பஞ்சதந்திரம்
பஞ்சதந்திரம் என்பது சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட கதைகள் செய்யுள்களின் தொகுப்பாகும். இது விஷ்ணு சர்மா என்பவரால் கி.மு 200-ல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பஞ்ச தந்திரக் கதைகள் பொழுது போக்குக் கதைகள்போலத் தோன்றினும் அரசியற் சூழ்ச்சி பற்றிய மூலக் கொள்கைகளைத் தெளிவுபடுத்தும் கதைகளாகவே இருக்கின்றன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் அரசியற் சூழ்ச்சியின் ஏதாவது ஒரு விளக்கத்தை அளிப்பதாகவே இருக்கிறது. இதில் அரசநீதியின் மையக்கருத்துக்கள் விலங்குக் கதைகளின் மூலம் சொல்லியுள்ளன.
நூல்கள்
தொகு- பஞ்ச தந்திரக் கதைகள் (1996) - பாவலர் நாரா. நாச்சியப்பன் எழுதியது
- நான்கு நண்பர்கள் (1962) - பஞ்சதந்திரத்தில் இருந்து தேர்ந்தெடுத்த நான்கு கதைகளை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா எழுதியுள்ளார்.
- பஞ்சதந்திரக் கதை (மெய்ப்பு செய்) (1865) தாண்டவராய முதலியார்
- பஞ்சதந்திரம் (மெய்ப்பு செய்) (1898) தாண்டவராய முதலியார்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |