பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/பந்து பிடி ஆட்டம்



5. பந்து பிடி ஆட்டம்

ஆட்டத்தில் பங்கு பெறுகிறவர்களேயெல்லாம் நேர்க்கோடு ஒன்றினைப் போட்டு, அதன்மேல் வரிசை யாக நிறுத்தி வைத்திட வேண்டும்.

விளையாட்டை நடத்துகின்ற ஆசிரியர் அல்லது முக்கியஸ்தர் 5 அடியிலிருந்து பத்தடி தூரத்திற்குள்ளாக (ஆட்டக்காரர்களின் தன்மையைப் பொறுத்தது) ஒரு இடத்தைக் குறித்து, அங்கே ஒரு பந்துடன் நின்று கொண்டு ஆட்டத்தைத் தொடங்கவேண்டும்.

வரிசையாக நின்று கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் எண் (நம்பர்) ஒன்றைத் தந்து விட வேண்டும். 1,2,3,4 என்பதாக எண்கள் ஒவ்வொரு வருக்கும் தருகிற பொழுது, அனைவரும் தனக்கு உரிய எண் எது என்பதை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்.

பங்கு பெறுபவர்களின் பெயர்கள் தெரிந்திருந்தாலும், ஆட்டத்திற்கு அவரவர் பெயரையே பயன்படுத்திக் கொள்ளலாம். 
21

குறிப்பிட்ட துரத்தில், பந்தை வைத்துக் கொண்டிருப்பவர், ஒருவரின் எண் அல்லது பெயரை சத்தமாகக் கூப்பிட்டுக்கொண்டே பந்தை உயரமாக எறியவேண்டும்.

அழைக்கப்பட்டவர் உடனே ஓடி வந்து பந்து. தரையில் விழுவதற்கு முன்னதாகவே பிடித்துவிட வேண்டும். அவ்வாறு பிடித்து விட்டால், அவருக்கு என்று வெற்றி எண் (Point) தரலாம். இதுபோல் எல்லோருக்கும் வாய்ப்புக்கள் 5 தடவை கிடைப்பது போல மாறி மாறி அழைத்து, இறுதியில் அதிகமுறை பிடித்தவரையே வெற்றி பெற்றார்’ என்று பாராட்டிக் - கைதட்டி மகிழலாம். மகிழ்விக்கலாம்.

குறிப்பு:- 1. தன் பெயர் அல்லது எண் எப்பொழுது அழைக்கப்படும் என்ற நிலையில், எல்லோரும் தயாராக இருந்தால்தான், ஆட்டம் உற்சாக மாக அமையும்.

2. பந்தை உயரே எறிபவர், ஓடிவரும் ஆட்டக்காரர் வந்து பந்தைப் பிடிப்பதற்கேற்றவாறு அமைவது போன்ற அமைப்பில்தான் எறிய வேண் டும்.

3. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பது போல மாற்றி மாற்றி அனைவரையும் அழைக்க வாய்ப்பு 

கிடைத்தவரையே அடிக்கடி அழைத்தால், மற்றவர்கள் உ ற் சா க ம் குறைந்து, வெறுப்படையத் தொடங்கி விடுவார்கள்.

4. உயரேயிருந்து வருகிற பந்தைப் பிடிப்பதற்கு இயலாத நிலையில் ஆட்டக்காரர்கள் இருந்தால், பந்து ஒரு முறை தரையில் விழுந்து மேலே கிளம்பி, மீண்டும் தரையில் விழுவதற்கு முன் பிடித்துவிட வேண்டும் என்று விதியினை மாற்றி ஆடிடலாம். -

ஆடும் திறமைக் கேற்ப, ஆட்டக்காரர்கள் வசதிக்கேற்ப ஆ ட் டத் தை மாற்றியமைத்துக் கொண்டு ஆடும்பொழுதுதான் எதிர்பாராத பலனும் இன்பமும் நிறையவே கிடைக்கும்.