தாவோ - ஆண் பெண் அன்புறவு/கொடுத்தலும் - பெறுதலும்


கொடுத்தலும் / பெறுதலும்

 145. எடுக்காமல் கண்டுபிடி

கொடு, கொடை இருக்கும். பெற்றுக் கொள். பெறுவது இருக்கும் ஆனால் எடுத்துக் கொள்வதால் உரிமை வராது.

எதிர்பார்ப்பு இல்லாமல் அறி. எடுக்காமல் கண்டுபிடி

146. முழுமையான வெறுமை

முழுமை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகையால் வெறுமையாக்கித் தொடங்கு. முழுமையான இடமில்லாது முழு வளர்ச்சி இருக்க முடியாது வளர்ச்சி பெறவும், நிரப்பவும் தொடர்ந்து வெறுமையாக்கு இதனால் எப்போதும் ஏற்றுக் கொள்ளல் இருக்கும்

முழுமையாக வெறுமையாய் இரு. வெறுமையாக இருத்தல்தான் மிக உயர்வான ஏற்றுக் கொள்ளல் முழுமையே பெரிதுயர்ந்த கொடையாளி

147. கனிவாகக் கொடு

மற்றவரின் ஆளுகைக்குட்பட்டு ஒன்றாக இருந்து கொண்டே ஏற்றுக் கொள்ளல். தன்னை வெளிப் படுத்தல், நம்புவதும், ஏற்பதும் எளிதில்லை.

ஆகவே ஏற்பதே என்ற சுமைக்குக் கொடுப்பது என்பது பொறுப்பேற்க வேண்டும்.

கொடுக்க வேண்டுமென்றால் கனிவாகக் கொடு இதனால் கொடுப்பவரும், ஏற்பவரும் மனச்சுமை குறைந்து இருப்பர்.

ஏற்பது என்பதே ஒரு வகையான அன்புக் கொடை தான் பெறுவது போலவே கொடு, கொடுப்பது போலவே பெறு

148. கொடுப்பது

மழைக்காக, முகில்கள் புற்களிலிடமிருந்து பணம் பெறுவதில்லை வெப்பத்திற்காக வெய்யோனிடிம் மரங்கள் கடன் பட்டவையாகாது வெண்ணிலவும் விண்மீன்களும் கண்களுக்குக் கட்டற்றவையே.

ஆக, ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தன்னுரிமையானவர். கொடுப்பது என்பது அதனுடைய பரிசு, ஏற்பது என்பது ஒருவகை கொடுப்பது என்கிற போது அங்கே கடன் பட்டது எப்படி?

149. ஒன்றாக மறைவது

அவள் ஏற்கும்போது, அங்கே இரு கொடைகளும், அவன் கொடுக்கும் போது இரு ஏற்புகளும் உள்ளன. அவளது தொடக்கத்திலும், ஏற்பிலும், ஏற்பவரால் கொடுக்கப்படுகிறது. அவனது நுழைவிலும் கொடுப்பதிலும், கொடுப்பவரால் ஏற்கப்படுகிறது.
கொடுப்பது தான் ஏற்பது ஏற்பது தான் கொடுப்பது என்கின்ற போது, ஒன்றாக உள்ளதை ஏன் இரண்டாகப் பிரிக்கிறோம்?

கொடுப்பதும் ஏற்பதும் ஒன்றாக மறைவது போல, ஆணும் பெண்ணும் ஒன்றாக மறைகின்றனர் தான் , பிறர், வினா, விடை

150. உட்புறமே வெளிப்புறம்

இயற்கையில் ஆணும் பெண்ணும் ஒரே உடலின் இரு கூறுகளாக ஒருவருக்கொருவர் வளர்த்துக் கொள்கிறார்கள் எதுவுமே வினவப்படுவதில்லை. இருந்தும் எந்த ஓர் எண்ணமில்லாது எல்லாமே கொடுக்கப்படுகின்றன. பெறப்படுகின்றன. ஒவ்வொரு வரும் இருவருமையே கவனித்துக் கொள்ளும் உட்புறமாக மற்றவரின் வெளிப்புறமாய் உள்ளனர்

151. பெற்றுக் கொள்ளல்

பெற்றுக் கொள்ள, முழுமையாயிரு. ஆனால் வெறுமையாக்கப் பழக்கப்படுத்திக் கொள். மற்றவர்கள் உடல் மற்றும் எண்ணம் என அறிந்த முழுமை என்பது கொடுக்கப்பட வேண்டிய பாண்டம் வெறுமை என்பது தெரியாதது இதில் கொடுத்ததை ஏற்றுக் கொள்கிறது.

எது கொடுக்கிறதோ, அது தான் அது. பெறக் கூடியது அன்று.

முழுமையாயிரு. பெற வேண்டிய வெறுமை இல்லை. வெறுமையாயிரு. ஏற்றுக் கொள்ள எவருமில்லை. ஏற்றுக் கொள்ள, முழுமையில் வெறுமையைக் கண்டு பிடி.

கொடுப்பதால் வெறுமையாக்க முடியாத முழுமை அனைத்தையும் ஏற்றுக் கொள்வதால், நிரப்ப முடியாத வெறுமையையும் கண்டு கொள்.

152. புதிர்களின் வீறியம்

ஆண்டையைப் போல அது உழைக்கிறது. நிழலைப் போல, அது நடத்திச் செல்கிறது ஒருவரின் உரிமையாக அதை வைத்துக் கொள்ள முடியாது. அதைப் பெற அதை ஒப்படைத்து விடு. பயன்படுத்திக் கொடு. அதை அடக்கப் பணிந்து போ

நாம் புதிர்களின் வீறியம் ஆகவே அவற்றை விடுவிக்காமலேயே அறிந்து கொள்.

கண்டுபிடிக்க வேண்டிய புதிர்கள், வாழ வேண்டியவையாகும்போது, அவற்றின் வீறியத்தால் வாழ் - வினாக்கள். விடைகள் தவிர.
153. கொடுத்தலும் கொள்ளலும்

ஒன்றினில் ஒன்ற நிரப்பத் துடிக்கும் ஆணின் பெரிய திண்மையும், தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் பெண்ணின் உயர்ந்த மென்மையும் உள்ளன. அவளது மென்மையால் தாங்கப்படும் திண்மையும், அவனது உயர்வானதைச் சுற்றி வளைக்கும் அவளது மென்மையும் எவ்வளவு கனிவானது

கொடுத்துப் பெற்றுக் கொண்டும், ஏற்பதால் கொடுப்பதுமான அவள் ஏற்பவள். பெறுவது மூலம் கொடுத்தும், கொடுப்பதால் பெறுவதும் அவன் கொடுப்பவன்

திண்மை, மென்மை, நிரப்புதல், தக்க வைத்துக் கொள்ளல், கொடுப்பது மற்றும் ஏற்பது எல்லாமே ஆண், பெண் இருவருக்கும் ஒன்றேதான்.

154. ஒரு பெரிய பொருண்மை

கொடுப்பதும், பெறுவதும் ஒன்றாக இருக்கும் போது, அந்த ஒன்றின் பெயரென்ன? அதை வெளிப்டுத்துமாறு என்ன பெயரிடலாம்? சொற்களுக்கு அப்பாற்பட்ட அது ஏதோ ஒன்று

சொற்கள் எவ்வளவு நாள்கள் இதைப் பின் தொடரும்? முயலும் சொற்கள் இன்னும் பல சொற்களை இந்த ஓட்டத்தில் சேர்ந்துவிடுகின்றன. இந்த மடமை வட்டத்தில் ஓடும் பல சொற்களுடன் ஒரு பரபரப்புத் தவறி விடுகிறது அதிகமான சொற்கள் தேடும் சொற்கள் தான்

நாம் ஒவ்வொருவருடனும், பறவைகள், மீன், மரம், கல், மூலம், விளைவு இவற்றுடன் ஏதோ ஒரு தலையூற்று உள்ளது.

ஒன்றும் நேரத்தில், எதிரொலிக்குப் பார்வையாளராக உள்ள நேரத்தில் எதோ ஒரு பெரிய பொருண்மை சார்ந்து இயங்குகிறது.