வணக்கம் தினேஷ் பயனர்:Shanmugamp7/vector.js இங்குள்ளவற்றை பயனர்:Dineshkumar Ponnusamy/vector.js இட்டால் உங்களுக்கு மட்டும் ஹாட்கேட் கருவி வந்துவிடும்.அனைவருக்கும் உருவாக்க இரவியை கேட்கவும். அவரே இங்கு நிர்வாகி--Shanmugamp7 (பேச்சு) 07:34, 19 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

நன்றி, Shanmugamp7!--Dineshkumar Ponnusamy (பேச்சு) 07:40, 19 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம் தினேஷ், நீங்கள் அனைத்து WIKISOURCE பக்கங்களையும் விக்கிமூலம் என்ற பக்கத்திற்கு நகர்த்தியுள்ளீர்கள். இதன் மூலம் பக்கத்தின் வெளிகள் மாறிவிடும். எடுத்துக்காட்டாக அப்பக்கங்கள் அனைத்தும் முதன்மை வெளிக்கு மாறிவிட்டது பாருங்கள்.. அது விக்கி மூலம் பெயர் வெளியில் இருக்க வேண்டும்...மாற்ற வேண்டுமெனில் இடைமுகத்தில் மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். அது பற்றி விசாரித்து விட்டு கூறுகிறேன்--Shanmugamp7 (பேச்சு) 02:29, 31 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

நானும் இதுபற்றி யோசித்தேன், அதுமட்டுமின்றி விக்கிமூலம் என்று நான் தமிழில் பெயர் மாற்றியிருந்தாலும், அதனுடைய உரையாடல் பக்கத்தினை பார்த்ததால், இதை அறிந்து கொண்டேன். இதற்காக ஆதரவு கேட்டுள்ளீர்கள் ஆயினும், இதில் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன். என்னுடைய ஆதரவையும் இட்டுள்ளேன். விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கு ஆதரவு கேட்டு ஒரு தலைப்பு சேர்த்தால், எளிதில் அதிக ஆதரவு பெறலாம். :-) -- Dineshkumar Ponnusamy (பேச்சு) 06:51, 31 மே 2012 (UTC)Reply[பதில் அளி]
வழு பதிய இரண்டு மூன்று ஆதரவுகள் இருந்தால் போதுமானது தினேஷ், மேலும் இங்கு பங்களிப்பவர்களாக இருந்தால் நல்லது.. அதனாலேயே இங்கு பதிந்தேன்..--Shanmugamp7 (பேச்சு) 06:56, 31 மே 2012 (UTC)Reply[பதில் அளி]
அதுவும் சரிதான், அப்படியானால், பவுல், செங்கை பொதுவன், உள்ளிட்டவர்களுக்கும் இதனை விரைந்து தெரிவிக்க வேண்டும். -- Dineshkumar Ponnusamy (பேச்சு) 06:58, 31 மே 2012 (UTC)Reply[பதில் அளி]
தினேஷ் பார்க்க விக்கிமூலம்:ஆலமரத்தடி--Shanmugamp7 (பேச்சு) 18:23, 3 ஜூன் 2012 (UTC)

விக்கிமூலத்தை மேம்படுத்த சில பரிந்துரைகள்தொகு

தினேஷ், சண்முகம், மேலே நிகழ்ந்த உரையாடல் கண்டேன். விக்கிமூலத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதற்குப் பாராட்டு!

தமிழ் விக்கிப்பீடியாவில் "தொகு" பொத்தானைச் சுட்டும்போது, தொகுப்பதற்கு வசதியாக பல கருவிகள் தோன்றுகின்றன: "உள்ளீடு", "கையொப்பமிட", "விக்கியாக்கங்கள்", "வார்ப்புருகள்", "குறியீடுகள்", "கிரேக்கம்". இவற்றை விக்கிமூலத்தில் காணோமே. அவை விக்கிமூலத்திலும் தோன்றிட வழிசெய்வீர்களா?

இதைப்பற்றி எனக்கு சரியாகத் தெரியவில்லை.. அநேகமாக ஜாவாஸ்கிரிப்ட் தொகுக்க வேண்டிவரும் என நினைக்கிறேன்.. எப்படியிருந்தாலும் இரவி வந்த பிறகே இதை செய்ய இயலும் (அவரே நிர்வாகி, தற்பொழுது விக்கி விடுப்பில் உள்ளார்).. அதற்குள் இது பற்றிய விவரங்களையும் சேகரித்து விடுகிறேன்..(தலைப்பு பட்டியில் உள்ள சிறப்பு எழுத்துருக்கள் சொடுக்குவதன் மூலம் கிரேக்கம், குறியீடுகளை சேர்க்கலாம்)--Shanmugamp7 (பேச்சு) 18:23, 3 ஜூன் 2012 (UTC)

அதுபோலவே, விக்கிமூலத்தின் முதல் பக்கத்தை ஆங்கில Wikisource-இல் உள்ளதுபோல இன்னும் சிறிது கவர்ச்சியாக மாற்றமுடியுமா? நன்றி! -- பவுல்-Paul (குறிப்பு: கையொப்பத்தைக் கையாலேயே "எழுதியுள்ளேன்"!!)

இது பற்றி ஏற்கனவே பயனர்:shanmugamp7/mainpage முயற்சி செய்தேன்.. ஆங்கில விக்கியில் உள்ளதை போல எனில் எளிதாக மாற்றி விடலாம்.. இன்னும் ஓரிரு வாரங்களில் செய்கிறேன்..(குறிப்பு:கையொப்பமிட மேலே உள்ள தலைப்பு பெட்டியில் உள்ள file:signature button.png எழுதுகோல் போன்ற குறியை பயன்படுத்தலாம்)--Shanmugamp7 (பேச்சு) 18:23, 3 ஜூன் 2012 (UTC)
  • நன்றி, சண்முகம். மேலே நீங்கள் குறிப்பிட்ட பயனர்:shanmugamp7/mainpage இணைப்பைச் சொடுக்கினேன் பார்வைக்கு நன்றாகவே உள்ளது. அதையே முழுமையாகச் செய்துவிட்டால் போதும் என்று நினைக்கிறேன். கையொப்பக் குறியையும் கண்டுகொண்டேன். இதோ!--பவுல்-Paul (பேச்சு) 04:24, 4 ஜூன் 2012 (UTC)

ரங்கோன் ராதா பக்கத்தில் புதினம் என்னும் பகுப்பு தேவைதொகு

நூலகத்தில் நூல்களை நூலின் தலைப்பு (Title) நூலின் பொருள்/வகை (Subject), நூலாசிரியரின் பெயர் (Author's Name) என மூன்று வகையில் பிரிப்பர். அவ்வகையிலேயே ரங்கோன் ராதா என்னும் நூலை நூலின் பொருள்/வகை என்னும் அடிப்படையில் புதினங்கள் பக்கத்தில் பதிந்தேன். ரங்கோன்ராதா என்னும் புதினத்தை எழுதியவர் யார் எனத் தெரியாதவர், அதனைப் புதினங்கள் என்னும் பக்கத்தில்தான் தேடுவார்; அண்ணாவின் புதினங்கள் என்னும் பக்கத்தில் தேடமாட்டார். எனவே கல்கி. மு.வ. எழுதிய புதினங்களின் பெயர்கள் புதினங்கள் பக்கத்தில் இடம்பெற்றிருப்பதைப் போலவே, ரங்கோன்ராதா என்னும் புதினத்தின் பெயரும் அப்பக்கத்தில் இடம்பெற வேண்டும். நன்றி--அரிஅரவேலன் (பேச்சு) 12:09, 18 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

அதிகமான நூல்கள், நூலகத்தில் வரும்பொழுது இன்னும் சிக்கல் அதிகமாகும். கல்கி, மு.வ. போன்றோர் எழுதிய புதினங்களும் விரைந்து அவர்களுடைய பெயர்களில் நகர்த்தப்படும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:57, 18 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

பதிப்புரிமைதொகு

பதிவேற்றும் ஆக்கங்களின் பதிப்புரிமையை உறுத்தி செய்து, அது பற்றிய குறிப்புக்களைத் தருதல் விரும்பத்தக்கது. --Natkeeran (பேச்சு) 19:10, 25 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

நிச்சயமாக, விரைந்து காப்புரிமை அல்லது பதிப்புரிமை குறித்த தகவல்கள் இணைக்கப்படும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:04, 9 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்தொகு

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் என்ற திட்டத்தில் தங்கள் பங்களிப்பும் உதவியையும் வேண்டுகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:16, 23 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

அழைப்பிற்கு நன்றி, பாலாஜி ! நான் விரைந்து இத்திட்டத்தில் இணைகிறேன். இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் என் பங்களிப்பை எதிர்பார்க்கலாம். தற்போது இடமாறுதலில் கவணம் செலுத்தி வருகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:17, 2 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]
வணக்கம் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:34, 2 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]

முடிந்தவரை அன்றாடம் பயன்படுத்தப்படும் தமிழ்ச்சொற்களை நாமும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தினம் என்பதை நாள் என்று மாற்றியுள்ளேன். பிறகு அத்திட்டத்தை, திட்டபக்கங்கள் பகுப்புடன் இணைத்துள்ளேன். பகுப்பு:நாள் ஒரு இலக்கியம் என்பதை அமைத்துள்ளேன். வேறு ஏதேனும் மாற்றங்கள் விடுபட்டுள்ளதா? ஒரு முறை சரிபார்த்து உதவுங்கள். நன்றி. -- உழவன் (உரை) 02:14, 5 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]

மாற்றம் நன்றாகவே உள்ளது, நன்றி உழவன். ஆனால் முதல்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அசோகர் கதைகள் இப்பகுப்பின் கீழ் வரவில்லையே? ஏதோ விடுபட்டுள்ளது. கவணிக்கவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:51, 7 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]

அந்திம காலம்தொகு

அந்திம காலம் என்னும் படைப்பை விக்கிமூலத்தில் சேர்த்துள்ளீர்கள். இதன் படைப்பாக்க உரிமம் பற்றி ஏதேனும் தகவல் தங்களிடம் உள்ளதா? -- Balajijagadesh (பேச்சு) 18:12, 13 ஜனவரி 2020 (UTC)

இது ஒரு மதுரைத் திட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட நூல். முதல் பக்கத்தில் இலவசமாக பகிரலாம் என்ற குறிப்பு உள்ளது. சரியான உரிமம் இல்லை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு)

Indic Wikisource Proofreadthon II 2020தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy&oldid=1272495" இருந்து மீள்விக்கப்பட்டது