தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்2.மொழிமரபு-இளம்பூரணர் உரை

தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்

தொகு

இயல் 2. மொழிமரபு

தொகு

இளம்பூரணர் உரை

தொகு

இரண்டாவது "மொழிமரபு"

தொகு

இளம்பூரணர் இயல்முன்னுரை:

இவ்வோத்து என்னபெயர்த்தோவெனின், மொழிகளுக்கு வரும் மரபு உணர்த்தினமையின் மொழிமரபு எனப்பட்டது இதனுள் கூறுகின்றது தனிநின்ற எழுத்திற்கன்றி மொழியிடை (நின்ற)எழுத்திற்கு எனவுணர்க.

நூற்பா 34 (குற்றியலிகர)

தொகு
குற்றிய லிகர நிற்றல் வேண்டும் () குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக் ()யா என் சினை மிசை உரை அசைக் கிளவிக்கு
காவயின் வரூஉ மகர மூர்ந்தே. (01) ஆ வயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே.
இத்தலைச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், சார்பிற்றோற்றத்து எழுத்துக்களிற் குற்றியலிகரத்தில் ஒரு மொழிக் குற்றியலிகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த்துதல் நுதலிற்று.
இதன்பொருள்
குற்றியலிகரம்= ஒருமொழிக் குற்றியலிகரம்;
உரையசைக் கிளவிக்கு= உரையசைச் சொல்லாகிய மியா என் முதற்கு;
ஆவயின் வரூஉம்= (சினையாக) அச்சொற்றன்னிடத்து வருகின்ற;
யா என் சினைமிசை= யா என் சினைமிசை;
மகரம் ஊர்ந்து நிற்றல் வேண்டும்= மகர ஒற்றினை ஊர்ந்து நிற்றலை வேண்டும் (ஆசிரியன்).
உதாரணம்
கேண்மியா என வரும். மியா என்னும் சொல் இடம். மகரம் பற்றுக்கோடு. யா என்னும் சினையும் மகரம் போலக் குறுகுதற்கு ஒரு சார்பு.

நூற்பா: 35 (புணரியனிலை)

தொகு
புணரிய னிலையிடைக் குறுகலு முரித்தே () புணர் இயல் நிலை இடைக் குறுகலும் உரித்தே
யுணரக் கூறின் முன்னர்த் தோன்றும் (02) உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்.
இது, குற்றியலிகரம் புணர்மொழியுள்ளும் வருமென்று உணர்த்துதல் நுதலிற்று.
இதன்பொருள்
புணர் இயல் நிலையிடையும்= இருமொழி தம்மிற் புணர்தல் இயன்ற நிலைமைக்கண்ணும்;
குறுகல் உரித்து= அவ்விகரம் குறுகுதலுடைத்து;
உணரக்கூறின்= (ஆண்டை இடத்தினையும் பற்றுக்கோட்டினையும் ஈண்டு) உணரக்கூறப்புகின்;
முன்னர்த்தோன்றும்= (அதுவேண்டுவதில்லை) குற்றியுகரப்புணரியலுள் (அவ்விடனும் பற்றுக்கோடும்) தோன்றும்.
விளக்கம்
`புணரியனிலையிடையும் என மொழிமாற்றி உரைக்க. முன்னர்த்தோன்றுமாறு: "யகரம் வரும்வழி யிகரங் குறுகும், உகரக் கிளவி துவரத் தோன்றாது" (குற்றியலுகரப் புணரியல், 5) என்பதனுள் அறிக. ௸கரம் சார்ந்த வல்லெழுத்துப் பற்றுக்கோடு.
உதாரணம்
நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கியாது, குரங்கியாது என வரும்.

நூற்பா: 36 (நெட்டெழுத்)

தொகு
நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் ()நெட்டெழுத்து இம்பரும் தொடர் மொழி ஈற்றும்
குற்றிய லுகர வல்லா றூர்ந்தே. (03) குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே.
இஃது, ஒருமொழிக் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த்துதல் நுதலிற்று.
இதன்பொருள்
நெட்டெழுத்து இம்பரும்= நெட்டெழுத்தினது பின்னும்;
தொடர்மொழி ஈற்றும்= தொடர்மொழியது இறுதியினும்;
குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்து (நிற்றல் வேண்டும்) குற்றியலுகரம் வல்லெழுத்து ஆறினையும் ஊர்ந்து நிற்றலைவேண்டும் (ஆசிரியன்).
விளக்கம்
"தந்து புணர்ந்துரைத்தல்"(மரபு, 100) என்னும் தந்திரவுத்தியான், முன்னின்ற "நிற்றல் வேண்டும்" என்பது ஈண்டும் புணர்க்கப்பட்டது.
உதாரணம்
நாகு, வரகு என வரும்.
நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீறும் இடம். வல்லெழுத்துப் பற்றுக்கோடு. இவ்வாறு இடமும் பற்றுக்கோடும் கூறவே, மொழிக்கு ஈறாதலும் கூறியவாறாயிற்று.

நூற்பா: 37 (இடைப்படிற்)

தொகு
இடைப்படிற் குறுகு மிடனு மாருண்டே () இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே
கடப்பா டறிந்த புணரிய லான. (04) கடப்பாடு அறிந்த புணரியலான.
இது, குற்றியலுகரம் புணர்மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துதல் நுதலிற்று.
இதன்பொருள்
இடைப்படின் குறுகும் இடன் உண்டு= (அவ்வுகரம்) புணர்மொழி இடைப்படினும் குறுகும் இடமுண்டு, (அதன் இடமும் பற்றுக்கோடும் யாண்டோ பெறுவதெனின்);
கடப்பாடு அறிந்த புணரியலான்= அதன் புணர்ச்சி முறைமை அறியும் குற்றியலுகரப்புணரியலின் கண்ணே.
விளக்கம்
இடைப்படினும் குறுகும் என மொழிமாற்றி உரைக்க அக்குற்றியலுகரப்புணரியலுள் "வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்/ தொல்லை யியற்கை நிலையலு முரித்தே" (குற்றியலுகரப்புணரியல், 4) என்பதனுள் வல்லொற்றுத் தொடர்மொழியும் வல்லெழுத்து வருவழியும் இடம். அவ்வல்லொற்றுத் தொடர்மொழியீற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு.
உதாரணம்
செக்குக்கணை, சுக்குக்கோடு என வரும்.
`இடன்` என்றதனான், இக்குறுக்கம் சிறுபான்மை என்றுணர்க. (ஆர், ஏ என்பன அசைகள். `புணரியலான்` என்பது வேற்றுமை மயக்கம். அகரம் சாரியை.

நூற்பா: 38 (குறியதன்)

தொகு
குறியதன் முன்ன ராய்தப் புள்ளி ()குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
யுயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே. (05) உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே.
இஃது ஒருமொழி ஆய்தம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இதன்பொருள்
ஆய்தப்புள்ளி= ஆய்தமாகிய புள்ளி;
குறியதன்முன்னர்= குற்றெழுத்தின் முன்னர்;
உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்து= உயிரோடு புணர்ந்த வல்லெழுத்து ஆறன் மேலது.
உதாரணம்
எஃகு, கஃசு என வரும்.
விளக்கம்
குறியதன் முன்னரும் வல்லெழுத்து மிசையும் இடம். இஃது உயிரன்மையின், இதற்குப் பற்றுக்கோடு என்பதில்லை. கஃறீது என்பதனை மெய்பிறிதாகிய புணர்ச்சி (புணரியல், 7) என்பவாகலின், `புள்ளி` என்றதனான் ஆய்தத்தை மெய்ப்பாற் படுத்துக்கொள்க.ஈண்டும் உயிரென்றது, மேல் ஆய்தத் தொடர்மொழி (குற்றியலுகரப்புணரியல்,1.) என்றோதலின் பெரும்பான்மையும் குற்றியலுகரத்தினை, வெஃகாமை முதலிய பிற உயிர்வரவு சிறுபான்மையெனக் கொள்க.

நூற்பா: 39 (ஈறியன்)

தொகு
ஈறியன் மருங்கினு மிசைமை தோன்றும். (06) ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும்.
இது, அவ்வாய்தம் புணர் மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்
ஈறு இயல்மருங்கினும்= நிலைமொழியீறு வருமொழிமுதலொடு புணர்ந்து நடக்கும் இடத்தினும்;
இசைமை தோன்றும்= ஆய்த ஒலி தோன்றும்.
எடுத்துக்காட்டு
கஃறீது, முஃடீது எனவரும். ஈண்டும் இடங்கள் அவை.

நூற்பா: 40 (உருவினு)

தொகு
உருவினு மிசையினு மருகித் தோன்று () உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா ()மொழிக் குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா
வாய்த மஃகாக் காலை யான. (07) ஆய்தம் அஃகாக் காலையான.
இது, அவ்வொருமொழி ஆய்தத்திற்கு ஓர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
இதன்பொருள்
உருவினும் = ஒரு பொருளினது உருவத்தின்கண்ணும்;
இசையினும்= ஓசையின்கண்ணும்;
அருகித்தோன்றும்= சிறுபான்மையாய்த் தோன்றும்;
குறிப்பு மொழி யெல்லாம்= குறிப்புமொழிகள் எல்லாம்;
எழுத்தின் இயலா= ஆய்த எழுத்தானிட்டு எழுதப்பட்டு நடவா. (அஃது எக்காலத்துமோவெனின், அன்று);
ஆய்தம் அஃகாக் காலையான= அவ்வாய்தம் தன் அரைமாத்திரை அளபாய்ச் சுருங்கி நில்லாது (அவ்வுருவம் இசையது மிகுதியும் உணர்த்துதற்கு) நீண்ட காலத்து அந்நீட்சிக்கு.
எடுத்துக்காட்டு
‘கஃறென்றது’ என்பது உருவு. ‘சுஃறென்றது’ என்பது இசை.

நூற்பா: 41 (குன்றிசை)

தொகு
குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும் () குன்று இசை மொழி வயின் நின்று இசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே. (08) நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே.

நூற்பா: 42 (ஐஒளவென்னு)

தொகு
ஐஒள வென்னு மாயீ ரெழுத்திற் ()ஐ ஒள என்னும் அ ஈர் எழுத்திற்கு
கிகர வுகர மிசைநிறை வாகும். (09) இகர உகரம் இசை நிறைவு ஆகும்.

நூற்பா: 43 (நெட்டெழுத்)

தொகு
நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி. (10) நெட்டெழுத்து ஏழும் ஓர் எழுத்து ஒரு மொழி.

நூற்பா: 44 (குற்றெழுத்)

தொகு
குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே. (11) குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இல.

நூற்பா: 45 (ஓரெழுத்)

தொகு
ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி ()ஒர் எழுத்து ஒரு மொழி ஈர் எழுத்து ஒரு மொழி
யிரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட () இரண்டு இறந்து இசைக்கும் தொடர் மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. (12) மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே.


நூற்பா: 46 (மெய்யினியக்)

தொகு
மெய்யி னியக்க மகரமொடு சிவணும். (13) மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்.

நூற்பா: 47 (தம்மியல்)

தொகு
தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்து ()தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்க மான மி்ல்லை. (14) மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை.

நூற்பா: 48 (யரழவென்னு)

தொகு
யரழ வென்னு மூன்றுமுன் னொற்றக் () ய ர ழ என்னும் மூன்று முன் ஒற்றக்
கசதப ஙஞநம வீரொற் றாகும். (15) கசதப ஙஞநம ஈர் ஒற்று ஆகும்.

நூற்பா: 49 (அவற்..ரகார)

தொகு
அவற்றுள் ()அவற்றுள்
ரகார ழகாரங் குற்றொற் றாகா. (16) ரகாரம் ழகாரம் குற்று ஒற்று ஆகா.

நூற்பா: 50 (குறுமையு)

தொகு
குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற் () குறுமையும் நெடுமையும் அளவில் கோடலில்
றொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல. (17) தொடர் மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல.

நூற்பா: 51 (செய்யுளிறுதி)

தொகு
செய்யு ளிறுதிப் போலு மொழிவயின் ()செய்யுள் இறுதிப் போலும் மொழி வயின்
னகார மகார மீரொற் றாகும். (18) னகாரம் மகாரம் ஈர் ஒற்று ஆகும்.

நூற்பா: 52 (னகார)

தொகு
னகார முன்னர் மகாரங் குறுகும். (19) னகாரம் முன்னர் மகாரம் குறுகும்.

நூற்பா: 53 (மொழிப்படுத்)

தொகு
மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினு () மொழிப் படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும்
மெழுத்திய றிரியா வென்மனார் புலவர். (20)எழுத்து இயல் திரியா என்மனார் புலவர்.


நூற்பா: 54 (அகரவிகர)

தொகு
அகர விகர மைகார மாகும். (21) அகரம் இகரம் ஐகாரம் ஆகும்.

நூற்பா: 55 (அகரவுகர)

தொகு
அகர வுகர மௌகார மாகும். (22) அகரம் உகரம் ஒளகாரம் ஆகும்.

நூற்பா: 56 (அகரத்திம்)

தொகு
அகரத் திம்பர் யகரப் புள்ளியும் () அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். (23)ஐ என் நெடும் சினை மெய் பெறத் தோன்றும்.

நூற்பா: 57 (ஓரளபா)

தொகு
ஓரள பாகு மிடனுமா ருண்டே () ஓர் அளபு ஆகும் இடனுமார் உண்டே
தேருங் காலை மொழிவயி னான. (24) தேரும் காலை மொழி வயினான.

நூற்பா: 58 (இகரயகர)

தொகு
இகர யகர மிறுதி விரவும். (25) இகரம் யகரம் இறுதி விரவும்.

நூற்பா: 59 (பன்னீருயி)

தொகு
பன்னீ ருயிரு மொழிமுத லாகும். (26)பன் ஈர் உயிரும் மொழி முதல் ஆகும்.


நூற்பா: 60 (உயிர்மெய்)

தொகு
உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா. (27) உயிர்மெய் அல்லன மொழி முதல் ஆகா.

நூற்பா: 61 (கதநப)

தொகு
கதந பமவெனு மாவைந் தெழுத்து () க த ந ப ம எனும் ஆ ஐந்து எழுத்தும்
மெல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே (28) எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே.

நூற்பா: 62 (சகரக்கிளவி)

தொகு
சகரக் கிளவியு மவற்றோ ரற்றே ()சகரம் கிளவியும் அவற்றோர் அற்றே
அஐ ஒளவெனு மூன்றலங் கடையே. (29) அ ஐ ஒள எனும் மூன்று அலங்கடையே.

நூற்பா: 63 (உஊஒஓ)

தொகு
உஊ ஒஓ வென்னு நான்குயிர் (01) உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர்
வவென் னெழுத்தொடு வருத லில்லை. (30) வ என் எழுத்தொடு வருதல் இல்லை.


நூற்பா: 64 (ஆஎஒவெனு)

தொகு
ஆஎ () ஆ எ
ஒவெனு மூவுயிர் ஞகாரத் துரிய. (31)ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய.

நூற்பா: 65 (ஆவோடல்)

தொகு
ஆவோ டல்லது யகரமுத லாது. (32) ஆவோடு அல்லது யகரம் முதலாது.

நூற்பா: 66 (முதலா)

தொகு
முதலா வேன தம்பெயர் முதலும். (33) முதலா ஏன தம் பெயர் முதலும்

நூற்பா: 67 (குற்றியலு)

தொகு
குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி () குற்றியல் உகரம் முறைப் பெயர் மருங்கின்
னொற்றிய நகரமிசை நகரமொடு முதலும். (34) ஒற்றிய நகரம் மிசை நகரமொடு முதலும்.

நூற்பா: 68 (முற்றிய)

தொகு
முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ ()முற்றியல் உகரமொடு பொருள் வேறுபடாஅது
தப்பெயர் மருங்கி னிலையிய லான. (35) அப்பெயர் மருங்கின் நிலையியலான.

நூற்பா: 69 (உயிரௌ)

தொகு
உயிரௌ வெஞ்சிய விறுதி யாகும். (36) உயிர் ஒள எஞ்சிய இறுதி ஆகும்.

நூற்பா: 70 (கவவோ)

தொகு
கவவோ டியையி னௌவு மாகும். (37) க வவோடு இயையின் ஒளவும் ஆகும்.


நூற்பா: 71 (எயென)

தொகு
எயென வருமுயிர் மெய்யீ றாகாது. (38) எ என வரும் உயிர் மெய் ஈறு ஆகாது.


நூற்பா: 72 (ஒவ்வுமற்)

தொகு
ஒவ்வு மற்றே நவ்வலங் கடையே. (39)ஒவ்வும் அற்றே ந அலங்கடையே

நூற்பா: 73 (ஏவோவெனு)

தொகு
ஏவோ வெனுமுயிர் ஞகாரத் தில்லை. (40) எ ஓ எனும் உயிர் ஞகாரத்து இல்லை.

நூற்பா: 74 (உவூகார)

தொகு
உவூ கார நவவொடு நவிலா. (41) உ ஊகாரம் ந வவொடு நவிலா
(01)

நூற்பா: 75 (உச்சகார)

தொகு
உச்ச கார மிருமொழிக் குரித்தே. (42) உச்சகாரம் இரு மொழிக்கு உரித்தே.

நூற்பா: 76 (உப்பகார)

தொகு
உப்ப கார மொன்றென மொழிப ()உப்பகாரம் ஒன்று என மொழிப
விருவயி னிலையும் பொருட்டா கும்மே. (43) இருவயின் நிலையும் பொருட்டு ஆகும்மே

நூற்பா: 77 (எஞ்சிய)

தொகு
எஞ்சிய வெல்லா மெஞ்சுத லிலவே. (44) எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே.

நூற்பா: 78 (ஞணநம)

தொகு
ஞணநம னயரல வழள வென்னு () ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும்
மப்பதி னொன்றே புள்ளி யிறுதி. (45) அப் பதினொன்றே புள்ளி இறுதி.

நூற்பா: 79 (உச்சகார)

தொகு
உச்ச காரமொடு நகாரஞ் சிவணும். (46) உச்சகாரமொடு நகாரம் சிவணும்.

நூற்பா: 80 (உப்பகார)

தொகு
உப்ப காரமொடு ஞகாரையு மற்றே ()உப்பகாரமொடு ஞகாரையும் அற்றே
வப்பொரு ளிரட்டா திவணை யான. (47) அப்பொருள் இரட்டாது இவணை ஆன.

நூற்பா: 81 (வகரக்)

தொகு
வகரக் கிளவி நான்மொழி யீற்றது. (48) வகரக் கிளவி நான்மொழி ஈற்றது.


நூற்பா: 82 (மகரத்)

தொகு
மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த () மகரத் தொடர் மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப () னகரத் தொடர் மொழி ஒன்பஃது என்ப
புகரறக் கிளந்த வஃறிணை மேன. (49) புகர் அறக் கிளந்த அஃறிணை மேன.


பார்க்க:

தொகு
தொல்காப்பியம்-இளம்பூரணம்
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இளம்பூரணம் சிறப்புப் பாயிரம்
தொல்காப்பியம்-இளம்பூரணர்உரை-எழுத்ததிகார முன்னுரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்1.நூன்மரபு-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்3.பிறப்பியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்4.புணரியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்5.தொகைமரபு-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்6.உருபியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்7.உயிர்மயங்கியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்8.புள்ளிமயங்கியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்9.குற்றியலுகரப்புணரியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இளம்பூரணர் உரை