நேரு தந்த பொம்மை/மேடைப் பேச்சு

மேடைப் பேச்சு


இங்கி லாந்தில் படித்த போது
மேடை ஏறியே
இளைஞர் நேரு பேசு தற்கே
கூச்சம் கொள்ளுவார்;
சங்கம் ஒன்றை நிறுவி நமது
தேச மாணவர்,
தக்க முறையில் பேச அங்கே
பழகி வந்தனர்.



நே.பொ-3 

மாத முழுதும் ஒருநாள் கூடப்
பேசி டாதவர்
மன்றத்திற்கே அபரா தந்தான்
செலுத்த வேண்டுமாம்.
ஆத லாலே மேடை ஏறிப்
பேசி டாத நம்
அருமை நேரு அபரா தத்தைத்
தொடர்ந்து செலுத்தினார்.

சொந்த நாடு திரும்பி வந்த
பிறகு மக்களின்
துயரம் யாவும் கேட்டுக் கேட்டுத்
துடிது டித்தனர்.
அந்தச் சமயம் மக்களி டத்தில்
சென்று தினமுமே
ஆறு தல்கள் கூறும் வகையில்
பேசி வந்தனர்.

கூச்சம் கொஞ்சம் கொஞ்ச மாகக்
குறைந்து வந்தது.
கூட்டம் அதிகம் அதிக மாகப்
பெருகி வந்தது.

பேச்சைக் கேட்டுக் கேட்டு மக்கள்
உணர்ச்சி பெற்றனர்;
பெரிய பெரிய உண்மை யெல்லாம்
எளிதில் அறிந்தனர்.

இமயம் தொட்டுக் குமரி மட்டும்
நேரு சென்றனர்;
ஏழை எளிய மக்க ளுடனே
உறவு கொண்டனர்;
அமைதி யாக காந்தி வழியில்
புரட்சி செய்தனர்;
அடிமை வாழ்வை அகற்று தற்கே
வழியும் தேடினர்.

கூடப் படித்த மாண வர்முன்
பேசப் பயந்தவர்,
கொட்டும் மழைபோல் லட்சம் மக்கள்
முன்னே பேசினர்.
நாடு போற்றும் தலைவ ரென்ற
பெயர் எடுத்தனர்!
நாக்கு வன்மை உடையார் என்ற
புகழும் பெற்றனர்!