திருப் பிரம்மபுரம் |
பதம் பிரித்து
|
- தோடு டையசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்
- காடு டையசுட லைப்பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன்
- ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள் செய்த
- பீடு டைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே
|
- தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடி
- காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
- ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
- பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
|
பாடல்: 02 (முற்றலாமையிள)
தொகு
- முற்ற லாமையிள நாகமோ டேன முளைக் கொம் பவைபூண்டு
- வற்ற லோடுகல னாப்பலி தேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
- கற்றல் கேட்டலுடை யார்பெரி யார்கழல் கையாற் றொழுதேத்தப்
- பெற்ற மூர்ந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
|
- முற்றல் ஆமை இள நாகமோடே என முளைக் கொம்பு அவை பூண்டு
- வற்றல் ஓடு கலனாப்பலி தேர்ந்து எனது உள்ளங் கவர் கள்வன்
- கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப்
- பெற்ற மூர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
|
பாடல்: 03 (நீர்பரந்த)
தொகு
- நீர்ப ரந்தநிமிர் புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி
- ஏர்ப ரந்தவின வெள்வளை சோரவென் னுள்ளங் கவர்கள்வன்
- ஊர்ப ரந்தவுல கின்முத லாகிய வோரூ ரிதுவென்னப்
- பேர்ப ரந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
|
- நீர் பரந்த நிமிர் புன்சடை மேல் ஓர் நிலா வெண்மதி சூடி
- ஏர் பரந்த இன வெள்வளை சோர என் உள்ளங் கவர் கள்வன்
- ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓரூர் இது என்னப்
- பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
|
பாடல்: 04 (விண்மகிழ்ந்த)
தொகு
- விண்ம கிழ்ந்தமதி லெய்தது மன்றிவி ளங்கு தலையோட்டில்
- உண்ம கிழ்ந்துபலி தேரிய வந்தென துள்ளங் கவர்கள்வன்
- மண்ம கிழ்ந்தவர வம்மலர்க் கொன்றை மலிந்த வரைமார்பில்
- பெண்ம கிழ்ந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
|
- விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில்
- உண் மகிழ்ந்து பலிதேரிய வந்து எனது உள்ளங் கவர் கள்வன்
- மண் மகிழ்ந்து அரவம் மலர்க் கொன்றை மலிந்தவரை மார்பில்
- பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
|
பாடல்: 05 (ஒருமை பெண்மை)
தொகு
- ஒருமை பெண்மையுடை யன்சடை யன்விடை யூரும் மிவனென்ன
- அருமை யாகவுரை செய்ய வமர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
- கருமை பெற்றகடல் கொள்ளமி தந்ததோர் காலம் மிதுவென்னப்
- பெருமை பெற்றபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
|
- ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன
- அருமையாக் உரை செய்ய அமர்ந்து என் உள்ளங் கவர் கள்வன்
- கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஓர் காலம் இது என்னப்
- பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
|
பாடல்: 06 (மறைகலந்த)
தொகு
- மறைக லந்தவொலி பாடலோ டாடல ராகி மழுவேந்தி
- இறைக லந்தவின வெள்வளை சோரவென் னுள்ளங் கவர்கள்வன்
- கறைக லந்தகடி யார்பொழி னீடுயர் சோலைக் கதிர்சிந்தப்
- பிறைக லந்த பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே
|
- மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலராகி மழு ஏந்தி
- இறை கலந்த வின வெள்வளை சோர என் உள்ளங் கவர் கள்வன்
- கறை கலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர் சிந்தப்
- பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
|
பாடல்: 07 (சடைமுயங்கு)
தொகு
- சடைமு யங்குபுன லன்னன லன்னெரி வீசிச் சதிர்வெய்த
- உடைமு யங்குமர வோடுழி தந்தென துள்ளங் கவர்கள்வன்
- கடன்மு யங்குகழி சூழ்குளிர் கானலம் பொன்னஞ் சிறகன்னம்
- பெடைமு யங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
|
- சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசிச் சதிர் எய்த
- உடை முயங்கு மர ஓடுழி தந்து எனது உள்ளங் கவர் கள்வன்
- கடன் முயங்கு கழி சூழ் குளிர் கானலம் பொன்னஞ் சிறகன்னம்
- பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
|
பாடல்: 08 (வியரிலங்கு)
தொகு
- வியரி லங்குவரை யுந்திய தோள்களை வீரம் விளைவித்த
- உயரி லங்கையரை யன்வலி செற்றென துள்ளங் கவர்கள்வன்
- துயரி லங்குமுல கிற்பல வூழிக டோன்றும் பொழுதெல்லாம்
- பெயரி லங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
|
- வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
- உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளங் கவர் கள்வன்
- துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
- பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
|
- தாணு தல்செய்திறை காணிய மாலொடு தண்டா மரையானும்
- நீணு தல்செய்தொழி யந்நிமிர்ந் தானென துள்ளங் கவர்கள்வன்
- வாணு தல்செய்மக ளீர்முத லாகிய வையத் தவரேத்தப்
- பேணு தல்செய்பிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
|
- தாணுதல் செய்து இறை காணிய மாலொடு தண்டாமரை யானும்
- நீணுதல் செய்து ஒழியந்தி நிமிர்ந்தான் என உள்ளங் கவர் கள்வன்
- வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்து அவரேத்தப்
- பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
|
பாடல்: 10 (புத்தரோடு)
தொகு
- புத்த ரோடுபொறி யில்சமணும்புறங் கூற நெறிநில்லா
- ஒத்த சொல்லவுல கம்பலி தேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
- மத்த யானைமறு கவ்வுரி போர்த்ததோர் மாயம் மிதுவென்னப்
- பித்தர் போலும்பிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே
|
- புத்தரோடு பொறியில் சமணும் புறம் கூற நெறி நில்லா
- ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து என உள்ளங் கவர் கள்வன்
- மத்த யானை மறுகு அவ்வுரி போர்த்தது ஓர் மாயம் இது என்னப்
- பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
|
பாடல்: 11 (அருநெறிய)
தொகு
- அருநெ றியமறை வல்ல முனியகன் பொய்கை யலர்மேய
- பெருநெ றியபிர மாபுர மேவிய பெம்மா னிவன்றன்னை
- ஒருநெ றியமனம் வைத்துணர் ஞானசம் பந்தன் னுரை செய்த
- திருநெ றியதமிழ் வல்லவர் தொல்வினை தீர்த லெளிதாமே
|
- அரு நெறிய மறை வல்ல முனி அகன்ற பொய்கை அலர் மேய
- பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை
- ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
- திரு நெறிய தமிழ் வல்லவர் தொல் வினை தீர்தல் எளிதாமே!!
|