தாவோ - ஆண் பெண் அன்புறவு/கண்டெடுத்தல் - இழத்தல்


கண்டெடுத்தல்/இழத்தல்
135. கண்டுபிடி, இழ

இழப்பு என்ற ஒன்று இல்லாதவரை, காண்பது என்ற ஒன்று இல்லை ஆண் தன்னை இழந்து காண்கிறான் பெண்ணை, பெண் தன்னை ஆணிடம் இழந்து ஆணைக் காண்கிறாள்

காண்பது என்ற ஒன்று இல்லாதவரை இழப்பு என்பதில்லை. ஆண் பெண்ணிடம் தன்னைக் காண இழக்கிறான் பெண், ஆணிடம் தன்னைக் காண இழக்கிறாள்

இழப்பதுதான் காண்பது காண்பதுதான் இழப்பு ஆகவே கண்டுபிடி இழ இழ, கண்டுபிடி

136. ஒருவர்க்கு மற்றவர்க்கும் இடையில்

முதல் நிலையான உந்தாற்றலுடன் கூடிய ஏதோ ஒன்று ஆணையும் பெண்ணையும் ஒருவருக் கொருவரை அதைக் காண முடியாத போதிலும் எப்போதும் உள்ளது அதை இழக்க முடியாவிட்டாலும் அதைக் கண்டு பிடிக்க முடியாது

ஒருவரிடமும் மற்றவரிடமும் இடையே உள்ள பிரிவை நட்புண்டாக்கும் எதோ ஒன்று அது. எல்லாமாக இருந்தும இல்லாமலும் இருப்பது ஏதோ ஒன்று. கண்டு பிடிக்காதவரை தன்னைத் தானே நிரப்பிக் கொள்ளும் வெறுமையாக்கும் ஒன்று. இழக்கும்வரை வெறுமை செய்யும் முழுமையும்.

ஆண் இல்லாது பெண்ணில்லை. பெண் இல்லாது ஆண் இல்லை இருவருமே ஒருவர் மற்றவரில் கண்டு பிடித்தும், இழந்தும் இருக்கட்டும் என அறிவிக்கிறது.

137. அறிதல் ஆழமாகும்

கண்களில் ஊடுருவிப் பார்ப்பது என்பது சிறப்பான உள்ளத்தை உருக்குவதாகும். முதலில் கண்கள் கண்களை நெருக்கமாகக் காண்பதைத் தவிர்க்கின்றன.

காண்பது என்பது தனிப்பட்ட உள்ளம் உருக்குவ தாகும். எனவே தனியான நம்பிக்கை ஏற்படாதவரை அம்மண உடல்கள் கண்களைத் தவிர்க்கின்றன.

ஆணும் பெண்ணும் எல்லா உணர்வுகளுடனும் ஒருவரை ஒருவர் தொடக் கண்களைப் பின் தொடர்ந்து செல்லும்போது மறைப்பதற்கென்ன உள்ளது?

மற்றவர் தானானகவே ஆகும் போதும், மிகப் பெரிய மறைபுதிராக மாறும் போதும் அறிதல் என்பது ஆழமாக ஏற்படுகிறது.

138. ஆழ்ந்த நெறியில்

ஒருவர் மற்றவரை எப்படி அறிய முடியும்? மற்றவருக்கு ஒருவர் வெளிப்படையாகக் காண்பிக்கும் போது ஆழ்ந்த தெரியாததில் அறிவு திறக்கிறது.

இழப்பு என்பதுதான் கண்டுபிடிக்கப்படுகிறது இழப்பைத் தொடர்வதுதான் ‘இயற்கை நெறி'.

139. கண்டுகொள்ளும் நேரம்

முன்னதாக அறிந்திலாத பழைய நண்பனை கண்டுறுவது போல, கண்டு கொள்ளும் நேரம் எப்போதும் வியப்புக்குரியது.

140. இன்னோர் அறிவைக் காணுதல்

எண்ணம் தசைக்கு விட்டுக் கொடுக்க, ஏதோ ஒரு உந்துதலால் ஏற்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. மனம் இன்னுமோர் அறிவைக் காண்கிறது.

உடல் எண்ணாதவரை நினைவுகள் தசையின் தேவையை எண்ணாது. இழக்கும் மனமும் காணும் உடலும் ஆழ்ந்த சமநிலைக்குத் தொடக்கம்.

கமுக்கத்தை உணரும் மனமும் எண்ணும் உடலும் இல்லாதவரை, கமுக்கமான இடங்களின் மண்ணுலக ஆசையை உகந்ததாக்காது.

141. இழத்தலும் காணலும்

பெண்ணிடம் தன்னை இழந்து பின் ஆனும், ஆணிடம் தன்னை இழந்த பின் பெண்ணும் எங்கே? பிரிவு என ஒன்று இல்லாத நிலையில் ஒவ்வொருவரும் எங்கே?

இழப்பதனால் ஆண் தன்னையும், பெண் தன்னையும் மறுபடியும் காண்கின்றனர் இழப்பில் கண்டு கொண்ட ஒவ்வொருவரும் இழப்பு. காணுதல் இரண்டிலும் உயர்ந்து விடுகின்றனர்.

முதலில் கண்டுபிடிப்பதில் இழப்பும், பின்னர் இழப்பில் கண்டு கொள்ளுதலும். கண்டு பிடிப்பதில் இழப்பு ஒரு பெரிய இழப்பு. இழப்பில் கண்டு பிடிப்பதும் ஒரு பெரிய கண்டுபிடிப்பு. உயர்ந்த கண்டுபிடிப்பு, இழப்பு இவற்றைத் தொடர்ந்து செல்க.

142 இழந்து கண்டுகொள்ளல்

ஒருவரிடம் மற்றவரை இழந்துதான் ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரைக் கண்டு கொள்கின்றனர் இழப்பதனால், ஒவ்வொருவரின் பிரிவையும் நிறைவு செய்யும் சேர்ந்திருப்பதைக் கண்டு கொள்கின்றனர் ஒருவரிடம் மற்றவர் இழப்பதால் அவர்கள் சேர்ந்துள்ளனர். ஒவ்வொருவரிடமும் இழப்பதால் பிரிந்துள்ளனர்.
ஆணும் பெண்ணும் இழந்து கண்டு கொள்கின்றனர் - எல்லோரும் சேர்ந்திருப்பதை ஆகவே இழக்காமல் இழ, கண்டுபிடிக்காது அறிந்து கொள்

143. ஒருவர்க்கொருவர் இழந்தபோது

காதலர்கள் ஒருவருக்கொருவருள் வயமிழந்துள்ள போது, ஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடமும் தம்மை இழந்து விடுகிறார்கள். எந்தப் பெண்ணிடம் ஆண் தன்னை இழக்கிறானோ, அவள் அவளாக இருப்பதில்லை, ஏனெனில் அவள் அவனிடம் இழந்துள்ளாள். இது போலவே ஆணும் பெண்ணிடம் இழந்துள்ளான்.

இதுதான் காதலர்களிடையே உள்ள மாயை, ஆண், பெண் அவளாக இல்லாத போது பெண்ணாகவும் பெண் ஆணை அவனாக இல்லாத போது ஆணாகவும் எண்ணுகின்றனர். தான் இல்லாத போது அவள் இருப்பதாயும், தான் இல்லாத போது அவன் இருப்பதாயும் எப்படி இவர்கள் எண்ண முடியும். அவன் தானாக இல்லை என்றும், அவள் தானாக இல்லை என்பதும் எண்ணும் வரை அவன் தன்னில் இழந்தும் அவள் தன்னுள் இழந்தும் இருக்கின்றனர்.

எது இருக்கிறது. எது இல்லை என்பதில் எவ்வாறு காதலர்கள் மேலே தொடர்ந்து செல்கின்றனர்?
144. இடைவெளியில்

ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே, இறப்பு பிறப்பு இவற்றிற்கிடையே, புரியாத எண்ணங்களில் ஓர் எண்ணத்திற்கும் மற்றதற்குமிடையே ஏதோ ஒன்றுளது. மாற்றம், மாற்றமின்மை. ஒவ்வொரு சொல் இவற்றிற்கிடையே எண்ணங்கள் அறியாத ஏதோ ஒன்று உள்ளது

இடைவெளியில், எண்ணுவதிலிருந்து எண்ணங்கள் வீழ்கின்றன.

செயல்பட்டும், தானே செயல்படாமலும், எண்ணமற்ற நிலையில் எண்ணங்களை நினைவுகள் தொடர்கின்றன

எண்ணங்களைக் காண, எண்ணத்தையே விட்டு விடு

இழப்பதால் கண்டு பிடிப்பதே ஆண்,பெண் இருவரின் வழி புரிந்து கொள்ள முடியாமல், எண்ணக் கூட முடியாமல், இறுதியில் அவர்கள் அறிகின்றனர்.