பாரதிதாசன் கதைப் பாடல்கள்/எது பழிப்பு?


12 எது பழிப்பு?

1

த்து வயதில் பழனியப்பன் வீட்டினிலே
முத்தம்மை என்னும் முதிராத செங்கரும்பு
வேலைசெய்திருக்கையிலே வேம்பென்னும் தாயிறந்தாள்.
மேலுமோர் ஆண்டின்பின் தந்தையாம் வீரப்பன்
தானும் இறந்தான். தனியாக முத்தம்மை
கூனன் வரினும் குனிந்துபுகும் தன்குடிலில்
வாழ்ந்திருந்தாள் அண்டை அயல்வாழ்வார் துணையோடு!
தாழ்ந்திடுதல் இன்றியே தன்வருமா னத்திலே
நாளைக் கழித்துவரும் நங்கை பருவமுற்றாள்.
தோளை அழகுவந்து கெளவியது, முன்னிருந்த
வண்ண முகமேதான் வட்டநிலா ஆகியது.
மொட்டு மலர்ந்தவுடன் மொய்க்கின்ற வண்டுகள்போல்
கட்டழகி அன்னவள்மேல் கண்வைத்தார் ஆடவர்கள்.

2

அச்சகத்தில் வேலைசெய்யும் அங்கமுத்துத்தான் ஒருநாள்
மெச்சுமெழில் முத்தம்மை மெல்லியினைத் தான்கண்டு
தன்னை மணந்துகொண்டால் நல்லதென்று சாற்றினான்,
இன்ன வருமானம் இன்னநிலை என்பவெல்லாம்
நன்றாய்த் தெரிந்துகொண்டு நல்லதென்றாள் முத்தம்மை.
ஊரார்கள் கூடி ஒருநாள் திருமணத்தைச்
சீராய் முடித்தார்கள். செந்தமிழும் பாட்டும்போல்
அங்கமுத்து முத்தம்மா அன்புடனே வாழ்ந்துவந்தார்
இங்கிவர்கள் வாழ்க்கை இரண்டாண்டு பெற்றதுண்டு

83

வாய்ச் சொல்லாய்த் “தோளில் வலி” என்றான். மட்டாகக்
காய்ச்சல்என்று சொன்னார் மருத்துவரும் கைபார்த்து!
நாலு நாட் பின்னை நளிர்ஏற நாவடங்கிப்
பாலும்உட்செல்லாத பான்மை ஆடைந்தே
இறந்துவிட்டான் அங்கமுத்து முத்தம்மை மார்பில்
அறைந்தபடி கூவி அழுது புரளுகையில்
அண்டை அயலுள்ளார் அங்கமுத்தின் மெய்கழுவித்
தொண்டர் சுமக்கச் சுடுகாட்டை எய்துவித்தார்.
நாள்கள்நில் லாது நடந்தன முத்தம்மை
வாட்டுகின்ற ஒவ்வோர் நொடிக்கும் மனம் பதைத்தாள்.
அங்கமுத்து மாண்டான். அறுபதுநாள் சென்றபின்னும்.
எங்கும் அவனே என அழுதாள் முத்தம்மை!
மாதங்கள் மூன்று மறைந்தபின்னும், அங்கமுத்தின்
காதில் விழும் என்றழைப்பாள் கண்ணாளா என்று!

4

துணைவனைச் சுட்ட சுடுகாட்டை நோக்கி
இணை விழிகள் நீர்பெருகச் சென்றாள். இடையிலே
நள்ளிரவில், மக்கள் நடப்பற்ற தோப்பினிலே
பிள்ளையின் பேர்சொல்லிக் கூவினாள் அங்கொருத்தி.
தங்கமுத்தே தங்கமுத்தே என்றபெயர்தான்கேட்ட
மங்கையவள் முத்தம்மை வந்தான் கணவனென்று.
நின்றாள். விழியால் நெடிதாய்வாள் தோப்பெல்லாம்.
தன் துணைவன் போலத்தனியாக வந்துநின்றான்.
யார் என்றுகேட்டாள். நீ யார்என்றான் வந்தவனும்,
தேரோடும்போதே தெருவில்அது சாய்ந்ததுபோல்
மாண்டார்என் அத்தான் மறைந்தார் சுடுகாட்டில்
ஈண்டுநான் வந்தேன் எதிரில் உமைக்கண்டேன்.
உம்பெயரை யாரோ உரைத்தார் அது துணைவர்
தம்பேர்போல் கேட்டதனால் தையலுளம் பூரித்தேன்.

என்பெயரோ முத்தம்மை என்றாள், அதுகேட்டுத்
தன்பெயர் தங்கமுத்தென்றான். தளர்வுற்றாள்.
தூயான் எரிந்த சுடுகாடு போகலுற்றாள்.
நீஏன் சுடுகாட்டை நேர்கின்றாய் மங்கையே
நானுன் மணவாளன்! நானுன் மணவாளன்!
தச்சுவே லைசெய்யும் தங்முத்துப் பேர்சொன்னால்
மெச்சாதார் யாருமில்லை மெய்ம்மைஇது கேட்டுப்பார்.
தன்னத் தனியாய்நீநானும் உடன் வருவேன்
என்றான். அவளும் எதிரொன்றும் கூறாமல்
சென்றாள். உடன்சென்றான், செங்கதிரும் கீழ்க்கடலில்
தோன்றியது. தோகைக்கும் தங்கமுத்தின் மேல் உள்ளம்
ஊன்றியது. தாமே உறுதிசெய்தார் தம்மணத்தை.

தங்கமுத்தின் அன்னை தளர்ந்த பருவத்தாள்
மங்காத செல்வம்போல் வாய்த்த மருமகளைக்
காணும்போதெல்லாம் மகிழ்ச்சிக் கடல்படிவாள்;
ஆணகழகன் தன்மகனும் அன்பு மருகளும்,
வேலையில்லாப் போது விளையாடல் தான்கண்டு
மூலையினில் குந்தி முழுதின்ப மே நுகர்வாள்.
ஆண்டொன்று செல்லஅவள் ஆண்குழந்தை ஒன்று பெற்றாள்.
ஈண்டக் குழந்தைக் கிரண்டுவய தான்வுடன்
தங்கமுத்து மாண்டான். தளர்ந்தழுதாள் முத்தம்மை
மங்கை நிலைக்கு வருந்தினாள் அக் கிழவி.

5

மாமிதன் வீட்டினை நூறு வராகனுக்குச்
சாமியப்ப னுக்கவிற்றுத் தையலிடம் தந்து
கடையொன்று வைக்கக் கழறினாள். அன்னாள்
உடனே கடைதிறந்தாள். ஊர்மதிப்பும் தான்பெற்று
வாழ்கையில் ஓர்நாள், மனைவி தனைஇழந்த

கூழப்பன், மங்கையிடம் தன்குறையத் கூறலுற்றான்.
மாடப் புறாப்போல் மயில்போல் குயில்போலத்
தேடி மணந்தேன். பத்தாண்டும் செல்லப்
பிள்ளையில்லை. வேறேஓர் பெண்ணையும் நீமணந்து
கொள்என்றாள். கோதையே நீயிருக்கு மட்டும்
எவளையும் தீண்டே நான் என்று முடித்தேன்;
அவள் அன்று மாலை அனல்மூழ்கி மாண்டுவிட்டாள்.
இப்படிச்செய்வாள்னெ றெனக்குத் தெரிந்திருந்தால்
அப்படிநான் சொல்ல அணுவளவும் ஒப்பேன்.
மணம்புரிய வேண்டும்நான் மக்கள்பெற வேண்டும்.
தணல்மூழ்கி னாளின் எண்ணமிது தான்என்றான்.
கேட்டிருந்த முத்தம்மை கிள்ளிஎறி பூங்கொடிபோல்
வாட்டம் அடைந்தாள். மனமெல்லாம் அன்பானாள்.
என்னை மணப்பீரோ என்றன் அருமை மகன்
தன்மைஉம் பிள்ளையெனத் தாங்கத் திருவுளமோ?
ஐயாவே என்றாள். உடனே, அருகிலுறும்
பையனைஅன்னேன்துக்கிப் பத்துமுறை முத்தமிட்டான்.

6

தங்கமுத்தின் தாய்கண்டாள் கூழப்பனின் உருவில்
தங்கமுத்தை யேகண்டாள் தணியாத அன்பினால்
வாழ்த்தினாள் முத்தம்மை கூழப்பன் மாமணத்தை!
வீழ்த்தினார் அவ்விருவர் மேல்வீழ்ந்த துன்பத்தை!
பூவும் மணமும்போல் பொன்னும் ஒளியும்போல்
கோவையிதழ் முத்தம்மை கூழப்பன் இவ்விருவர்
ஒத்தின்ப வாழ்வில் உயர்ந்தார். வாணிகமும்
பத்துப்பங்கேறியது. பையன் வயதும்
இருபதாயிற்று. மணம் செய்யஎண்ணிப்
பெருமாளின் பெண்ணைப் போய்ப் பேசுவதாய்த் திட்டமிட்டார்.


7

மாலையிலே முல்லை மலர்ப்பொடியைத் தான்ள்ளிச்
சோலையெலாம் வண்டிருந்து சூறையிடும் தென்றலிலே
மேலாடை சோர விளையாடும் தோகைஎதிர்
வேலன் வரலானான். கண்டாள் விளம்புகின்றாள்:
உம்மைக் கடைத்தெருவில் கண்டேன் நெடுநாள் பின்
மெய்ம்மறவர் வாழ்தெருவில் கண்டு வியந்ததுண்டு.
எந்தப் பெண்ணுக்கா இவ்வுலகில் வாழ்கின்றீர்?
அந்தப்பெண் உம்மை அடையப் புரிந்ததவம்
யாதென்றாள். வேலன் இயம்பத் தலைப்பட்டான்.
காதலெனும் பாம்புக் கடிமருந்து நீஎன்று,
தேடிவந்தேன் ஒப்புதலைச் செப்பிவிடு. நீவெறுத்தால்
ஓடிஇதோ என்உயிர் மாய்த்துக் கொள்ளுகின்றேன்
என்றான், உனக்கு நான் என்றாள். உவப்புற்றான்.
நின்றாளின் நேர்நின்றான். நீட்டிய கைம்மேல் விழுந்தாள்.
மாலை மறைந்ததையும், வல்லிருட்டு வந்ததையும்,
சோலை விளக்கம் தொலைந்ததையும் தாம் உணரார்.
குப்பத்து நாய்தான்் இடிபோற் குரைத்ததனால்
ஒப்பாமல் ஒப்பி உலகை நினைத்தார்கள்.
விட்டுப் பிரியமனம் வெம்பிப் பிறர்விழிக்குத்
தட்டுப் படாதிருக்கத் தத்தம் இடம்சேர்ந்தார்.

8

பெருமாளிடம்சென்றான் கூழப்பன், பெற்ற
ஒருமகளை வேலனக்கே ஒப்படைக்க வேண்டுமென்றான்.
தாயோ பழியுடையாள், தந்தையும் நீயல்லை,
சேயோதிருவில்லான் என்றான் பெருமாள்.
வருந்தினான் கூழப்பன் வாழ்க பெருமாள்
மருமகனாவதற்கு வாய்த்தபல பண்புகள்

பையனிடம் உண்டா எனப்பாரும் மற்றவரை
நைய உரைத்தல் நலமில்லை என்றுரைத்தான்.
விண்ணில் கிடக்கின்றான் மாற்றம் உணர்ந்தாயோ
என்றான் பெருமாள். எதிரே ஆள் நீள் அஞ்சல்
ஒன்றைப் பெருமாள்பால் நீட்டிவிட்டோடிவிட்டான்.
வீட்டின் ஒரே அறைக்குள் வேலனும் தோகையும்
காட்டுப் புறாக்களைப்போல் காதல் நலம் காணுகின்றார்
ஒத்த உளத்தை உயர்ந்த திருமணத்தைப்
பத்துப்பேரைக் கூட்டிப் பாராட்ட எண்ணமுண்டா?
பாராட்டு நல்விழா எந்நாள்? இருபெற்றோர்
நேரே உரைத்திடுக. நெல்லிமா வீட்டிலுள்ளார்.
இங்ங்ணம் தோகையாள்வேலன் இருவர் ஒப்பம்.
அங்கே இதைப்படித்தான் ஆம் ஆம்பொருத்தம் என்றான்.
வேலவன் தோகை விழைவின் விழாவையே
ஞாலமே வாழ்த்தியது நன்று.