பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/துப்பறியும் துரை




4. துப்பறியும் துரை


இருக்கின்ற அனைவரையும் இந்த விளையாட்டில் பங்கு கொள்ளச் செய்யலாம். விளையாட்டில் பங்கு பெறுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு பெரிய வட்டம் போட்டு அதற்குள்ளே வந்து அனைவரையும் நிற்குமாறு செய்யவேண்டும்.

யார் யார் எந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்பதை ஒவ்வொருவரும் நன்றாகப் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மனதில் பதிய வைத்துக் கொண்டால்தான், இந்த ஆட்டத்தை உற்சாகமாகவும், வெற்றிகரமாகவும் விளையாடி மகிழ முடியும்.

பங்கு பெறுபவர்களில் ஒருவரை துப்பறியும் துரையாகத் தேர்ந்தெடுத்து, அவரை தனியே வட்டத்திற்கு வெளியே கொண்டு வந்து நிறுத்தி, பிறகு வட்டத்திற்குள் அழைத்துச் சென்று நடு இடத்தில் நிற்க வைக்க வேண்டும். பின்னர் அவரது கண்களை ஒரு கைக்குட்டையால் கட்டி மறைத்திட வேண்டும். 18

கண்களை கைக்குட்டையால் கட்டுவதற்கு முன்பாகக் கூட, யார் யார் எங்கெங்கே நிற்கிறார்கள் என்பதை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்ள அனுமதிக்கலாம்.

கண்களை கட்டி விட்ட பிறகு, அவரை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு நிற்கச் செய்து, வட்டத்தின் கோட்டின் மேல் சுற்றி நிற்பவர்களில் எவர் பெயரை யாவது ஒருவரைக் குறிப்பிட்டு, விளையாட்டை நடத்திக் கொண்டிருப்பவர் அறிவிக்க வேண்டும்.

பெயர் குறிப்பிட்டவர், அந்த இடத்தை விட்டு வேறு எங்கும் நகராமல் அதே இடத்தில்தான் நிற்க வேண்டும். மற்ற ஆட்டக்காரர்களும் தாங்கள் நின்று கொண்டிருந்த இடங்களிலேயே நிற்க வேண் டும். ஏனென்றால், குரலைக் கேட்டு எளிதில் அடை யாளம் தெரிந்து கொண்டுவிட நேரும் அல்லவா!

துப்பறிபவர் கைகளைத் துளாவியபடியே நடந்து சென்று அடுத்தவர்களைத் தொட்டு அடையாளங் கண்டபடியே முன்னேற வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் பெயருக்குரியவரைப் பிடித்துவிட் டால், பிடிபட்டவர் துப்பறியும் துரையாக மாற ஆட்டம் தொடரும்.

துப்பறிபவரால் ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், வேறொருவரை துப்பறியும் துரையாக நிற்க வைத்து, முன்போல் ஆட்டத்தைத். தொடரலாம். குறிப்பு: 1. இந்த ஆட்டத்திற்கு, எல்லோருக்கும் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்திருந்தால் நல்லது என்பது மிகமிக முக்கியம்.

2. குழந்தைகள் என்றால் எல்லோரையும் ஒரே சமயத்தில் விளையாடச் செய்யலாம். பெரியவர்கள் என்றால், ஆண்கள் வேறு. பெண்கள் வேறு என்று பிரிந்து நின்று ஆடவிடுவதுதான் நல்லது. தொட்டால் பரவாயில்லை என்றால், சேர்ந்தே ஆடலாம். பரவாயில்லை.

3. துப்பறிபவர் ஆளை அடையாளங் கண்டு பிடிக்க, உடலைத் தடவியும், முகத்தைப் பிடித்தும் தலையைத் துழாவியும் செய்கின்ற செயல்கள் எல்லாம் வேடிக்கையாகவும், சில சமயங்களில் கிச்சு கிச்சு மூட்டுவது போலவும் அமையும். அப்படி ஆளாகின்ற நேரத்தில், முயன்ற வரை சிரிப்பை அடக்கிக் கொள்ள வேண்டும். சிரித்து விட்டால், துப்பறிபவரின் வேலை எளிதாகப் போய்விடும்.

4. இதற்குத் தேவை ஒரு பெரிய கைக்குட்டை அல்லது சிறு துண்டு.