நன்னூல் எழுத்ததிகாரம் 5. உருபுபுணரியல்

நன்னூல் விருத்தியுரை

தொகு

(புத்தம் புத்துரை எனப்படும் விருத்தியுரை)

உரையாசிரியர்: மாதவச் சிவஞான அடிகளார்

தொகு

நன்னூல் 5. உருபு புணரியல்

தொகு

உருபுகள்

தொகு

நூற்பா: 240


ஒருவனொருத்தி பலரொன்று பலவென
வருபெய ரைந்தொடு பெயர்முத லிருநான்
குருபு முறழ்தர நாற்பதா முருபே. (01)


நூற்பா: 241


பெயர்வழித் தம்பொரு டரவரு முருபே. (02)


நூற்பா: 242


ஒற்றுயிர் முதலீற் றுருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன் னப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே. (03)

சாரியை

தொகு

நூற்பா: 243


பதமுன் விகுதியும் பதமு முருபும்
புணர்வழி யொன்றும் பலவுஞ் சாரியை
வருதலுந் தவிர்தலும் விகற்பமு மாகும். (04)


பொதுச்சாரியைகள்

தொகு

நூற்பா: 244


அன்ஆன் இன்அல் அற்றிற் றத்தம்
தம்நம் நும்ஏ அஇ ஐகுன
இன்ன பிறவும் பொதுச்சா ரியையே. (05)


உருபுபுணர்ச்சியின் சிறப்புவிதிகள்

தொகு

நூற்பா: 245


எல்லா மென்ப திழிதிணை யாயின்
அற்றோ டுருபின் மேலும் முறுமே
அன்றே னம்மிடை யடைந்தற் றாகும். (06)


நூற்பா: 246


எல்லாரு மெல்லீரு மென்பவற் றும்மை
தள்ளி நிரலே தம்நும் சாரப்
புல்லு முருபின் பின்ன ரும்மே. (07)



நூற்பா: 247


தான்தாம் நாம்முதல் குறுகும் யான்யாம்
நீநீர் என்எம் நின்நூ மாம்பிற
குவ்வி னவ்வரு நான்கா றிரட்டல. (08)


நூற்பா: 248


ஆமா கோனவ் வணையவும் பெறுமே. (09)



நூற்பா: 249


ஒன்று முதலெட் டீறா மெண்ணூர்
பத்தின்முன் னான்வரிற் பவ்வொற் றொழியமேல்
எல்லா மோடு மொன்பது மிற்றே. (10)


நூற்பா: 250


வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே. (11)


நூற்பா: 251


சுட்டின்முன் னாய்த மன்வரிற் கெடுமே. (12)


நூற்பா: 252


அத்தி னகர மகரமுனை யில்லை. (13)

புறனடை

தொகு

சாரியைக்குப் புறனடை

தொகு

நூற்பா: 253


இதற்கிது சாரியை யெனினள வின்மையின்
விகுதியும் பதமு முருபும் பகுத்திடை
நின்ற வெழுத்தும் பதமு மியற்கையும்
ஒன்ற வுணர்த்த லுரவோர் நெறியே. (14)

நான்குபுணர்ச்சிக்கும் புறனடை

தொகு

நூற்பா: 254


விகுதி பதஞ்சா ரியையுரு பனைத்தினும்
உரைத்த விதியினோர்ந் தொப்பன கொளலே. (15)


வேற்றுமைப்புணர்ச்சிக்குப் புறனடை

தொகு

நூற்பா: 255


இயல்பின் விகாரமும் விகாரத் தியல்பும்
உயர்திணை யிடத்து விரிந்துந் தொக்கும்
விரவுப் பெயரின் விரிந்து நின்றும்
அன்ன பிறவு மாகுமை யுருபே. (16)


நூற்பா: 256


புள்ளியு முயிரு மாயிறு சொன்முன்
தம்மி னாகிய தொழின்மொழி வரினே
வல்லினம் விகற்பமு மியல்பு மாகும். (17)


எழுத்ததிகாரத்திற்குப் புறனடை

தொகு

நூற்பா: 257


இதற்கிது முடிபென் றெஞ்சா தியாவும்
விதிப்பன வின்மையின் விதித்தவற் றியலான்
வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே. (18)


ஐந்தாவது, உருபுபுணரியல் முற்றும்

தொகு

நன்னூல் எழுத்ததிகாரம் முற்றுப்பெற்றது

தொகு

பார்க்க:

[[]]
நன்னூல் மூலம்
நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 2. பதவியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 3. உயிரீற்றுப்புணரியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 4. மெய்யீற்றுப்புணரியல்