நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மழைக்காகப் பிரார்த்தனை
ஒரு சமயம், மக்காவில் கொடிய பஞ்சம் நிலவியது. மக்கள் அனைவரும் துன்புற்றார்கள்.
அதை அறிந்த அபூதாலிப், பெருமானார் அவர்களை ஒரு பரந்த வெளிக்குக் கூட்டிக் கொண்டு போய், மழை பெய்வதற்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அன்புடையோனும் அருளுடையோனுமான எல்லாம் வல்ல ஆண்டவன் சமூகத்திலே, பெருமானார் மழை பொழியப் பிரார்த்தனை செய்தார்கள். அப்பொழுது அவர்களுக்கு வயது பத்து. உடனே மழை பொழிந்தது! பஞ்சம் அகன்றது! நாடு செழிப்படைந்தது.