நன்னூல் எழுத்ததிகாரம் 4. மெய்யீற்றுப்புணரியல்
நன்னூல் விருத்தியுரை
தொகு(புத்தம் புத்துரை எனப்படும் விருத்தியுரை)
உரையாசிரியர்: மாதவச் சிவஞான அடிகளார்
தொகுநன்னூல் 4. மெய்யீற்றுப்புணரியல்
தொகுமெய்யீற்றின் முன் உயிர் புணரும்புணர்ச்சி
தொகுநூற்பா: 204
- உடன்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே. (01)
நூற்பா: 205
- தனி்க்குறின் முன்னொற் றுயிர்வரி னிரட்டும். (02)
நூற்பா: 206
மெய்யீற்றின் முன் மெய்
தொகு- தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரம்
- துன்னு மென்று துணிநரு முளரே. (03)
நூற்பா: 207
- ஞணநம லவளன வொற்றிறு தொழிற்பெயர்
- ஏவல் வினைநனி யவ்வன் மெய்வரின்
- உவ்வுறு மேவ லுறாசில சில்வழி. (04)
நூற்பா: 208
- நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வுமாம் வேற்றுமை. (05)
ணகர னகர வீற்றுச்சொற்களின் புணர்ச்சி
தொகுநூற்பா: 209vilakam
- ணனவல் லினம்வரட் டறவும் பிறவரின்
- இயல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக்
- கனைத்துமெய் வரினு மியல்பா கும்மே. (06)
நூற்பா: 210
- குறிலணை வில்லா ணனக்கள் வந்த
- நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே. (07)
நூற்பா: 211
- சாதி குழூஉப்பரண் கவண்பெய ரிறுதி
- இயல்பாம் வேற்றுமைக் குணவெண் சாண்பிற
- டவ்வா கலுமா மல்வழி யும்மே. (08)
நூற்பா: 212
- னஃகான் கிளைப்பெய ரியல்பு மஃகான்
- அடைவு மாகும் வேற்றுமைப் பொருட்கே. (09)
நூற்பா: 213
- மீன்றவ் வொடுபொரூஉம் வேற்றுமை வழியே. (10)
நூற்பா: 214
- தேன்மொழி மெய்வரி னியல்பு மென்மை
- மேவி னிறுதி யழிவும் வலிவரின்
- ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி. (11)
நூற்பா: 215
- மரமல் லெகின்மொழி யியல்பு மகரம்
- மருவ வலிமெலி மிகலு மாகும். (12)
நூற்பா: 216
- குயினூண் வேற்றுமைக் கண்ணு மியல்பே. (13)
நூற்பா: 217
- மின்பின் பன்கன் றொழிற்பெய ரனைய
- கன்னவ் வேற்று மென்மையோ டுறழும். (14)
நூற்பா: 218
- தன்னென் னென்பவற் றீற்றுனவ் வன்மையோ
- டுறழு நின்னீ றியல்பா முறவே. (15)
மகரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி
தொகுநூற்பா: 219
- மவ்வீ றொற்றொழிந்துயிரீ றொப்பவும்
- வன்மைக் கினமாத் திரிபவு மாகும். (16)
நூற்பா: 220
- வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும்
- அவ்வழி யுயிரிடை வரினியல் பும்முள. (17)
நூற்பா: 221
- நுந்தம்
- எம்நம் மீறா மவ்வரு ஞநவே. (18)
நூற்பா: 222
- அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும். (19)
நூற்பா: 223
- ஈமுங்
- கம்மு முருமுந் தொழிற்பெயர் மானும்
- முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே. (20)
யரழவீற்றுச்சொற்களின் புணர்ச்சி
தொகுநூற்பா: 224
- யரழ முன்னர்க் கசதப வல்வழி
- இயல்பு மிகலு மாகும் வேற்றுமை
- மிகலு மினத்தோ டுறழ்தலும் விதிமேல். (21)
நூற்பா: 225
- தமிழவ் வுறவும் பெறும்வேற் றுமைக்கே
- தாழுங் கோல்வந் துறுமே லற்றே. (22)
நூற்பா: 226
- கீழின்முன் வன்மை விகற்பமு மாகும். (23)
லகர ளகரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி
தொகுநூற்பா: 227
- லளவேற் றுமையிற் றடவு மல்வழி
- அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி
- மேவி னணவு மிடைவரி னியல்பும்
- ஆகு மிருவழி யானுமென்ப. (24)
நூற்பா: 228
- குறில்வழி லளத்தவ் வணையி னாய்தம்
- ஆகவும் பெறூஉ மல்வழி யானே. (25)
நூற்பா: 229
- குறில்செறி யாலள வல்வழி வந்த
- தகரந் திரிந்தபிற் கேடுமீ ரிடத்தும்
- வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின்
- இயல்புந் திரிபு மாவன வுளபிற. (26)
நூற்பா: 230
- லளவிறு தொழிற்பெய ரீரிடத்து முவ்வுறா
- வலிவரி னல்வழி யியல்புமா வனவுள. (27)
நூற்பா: 231
- வல்லே தொழிற்பெய ரற்றிரு வழியும்
- பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம். (28)
நூற்பா: 232
- நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்
- அல்வழி யானும் றகர மாகும். (29)
நூற்பா: 233
- இல்லெ னின்மைச் சொற்கை யடைய
- வன்மை விகற்பமு மாகா ரத்தொடு
- வன்மை யாகலு மியல்பு மாகும். (30)
நூற்பா: 234
- புள்ளும் வள்ளுந் தொழிற்பெயர் மானும். (31)
வகரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி
தொகுநூற்பா: 235
- சுட்டு வகரமூ வினமுற முறையே
- ஆய்தமு மென்மையு மியல்பு மாகும். (32)
நூற்பா: 236
- தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே
- மவ்வரின் வஃகான் மவ்வு மாகும். (33)
வருமொழித் தகர நகரத் திரிபு
தொகுநூற்பா: 237
- னலமுன் றனவும் ணளமுன் டணவும்
- ஆகுந் தநக்க ளாயுங் காலே. (34)
உருபு புணர்ச்சி
தொகுநூற்பா: 238
- உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும். (35)
புறனடை
தொகுநூற்பா: 239
- இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும்
- போலியு மரூஉவும் பொருந்திய வாற்றிற்
- கியையப் புணர்த்தல் யாவர்க்கு நெறியே. (36)
நான்காவது மெய்யீற்றுப்புணரியல் முற்றிற்று
தொகு- பார்க்க
- நன்னூல் மூலம்
- நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
- [[]] :[[]]