமரனார்








.

வரலாற்றுச் செய்திகள் கந்தர்கள் (கி.மு.425- கி.மு.823)

அகநானூறு 265ஆம் பாடலில் நந்தர்களைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது.

"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழிஇக் கங்கை நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ" 251ஆம் பாடலில் இரண்டு வரிகள் காணப்படுகின்றன.

நந்தன் வெறுக்கை யெய்தினும் மற்றவண் தங்கலர் வாழி தோழி. இவ்விரண்டு குறிப்புகளும் மாமூலனார் என்ற புலவர் பெருமானால் தரப்பெற்றுள்ளன. கந்தர் மகதநாட்டை ஆண்டவர். அவர்கள் தலைநகரம் பாடலிபுத்திரம். அவர்கள் செல்வத்தில் சிறந்தவர்கள். அவர்கள் அச் செல்வத்தைக் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்திருந்தனர். இச்செய்தியை இவ்விரண்டு பாக்களின் அடிகளும் குறிக்கின்றன. மோரியர் படையெடுப்பு கி.மு.301- கி.மு. 278)

அகநானூற்றுச் செய்யுட்கள் மூன்றில் (69, 281, 375) மோரியர் (அவர்க்குத் துணையாக வந்த வடுகர்) படையெடுப்புத் தமிழகத்தில் நிகழ்ந்தமை குறிக்கப்பட்டுள்ளது. புறநானூற்றிலும் இது பற்றிய செய்திகள் காணப்படுகின்றன? இப்படையெடுப்புச் சந்திரகுப்த மோரியன் மகனான பிந்துசாரன் காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர் கூறுகின்றனர்.

2 இந்நூலாசிரியர் எழுதியுள்ள 'எல்லோரும் வாழ வேண்டும்' என்னும் நூலில் இதுபற்றி விரிவான கட்டுரையைக் காண்க.

3. Dr.S.K Ayyangar—Beginnings of S.1. History.

நந்தர்களைப் பற்றிய செய்தியும் மோரியர் படையெடுப்பைப் பற்றிய குறிப்புகளும் இந்திய வரலாற்றுச் சிறப்புடைய செய்திகளாகும். சங்க காலப் புலவர்கள் இச் செய்திகளை எந்த அளவு அறிந்திருந்தனர் என்பதை அகநானூற்றுப் பாடல்கள் அழகுற அறிவிக்கின்றன.

பேரரசர் : அகநானூற்றுப் பாடல்கள் அகப்பொருள் பற்றியவையாயினும், அவற்றுள் தமிழ்ப் பேரரசர் சிற்றரசர் பற்றிய செய்திகளும் பிறவும் உவமைகளாகவும் பிறவாகவும் கூறப்பட்டுள்ளன. இச் செய்திகள் தமிழக வரலாற்றிற்குப் பெருந்துணை செய்வனவாகும். இங்ஙனம் வரலாற்றுச் செய்திகளை எடுத்துக் கூறும் அகப்பொருள் நூல்களுள் அக நானூறு தலை சிறந்தது.

சேர வேந்தருள் உதியன் சேரல் (65), சேரலாதன் (127) , மாந்தரம் பொறையன் கடுங்கோ (142), உதியன் (168), கோதை மார்பன் (346) என்பவர் பெயர்களால் சுட்டப்பட்டுள்ளனர். பிறர் குட்டுவன் (91,296), வானவன் (309), வானவரம்பன் (389) எனச் சேரர்க்குரிய பொதுப் பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளனர். சோழருள் தித்தன் (6), கரிகாலன் (141), கிள்ளி வளவன் (346) பேசப்பட்டுள்ளனர். பலவிடங்களில் சோழர் என்றே பொதுப்படையாகக் குறிக்கப் பட்டுள்ளனர். பாண்டியருள் ஆலங்கானத்துச் செழியன் (36) , பசும்பூண் பாண்டியன் (162), பழையன் மாறன் (346) என்பவர் இடம் பெற்றுள்ளனர். பிற பாண்டியர் வழுதி (312) , செழியன் (335), கவுரியர் (342) , தென்னவன் (342) எனப் பாண்டியர்க்குரிய பொதுப் பெயர்களால் குறிக்கப் பெற்றுள்ளனர். தொண்டை நாட்டை ஆண்ட திரையன் (85) பொதுப் பெயரால் குறிக்கப் பெற்றுள்ளான்.

சிற்றரசர் : வேள் ஆவி (1), மத்தி (6), கோடைப் பொருநன் (18), காரி (35), திதியன், எழிநி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் (36), நன்னன்,

ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, குன்றுறை, பழையன், கணையன் (44, 186, 326) , அன்னி (45), பண்ணன் (54, 177), புல்லி (61), வேள் ஆய் (69), அகுதை (76), பிட்டன் (77, 143), பாரி (78), கொங்கர் (79), கடலன் (81) , நன்னன் வேண்மான் (97), பெரியன் (100), பாணன் (Banan) (113, 226, 325), வேள் எவ்வி (115), அஞ்சி (115) , கழுவுள் (135), ஆய் எயினன் (148), தித்தன் வெளியன், பிண்டன், நள்ளி, ஆய் (152) . மிஞிலி (181) , ஆதன் எழினி (216), வழுதுணைத் தழும்பன் (227), முசுண்டை (249). (வடுகர் பெருமகன்) எருமை (253), பேகன் (263), (நீடூர் கிழவன்) எவ்வி (266), அவியன் (271), பாரி (393), அதியன் (325).

பேரரசர் பேரரசருடன் போரிட்டபோது அவரவரைச் சேர்ந்த சிற்றரசரும் தத்தம் பேரரசர் சார்பில் நின்று போரிட்டனர் (36), சிற்றரசர் ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட்டனர்; பலர் சேர்ந்து சிலரை எதிர்த்தனர்; சிலர் சேர்ந்து பலரை எதிர்த்தனர்; பலர் சேர்ந்து ஒருவனை எதிர்த்தனர். இத்தகைய விவரங்கள் இந்நூற் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.

பாணர்கள் : பாணர்கள் (Banas) நான்கு பாடல்களில் (113, 226, 325, 386) குறிக்கப்பெற்றுள்ளனர். தமிழகத்திற்கு வடக்கில் அவர்தம் நாடு இருந்தது. அவர்கள் ஆண்ட நாடு, கிழக்கில் கர்நூல் மாவட்டத்திலுள்ள திருப்பருப்பதம் மலைகள் வரையிலுள்ள நிலப்பகுதியையும், தென்கிழக்கில் சித்தூர் (சிற்றூர்) மாவட்டத்தின் மேற்குப் பகுதி வரையிலுள்ள நிலப் பகுதியையும், மேற்கே கோலார் மாவட்டத்தையும் தன்னகத்தே கொண்டது. தொடக்கத்தில் அவர்கள் ஆட்சி யிலிருந்த நிலப்பகுதி அடர்ந்த காடுகளாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் இருந்தது. பின்பு காலப் போக்கில்

4. Dr. Mahalingam, The Banas in S. l. History, pp. 155–156. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

அவர்கள் நாடு வட ஆர்க்காடு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியும் சித்தூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியும் சேர்ந்த நிலப்பரப்பாயிற்று.அப்பகுதி பெரும்பாணப்பாடி என்று பிற்காலக் கல்வெட்டுக்களில் பெயர் பெற்றது.

மணிமேகலை என்னும் தமிழ்க் காவியம்-நெடுமுடிக் கிள்ளி என்ற சோழவேந்தன் பாண அரசர் மகளான சீர்த்தி என்பவளை மணந்துகொண்டான் என்றும், அவள் உதய குமரனுக்குத் தாயென்றும் கூறுகிறது. இதனால் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே பாண அரசர் கள் சோழர்க்குப் பெண் தரும் தகுதி பெற்றிருந்தமை தெளிவாகும்.

கங்கர் : கங்கர் சங்க காலத்திலேயே வாழ்ந்த அரச மரபினர் (44, 188) . அவர் மரபினரே பிற்காலத்தில் தழைக் காட்டைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர் என்று கூறலாம்.

திரையர் : திரையர் தொண்டை மண்டலத்தை ஆண்ட வர். அவர் தலைநகரம் பவத்திரி (340), தொண்டை நாட்டின் தென்பகுதியைக் காஞ்சியிலிருந்து இளந்திரையன் ஆண்டுவந்தான்.

ஊராட்சி : சங்க காலத்தில் தேர்தல் முறையால் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டனர் (77) . ஊராட்சி மன்றத்தார் ஊர் வழக்கு களை விசாரித்து நீதி வழங்கினர். (256).

சிறப்புச் செய்திகள் : தமிழரசர் ஆட்சியில் ஒற்றர் இருந் தனர் (318); தூதர் இருந்தனர் (337). அரசாங்க வரு வாய் குறிப்பிட்ட ஊரில் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. சோழ நாட்டு வருவாய் குடந்தையில் வைத்துப் பாதுகாக்கப் பட்டது (60), சோழரது தலைநகரான உறையூரிலிருந்த அறங் கூறு அவையம், முறை வழங்குவதில் பெயர் பெற்றது (93).

5.Ibld,p.156

தமிழர் திருமணம்:அகநானூற்றுப் பாடல்கள் இரண்டு சங்க காலத் தமிழரின் திருமணத்தைப் பற்றிப் பேசுகின்றன. (1) வரிசையாய்க் கால்களையுடைய குளிர்ந்த பெரிய வந்தரில் மணல் பரப்பப்பட்டிருந்தது. பந்தலைச் சுற்றிலும் மலர் மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. மனைவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. உளுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த பொங்கலோடு விருந்து நடிைபெற்றுக்கொண்டிருத் தது. சந்திரனை உரோகிணி கூடிய நல்லோரையில் முதிய மங்கல மகளிர் மணமகளை நீராட்டுதற்குரிய நீரை முகந்து தர. மக்களைப் பெற்ற மங்கல மகளிர் நால்வர் கூடிநின்று, "கற்பினின்றும் வழுவாது நன்றாய பல பேறுகளையும் தந்து நின்னை எய்திய கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தை உடையை ஆகுக." என்று வாழ்த்தி, அந்நீரில் நெல்லை யும் மஞ்சளையும் கலந்து மணமகளை நீராட்டினர் (86).

இங்ங்னம் மங்கல மகளிர் மணமகளை நீராட்டுவது அக் காலத்தில் மிகச் சிறந்த சடங்காய்க் கருதப்பட்டது. செய்யுள் 186இல் வேறொரு வகைத் திருமணம் கூறப் பட்டுள்ளது.

"இறைச்சியுடன் கூட்டியாக்கிய நெய் மிகுந்த வெண் சோற்றை மணத்திற்கு வந்தவர் உண்டனர். திங்கள் உரோகிணியுடன் கூடிய நல்லோரையில் மண மனை அழகு செய்யப்பட்டது; கடவுள் வழிபாடு நடைபெற்றது; மன முழ வுடன் பெரிய முரசம் ஒலித்தது. வாழ்வரசிகள் மணமகளுக்கு மன நீராட்டினர். வாகை இலையை அருகின் கிழங்கிடத் துள்ள அரும்புடன் சேரக்கட்டிய வெள்ளியநூலைச் சூட்டி மணமகளைத் தூய உடையால் பொலியச் செய்தனர். மண மகள் பல அணிகளை அணிந்திருந்தாள். மேகம் ஒலித்தது போல மண ஒலி ஒலித்தது. உறவினர் அனைவரும் கூடி மண மகளை மணமகனுக்கு மனைவியாகத் தந்தனர்.

"இவ்விரண்டு திருமணங்களிலும் ஆரியச் சார்புடையது எதுவும் இல்லை-எரி வளர்த்தல் இல்லை, தீவலம் வருதல் இல்லை, தட்சிணை பெறப் புரோகிதன் இல்லை, இவை தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

முற்றும் தமிழர்க்கே உரிய திருமண முறைகளாகும்,"என்று வரலாற்றுப் பேராசிரியர் திரு. பி. டி. சீநிவாச அய்யங்கார் கூறியுள்ளது காண்க.

சமயச் செய்திகள் : கூடலை யடுத்த திருப்பரங்குன் றத்தில் முருகன் திருக்கோயில் இருந்தது (59). அங்கு ஒய் வில்லாமல் விழாக்கள் நடந்தபடி இருந்தன (149). அலை வாய் என்பது கடற்கரை ஊர். அங்கு அழகிய மணி விளக்கு ஒன்று ஒளி தந்துகொண்டிருந்தது. அங்கும் முருகன் கோவில் இருந்தது (266). மதுரையில் மலையை ஒத்த உயர்ந்த கோவில் இருந்தது (290) . சிவனும் திருமாலும் 'இருபெருந் தெய்வங்கள்' என்று போற்றப்பட்டனர் (360) . ஒவ்வோர் ஊரிலும் அக்காலத்தில் பொதியில் (அம்பலம்) இருந்தது. அதனில் கந்து என்னும் வழிபாட்டுக்குரிய மரத்தூண் (இலிங்கவடிவில் அமைந்தது) இருந்தது. ஊர் மக்கள் விடியற்காலத்தில் அதனை வழிபட்டனர் (287) .

சங்ககாலத் தமிழர் தம் பிள்ளைகளுக்குத் தாலி அணி வித்தல் வழக்கம். அத்தாலி, காத்தற் கடவுளான திருமாலின் ஐந்து படைகளின் உருவங்களும் பொறிக்கப் பெற்றிருந்தது. அது ஐம்படைத் தாலி’ எனவும் பெயர் பெற்றது. அதனை ஆண் மகனும் பெண் மகளும் அணிந்திருந்தனர் (54) .

உயர்ந்த மலைகள் மீது கார்த்திகை விழாவிற்கு விளக்கு களை இடுதல் சங்ககால வழக்கம் என்று பாலைபாடிய பெருங்கடுங்கோ என்ற சேரமன்னன் கூறியுள்ளான். சேர நாடு மலைநாடு. இன்று திருவண்ணாமலை உச்சியில் இடப்

6. It will be noticed that in this ancient Tamil rite ef Marriage there is absolutely nothing Aryan, no lighting of fire, no circumambulation of fire and no priest to receive dakishna...These two poems belong to a later period than we are considering, but certainly describe the wedding rites which prevailed in very old times.—History of the Tamils, pp. 80–81. .

படுவது போலச் சேரநாட்டு மலைகளின் உச்சியில் பெரிய, விளக்குகள் இடப்பெற்றன போலும்!

உறையூரை யடுத்த காவிரியின் கரையிலிருந்த சோலையில் பங்குனி விழா நடைபெற்றது (137), கொங்கு நாட்டினர் மணியினை இடையில் கட்டிக்கொண்டு உள்ளி விழாவின்போது தெருவில் ஆடுவர் (368) . அக்காலத் தமிழகத்தில் உண்ணாமையால் வாடிய வயிற்றினையும், நீராடாத உடலையும் உடைய தவத்தினர் (சமணத் துறவி. கள்) இருந்தனர் (128).

நாகரிகம் : சங்ககால மகளிர் பந்து எறிதல், கழங் காடுதல் முதலிய ஆட்டங்களில் சிறந்திருந்தனர் (17, 66) . சேரவேந்தரது சுள்ளி என்ற ஆற்றில் யவனர் கப்பல் பொன்னுடன் வந்து மிளகொடு மீண்டது (148), உலகம் நகர்ந்தாலொத்த அச்சம் தோன்றும் கப்பல் (255) அக், காலத்தில் இருந்தது. -

சங்ககாலத் தமிழர் இசைக் கலையில் வல்லவர் என் பதைப் பல பாடல்கள் உணர்த்துகின்றன (102, 186, 346, 855). திணைப்புனம் காவல்காத்த பெண் குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டிருந்தாள். அப்போது தினைக் கதிரைத் துதிக்கையில் பிடித்திருந்த இளைய ஆண் யானை இசையில் ஈடுபட்டுத் தினைக் கதிரை உண்ணாமலும், நின்ற நிலையிலிருந்து அகலாமலும் உறங்கிவிட்டது என்னும் செய்தி குறமகளின் இசைச் சிறப்பை இனிது விளக்குகிற, தன்றோ? (102). தினைப்புனம் காத்த குறமகளிர் தினையை உண்ண வரும் கிளி முதலிய பறவைகளை ஒட்டு வதற்குப் பாடல் பாடினர். அது 'கிளிகடி பாடல்’ எனப் பட்டது (118).

சங்ககால நடன மகள் விறலி எனப்பட்டாள்; உள்ளக் குறிப்புப் புறத்தில் வெளிப்படும்படி விறல்பட நடித்ததால் விறலி' எனப் பெயர் பெற்றாள். அவள் நடிக்கும்போது, முழவு கொட்டுவோன் அவளுக்குப் பின்புறம் நிற்பது தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வழக்கம். ஊரில் நடைபெறும் விழாக்களில் விறலி நடிப்பது வழக்கம் (352).

பண்பாடு : அகநானூற்றுப் பாடல்கள் இன்பம் பற்றியன ஆயினும், தமிழர் பண்பாட்டை விளக்கும் உயர்ந்த கருத்துகளை ஆங்காங்குக் கொண்டுள்ளன. அவற்றுள் சில வற்றை இங்குக் காண்போம்:

(1) சான்றோர் மிக்க காதல் கொண்டாராயினும் பழியுடன் கூடிவரும் இன்பத்தினை விரும்பார் (112).

(2) பாவநெறியிற் செல்லாத வாழ்க்கையும், பிறன் மனை வாயிலில் சென்று நில்லாத மேம்பாடும் ஆகிய இரண்டும் பொருளினால் ஆகும் (15.5) ,

(3) உள்ளம் விரும்பிய வழியில் அதனைச் செல்ல விடாமல், விரும்பிய பொருளின் நன்மை தீமைகளை ஆராய்ந்து, உள்ளத்தை நல்லதன்வழிச் செலுத்துவதே பெரியோர் ஒழுக்கமாகும் (286) .

(4) இரப்பவரது ஏந்தும் கை நிறையும்படி மகிழ்ச்சி யோடு விரைந்துவந்து புதிய பொருள்களைத் தந்து மகிழு வதற்கே அரிய செல்வத்தை ஈட்டவேண்டும் (389) .

இத்தகைய உயர்ந்த பண்பாடுடைய தமிழ் மக்கள் வாழ்ந்த காலமே சங்ககாலம்.

புராண இதிகாசக் கதைகள் : கண்ணன் யமுனைத் துறையில் நீராடிய கோவியர் ஆடைகளைக் கவர்ந்தமை, முருகன் சூரனைக் கொன்றமை இராமன் கோடிக்கரையில் பறவைகள் ஒலியை அடக்கினமை, பரசுராமன் மன்னர் மரபை அழித்தமை போன்ற சில கதை நிகழ்ச்சிகள் அக நானூற்றுப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன (59, 70, 220 முதலியன).

வடசொற்கள் : இந்நூற் பாடல்களில் வடசொற்கள் தமிழ் உருப்பெற்றும் பெறாமலும் வழங்கப்பெற்றுள்ளன. நிதி (60), இராமன் (70) , வதுவை (86) , அரமியம் (124) , விதி (147), கலாபம் (152), சிகரம் (181), சிமயம் (208), பதி (299), தேயம் (333). இவை போன்ற சில சொற்களே இந்நூலில் இட்ம் பெற்றுள்ளன்.