பங்கேற்புக்கான விருதுகள்

என் பெயர் மா.ப. கென்னடி . நான் தற்பொழுது ஒரு கார் உற்பத்தி செய்யம் நிறுவனத்தில், மனித வள மேம்பாட்டு துறையில் உதவி பொது மேலாளராக பணி புரிந்து வருகிறேன். வயது 55. எனக்கு திருமணமாகி இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். பெரிய மகன் வயது 24. மின் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, அவருக்கு பிடித்த புகைப்பட துறையில் பணியாற்றி வருகிறார். இரணடாம் மகன் மின்னணு பொறியியல் இரணடாம் ஆண்டு படித்து வருகிறார். என் சொந்த ஊர் திருப்பத்தூர் , வேலூர் மாவட்டம். +2 வரையில் படித்து விட்டு இந்திய விமானப்படையில் சேர்ந்து, 20 ஆண்டுகள் பணி புரிந்து விட்டு, வெளியில் வந்து 17 ஆண்டு காலமாக மனித வள மேம்பாட்டு துறையில் பணி புரிந்து வருகிறேன். தமிழ் மீது தீரா ஆர்வம் உண்டு. இளமை காலங்களிலேயே புத்தகம் படிக்கு ஆர்வம் உண்டு. சரித்திர நாவல்கள் மீது எனக்கு தீரா தாகம். தற்பொழுது சொந்தமாக நிறைய புத்தகங்கள் என் வசம் வைத்துள்ளேன். தற்சமயம் எனை கவர்ந்த ஆசிரியர் திரு. ஜெயமோகன் அவர்கள். அவரின் மஹாபாரதத்தை படித்து வருகிறேன். நான் கற்ற மொழிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. தமிழ் மக்களே தமிழை உதாசீணப்படுத்துவது, மிகவும் கவலை அளிக்கும் ஒரு விஷயம். மற்றபடி புகைப்படம் எடுத்தல், பழைய பாடல்கள் கேட்டல், இவை எனது பொழுது போக்கு விஷயங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:கென்னடி&oldid=1057978" இலிருந்து மீள்விக்கப்பட்டது