நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/தருமம் செய்து விடுங்கள்
ஆயிஷா நாச்சியார் அவர்களிடம் நாணயங்கள் சிறிது இருப்பது பெருமானார் அவர்களுக்கு நினைவு வந்தது. எனவே அவர்களை அழைத்து: “ஆயிஷாவே அந்த நாணயங்கள் எங்கே இருக்கின்றன? ஆண்டவனிடம் நம்பிக்கை இல்லாமலா, முஹம்மது அவனைச் சந்திப்பது? போய் அவற்றை ஆண்டவனுடைய வழியில் தருமம் செய்து விடும்” என்று பெருமானார் அவர்கள் நோய் கடுமையாக இருந்த நிலைமையில் சொன்னார்கள்.
நாச்சியார் அவர்களும் அவ்வாறே தருமம் செய்து விட்டார்கள்.