தாவோ - ஆண் பெண் அன்புறவு/மாறுதல் - மாறாமை
ஆற்றின் மாற்றத்தில் ஏதோ ஒன்று மாறுவதில்லை. தண்ணீர் ஓடுகிறது. ஆனால், மாற்றமில்லாத ஒன்று தானே உருவாகவும் செல்லவும் எப்போதும் உள்ளது
எல்லாம் மாறுகின்றன என்பதையும், மாற்றம்தான் எல்லாமே என்பதையும் அறிந்து கொள் எல்லா மாறுதல்களிலும் மாறாததை நம்பு
மாறுதலாக இருக்க மாறிவிடு மாறாமல் இருக்க, மாறுவது மாறட்டும்
123. உரிய காலத்தில்
உரிய காலத்தில் மழை ஒடையாகவும், ஓடை ஆறாகவும், ஆறு கடலாகவும் மாறுகின்றன
நாமெல்லாருமே நாமாகவே கீழ்நோக்கி ஓடுகிறோம் நாம் மழையாக, ஓடையாக, ஆறாக, கடலாக இருந்தால் அதனால் என்ன?
ஆனால் ஆற்றிலிருந்து ஓடையையும், கடலிலிருந்து மழையையும் கூடப் பிரி பின் தொல்லை தொடர்கின்றது.சொற்கள் பிரிகின்றன; இதனால் இணைந்தும், மாறுதலும் உள்ளவற்றை மாறாததாகச் செய்கின்றன மாற்றமில்லா மனம்தான் புரிந்து கொள்ளப் போராடுகிறது
சொற்களில்லாமலேயே, ஒருவருக்கொருவரை கண்டு கொள்
124. உருப்பெறுதல்
நீர்நிலத்தில் வேரூன்றலும் இல்லை அல்லது வளி விசும்பில் அசையாமலும் இல்லை எங்குமே பிடிப்பில்லாமலிருந்தும் அது எங்கேயும் உள்ளது
மாறுதல் அடைவது நிலையானது. பிறக்கும் பொருளே உருப்பெருகிறது உருப்பெறுவதால், குறை காணக் கூடியது குறை காணப்படுவதால், அது நிலைத்து நிற்க முடியாது.
ஆண், பெண் இருவரிடையே உள்ள பிணைப்பு மாறிக்கொண்டே இருப்பதால் அது உருவாகிக் கொண்டே இருக்கிறது. எப்போதும் உண்டாவதால் அது எப்போதும் புதுப்பிக்கப்பட்டு, இன்றியமையாத தாகிறது நீரைப் போல உள்ளதால், அது எங்கும் உலகிற்கும், தனக்கும் உண்மையாக உள்ளது.125. கீழ் நோக்கிய வழி
ஆற்றின் உட்பக்கத்தின் ஓட்டம் கீழ் நோக்கியே உள்ளது விட்டுக் கொடுப்பதில் பலத்தையும், மென்மையில் நிறைவையும், ஒத்துப் போவதில் அதன் உரிமையையும் காண்பதே அதன் வழி
கீழ் நோக்கிப் பாயும் நீரைப்போலக் கடினமான பாறைகளினிடையேயும், விளையாட்டாக இடத்தைக் காண இறங்கிச் செல்லும் வழியைக் கண்டு பிடி
இவ்வகை ஓட்டத்தில், உள்ளுக்குள்ளேயே ஓசையற்று மாறியும், மாறாமலும் உள்ள ஆற்றைப் போல, வெளிப்புறம் உட்புறமாகிறது.
126. மீள்வதை நம்பு
மாற்றமில்லாததோ நிலையானதோ இல்லை எது நிலையானதோ அது மாறுந்தன்மை உடையது
எல்லோராலும் மெச்சத்தக்கக் கூடிய பெரிய மலை போன்ற பிணைப்பு விழப்போகும் நினைவுச் சின்னம் போல அச்சுறுத்துகிறது. அது பரிதியால் பனியால் சிதறிச் சிறு துண்டுகளாகச் சிதறுகின்றது அது சிறிய மழையில் கூடக் கரைந்து விடுகிறது அதன் நிழலில் எவர்தாம் எளிதாகவும் மனவெழுச்சியுடனும் வாழ முடியும்? பனி மூட்டம் போல உள்ள அந்தப் பிணைப்பு எப்போதும் காற்றில் காத்திருந்து, நம்மைத் தோட்டு வளர்க்கிறது மாறியும், மாறாமலும், தோன்றி, மீண்டும் தோன்றிப் பள்ளத்தாக்கை மென்மையாக ஈரமாக்கி மலையை வாழத்தக்க பசுமையாக்கும் அது பனி மூட்டத்தை விடச் சிறந்தது
தெள்ளத் தெரிவதைவிட நுணுக்கமானதைப் பழகுவது சிறந்தது நிலையானதைவிடத் திரும்ப வருவதை நம்புவது நலமே.
செய்ததைவிடச் செய்வதே நிலையானது வளர்வதை ஊட்டமளிப்பதை நம்பு. வளர்வதின் அடிப்படை வாய்மையில் ஊட்டம் பெறு
127. ஒவ்வொரு நேரத்திற்கும்
ஒவ்வொரு நேரத்திற்கும் அதற்கென நேரம் உண்டு. தள்ளு அது முன்கூட்டியதாக்கப்படும் காலம் தாழ்த்து அது காலம் கடந்ததாகும் உரிய நேரத்தில் நிறுத்தமே இராது
128. தனிப்பட்ட பாதுகாப்பு
முகில்களைத் தடை செய்ய இயலாது. நீரோட்டத்தை நிறுத்த முடியாது உயிருள்ள வேரில் இருந்து புதிதாக வளர்ச்சி ஏற்படும்இழப்பது, விட்டுக் கொடுப்பது, விடுவிப்பது ஒவ்வொன்றுமே ஒரு தனிப்பட்ட பாதுகாப்பே.
129. இப்பொழுது - இடையில்
“இது இருந்திராவிட்டால்” எனப் பொறாமை கொண்ட காதலர்கள் தங்கள் காதலன், காதலியின் முந்திய காதலைப் பற்றிக் கூறுவதில் என்ன பயன்?
ஒவ்வொரு வாழ்க்கையும் வளர்கின்ற உடலம். உரிமை அல்லது உரிமையில்லாத இதைப் பிரிக்கவோ துண்டுகளாடவோ முடியாது அது முழுமையானது. கொஞ்சம் குறைவோ அதிகமோ இல்லாதது. ஒரு பகுதியை மறுப்பது எல்லாவற்றையுமே மறுப்பதாகும் ஒத்துக் கொள்வது என்பது முந்தியே உள்ளவற்றை விடுவிப்பதாகும்
நினைவு கூர்வதால், பழையனவெல்லாம் நிகழ்வன போல மனத்தில் கொள்ளப்படுகின்றன
ஒவ்வொரு கணமும் வேறுபட்ட இப்போது நடுவில் அப்போது மாற்ற முடியாததையும் மாற்றக் கூடிய முழுமை ஆகும்
130. நீரைப் போல் அறி
நீர் வடிவத்தையும், உருவத்தையும் மாற்றினாலும், தனது சாற்றினைத் தன்னிடம் வைத்துக் கொள்கிறது ஆறு நீரை மாற்றுகிறது. அதன் போக்கையும் மாற்றுகிறது, ஆனால் தன் சாறத்தைத் தக்க வைக்கிறது.
மாற்றத்தில் மாறாததை நம்பு நகர்ந்தும் தங்கியும், மாறியும், மாறாமலும் நீரைப் போல, ஆற்றைப் போல இரு அறிந்து கொள், மென்மையாகு. மென்மையாகி மாறு மாறிப் பொறுத்துக் கொள்
நீரைப் போல அறிந்து கொள். ஆற்றைப் போல எண்ணு.
131. ஆறாக இரு
ஒவ்வொன்றும் வேறு எதுவாகவோ மாறுகிறது. போவதை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு வீணானது ஆவதும். அழிவனவற்றில் எப்படி முயற்சி தீவிரமாகக் கூடும்? மாற்றத்திற்குள்ளேயே வாழ்வது சிறந்தது ‘இயற்கை நெறி'யைப் பற்றி அறிவது நன்று
செய்யாதது என்பது ஆற்றின் ஓடுகின்ற அமைதியைப் போல. நீர் மாறும் போது உள்ள அமைதியான ஆற்றைப் போல இரு மாற்றம் சரியான வழி செல்கயிைல் ஓசையின்றி இரு
‘இயற்கை நெறி’ தான் ஆறு செயல்தான் தண்ணீர், நீராகவும், ஆறாகவும், மாற்றத்திற்கு எப்போதும் அணியமாய் இரு நீர்த்தொடர் கூட அமைதியாய் உளது. 132. மாறுதலுக்கு உட்படு
முற்காலத்தில் அறிவர்கள் சொல்லித் தந்தனர் “விட்டுக் கொடு, முழுமையாயிரு. வளைந்து கொடு வெற்றியடை வெறுமை செய், நிரப்பு”
வளையாததும், கடினமானதும் முறிகின்றன மென்மையானதும். விட்டுக் கொடுத்தலும் நிலைக்கின்றன
ஆணும் பெண்ணும் ஒன்றாக இருக்க, மாறாததைக் கெட்டியாகப் பற்றிக் கொள். அங்கே முறிவு ஏற்படும் மாற்றத்திற்கு உடன்படு; உயரே எழுதல், செல்லுதல் இவற்றின் ஒத்திசைவுப் பாதையில் வளைந்து கொடு, பின் மாறும் ஓசையற்ற தன்மையில் உடையாது இரு
133. இரண்டுக்கும் இடையே
திரும்புதல் விலகுவதை விரும்புகிறது. நிற்பது செல்ல விரும்புகிறது விடுதலையாவது ஆட்சியைத் தொடர்கிறது ஒன்றிலிருந்து ஒன்று தோன்றவே விரும்புகிறது. அமைதியைப் பேச விரும்புகிறது மாறாமையை மாற்ற அறிகிறது. வெறுமை நிறைவை நாடுகிறது.
கணத்திற்குக் கணம் மனம் மனத்திற்கே சூழ்ச்சி செய்கிறது எண்ணங்கள் சிநதனையை வட்டமிடுகின்றன. வெளி வழி உள்ளே உள்ளது ஊடே என்பது இடையில் உள்ளது.அசைந்து விரிந்து மூடியும் திறந்து கொண்டிருக்கும் மனத்தின் கதவுகள் ஊடே இரண்டு பாதிகளையும் பற்றிக் கொள் முழுமனம் என்பது வெறுமையான மனம் போன்றதே
134. மறைபுதிரே எண்ணங்கள்
இப்போதைய நேர்மைக்குச் சொற்கள் பதிலளிக்கா மாறுகின்ற எல்லாவற்றையும் மனத்தில் பதந்துள்ள எண்ணங்கள் புரிந்து கொள்ளாது. மாறுகின்ற எண்ணங்கள் எப்படி மாறாமலிருப்பவற்றை அறிந்து கொள்ள முடியும்?
எண்ணங்கள் என்ற புதிரில், எந்த எண்ணங்கள் மாறுகின்றன? எவை மாற்றமில்லாதவை? மாறுகின்ற எண்ணங்கள மாறாமலிருக்கின்றனவா? மாறாத எண்ணங்கள் மாறுகின்றனவா? பறந்து போன மாறாத எண்ணங்கள மாறாமல் நினைவு கூரப்படுகின்றனவா?
மாற்றம், மாற்றமில்லாதது என்ற குழப்பத்தில் நாம் ஒவ்வொன்றையும் எப்படிக் காண்பது? மாறும் எண்ணங்கள நம்மை மாற்ற எங்கே தேடுகின்றன? எவ்வாறு மாறாத எண்ணங்கள் நம்மை மாற்ற அறியும்? எண்ணம் என்ற சிக்கலில், எண்ணங்கள் தங்களையேப் புரிந்து கொள்ளாவிடில், நாம் எப்படி ஒருவரை ஒருவர் அறியக் கூடும்?
மாற்றம் மாற்றமின்மை இவற்றுக்கிடையே, நாம் சொற்களின்றி, எண்ணமின்றி ஒன்றாக இருக்கிறோம்