நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உடன்படிக்கையின் நிபந்தனைகள்
சமாதான உடன்படிக்கையில் கண்டுள்ள நிபந்தனைகள்:
- இவ்வருடம் முஸ்லிம்கள் மக்காவுக்குள் செல்லாமல் திரும்பி விட வேண்டும்.
- மறு வருடம் முஸ்லிம்கள், மக்காவுக்குள் வந்து மூன்று நாட்கள் மட்டும் தங்கிப் போகலாம்.
- முஸ்லிம்கள் மக்காவுக்குள் வரும் போது, ஆயுதங்கள் எதையும் கொண்டு வரக் கூடாது. வாளை மட்டும் கொண்டு வரலாம். ஆனால், அதை உறையிலே போட்டிருக்க வேண்டும்.
- மக்காவில் ஏற்கனவே தங்கியிருந்த முஸ்லிம்களை, மதீனாவுக்குக் கூட்டிக் கொண்டு போகக் கூடாது.
- மக்காவிலிருந்து யாரேனும் மதீனாவுக்குச் சென்றால், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அவர்களை மக்காவுக்குத் திருப்பி அனுப்பி விட வேண்டும். ஆனால், முஸ்லிம்களில் யாரேனும் மக்காவுக்கு வந்தால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்.
- அரபிக் கூட்டத்தார் தங்கள் விருப்பம் போல், இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சியினரிடமாவது உடன்படிக்கை செய்து கொள்ளலாம்.