புது வெளிச்சம்/அபரோச்சம்

20



அபரோச்சம்


'பரோச்சம்' எனும் சொல்லின் பொருள் காணப்படாதது எனின் அபரோச்சம் எனின், காணப்படும் பொருள் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

‘எதனால் கேள்விக்கு எட்டாதது கேட்கப்பட்டதாயும், நினைவுக்கு எட்டாதது நினைக்கப்பட்டதாயும், அறிவுக் கெட்டாதது அறியப் பட்டதாயும் ஆகுமோ அதுவே பிரம்மம்!' என்கிறது, உபநிசத்து.

தெய்வத்தைப் பற்றி அறிந்து கொள்ள எனை நாடி வந்த யதார்த்த குணமுடைய நண்பனே, (சா காஷ்டா சா பரா கதிச, எது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் அப்பாற்பட்டதோ, (அன்யத்ர தர்மாத்) எதைவிட உயர்ந்தது வேறொன்று மில்லையோ அதுவே இப்பிரம்மம். 

இத்தகைய மகத்தான இந்தப் பிரம்மம் இருக்குமிடம் எது என்று நீ தெரிந்து கொள்ள விரும்புவாயல்லவா? அது கோயிலும் அல்ல; குன்றுகளுமல்ல; வானமும் அல்ல வையகமுமல்ல. ஹ்ருதிஹ் - யேஷ ஆத்மா” இந்த ஜீவாத்மா இருதயத்தில் உறைகிறான் என்பது அதன்பொருள்.

'இந்த ஜீவாத்மா அல்லது பிரம்மம் எப்படியிருப்பான் எத்தகையவனாயிருப்பான் எனின் அதை முன்டகோபநிசத்து விவரிக்கிறது.

"திவ்யோ - ஹ்யமூர்த்த: புருஷர்: ஸ பாஹ்யாப்யந்தரோ - ஹ்யஜ: அப்ராரோ - ஹ்யமணா: சுப்ரோ ஹ்யrரத் - பரத்ப் பர: என்று. இதன்பொருள் : அப்பரமபுருஷன் ஒளி நிறைந்தவன், உருவில்லாதவன், உள்ளும் புறமும் ஒருங்கே உள்ளவன், பிறவாதவன், பிராணனில்லாதவன், மனதில்லாதவன், பரிசுத்தன், மேலான அச்சரப் பிரம்மத்திற்கும் மேலானவன்'.

மேலும் துல்லியமாக விளக்க வேண்டுமெனில் அதற்கு வேறு ஒரு மார்க்கமும் உண்டு. எவ்வாறெனில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனப்படும் பூதங்கள் வெளியே நம் கண்ணுக்கும் புலனறிவிற்கும் தோற்றப் பகுதியாக அமைந்துள்ள இதை சமஷ்டி அதாவது ஏகமாக ஒன்றோடு ஒன்று சேர்ந்துள்ளன. இவைகளே நம்முடல், உயிர் உள்ளம், ஆத்மா என வியஷ்டி அதாவது பிரிந்த நிலையில் அமைந்துள்ளன.

வெளியே எந்த முறையில் அமைந்துள்ளதோ அதே முறையில்தான் நம் உடலிலும் அமைந்துள்ளன. அது சரியானதே ஆகும். நிலத்தின்கண் உள்ள 16க்கு மேல் மேற்பட்ட பெளதிக ரசாயன சாரங்கள்தான் நம் உடல். கீழே நிலத்தோடு கூடியுள்ள நீர் தனக்கு மேலே உள்ள நெருப்போடும் சம்பந்தம் கொண்டுள்ளது. நீரோடு சம்பந்தம் கொண்டுள்ள நெருப்பு தான் காற்றோடு சம்பந்தம் வைத்துக் கொண்டுள்ளது. நெருப்போடு சம்பந்தம் வைத்துக் கொண்டுள்ள காற்று ஆகாயத்தோடும் சம்பந்தம் வைத்துக் கொண்டுள்ளது. அனைத்துக்கும் இடமாக அமைந்துள்ளது ஆகாயம். 

நிலம், நீர், நெருப்பு பெறும் இம்மூன்றும் உருவத்துடனும் காற்று, ஆகாயம், உருவமின்றியும் வெளியே உள்ளன.

காற்றுதான் உயிர் அனைத்துக்கும் எசமானன்; காற்றில்லையேல் நம் உடலில் 98 டிகிரி வெப்பம் இருக்காமல் போய் விடலாம். காற்றின் குழந்தை நெருப்பு. நெருப்பின் குழந்தைதான் நீர். இவை மூன்றும்மிகினும் குறையினும் நோய் செய்யும், வாதம், பித்தம் சிலேத்தும் என்னும் பெயர் கொண்டு இவை வழங்கி வரும்.

இந்த உடலும் உயிருமல்லாது, இன்னுமொரு உறுப்பற்ற உறுப்பும் நமக்குள் உண்டு. அதன் பெயர் தான் மனம். தமிழில் உள்ளம் எனப்படுகிறது.

உடல், உயிருக்கு இடமளிக்கிறது. உயிர், உள்ளத்திற்கு இடமளிக்கிறது. உள்ளம் வானம் போன்றது. வானத்தில் உதித்து வரும் சூரியனைப் போல் நாம் உள்ளத்தில் சத்தியத்தை உதிக்கச் செய்து கொண்டால் நாம் தெய்வமாகிறோம். பொய்யை உதிக்கச் செய்து கொண்டால் சோற்றுப் பிண்டங்களாகி நோய், கவலை, கோபதாபம், பொறாமை முதலிய குணங்களுடன் உருவங்களை வணங்கிக் கொண்டு சீரழிவுடன் இப்போதுள்ளவாறே, 'பிறந்தான். இருந்தான், செத்தான்' எனும் மூன்று சொற்களில் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்களாகிறோம்.

சத்தியத்தை உபநிசத்து, 'சூரியன்' என்றே உரைக்கிறது. 'தத்யத் தத்சத்ய மலெளன சதித்யே’, என்று ஆனதனால்தான் சத்தியத்தைப் பிரம்மம் என்று பழங்கால முனிவர்கள் பெயரிட்டழைத்தனர். 'எதஸ்ய பிராமனே நாம சத்ய மிதி' என்று...

சத்தியத்தை உள்ளத்தில் வைத்துக் கொண்டோமானால், மற்ற எல்லா நல்ஒழுக்கங்களும் இயல்பாக நமக்கு அமைந்துவிடுகிறது. எனவேதான், 'பிரம்மஹிரப் ஜோதி பரம்' - பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மமாகிறான் என்றும், மேலும் விளக்கம் செய்கிறது.

'அகத்தினழகு முகத்தில்' என்று ஒரு பழமொழி தமிழில் இருப்பது எல்லாரும் அறிந்ததுதான். நாம் சத்தியத்தை உள்ளத்தில் வைத்து உரையில் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தால், நம்முடைய அகத்தழகு முகத்தில் பிரதிபலிக்கும் பொலிவு பெற்றுக் கண்கள் ஒளியுடையதாகி, தோற்றம், பிறர் மதிப்புக்குரியதாயும் மாறுகிறது. இவ்வாறே நாமே தெய்வமாகிவிடின் நமக்குச் சதா அமைதியும் ஆனந்தமும் தவிர வேறு என்ன வேண்டியுமிருக்காது. எதை அறிய வேண்டுமோ அதை அறிந்தோம். எதை அடைய வேண்டுமோ அதை அடைந்தோம். அமைதியும், ஆனந்தமும் இப்போது நமது உடைமையாயிற்று.

கோடீசுவரன் அனுபவிப்பது துன்பமன்றி இன்பமன்று. அவனுடைய உள்ளத்தில் அச்சம் மண்டியிருக்கிறது. புகழ் அவனை நையாண்டி செய்து கொண்டு ஆட்டம் காட்டுகிறது. காமம், வெகுளி, மயக்கம் எனும் மும்மலங்களும் அவனை ஆட் கொண்டுள்ளன. காசே அவனைக் கனவீனப்படுத்துகிறது. பற்றுகள் அவனைப் பாழ்படுத்தி வைக்கின்றன.

நடத்தையாலன்றி 'நிலையான அமரத்வம் காசினால் பெற முடியாது. வேசதாரிச் சாமியார்களை இவன் சரணடைகிறான். காலில் விழுந்து வணங்குகிறான். அவன் கற்சிற்பங்களைச் சுட்டிக்காட்டுகிறான். எனவே தான் பொதுவாகச் சொல்லுகிறேன்; ஒரு மூடனாக இருந்து கொண்டு கோடீசுவரனாக வாழ்வதை விட ஒரு ஆத்மஞானியாக இருந்துகொண்டு உழைத்து வாழ்வதில் மேலான இன்பமிருக்கிறது, என்று.

நடிப்பு வேறு, நடத்தை வேறு. எனவே, நண்பனே! நல்லன. அனைத்தும் உன் நடத்தையில் வெளிப்படுத்து; அதுவே தெய்வீகம். அதுவே அபரோச்சம் புரிந்து கொண்டு புனிதனாகி விடு.



கீர்த்தியினுடைய மாற்றாந் தாயின் பெயர் தான் தரித்திரம் என்பது.

- ஜோஸ்பிலக்

சத்தியம் யாருக்கும் அச்சமூட்டுவது அன்று. ஆயினும் அதைக் கண்டு மனிதர்கள் அஞ்சவே செய்கின்றனர்.

-வெ