பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy/பேச்சு:பக்க வடிவமைப்பு

Active discussions

1. பதிற்றுப்பத்து போன்ற பக்கங்களில் முழு நூலுமே ஒரே பக்கத்தில் உள்ளது. செல்பேசிகள், குறை வேக இணைப்புகளில் இருந்து அணுகிப் படிப்பதற்கு இது உகந்தது இல்லை. ஒரு பக்கத்தின் பைட் அளவு, வரிகள் எவ்வளவு இருக்கலாம்? 2. துணைப்பக்கங்களைப் பிரிப்பது, பெயரிடல் ஆகியவற்றுக்கான வழிமுறைகள் தேவை. திருக்குறள் மாதிரி அதிகாரம், இயல் இருந்தால் இலகு. இல்லாவிட்டால் பக்கப்பெயர்கள் நீளாமல் பெயரிட வேண்டும். நித்திலக் கோவை 371 முதல் 380 முடிய போன்ற பெயர்கள் பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல-- ரவி 07:59, 16 நவம்பர் 2010 (UTC)[]

மயூரநாதன் கருத்துதொகு

  • பக்கங்கள் படிப்பதற்கு இலகுவானவையாகவும், கவர்ச்சியானவையாகவும் இருக்கவேண்டியது அவசியம். ஒவ்வொரு நூலும் ஒரு அட்டைப்படத்துடன் இருப்பது கவர்ச்சியாக இருக்கும்.
  • நூலில் வரிகளுக்கு இடையேயான இடைவெளி போன்றவற்றிலும் ஒரே மாதிரியான முறைகளைக் கடைப்பிடித்தல் விரும்பத்தக்கது. சில பதிவுகளில் ஒவ்வொரு வரிக்கும் இடையே பெரிய இடைவெளிகள் இருப்பது வாசிப்பதற்கு வசதியாக இல்லை.
  • பக்க அமைப்புக்குறித்து ஒரு பொதுவான வழிகாட்டல் இருக்கவேண்டியது அவசியம். இதற்காக வார்ப்புருக்களை உருவாக்கலாமா என்றும் பார்க்கலாம்.

தற்போது பழைய தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் தளங்கள் பலவற்றில் அவற்றுக்கான உரைகள் கிடையா. எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியத்துக்கெனப் பல உரைகள் உள்ளன. இவ்வாறான உரைகளையும் விக்கிமூலம் கொண்டிருக்க வேண்டும். இவை தனித்தனியாகப் பதியப்படலாம் ஆனால், மூலத்தில் ஒரு பாடலைப் பார்க்கும்போது அப்பாடலுக்கான எல்லா உரைகளையும் அணுகக்கூடியவாறான இணைப்புக்களுக்கு வசதி செய்ய முடிந்தால் பயனுள்ளதாக இருக்கும். இது, இதையொத்த பிற தளங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கும். -- Mayooranathan 09:12, 16 நவம்பர் 2010 (UTC)[]

மணியன் கருத்துதொகு

  1. பக்கங்கள் ஓர் ஏ4 அளவு பக்க அளவு இருத்தல் விரும்பத்தக்கது. 60 வரிகள் என்று நினைக்கிறேன். அத்தைகைய இடத்திற்கு 10 வரிகள் முன்பிருந்தே பொருத்தமான இடத்தில் இடைவெளி விடலாம்.
  2. பக்க எண் கொடுப்பது எளிதானது. கிண்டில் போன்ற படிப்பான்களில் இடது மூலையில் முந்தையப் பக்கம், வலது மூலையில் அடுத்தப் பக்கம் என்பது போல அமைக்கலாம். புத்தக வடிவில் அமைவதால் பக்கத்திற்கு சுட்டி கொடுப்பதும் எளிதாகும்.
  3. முதற்பக்கம் மட்டும் விக்கிப்பீடியா வடிவமைப்பில் அம்மூலத்தினுடன் தொடர்புடைய புற இணைப்புகளுடன், விக்கி திட்டங்கள் உட்பட, துளிச்செய்திகள் கொண்டிருக்கலாம்.
Return to the user page of "Dineshkumar Ponnusamy/பேச்சு:பக்க வடிவமைப்பு".