பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/பூதமும் புதையலும்
3. பூதமும் புதையலும்
விருந்து நடக்கும் இடத்தில், அல்லது சுற்றுலா பயணம் போகின்ற இடத்தில் இருக்கின்ற பொருள்கள் அனைத்தையும் இந்த ஆட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். பயணத்தில் பங்குகொண்ட அனைவரையும் இதில் கலந்து கொள்ளச் செய்யலாம்.
முதலில் என்னென்ன பொருள் இருக்கிறது என்றவாறு கணக்கிட்டு, அவற்றை சேர்த்தால் அது தான் புதையலாகும். உதாரணத்திற்கு பை, பேனா, குடை, செருப்பு, தட்டு, டம்ளர், கூடை, வளையம், ஊசி, முதலியவற்றை பயன்படுத்தலாம்.
இருப்பவங்களில் ஒருவரை பூதம் என்று தேர்ந்தெடுத்து, ஓரிடத்தில் அவரை மல்லாந்து படுக்கச் செய்ய வேண்டும். அவரைச் சுற்றி தலை, கால், உடல்பகுதிக்கு அருகாமையில் மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வைக்க வேண்டும். ஆளைச் சுற்றிலும் எல்லா பொருட்கள் இருக்கவேண்டும்.
10 அடி தூரத்திற்கு அப்பால் ஒரு நேர்க்கோடு போட்டு பங்கு பெறும் அத்தனை பேரும் நின்று கொள்ள வேண்டும். விசில் ஒலிக்குப் பிறகு, பூதம் காக்கும் புதையலை நோக்கி, இவர்கள் புறப்பட வேண்டும்.
மல்லாந்து படுத்திருக்கும் பூதம் ஆனவர். தனது கண்களை இறுக்க மூடிக்கொண்டு, அனசயாமல் படுத்திருக்க வேண்டும், அதே சமயத்தில் புதையல் எடுக்க வருபவர்களும், சத்தமில்லாமல் மெல்ல மெல்ல அடியிட்டு நடந்துவரவேண்டும். பூதம் காக்கின்ற புதையலை கடத்திக் கொண்டு வரப் போகிறவர்கள் அல்லவா அவர்கள்!
ஒரு சில வினாடிகள் கழிந்ததும், பூதமானவர் தனது கண்களை மெதுவாக விழித்துப் பார்க்க வேண்டும். தலையை அங்குமிங்கும் திருப்பவும் செய்ய லாம். அவர் விழியைத் திறந்து பார்த்தவுடனேயே நடப்பவர்கள் அனைவரும், அப்படியே அசையாமல் சிலைபோல நின்றுவிட வேண்டும்.
பூதம் பார்ப்பதைப் பார்க்காமல் மேலும் நடப்பவர்களும், சிலை போல நிற்க முயற்சித்து அசைந்து கொண்டிருப்பவர்களும், தவறிழைத்தவர்கள் என்று கருதப்பட்டு, ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். பிறகு, கண்களை மீண்டும் பூதமானவர் மூடிக் கொள்ள, புதையலைத் தேடி வந்தவர்களில் மிஞ்சிய வர்கள் நடக்கவேண்டும். அடுத்து அவர் கண், விழித்துப் பார்க்கும்பொழுது, சிலையாக நிற்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். தவறியவர்கள் ஆடும் வாய்ப்பிலிருந்து தள்ளப்படுகின்றார்கள். இப்படியே விளையாட்டு தொடரும்.
இறுதியாக தவறிழைக்காமல் யார் மிஞ்சுகிறார்களோ அல்லது யார் முதலில் பூதத்தைச் சுற்றியுள்ள பொருட்களில் ஒன்றை எடுத்து விடுகிருரோ, அவரே வெற்றி பெற்றவராவார். -
குறிப்பு:- 1. க ண் மூ டி ப் படுத்திருப்பவர், மற்றவர்கள் நடந்து முன்னேற கொஞ்சம் நேரம் கொடுத்து, பிறகு விழித்துப் பார்க்கவேண்டும்,
2. நடப்பவர்கள் தங்களது காலடி சத்தம் கூட கேட்காதவாறு பூனை போல அடி எடுத்து வைத்துச் சென்றால், அந்தக் காட்சி அருமையான தாக அமையும்.
3. வெற்றியை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதை ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே தீர்மானித்து, ஆட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்குக் கூறினால், அவர்களும் ஆர்வமுடன் பங்குபெற அது வாய்ப்பாக அமையும்.